Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Sunday, December 19, 2010

சாரல்:4: துளி:40 நாள்: 26.12.10

காடகோபநிஷத்  (படைப்பு : திரு. ஆர். ராமன், சன்னதி தெரு, திருக்கோவிலூர்)
இரண்டாவது அத்யாயம் -இரண்டாம் பகுதி தொடர்ச்சி) :
     பிம்பம் பிரதிபிம்பம் தொடர்பு : ஸ்லோகம் 9 இந்த உலகத்திலுள்ள அக்னி (சேதன அக்னி) ஒன்று. அது அநேக அம்ச வடிவங்களை உடையது. இதற்கு இணையாக அக்னி வடிவங்கள் உடையன. இதைப்போலவே அனைத்திலும் உறையும், பரமாத்மா ஒருவரே. அவர் அநேக பிம்ப வடிவங்களை உடையவர். இதற்கு இணையாக அநேக பிரதிபிம்பங்களும் (ஜீவன்களும்) உள்ளன. இவைகள் பிரதி பிம்பங்கள். பரமாத்மா பிம்பத்திற்கு முற்றிலும் வேறானவர். விளக்கம் பரமாத்மாபிம்பமாக இருப்பதால் அனைத்தையும் கட்டுப்படுத்து கிறார். மற்றவர்கள் அனைவரும், பரமாத்மாவின் பிரதிபிம்பங்களே. ஒரு உவமை மூலம் இந்த ஸ்லோகத்திலும், அடுத்த ஸ்லோகத்திலும் விளக்கப்படு கிறது. பிரதிபிம்பம் பிம்பத்தைவிட வேறானது. அதனுடன ஒன்றுவதில்லை. ஸ்லோகம்10 :  இந்த உலகத்தில் உள்ள வாயு (சேத்தன வாயு) ஒன்று. அது அநேக அம்ச வடிவங்கள் உடையது. இதற்கு இணையாக காற்று வடிவங்கள் உள்ளன. இதைப்போலவே அனைத்திலும் உறையும் பரமாத்மா ஒருவரே. அவர் அநேக பிம்ப வடிவங்களை உடையவர். இதற்கு இணையாக அநேக பிரதிபிம்பங்களும் அதாவது ஜீவன்களும் உள்ளன. இவைகள் அதாவது பிரதிபிம்பங்கள் பரமாத்ம பிம்பத்திற்கு முற்றிலும் வேறானவை. விளக்கம் :மேற்கண்ட இரண்டு உவமானங்களிலிருந்து கீழ்கண்ட விஷயங்கள் தெரிவிக் கப்படுகின்றன. 1. பரமாத்மா ஒருவரே 2. அவர் அநேக பிம்ப வடிவங்கள் உடையவர். 3. ஜீவன்கள் அநேகம். அவைகள் பரமாத்மாவின் பிரதிபிம்பங்கள். ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் பிம்ப வடிவத்தின் பிரதிபிம்பம். இந்த உதாரணங்களைக் கீழ்கண்டபடியும் ஆராயலாம். 1. அக்னி மற்றும் வாயு ஒருவரே (சேதன அக்னி அல்லது சேதன வாயு என அறியப்படுபவன். 2. இந்த அக்னியும், வாயுவும் அநேக பொருட்களில் ஒளி மற்றும் வாயு அம்சத்தில் பரவியுள்ளார். இந்த அம்சங்களே பிம்பங்கள். 3. ஒளி மற்றும் வாயுவை உள்ளடக்கிய அநேக பொருட்களிலுள்ள அசேதன அக்னி அல்லது அசேதன வாயு பிரதிபிம்பங்கள். 
மற்றவர்களின் குறைகள் பரமாத்மாவை பாதிப்பதில்லை.
ஸ்லோகம் 11 : எப்படி எல்லோருடைய கண்களாக உள்ள சூரியன், கண்களில் உறைந்து அனைவரின் கண்களையும் கட்டுப்படுத்துபவனாக, புறக்குறைபாடு களினால், புற பார்வைக் கோளாறுகளினால் பாதிக்கப்படுவதில்லையோ, அவ்வாறே யார் எல்லாவற்றிலும், உறைகிறாரோ, யார் எல்லாவற்றையும்விட முற்றிலும் வேறானவரோ, யார் ஸ்வதந்திரரோ அந்த பரமாத்மா உலகியல் துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. விளக்கம் : துன்பங்களின் மொத்த உருவாகிய ஜீவர்களில் உறையும் பரமாத்மா, அந்த துன்பங்களால் பாதிக்கப்படு வதில்லை. ஏனென்றால் அவைகளைக்காட்டிலும் அவர் முற்றிலும் வேறானவர். மற்றும் ஸ்வதந்திரமானவர். சூரியன் என்ற உவமானத்தால் இது விளக்கப்படுகிறது. எல்லோருடைய கண்களையும் சூரியன் உறைந்து கட்டுப்படுத்தினாலும், புறக்கண்களில் ஏற்படும் குறைபாடுகளினால் சூரியன் பாதிப்புக்குள்ளாவதில்லை. 2. இரண்டு கண்கள் இருப்பதை அறிய வேண்டும். ஒன்று புறக்கண்கள் மற்றது அகக்கண்கள். ஸ்லோகம் 12 : எல்லாருள்ளும் உறைபவர் யாரோ, கட்டுப்படுத்துகிறவர் யாரோ, தனித்துள்ளவரும் தனக்கு இணையானவரும் தன்னிலும் மிக்காரும் இல்லாதவரும் யாரோ, அந்த பரமாத்மா அந்த தன் ஒரு வடிவத்தை பலதரப்பட்டதாக ஆக்குகிறார். தன்னுள் உறையும் அவரை பார்க்கும் விவேகி குறைவில்லா பேரின்ப நிலையை அடைகிறான். மற்றவன் இல்லை. விளக்கம்: தன் ஒரு ரூபத்தையே பலதரப்பட்டதாக பரமாத்மா செய்கிறார் என்ற உண்மை இங்கு பேசப்படுகிறது. ஸ்லோகம் 13 : நிலையுள்ளவைகளிடத்து நிலையானவரும், உணர்பவர்களின் உணர்வாகவும், பல ஆசைகளை நிறைவேற்றும் ஒருவராகவும், தன்னுடன் உறையும் பரமாத்மாவை அறியும் விவேகி சாஸ்வதமான அமைதியை அடைவான். மற்றவன் இல்லை. விளக்கம் : பரமாத்மாவின் பிம்ப வடிவத்தின் குணங்கள் எதுவோ, அது பிரதிபிம்பத்தையும்சாரும் என்பது விளக்கப்படுகிறது. ஸ்லோகம்14 : அது, ஏற்கனவே விவரிக்கப்பட்ட பரமாத்மா முழுமையான விவரிக்க இயலாத மேலான பேரின்ப நிலையை உடையது என விவேகிகள் அறிகிறார்கள். நான் அதை எவ்வாறு அறிவேன். (அவன் கருணையின்றி என எமதர்மன் ஆச்சரியத்தில் கூவுகிறான். நசிகேதன் கேட்கிறான்: அது ஒளிர்கிறதா அதை முழுமையாகச் சொல்லும்)  விளக்கம்: ஏற்கனவே விவரிக்கப்பட்ட பரமாத்மா மேலான பேரின்பமயமானவன் இந்த பேரின்ப நிலை முழுமையாக விவரிக்க முடியாதது. முழுமையாக புரிந்துகொள்ளவும் முடியாதது. பரமாத்மாவின் கருணையில்லாமல் எமனாலும் கூட அறிய முடியாதது. இங்கு குறிப்பிட்டிருக்கும் பரமாத்மாவின் மேலான பேரின்ப நிலையை ஒப்பிடும்போது விடுவிக்கப்பட்ட ஜீவனின் பேரின்பநிலை ஒரு இம்மி அளவுடையது. ஆகவே இங்கு விவரிக்கப் பட்டுள்ளது விடுவிக்கப்பட்ட ஜீவனின் பேரின்ப நிலையல்ல.ஆனால் பரமாத்மாவின் மேலான பேரின் நிலையே இங்கு விவரிக்கப் பட்டுள்ளது. இங்கு விவரிக்கப்பட்டுள்ள பேரின்ப நிலை முற்றிலுமாக விவரிக்கப்பட முடியாதது அல்ல. ஆனால் முழுமையாக விவரிக்கப்பட முடியாதவை. முடிந்த அளவு அதனுடைய விளக்கம் பரமாத்மாவின் கருணை யினாலே அறியப்படுகிறது என்பதை இச்ஸ்லோகங்களில் தெளிவாகத் தெரிகிறது. ஸ்லோகம்15 : அதைச் சூரியன் ஒளிறச்செய்வதில்லை. அவ்வாறே சந்திரனும் நட்சத்திரங்களும், மின்னலாலும் முடியாது. பின் அக்னி ஒளியுறச்செய்ய முடியும். எப்படி ? இவைகளெல்லாமே, ப்ரகாசிக்கின்ற அதனுடைய ஒளியைப்பெற்றே பிரகாசிக்கின்றன. அதனுடைய பிரகாசமே இவைகள் எல்லாவற்றையும் பிரகாசமாக்குகிறது. விளக்கம்:  இங்கு பிரகாசமாக இருப்பவைகளால் பரமாத்வை பிரகாசமடையச் செய்யமுடியாது என்பதையும், பரமாத்மாவின் பிரகாசத்தினாலேயே மற்ற எல்லாம் ப்ரகாசிக்கிறது என்பதும் விளக்கப்படுகிறது. (காடகே உபநிஷத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் 2வது பகுதி நிறைவு) (இதன் தொடர்ச்சியை அடுத்தவாரம் கடைசிவாரத்தில் பார்க்கலாம்) 
  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
  ஹரே க்ருஷ்ண ஹரே  க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

Saturday, December 11, 2010

சாரல் 4 துளி 39 தேதி : 19.12.12

ஸ்ரீகீதா ஜெயந்தி (17.12.2010)   
 ஸ்ரீமத் பகவத் கீதையின் தாத்பர்யம் & பாஷ்யம் 

ஸ்ரீமத் ஹனுமத் பீ4ம மத்4 வாந்தர்க்கத ராமக்ருஷ்ண
வேத3வ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:


யோகீஸ்வரரான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூறிய கீதா உபதேஸத்திற்கு அனேகம் உரைகள் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தையோ கருத்துக்கள் இன்னும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கும் பொருள் ஒன்றேயானாலும், அதை படிப்போரும், கேட்போரும் அவரவர்களுடைய யோக்யதாம்ஸத்திற்கு ஏற்றவாறு புரிந்துகொள்ளும் சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தமோ, ரஜோ, மற்றும் சத்வ குணங்களின் தாக்கத்தால் பாதிப்படைவதால் கீதையின் உரையில் வேறுபாடு இருப்பது சகஜமாகிறது.

    அனேக பாஷ்யதாரர்கள் செய்த உரையும், அதைப் பின்பற்றி யதார்த்தவாதிகள் செய்த உரையும் பிரசுரமாகிக்கொண்டிருக்கிறது. பாஷ்யகாரர்களின் பிரிவில் ஸ்ரீசங்கரர், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீமத்வாச்சார்யர் போன்றோர் முக்கிய பாஷ்யகாரர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஹனும, பீம அம்ஸமாகவும் ஸ்ரீவாயுபகவானின் அவதார புருஷராகவும் தோன்றிய ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் அவர்கள், தன் அவதார காலத்தில் முதன்முதலாக கீதைக்கு பாஷ்யம் (உரை) செய்து பத்ரிகாஸ்ரமம் சென்று ஸ்ரீவேதவ்யாஸ பகவானுக்கு சமர்ப்பித்தார். இவர் இயற்றிய கீதா பாஷ்யம் மற்றும் கீதா தாத்பர்யம் உலகில் அதிஉன்னத பாஷ்யமாகக் கருதப்படுகிறது. 

            ஸ்ரீமத்வாச்சார்யர் கீதையை தனி ஒரு புத்தகமாக மட்டும் பார்க்கவில்லை, கீதை, ஸ்ரீமத்மஹாபாரதத்தின் ஒரு பகுதி என்றும், இது வேதம் மற்றும் உபநிடதங்களின் சாரம் என்றும் ப்ரம்மவித்யா மற்றும் யோகஸாஸ்த்ரம் என்றும் கூறுகிறார். ஸ்ரீமதாச்சார்யர் கீதையில் ஒவ்வொரு ஸ்லோகங்களின் வார்த்தைகளுக்கோ அல்லது எல்லா ஸ்லோகங்களுக்கோ உரை எழுதவில்லை. தனக்கு முந்தைய பாஷ்யகாரர்களின் மூலம் சரியானதொரு கருத்து சொல்லப்படாத ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு மட்டும் உரை எழுதியுள்ளார்கள். எங்கெங்கு உரிய சித்தாந்தம் தேவைப்படுகிறதோ அங்கு மட்டும் விளக்கங்களை கொடுத்துள்ளார்கள்.  "கீதாதாத்பர்யம்" முதல் ஸ்லோகத்தை 

ஸமஸ்த குண ஸம்பூர்ணம், ஸர்வதோஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்கிருத்ய, கீதா தாத்பர்ய முச்யதே//
என்பதாக தொடங்கி, தர்மம் மற்றும் அதர்மம் என்பதற்கான விளக்கத்தைக் கொடுக்கிறார். குருக்ஷேத்ர போர்களத்தில் அர்சுனன் தன் நெருங்கிய உறவினர்களைக் கொன்று ராஜ்யத்தை ஏற்க விரும்பாதவனாய் பாச உணர்வினால் கட்டுண்டு அமர்ந்துவிட்ட நிலையில், தேரோட்டியாய் நின்ற யோகீஸ்வரர் ஸ்ரீகிருஷ்ணர் இங்கே அர்சுனனுக்கு க்ஷத்ரியதர்மத்தைப் பற்றி விளக்கம் கொடுத்ததைப் பற்றி ஸ்ரீமதாச்சார்யர் தனது தாத்பர்யத்தில் கூறுகிறார். 1.துஷ்டர்களையும்,பாவிகளையும், அயோக்கியர்களையும் அழிப்பது சத்ருக்களுடைய தொழில் தர்மம், அத்துடன் கடவுளை த்வேஷிப்பவனையும், அவனைச்    சார்ந்தவனையும் அழிப்பதும் க்ஷத்ருக்களுடைய கடமையாகிறது 2.  ஒவ்வொருவரும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கடமையைச் செய்ய வேண்டியது தர்மம்.3.ஒருவன் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்காகவே செய்யவேண்டும் என்பது தர்மம். அதில் ஸ்ரத்தையும் பக்தியும் இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லையானால் அது அதர்மம். 4. இறைவனே மிகவும் உயர்ந்த பிரம்மம்,எல்லாமும் அவரையே சார்ந்திருக்கிறது என்று நினைப்பது தர்மம். 5. பக்தியின் மூலமே இறைவனை அறிய முடியும். எனவே, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் முடித்து வந்த பிறகும், ராஜ்யத்தை திரும்பக்கொடுக்காமல், நிர்கதியாய் நிற்கச் செய்ததால் துரியோதனனை எதிர்த்து போர்புரிந்து ராஜ்யத்தை பெறுவதென்பது க்ஷத்ரியதர்மம் என்பதால் தீயசக்தியான மோஹரூபமும் துர்புத்தியும் கொண்ட துர்யோதனனும் அவனைச் சார்ந்த அனேக நல்லெண்ணம் படைத்தவர்களே (உ.ம்: துரோணாச்சார்யர், பீஷ்மாச்சார்யர், க்ருபாச்சார்யர் etc.,) ஆனாலும் சேர்க்கையால் தீயவராகி தர்மத்திற்கு எதிராக நிற்கும் அனைவரையும், போர்முனையில் நின்று, கொன்று, வெற்றிகண்டு ராஜ்யத்தை மீட்பது க்ஷத்ரிய தர்மம் என்பதால் "என்னையும் த்யானித்துக்கொண்டு போர்  புரிவதையும் செய்வாயாக" என்று ஸ்ரீகிருஷ்ணர் அர்சுனனுக்கு தேற்றுவாயாக கூறிய சாராம்சங்களின் தத்துவங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து தனது "கீதா தாத்பர்ய"த்தில் விவரமாக விளக்கம் கொடுப்பதைக் காணலாம். கீதைக்கு சம்மந்தப்பட்டதான, தமது சித்தாந்தத்திற்கு உகந்ததான அனேக விவரணங்களை இதிகாச-புராணங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் கோட்பாடுகளை சுட்டிக்காட்டி தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீமதாச்சார்யர் தமது கீதா பாஷ்யத்தின் தொடக்க ஸ்லோகத்தை 

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ, தார்த்தம் வக்ஷயாமி லேஸத://
என்பதாக ஸ்ரீமந் நாராயணரை நமஸ்கரித்து துவங்குகிறார். ஸ்ரீமதாச்சார்யர் முதல்முதலில் கீதா பாஷ்யம் என்ற நூலை இயற்றி பத்ரிகாஸ்ரமம் சென்று அங்கிருந்த ஸ்ரீநரநாராயண பகவானை நமஸ்கரித்து தான் இயற்றிய கீதா பாஷ்ய நூலை காணிக்கையாக சமர்ப்பித்தார். பிறகு ஸ்ரீநரநாராயணரை தனிமையில் தரிசித்து, தான் எழுதிய கீதாபாஷ்யத்தின் மங்களா சரண ஸ்லோகத்தைப் படித்துக் காண்பித்தார். அதில் 'சக்திதவஸ்மி' அதாவது "தன் சக்தியளவு கூறுகிறேன்" என்று படித்ததை கவனித்த ஸ்வாமி நாராயணர் ஆசார்யரை நோக்கி, நீ கீதையில் இருக்கின்ற எல்லா ஸ்லோகங்களின் உட்பொருளை நன்கு விளக்கக் கூடிய சக்தி பெற்றவ்ராக இருந்தும் இவ்வளவு மட்டுமே எடுத்துக் கூறியுளீர். எனவே "சக்தித:" என்று கூறியதற்கு பதிலாக "லேசத:" என்று எழுதுவாயாக என்று கூறியதை ஏற்று, அவ்வாறு மாற்றிக்கொண்டார் என்று 'ஸூமத்வவிஜயம்' என்ற மஹாகாவ்ய நூலில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
        தமது "கீதா பாஷ்ய"த்தில் கீதையில் யோகீஸ்வரர் ஸ்ரீகிருஷ்ணர் கூறியதற்கான ஸ்லோகங்களுக்கு அனேக இடங்களில் விளக்கம் கொடுக்கிறார்.  சாங்ய யோகம், கர்மயோகம், ஸ்வதர்மாம், நிஷ்காம கர்மா, காம்யகர்மா, கர்மா, அகர்மா, விகர்மா, ஞானம், அபரோக்ஷஞானம், சாத்வீக, ராஜஸ, தாமஸ முதலான குணங்கள், வர்ணாஸ்ரம விதிமுறைகள், ஸன்யாச யோகம், அதிஷ்டானம், கர்த்தா, காரணா, விவிதசேஷ்ட, தெய்வம், தெய்வ பக்தி போன்ற முக்கியமானதற்கு வேத இதிகாச-புராணங்களில் கூறப்பட்டதற்கான உபமான உபமேயங்களை ஓரிரு சொற்களைக்கொண்டே அனேக பொருள் சொல்லும்படியான விளக்கத்தைச்சொல்லியிருப்பதுமிகவும் வியக்கத்தக்க தாக  இருக்கிறது. கர்மமும்,  ஞானமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்றுக்கொன்று எதிர்மறையானது அல்ல. இவை இரண்டுமே ஆன்மீகம் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கிறது.  கீதை காம்யகர்மத்தை கண்டிக்கிதே ஒழிய, கர்மயோகத்தை அல்ல. கர்மயோகம் ஞானம் வளர்வதற்கு அடிப்படைக் காரணம். கர்மம் ஞானத்தை புனிதமாக்குகிறது. ஞானத்தால் எல்லா சந்தேகங்களும் நீங்குகிறது.  கீதையில் சன்யாசம் என்பதற்கு சன்யாச ஆஸ்ரமம் எடுப்பது என்பதாகக் கூறப்படவில்லை. சன்யாசம் என்பது காம, க்ரோதங்களை விட்டு, பற்றற்ற நிலையில் நிஷ்காம கர்மத்தை செய்வது "சங்கல்ப சன்யாசம்" எனக் கூறப்படுகிறது. கர்மா, அகர்மா, மற்றும் விகர்மா என பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு செயலை செய்வது "கர்மம்" என்றும் செயலற்று இருப்பது "அகர்மம்" என்றும் தவறான செயல்பாடுகள் "விகர்மம்" என்றும் பொருள்படும். பகவானின் அதிஅற்புத சக்தியை உணர்வதே பக்தி. . கர்மயோகத்தால் ஞானமும் பக்தியும் மேன்மையடைகிறது. ஞானம் என்பது' பரோக்ஷ ஞானம்' , 'அபரோக்ஷ ஞானம்' எனப்படுகிறது. அபரோக்ஷ ஞானம் அடைந்தபிறகு பக்தியானது 'பக்வபக்தி' என்றும் அது வளர்ந்து 'பரிபக்வபக்தி' யாகவும் அது மேன்மைபெற்று 'அதிபரிபக்வபக்தி ' யாகவும் விரிவடைகிறது. இவையாவும் சேர்ந்தது 'சாதனா பக்தி' எனப்படுகிறது. முக்திக்குப் பிறகும்  'பக்தி' தொடர்ச்சி பெறுகிறது. பரமாத்மாவிற்கும் ஜீவனுக்குமான  தொடர்பு என்பது பிம்பத்திற்கும் பிரதிபிம்பத்திற்கும் உள்ள தொடர்பை ஒத்துள்ளது. ஜீவன் பக்தியை சாதனமாகக்கொண்டே பரமனை அடைய முடியும். கர்மம், ஞானம். பக்தியை சரியான முறையில் கையால்வதால் பகவானின் உன்னத நிலையை அறிய முடியும். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தனித்தன்மையை பகவானே கூறுவதை கீதையில் கேட்டு அல்லது படித்து அதன் உட்பொருளை ஸ்ரீமதாச்சார்யரின் பாஷ்யத்தைக்கொண்டு புரிந்துகொள்வது சிறப்பானது, விவேகமானது.  எனவே, என்னிடத்திலேயே உன் மனதைச் செலுத்து, என் பக்தனாகவே இரு, என்னைக் குறித்தே எல்லா பூஜைகளையும், யாகங்களையும் செய், என்னை வந்தனம் செய்து நமஸ்காரம் முதலியவைகளைச் செய். இப்படியே உன் மனதை என்னிடத்தில் நிறுத்தி என்னையே நீ அடைய வேண்டிய மேலான பதவியாய் நினைத்து முயன்றால் முடிவில் என்னையே அடைவாய் (IX-34)
           யாரும் எத்தனை ஸாஸ்த்ரத்தைப் படித்தாலும், வேதத்தைக் கற்றாலும் அதன் முடிவில் "எல்லாம் வாசுதேவனே" என்பதை மட்டுமே தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். எனவே, ஸாஸ்த்ரம் ஒன்றே அதுவே தேவகீ புத்ரன் சொன்ன கீதை, ஒன்றே தெய்வம் அவரே தேவகீ புத்ரனாக அவதரித்த ஸ்ரீகிருஷ்ணர். பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணரை அடைய ஒரே வழி, ஸ்ரவணம்,
         கீர்த்தனம், விஷ்ணோர், ஸ்மரனம் பாதஸேவனம்

        அர்ச்சனம், வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம் (ஸ்ரீமத் பாகவதம்) 
                                                -/ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து/-


Sunday, December 5, 2010

சாரல் 4 துளி 38 :date : 12.12.10

தித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்/       மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ// (அத்.10.ஸ்21)
இந்த ஸ்லோகத்திலிருந்து 38ம் ஸ்லோகம் வரை பகவானுடைய விபூதிகளைப் பற்றி விவரிக்கிறார். 'ஆதித்யர்களில் விஷ்ணுவாக இருக்கிறேன்' என்று கூறுகிறார். அதிதிதேவியின் புத்திரர்கள் 12 பேர்கள். அவர்களில் விஷ்ணு என்னும் பெயருள்ளவராக இருப்பதாக கூறுகிறார். 'விஷ்ணு' என்பதற்கு அழிவில்லாத மஹா சக்தி பெற்றவர் என்று பொருள். எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர் விஷ்ணு. எல்லாரிடத்திலும் அந்தர்யாமியாக இருந்து வ்யாபிப்பவர் விஷ்ணு. ஜீவனின் உள்ளேயும், வெளியேயும் நிறைந்திருப்பவர் விஷ்ணு மிகவும் பிரகாசமானவராக இருப்பவர் விஷ்ணு. மிகவும் விஷேச ஸ்ரேஷ்டமான மஹாசக்தி பெற்றவர் விஷ்ணு. ஸமஸ்த்த ஜீவன்களின் வியாபாரங்களுக்கும் காரண கர்த்தாவாக இருப்பவர் விஷ்ணு. யாவற்றின் தோற்றத்திற்கும், தேவதைகளிலும் கூட வ்யாபித்திருப்பவர் விஷ்ணு. விஷ்ணுவே வாமனனாகி, வாமனனே த்ரிவிக்ரமனாகி மூன்று லோகத்திலும் வ்யாபித்தததால் விஷ்ணு என்றும் அழைக்கிறார்கள். அர்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணனே ஸ்ரீவிஷ்ணுவின் அர்தத்தை எடுத்து கூறியிருக்கிறார். இவ்வாறு விஷ்ணு என்பதன் சிறப்பு மோக்ஷ தர்மத்தில் விவரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
"ஜ்யோதி மயமாய் பிராகாசிக்கும் பதார்த்தங்களில் அதி ஸ்ரேஷ்ட கதிர்களையுடைய சூர்யனுக்கு நியாமகனாய், இச்சூரியனுக்கு பிரகாசத்தைக் கொடுத்துக்கொண்டு, வேத ஸப்தங்களால் அறிப்படுபவனாதலால் ரவி ஸப்த வாச்யனாய் சூர்யனிடம் இருப்பவனாக இருக்கிறேன்" என்று கூறுகிறார். அத்துடன் "49 வாயுக்கள் என்னும் மருத்தேவதைகளில் உத்தமனான மரீசிக்கு நியாமகனாய் இதர மருத்துக்களில் மரீசி என்பவனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு, மேகங்களை ஸஞ்சரிக்கும்படி செய்து கொண்டிருப்தினால் மரீசி நாமகனாய் மரீசி என்னும் மருத்தினுள் இருக்கிறேன்", என்றும் "நக்ஷ்த்ரங்களில் அதி உன்னதனான சந்திரனுக்கு நியாமகனாய் அந்தந்த பதார்த்தங்களில் சநிதிரனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு, அதிஸய சுகமுள்ளவனாய் 'ஸஸ'ீ என்னும் பெயருள்ளவனாய் சந்திரனிடம் இருக்கிறேன்", என்றும் கூறுகிறார்.
இவ்வாறாக எந்தெந்த பதார்த்தங்களில் விஷேச குணம்பெற்று பிரகாசிக்கிறாறோ அந்தந்த பதார்த்தங்களில் ஆதிக்கத்தைச் செலுத்தி நியா மகனாய் இருந்து ப்ரகாசிப்பதை எடுத்துரைக்கிறார். இனி வரும் ஸ்லோகங்களில் பகவானின் தனித்தன்மைப் பெற்ற ஸ்ரேஷ்டமான பதார்த்தங்களின் முக்கியத்துவத்தைக் காணலாம்.
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பன்னிரண்டு ஆதித்யர்களுள் நான் விஷ்ணு; பிரகாசிக்கும் பொருள்களில் நான் சூர்யன்; நாற்பத்தொன்பது மருத்துக்களில் நான் மரீசி ; நக்ஷ்சத்ரங்களுள் சந்திரன் நான்". -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-