ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்/ மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ// (அத்.10.ஸ்21)
இந்த ஸ்லோகத்திலிருந்து 38ம் ஸ்லோகம் வரை பகவானுடைய விபூதிகளைப் பற்றி விவரிக்கிறார். 'ஆதித்யர்களில் விஷ்ணுவாக இருக்கிறேன்' என்று கூறுகிறார். அதிதிதேவியின் புத்திரர்கள் 12 பேர்கள். அவர்களில் விஷ்ணு என்னும் பெயருள்ளவராக இருப்பதாக கூறுகிறார். 'விஷ்ணு' என்பதற்கு அழிவில்லாத மஹா சக்தி பெற்றவர் என்று பொருள். எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர் விஷ்ணு. எல்லாரிடத்திலும் அந்தர்யாமியாக இருந்து வ்யாபிப்பவர் விஷ்ணு. ஜீவனின் உள்ளேயும், வெளியேயும் நிறைந்திருப்பவர் விஷ்ணு மிகவும் பிரகாசமானவராக இருப்பவர் விஷ்ணு. மிகவும் விஷேச ஸ்ரேஷ்டமான மஹாசக்தி பெற்றவர் விஷ்ணு. ஸமஸ்த்த ஜீவன்களின் வியாபாரங்களுக்கும் காரண கர்த்தாவாக இருப்பவர் விஷ்ணு. யாவற்றின் தோற்றத்திற்கும், தேவதைகளிலும் கூட வ்யாபித்திருப்பவர் விஷ்ணு. விஷ்ணுவே வாமனனாகி, வாமனனே த்ரிவிக்ரமனாகி மூன்று லோகத்திலும் வ்யாபித்தததால் விஷ்ணு என்றும் அழைக்கிறார்கள். அர்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணனே ஸ்ரீவிஷ்ணுவின் அர்தத்தை எடுத்து கூறியிருக்கிறார். இவ்வாறு விஷ்ணு என்பதன் சிறப்பு மோக்ஷ தர்மத்தில் விவரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
"ஜ்யோதி மயமாய் பிராகாசிக்கும் பதார்த்தங்களில் அதி ஸ்ரேஷ்ட கதிர்களையுடைய சூர்யனுக்கு நியாமகனாய், இச்சூரியனுக்கு பிரகாசத்தைக் கொடுத்துக்கொண்டு, வேத ஸப்தங்களால் அறிப்படுபவனாதலால் ரவி ஸப்த வாச்யனாய் சூர்யனிடம் இருப்பவனாக இருக்கிறேன்" என்று கூறுகிறார். அத்துடன் "49 வாயுக்கள் என்னும் மருத்தேவதைகளில் உத்தமனான மரீசிக்கு நியாமகனாய் இதர மருத்துக்களில் மரீசி என்பவனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு, மேகங்களை ஸஞ்சரிக்கும்படி செய்து கொண்டிருப்தினால் மரீசி நாமகனாய் மரீசி என்னும் மருத்தினுள் இருக்கிறேன்", என்றும் "நக்ஷ்த்ரங்களில் அதி உன்னதனான சந்திரனுக்கு நியாமகனாய் அந்தந்த பதார்த்தங்களில் சநிதிரனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு, அதிஸய சுகமுள்ளவனாய் 'ஸஸ'ீ என்னும் பெயருள்ளவனாய் சந்திரனிடம் இருக்கிறேன்", என்றும் கூறுகிறார்.
இவ்வாறாக எந்தெந்த பதார்த்தங்களில் விஷேச குணம்பெற்று பிரகாசிக்கிறாறோ அந்தந்த பதார்த்தங்களில் ஆதிக்கத்தைச் செலுத்தி நியா மகனாய் இருந்து ப்ரகாசிப்பதை எடுத்துரைக்கிறார். இனி வரும் ஸ்லோகங்களில் பகவானின் தனித்தன்மைப் பெற்ற ஸ்ரேஷ்டமான பதார்த்தங்களின் முக்கியத்துவத்தைக் காணலாம்.
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பன்னிரண்டு ஆதித்யர்களுள் நான் விஷ்ணு; பிரகாசிக்கும் பொருள்களில் நான் சூர்யன்; நாற்பத்தொன்பது மருத்துக்களில் நான் மரீசி ; நக்ஷ்சத்ரங்களுள் சந்திரன் நான்". -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
No comments:
Post a Comment