Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, April 22, 2011

சாரல் 05 துளி 04 ​தேதி 17.04.2011

கீதையின் சாரலில்..... விபூதி ​யோகம்  (10வது அத்யாயம்)
பவந: பவதாமஸ்மி  ராம: ஸஸ்ரப்4ருதாமஹம்                 
ஜஷாணாம் மகரஸ்சாஸ்மி ஸ்​ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ    (அத்யாயம் 10 ஸ்​லோ 31)

     “சுத்தம் ​செய்யும் ​பெருள்களுள் நான் காற்றாக உள்​ளேன்.  ஆயுதம் பிடித்தவருள் நான் ராமன், மீன்களில் நான் மகரம், நதிகளில் நான் கங்​கை   
      காற்று யாவற்​றையும் சுத்தம் ​செய்கிறது.  ​வேகமு​டையது.  ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் அவதாரம் எடுத்தவர் தா​மே என்று எடுத்து​ரைக்கிறார்.  மீனினத்தில் மிகப்​பெரியது முத​லை.  மீன்களின் கூட்டத்தில்  தான் மகரமாயிருப்பதாகக் கூறுகிறார்.  கங்​கையின் ​பெரு​மை யாவரும் அறிந்த​தே.  நதிகளில் கங்​கையாக இருப்பதாகக் கூறுகிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து:  சுத்தம் ​செய்யும் ​பொருள்களுள் சிறந்ததான வாயுவிற்கு நியாமகனாய், இதர ​பொருள்க​ளை விட வாயுவிற்கு ஸ்​ரேஷ்டத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு பவன:’ என்னும் ​பெயரு​டையவனாய் நான் காற்றினில் இருக்கி​றேன். ஆயுதம் தரித்தவருள் உலகத்தை சந்​தோஷப்படுத்தும் ஸ்ரீராமனாக ஸாக்ஷாத் ரூபகன் ஸ்ரீராமனாக இருக்கி​றேன்.  மீன்களுள் முத​லைக்கு முக்கியத்துவத்​தை ​கொடுத்துக்​கொண்டு, உலகிற்கு அற்பஞானத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு மகர:’ என்னும் ​பெயருள்ளவனாய் முத​லையில் இருக்கி​றேன்.  நதிகளுள் கங்​கை நதிக்கு நியாமகனாய் இதர நதிக​ளைவிட கங்​கை நதிக்கு அதிக முக்கியத்துவத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு, சம்சாரம் அஸாரம் என்பதாக உணர்ந்து அ​தை விடுபவ​னை ரக்ஷிப்பவனாக இருந்து ​கொண்டு இருப்பதாலும் ஜாஹ்னவி என்னும் ​பெயரு​டையவனாய் கங்கா நதியில் இருக்கி​றேன். –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர்வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 3)(ப​டைப்பு: ஆதி​மைந்தன்) 4. ​பெயர்சூட்டுவிழா:  ஸ்ரீவாயுபகவான் பூமியில் அவதரித்த ​பேது வானில்​ ​தேவகானம் முழங்கியது.  ​​தேவர்கள் துதிபாடினர்.  மத்ய​​கேஹர், பூர்ணசந்திரன் ​பேன்ற முகமு​டைய குழந்​​​தையைப் பார்த்து பூரித்து பகவான் ​கொடுத்த பிரசாதம் என்​றெண்ணி விதிப்படி நாமகர்ணம் ​​செவித்தார்.  ஞானமும், வாசு​தேவனிடம் பக்தியும் ​கொண்ட குழந்​​தைக்கு வசு​​தேவன் என்று ​பெயர் சூட்டினார்.  வா என்றால க்ஞானம், அஸூதேவஎன்றால் ஞானகாரியத்திற்காக அவதரித்த முக்யப்ராணர் என்று ​பொருறாயிற்று.
5. ஸ்ரீமதாச்சார்யரின் இள​மைப்பருவம் : பூர்வாலயர் என்ற மாடில்​லையா ஒரு அந்தணர்.  அவர் குழந்​தையாக இருந்த வசு​தேவனுக்கு பால் அருந்துவதற்காக கற​வை மாட்​டை தானமாகக் ​கொடுத்தார்.  அந்த அந்தணர் குறுகிய காலத்தில் மரணம​டைந்தார்.  பின்பு தன் ​சொந்த மகனுக்​கே மீளவும் பிறந்து ஸ்ரீமதாச்சார்யரிடம் உப​தேஸம் ​பெற்று ​மோக்ஷம​டைந்தார். மத்ய​கேஹர் தன் குடும்பத்துடன் குழந்​தையான வாசு​தேவ​னை அ​ழைத்துக்​கொண்டு, அனந்​தேஸ்வரரின் ​தேவாலயத்திற்கு ​சென்று, பகவானுக்கு குழந்​தை​யை காணிக்​கையாகக் ​கொடுத்தார்.  ஸ்ரீஅனந்​தேஸ்வர​ரை வணங்கி திரும்பி வரும்​போது இரவு ​நேரமாகிவிட்டது.  காட்டு வழியாக அவரது குடும்பம் வண்டியில் வந்து​கொண்டிருந்தது.  அக்காட்டில் ஒரு ​பேய் நடமாடி வந்ததால் அவ்வழியாக ​​​செல்ல யாரும் பயப்படுவர்.  மத்ய​கேஹரின் பரிவாரம் அவ்வழியாகச் செல்லும் சமயம் அந்தப் ​பேய் ​தோன்றி வாட்டச்சாட்டமான ஒரு  ஆ​ளைப்பிடித்து தாக்கியது.  அந்த மனிதன் அச்சமய​மே ரத்தம் கக்கி கீ​ழே விழுந்தான்.  எல்​லோருக்கும் பயம் பீடித்தது.  அந்தப் ​பேய் அந்த மனிதனின் உடலில் புகுந்து​கொண்டு இந்தக் குழந்​தை ஜீ​வோத்தமன்,  மிகவும் பலசாலி, இவனுக்காக உங்கள் எல்​லோ​ரையும் விட்டுவிடுகி​றேன், என்று கூறி ம​றைந்தது.  அங்கிருந்த   அ​னைவரும் வாசு​தேவரின் மகி​மை​யை புரிந்து​கொண்டு இ​றைவனுக்கு நன்றி ​செலுத்தினர்.                                                             
ஒருநாள் வாசு​தேவரின் தாய் ​வே​லை நிமித்தமாக ​வெளி​யே ​செல்ல ​வேண்டியிருந்தது.       குழந்​தை​யை ஒரு ​பொருப்பான கன்னிப்​பெண்ணிடம் பார்த்துக்​கொள்ளச் ​சொல்லி ஒப்ப​டைத்துவிட்டு ​வெளி​யே ​சென்றார்.  குழந்​தை மிகவும் அழத் ​தொடங்கிவிட்டது. அப்​பெண் குழந்​தை​யைச் சமாதானம் ​செய்தாள்.  தாலாட்டினாள்.  எதற்கும் குழந்​தை அழு​கை​யை நிறுத்தவில்​லை.  ​செய்வதறியாது தவித்தாள் அப்​பெண்.  பா​லை சூடாகக் ​கொடுத்தா​லே உஷ்ண​ரோகம் வரும் என்று நி​னைத்து பா​லைக் குளிர்வித்து ​கொடுப்பாள் தாய், அக்குழந்​தைக்கு ​வேக​வைத்த ​கொள்​ளை ஊட்டினாள் அப்பணிப்​பெண்.  ​கொள்ளு எளிதில் ஜீரணிக்கக்கூடிய ​பொருளல்ல.  ​மேலும் உஷ்ணத்​தைக் ​கொடுப்பது.  ​நேரமாகிவிட்ட​தை உணர்ந்த தாய் பரிதவித்து குழந்​தை பசியால் வாடும் என்​றெண்ணி ஓடிவந்து குழந்​தை​யைப் பார்த்தால்.  அக்குழந்​தை மகிழ்ச்சியாக இருப்ப​தைக் கண்டாள். நடந்த​தைத் ​தெரிந்து​கொண்டு, குழந்​தைக்கு ​க்ஷேமம் உண்டாக தாயும் தந்​தையும் ஜபம் முதலியவற்​றைச்​செய்தனர்.  (þ¾ý¦¾¡¼÷¨Â«Îò¾ 
Å¡Ãõ¸¡½Ä¡õ)                                                                               
 Å¢‰Ï…†ŠÃ¿¡Á:†¡¢µõ                                                                                                                                       
«ì3á‹Â: …¡ŠÅ¾: ìÕ‰§½¡ §Ä¡†¢¾¡‡: ôþ÷¾3¿:/  
ôÃâ4¾Šò¡¢¸Ìô3¾4¡Á ÀÅ¢òÃõ Áí¸3Äõ ÀÃõ // (7)  
®…¡¿: ôá½¾3: ô᧽¡ ˆ§Â‰¼2: Š§Ã‰¼ ôáÀ¾¢/  
†¢Ãñ¸3÷§À4¡ â4¸3÷§À4¡ Á¡¾4§Å¡ ÁÐ4…¥¾3¿//(8)

சாரல்: 05 துளி: 03 நாள் 10,04,2011

கீதையின் சாரலில்.....விபூதி ​யோகம்  10வது அத்யாயம் 

பிரஹ்லாத3ஸ்மி  ​தை3த்யாநாம் கால :  கலயதாமஹம்/
ம்ருகா3ணாம் ச ம்ரு​கே3ந்த்3​ரோSஹம் ​வைந​தேயஸ்ச பக்ஷிணாம்// 
(அத்.10.ஸ்​லோ.30)
அசுர வம்ஸத்தவருள் நான் ப்ரஹ்லாதன், ஜீவன்கள் தம் கர்மபலன்க​ளை தகுந்த ​நேரம் மற்றும் இடத்திலும் அனுபவிக்கும்படி ​செய்யும் சக்திகளில் நான் கால​தேவன், மிருகங்களுள் நான் சிங்கம், பக்ஷிகளுள் நான் கருடன்.
தைத்யர்கள் : அதிதியின் ​மைந்தர்கள் ஆதித்யர்கள்.  இவர்கள் 
இ​றைவனு​டைய பக்தர்கள்.  திதியின் ​மைந்தர்கள் ​தைத்தியர்கள்.  இவர்கள் நாத்திகர்கள்.  திதியும், அதிதியும் ச​கோதரிகள் ஆவார்கள்.  பிரஹ்லாதர் ​தைத்யருள் பிறந்தவ​ரேயாயினும் மிகச் சிறந்த பாகவ​தேத்தமர்.  பிரஹ்லாதரின் பக்தி சிறப்பு ​பெற்றது.
காலம்:  காலம் என்பது ​நேரத்​தைக் குறிக்கிறது.  காலன் என்பது யமதூதர்களுக்கு ​பெயர்.  கர்மங்க​ளை குறிப்பிட்ட ​நேரத்திலும் குறிப்பிட்ட இடத்​தை அனுசரித்தும் ​செய்விக்கும்படி ​செய்யும் சக்தி கால ​தேவனுக்கு உண்டு.
சிங்கம்: மிருகங்களுக்கு அரசன் சிம்மம்.
வைன​தேயன் : தக்ஷனின் புத்ரியான வின​தை ​வைன​தேயனின் தாய் ஆவார்.  என​வே இப்​பெயர் ​பெற்றவர்.  பகவானு​டைய வாகனம்.  பக்ஷிகளில் சிறந்தவர் கருடபகவான்.  இவர் ​தேவஸ்வரூபியானவர்.   ஸ்​லோகத்தின் உட்கருத்து :    தைத்யர்களுள் ஸ்​ரேஷ்டரான ப்ரஹ்லாதனுக்கு நியாமகனாய் ப்ரஹ்லாதனில் இருக்கி​றேன்.  பந்தங்க​ளை உண்டாக்குபவர்களில் உத்தமனான காலனுக்கு நியாமகனாய் சரியாக ​தெரிந்து​கொள்ளவதனாலலும் காலநியாமகனாய் காலனில் நான் இருக்கி​றேன்.  என்​னைத் ​​தேடும் பக்தர்களுக்கு ஸ்வாமியாய்  ம்ரு​தேந்த்ர என்னும் ​பெயரு​டையவனாய், மிருகங்களில் உத்தமனான சிம்மத்திற்கு நியாமகனாய் ஸிம்மத்திலிருக்கி​றேன்.  பக்ஷிகளில் ஸ்​ரேஷ்டனான கருடபக்ஷிக்கு இதர பக்ஷிக​ளைவிட முக்கியத்துவத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு என்​னை வி​சேஷமாய் துதிப்பவருக்கு ஆஸ்ரயனாய் இருந்து​கொண்டு ​வைன​தேய ஸப்த வாச்யனாய் கருட பக்ஷியில் இருக்கி​றேன். –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமதவாச்சார்யர் (பகுதி 2)(ப​டைப்பு: ஆதி​மைந்தன்) 2. அவதரித்த காலம் மற்றும் ​க்ஷேத்ரம் :     ஸ்ரீமத்வர் கர்நாடக மாநிலம் பாஜகா என்னுமிடத்தில் 1238ம் ஆண்டு விளம்பி வருடம் ஆடிமாதம் சுக்லபக்ஷச தசமி (விஜயதசமி) அன்று மத்யான ​வே​லையில் புதன் கிழ​மையன்று ஸ்ரவண நக்ஷ்சத்திரத்தல் அவதரித்தார்.  கர்னாடக மாநிலத்தில் உடுப்பி என்ற புண்ணிய ​க்ஷேத்ரத்திற்கு ​தென் கிழக்​கே எட்டு கி.மீ தூரத்தில் பஜக ​க்ஷேத்ரம் என்ற சிறிய கிராமம்  உள்ளது.  தற்​போது இக்கிராமம் ​பெல்​​லே என்று அ​ழைக்கப்படுகிறது.  முன்காலத்தில் உடுப்பி, ரஜதபீடத்தில் மிகவும் பிரசித்தமான ஸ்ரீஅனந்​தேஸ்வரர் ​தேவாலயம் இருக்கிறது.  ஸாக்ஷாத் ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி​யே இங்கு லிங்க வடிவில் உள்ளார்.  அப்​பேர்​பெற்ற புண்ணிய பூமியின் அரு​கே அ​மைந்த பாஜக ​க்ஷேத்ரத்தில் ஸ்ரீபகவத்பாதர் அவதாரம் ​செய்தார்.
3. ஸ்ரீமத்வரின் தாய் தந்​தையர்: ஸ்ரீமத்வர், மத்ய​கேஹ பட்டர் என்ற அந்தணருக்கும் ஸ்ரீ​வேதவதி அம்​மையாருக்கும் மகனாக அவதரித்தார்.  மத்ய​தகஹ பட்டரின் இயற்​பெயர் நாராயணபட்டர் என்பது, அவரது குலத்தின் ​பெயர் நட்​டெந்தில்லயா என்பது.  இவர் புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் ​வேதங்க​ளை நன்கு கற்றுணர்ந்த வித்வாம்ஸர்.  இவர் உபன்யாஸம் ​செய்வதில் வல்லவர்.  இவர் சிறந்த வல்ல​மைப் ​பெற்றிருந்தாலும்கூட இவருக்கு ஆண் குழந்​தை இல்​லை என்ற கு​றை இருந்தது, என​வே இந்த தம்பதிகள் ஸ்ரீஅனந்​தேஸ்வர​ரை ஆண் குழந்​தை வரம் ​வேண்டி நீண்ட நாட்களாக பிரார்த்த​னை ​செய்து வந்தனர்.  அவர்களது ​வேண்டுத​லை நி​றை​வேற்றும் விதமாகவும், உண்​மையான தத்துவத்​தை உலகினுக்கு எடுத்து​ரைக்கவும் ஸ்ரீமதாச்சார்யர் அவதரித்தரார்.
      ஹனும பீம அவதாரங்களில் கர்பவாசமின்றி பிறந்தது ​போல​வே, ​லோகத்திற்கு 
த​லைவரான ஸ்ரீவாயு பகவான், முப்பத்திரண்டு லக்ஷணங்களுடனும் ஒன்பது துவாரங்கள் உள்ள, பிறக்கப்​போகும் குழந்​தையினுள் இருந்த ஜீவ​னை ​வெளி​யேற்றி ​தோஷமற்றவராய் அவ்வுடலினுள் புகுந்து அவதரித்தார்.(2) .....(​தெடரும்,,)
ஹ​​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே ஹ​ரே கிருஷ்ண ஹ​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே!!

சாரல் 05 துளி 02 தேதி 03.04.2011


கீதையின் சாரலில். . . . . விபூதி யோகம் (10வது அத்யாயம்)
அநந்தஸ்சாஸ்மி நாக3ாநாம் வருணோ யாத3ஸாமஹம்/
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யதாமஹம்// ( அத்-10. ஸ்லோ.29)

"நாகப்பாம்புகளுள் ஆதிசேஷனாக இருக்கிறேன். நீரில் வாழும் உயிரினங்களுள் நான் வருணன், பித்ருக்களுள் நான் அர்யமா, தண்டித்து அடக்கி நீதி வழங்குபரில் நான் யமன்".
ஆதிசேஷன் : பகவானிடமே தோன்றியவர். ஆயிரம் தலைகளையுடையவர். பகவான் ஆனந்தசயத்திற்கு படுக்கையாக இருப்பவர். பகவானின் பக்தர். ஸேவகள். பகவான் அவதரிக்கும் போது தானும் உடன் இருந்து கைங்கைர்யம் செய்பவர். ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத்தின் போது பலராமராகவும் அம்ஸாவதாரமெடுத்தவர். சேஷனில் சிறந்தவர் ஆதிசேஷன்.
வருணன்: எட்டு திக்குகளுக்கும் பாலகர். ஸமுத்திரத்திற்கு அரசன். பகவானுடைய சிறந்த பக்தர்.
அர்யமா: பித்ருக்கள் மொத்தம் 7 போர்கள். இவர்களில் சிறந்தவர் அர்யமா.
யமன்: தர்ம ஸாஸ்த்திரத்தை தீவிரமாக நிலைநாட்டுபவர். கர்மமே கண்ணாக இருப்பவர். சிறந்த ஞானி. பகவானிடம் பக்திகொண்டவர். காடகோபநிஷத்தில் நசிகேதனுக்கு ஆத்ம ஞானத்தை போதித்தவர். நீதி தவறாது நடுநிலையுடன் நீதிவழங்குபவர்.
ஸ்லோகத்தின் உட்கருத்து: ஆயிரம் தலையுடைய ஸர்பங்களில் உத்தமனான ஆதிஸேஷனுக்கு நியாமகனாயும், குணபூர்ணனும் அனந்தசேஷனுமானதால் 'அனந்த:' என்னும் ஸர்பத்திலிருக்கிறேன். நீர்நிலைகளில் வசிக்கும் பிராணிகளில் வருணனுக்கு நியாமகனாயும், ஆனந்தத்தை கொடுப்பவனாகவும், 'வருண:' என்னும் பெயருடையவனாய் வருணனில் இருக்கிறேன். பித்ருக்களில் சிறந்தவனான ஆர்யமா என்னும் தேவதைக்கு நியாமகனாயும், அறிய வேண்டியதை அறிபவனாகவும் ஆர்யமா என்னும் பெயருடையவனாய் இருக்கிறேன். தண்டித்தருள்பவருள் யமனுக்கு நியாமகனாயும், யாவற்றையும் நியமிப்பவனாய் யமஸப்த வாச்சனாய் யமனில் இருக்கிறேன். -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்- 
இங்​கே ஒரு துளி:        ஹரி ஓம்
ஸ்ரீமத்வாச்சார்யர்- வாழ்க்கை வரலாறு மற்றும் தத்துவம் (படைப்பு: ஆதிமைந்தன்)
காந்தாய கல்யாண குணைக தா4மனே நவத்யுநாத ப்ரதிம ப்ரபா4யா/
நாராயணாயகில காரணாய ஸ்ரீப்ராண நாதாய நமஸ்கரோமி// (ஸ்ரீ ஸூமத்வ விஜயம் முதல் ஸ்லோகம்)
          ஸ்ரீமந் நாராயணனித் திருக்குமாரரே ஸ்ரீவாயுதேவர். பாரதி பதியான வாயு பகவான் ஸர்வ ஜீவோத்தமர். சர்வதேஷ நிவாரணர். ஸ்ரீவாயு பகவான் ஸ்ரீஹரியின் ஆன்மீகமான தாஸர். பக்தர். வாயு பகவான் த்ரோதாயுகத்தில் ஸ்ரீஹனுமராக அவதரித்து ஸ்ரீராமச்சந்ர மூர்த்தியை ஸேவித்தார். அவரே த்வாபர யுகத்தில் ஸ்ரீபீமஸேனராக அவதரித்து ஸ்ரீகிருஷ்ண பகவானை ஸேவித்தார். அவரே கலியுகத்தில் ஸ்ரீமத்வாச்சார்ய்ராக அவதரித்து ஸ்ரீவேதவியாஸ பகவானை பூஜித்தார்.
            நம்முடைய படிப்பறிவிற்கு எட்டியவரை ஸ்ரீமத்வருடைய காலம் 1238 முதல் 1317 வரை நம் கண்களுக்கு தெரியுமாறு அவதரித்து சஜ்ஜனர்களுக்கு த்வைத சித்தாந்தத்தை உபதேஸம் செய்தார் என்பது உண்மை. இதற்கு சாக்ஷியாக அவருடனே அவருடைய காலத்திலே வாழ்ந்த ஸ்ரீநாராயண பண்டிதாசார்யர் அவர்கள் இயற்றிய மஹா காவ்யம் 'ஸ்ரீ ஸூமத்வ விஜயம்'. இந்நூல் ஸ்ரீமதாசார்யர் அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் உத்தமமான காவியம். இதன் ஆசிரியர் ஸ்ரீமதாசார்யர் அவர்களின் சமகாலத்தவராதலால் இதில் பொய்யும், கற்பனையும் அல்லது மிகைப்படுத்தி கூறுவதற்கும் அவசியம் ஏதுமில்லை என்பதால் இந்நூலே ஸ்ரீமதாசார்யர் அவர்களின் அவதார மஹிமைகளை நமக்கு தெரிவிப்பதற்கு பிரமாணமான நூலாக இருக்கிறது என்பது சத்யம். 'ஸ்ரீ ஸூமத்வ விஜயம்' என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீமதாச்சார்யர் அவர்களின் வாழ்க்கை வரவாற்றை எனது யோக்யாம்ஸத்திற்கு ஏற்றவாறு சுருக்கமாக எடுத்துரைக்க விழைகிறேன்.
1. ஸ்ரீமத்வரின் அவதார நோக்கம்: நம் நாட்டில் ஏராளமான மதங்கள் தனக்கே உரிய கருத்துக்களுடன் தம்முடைய மதத்தை ஆணித்தரமாக நிலைநிறுத்த விரும்பின. வேதமே அப்பிரமாணிகம் அதை நம்ப வேண்டான் என்ற கருத்தினை ஒரு சில மதங்களும், வேதமே சத்யம் என்று கூறி வேதத்திற்கு ஒவ்வாத அர்த்தங்களை மக்களிடையே திணித்து ஒருசில மதங்களும் நிலவி வந்தன. சத்யமான இப் பிரபஞ்சமே பொய் என்றும், பகவானுக்கு குணங்களே கிடையாது என்றும், ஜீவப்பிரம்மத்திற்கு அபேதத்தை நிரூபிக்கும் குரல்களும், சாதுக்களின் மனதிற்கு சஞ்சலத்தை அளித்தன. தர்மமார்கம் தெரியாது சஜ்ஜனர்கள் தவித்தனர். அச்சமயத்தில் தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி ஸ்ரீமந்நாராயணனை அனுகி, இந்த சமயத்தில் உதவிகரம் நீட்ட வேண்டினர். அவ்வமயம் ஸ்ரீவிஷ்ணு தனக்கு கலியுகத்தில் அவதாரம் இல்லாததால் வாயு பகவானை பாரத பூமியில் பிறக்கவும், வேத சாஸ்த்திரங்கள் மற்றும் பிரம்ம சூத்திரங்களுக்கு சரியான அர்த்தங்களைக் கூறி ஜீவர்களுக்கு உண்மையான ஞானத்தை அளிக்க உத்திரவிட்டார். எனவே வாயு பகவான் இந்த அணைக்கு உட்பட்டு ஸ்ரீமத்வராக அவதாரம் செய்து ஜனங்களுக்கு சரியான ஞானத்தை அளித்துள்ளார்.
             ஸ்ரீமத்வர் அவர்களுக்கு அனேக பெயர்கள் உண்டு. அவற்றில் 1. வாசுதேவ 2. பூர்ணபிர்க்ஞ்னா 3. ஆனந்த தீர்த்ர் இம்மூன்றும் முக்கிய பெயர்களாகும். இன்னும் அனுமான தீர்த்தர், தஸப்ரமதி, ஸூகதீர்த்தர் போன்ற பெயர்களுமுண்டு. ( இதன் தொடர்ச்சியை அவ்வப்போது இடம் இருக்கும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கொடுக்கிறோம்)

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் / 
நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //