Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Monday, February 14, 2011

சாரல் : 4 துளி : 48 நாள்: 27.02.11

காடகோபநிஷத் (படைப்பு : திரு. ஆர். ராமன், சன்னதி தெரு, திருக்கோவிலூர்)
இரண்டாவது அத்யாயம் - மூன்றாம் பகுதி:

அரசமரம் போன்றதான உலகம் : ஸ்லோகம் 1 இந்த உலகமாகிய அரச மரம் மேலானதை அதன் ஆதாரமாக கொண்டுள்ளது. மேலானவற்றிற்குக் கீழே இருப்பது அதன் கிளைகள். மேலானதால் மூடப்பட்டுள்ளது. எப்போதும் தொடர்ந்திருப்பது. இந்த மரத்தின் மேலான ஆதாரம் குற்றமற்றது. எண்ணற்ற குணங்களைக் கொண்டுள்ளது. அழிவில்லாதது. எல்லா உலகங்களும் இதை சார்ந்தே உள்ளது. யாரும் இதை கடக்கமுடியாது. இது அதுவே. விளக்கம் : பரமாத்மாவின் மகிமை இங்கே ஆதாரமாகப்பட்டுள்ளது. இந்த உலகம் ஒரு அரச மரத்தால் ஒப்பிடப்பட்டுள்ளது. மேலான பரமாத்மா ஆதாரம், 'ஊர்த்தவ' என்று இந்த உலகத்தின் வேறாக குறிப்பிட்டிருப்து லட்சுமியை மேலான கட்டுப்பாட்டிலுள்ள இதர தேவதைகள் கிளைகளாக உருவகஞ்செய்யப்பட்டுள்ளது. அஸ்வ அல்லது மேலான பரமாத்மா இந்த மரத்தை ஊர்ந்து இருக்கிறார். அதனால் அஸ்வத்த மரம் என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து இருப்பது என்பது சநாதன என்பதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊர்த்துவ என்றால் மேலான என்று பொருள். மேலான பரமாத்மா இந்த உலகமாகிய மரத்திற்கு ஆதாரமானக உள்ளார். பரமாத்மாவின் கீழ் உள்ள இதர தேவதைகள் இந்த மரத்தின் கிளைகள். ஸ்ரீலட்சுமி இந்த மரத்தின் வேர். ஊர்த்துவ என்ற சொல்லும், லட்சுமியைக் குறிக்கிறது. ஸ்லோகம் 2 : இந்த உலகம் பூராவும் பிராணணிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணணால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெரிய இடிமுழக்கம் போன்று அவர் பயமுறுத்துகிறார். இதனை அறிபவர் அழிவற்றவராகிறார். விளக்கம் : உலகம் வெளிப்படுவதும், இயங்குவதும், பிராணன் என்று சொல்லப்படுகின்ற பரமாத்மாவால்தான். அவருடைய இடிமுழக்கத்தினால் பயத்தை தோற்றுவிப்பதால் அனைத்தும் கீழ்படிகின்றன. ஸ்லோகம் : 3 அவர் மீதுள்ள பயத்தினால் அக்னி எரிகிறது. சூரியன் சுடுகிறது. இந்திரன், வாயு மற்றும் ஐந்தாவதான மரண தேவனும், சுறுசுறுப்பாக தங்கள் கடமைகளை செய்கின்றனர். விளக்கம் : பரமாத்மாவின் மகிமை, அதாவது அனைவரும், அவருடைய ஆணையின் பேரில் தான் தங்கள் தங்கள் தொழில்களைப் புரிகின்றனர். பரமாத்மாவைக் கண்டு பயப்படுகின்றனர் என்ற விவரங்கள் இங்கு தெரிவிக்கப்படுகின்றன. ஸ்லோகம் : 4 இந்த உடம்பு வீழ்வதற்கு முன்பு, இந்தப் பிறவியிலேயே ஒருவன் பரமாத்மாவைப்பற்றிய அறிவைப் பெறக்கூடுமானால், அவன் வைகுண்டத்தில் சரீரம் (அப்ராக்ருதமான) எடுப்பதற்குரியவனாக ஆவான். (அவன் விடுதலையடைவான்) விளக்கம் : பிறவிப்பயனை இந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது. பரமாத்ம ஞானம் இப்பிறவிலேயே அடைய முயற்சிக்க வேண்டும் என்று போதிக்கிறது. ஸ்லோகம் :5 தன்னில் (ஜீவனில்) கண்ணாடியில் பார்ப்பதுபோலவும், பிதுர்லோகத்தில் கனவில் பார்ப்பதுபோலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீரில் பிரதிபலிக்கப்பட்டது போலவும், பிரம்மலோகத்தில் வெயிலும், நிழலும் (பகற்பொழுதில்) இரண்டும் சுடும் இடம்போல் தெளிவாகவும் (உறையும் பரமாத்மா) காணப்படுகிறார். விளக்கம் : பலதரப்பட்ட படிகளில் உள்ள மனிதர்களுக்கு, பலதரப்பட்ட கோணங்களில் கிடைக்கும் பரமாத்ம தரிசனம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. பரமாத்மா விவேகிகளாலும், ப்ரம்மலோகத்திலும், தெளிவாக காணப்படுகிறார். பித்ருலோகத்தில் அரவது காட்சி சிறிது மங்கிய நிலையில் உள்ளது. கந்தர்வ லோகத்தில் அது சிறிதே தெளிவாக உள்ளது. காட்சியின் இந்த கோலங்கள் தகுந்த உவமானத்துடன் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்லோகம் : 6 வழிகளில் வெளிப்படும் அல்லது பலவழிகளில் செயல்படும் புலன்கள் மற்றும் புலன்களின் அபிமான தேவதைகள் தரத்தை அறியவும், மற்றும் அவைகளின் தோற்றம் மற்றும் அழிவுகளை அறியும் விவேகி துக்கப்படமாட்டான். விளக்கம் : பரமாத்மாவின் மேன்மையை அடைய தேவதைகளின் தாரதம்யத்தைப் பற்றிய அறிவு தேவை. ஆகையால் அதைப் பற்றி இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்லோகம் :7 & 8 : புலன்களைவிட மனம் உயர்ந்தது. மனதைவிட சத்வம் அல்லது புத்தி உயர்ந்தது. புத்தியைவிட மஹத் தத்வம் உயர்ந்தது. மஹத்தத்வத்தைவிட அவ்யக்தம் உயர்ந்தது. அவ்யக்கத்தைக் காட்டிலும் மேலான புருஷன் உயர்ந்தவன். அவர் எங்கும் வியாவித்துள்ளார். உடல் சம்மந்தமற்றவர். இவ்வாறு அவரை அறிபவன் விடுதலை அடைந்து அழியாத் தன்மையை எய்துகிறான். விளக்கம் : இங்கு பரமாத்மாவின் மேன்மையை அறிவதற்காக தேவதைகளின் தாரதம்யம் விளக்கப்பட்டுள்ளது. புலன்கள் முதலியவைகள் என்பது அவைகளின் அபிமான தேவதைகளைக்குறிக்கும். புலன்கள் மனம் இவைகளிடையே உள்ள பொருட்களைப் பற்றி புரிந்துகொள்ளவேண்டும். ஸ்லோகம் : 9 இறைவனின் மூல ரூபம் யாராலும் காணக்கூடியதல்ல. யாரும், அவரைத் தங்கள் கண்களால் பார்க்க இயலாது அல்லது வேறு எந்தப் புலன்களாலும், அவர் புத்தி மற்றும் பக்தியின் தூண்டுதலினால் மனதினால் உணரக்கூடியவர். இப்படி அவரை அறிபவன் அழியாத் தன்மையை அடைகிறான். விளக்கம் : பரமாத்மா அவ்யக்தன் அல்லது இயற்கையாக காணக்கூடியவரல்ல. ஆகையால் அவரை யாராலும் பார்க்க இயலாது. அவருடைய மூல ரூபம் எல்லாருடைய பார்வைக்கும் அப்பாற்பட்டது. அவருடைய கருணையினாலே ஒருவன் அவரைப்பற்றிய அறிவை அடையக்கூடும். ஸ்ரவணம், மனனம் முதலியவைகளாலும், பக்தியினாலுமே அது சாத்யமாகும். (இதன் தொடர்ச்சியை அடுத்தவாரம் கடைசி வாரஇதழில் காணலாம்)

Thursday, February 10, 2011

சாரல் 4 துளி 47 தேதி 20.02.11

கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)
அஸ்வத்த2: ஸர்வவ்ருக்ஷ்ாணாம் தேவர்ஷீணாம் ச நாரத:/
க3ந்தர்வாணாம் சித்ரரத2: ஸித்3த4ாநாம் கபிலோ முநி:// (அத்.10 ஸ்லோ.26)

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, மரங்களுள் அரச மரமாகவும், தேவர்களுள் நாரதராகவும், கந்தர்வர்களுள் சித்ரரதனாகவும், ஸித்தர்களுள் கபில முனியாகவும் காட்சியளிப்பதாகக் கூறுகிறார்.
அரசமரம் : அரசமரம் தெய்வாம்ஸம் பொருந்திய மரமாக எல்லோராலும் வணங்கப்படுகிறது. இந்த மரத்தில் பகவானின் ஸந்நிதானம் இருப்பதால் அனேக ரிஷிகளும் கூட அரசமரத்தை பக்தியுடன் வேண்டிவணங்குகின்றனர். அரசமரம் பல நோய்களை நீக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
ஸ்ரீநாரதர் : இவர் தேவரிஷி யாவார். பக்திக்கு உதாரணமாகத் திகழ்பவர். ப்ரஹ்லாதனுக்கு கருவிலேயே நாராயண மந்திரத்தை போதித்தவர். ஸ்ரீவேதவ்யாஸ பகவான் வேதங்களை நான்காகப் பிரித்தும், ப்ரஹ்மசூத்ரங்களை இயற்றியும் த்ருப்த்தியடையாமல் குழம்பிய நிலையில் இருந்தசமயம் ஸ்ரீநாரத பகவான் அவரிடம் பகவானின் லீலைகளை விளக்கி எழுதுமாறுச் சொல்ல ஸ்ரீமத்பாகவதம் பிறந்தது. அதுபோலவே ஸ்ரீமத்ராமாயணம் இவரின் அனுகிரகத்தால் உறுப்பெற்றது. இவர் பிரம்மாவின் மானஸ புத்ரராக மனதிலிருந்து தோன்றிய மஹான். பகவானின் நாமத்தைப் பாடிக்கொண்டே இருப்பவர். வேத வேதாந்தங்கள் மற்றும் உபநிடத்துக்ளின் உண்மைப் பொருளை அறிந்தவர்.
கந்தர்வர் : இவர்கள் கந்தர்வ லோகத்திலிருப்பவர்கள். மிகவும் அழகானவர்கள். இவர்கள் சங்கீதம், நாட்டியம், அபிநயம் போன்றவற்றைச் சிறப்பாகச் செய்பவர்கள். மனிதர்களில் சிலர் அனேக புண்யங்களைச் செய்துவிட்டு கந்தர்வர்களாக கந்தர்வலோகத்தை அடைவர். மேலும் கல்பகாலத்தின் தொடக்கத்திலிருந்தே கந்தர்வர்களாக இருப்பவர்களும் உண்டு. இவர்கள் தேவ கந்தர்வர்கள் எனப்படுகிறார்கள். இவர்களுக்கு தலைவன் சித்ரரதன்.
ஸித்தர்கள் : தர்மம், நியாயம், வைராக்யம் நிறையப்பெற்று அஷ்ட மகா சித்திகளைப் பெற்றவர்கள். தன் ஞானத்தால் ஸித்திகளை அடையப்பெற்றவர்கள். இவர்களில் மிகச் சிறப்புபெற்றவர் கபிலர். ஏனென்றால் இவர் பகவானின் சாக்ஷ்ாட் அவதார ரூபம். ஸ்ரீமத்பாகவதம் 01,03,10ல் "பஞ்சம: கபிலோ நாம ஸித்தேச: கால-விப்லுதம்" என்பதாகக் கூறுகிறது. அவதார ரூபங்களில் கபிலர் ஐந்தாவதாகத் தோன்றியவர். இவர் கர்தமா-தேவக்ஷூதிக்கு மகனாகப்பிறந்து தன் தாய்க்கு ஞான உபதேஸம் செய்தவர். 
ஸ்லோகத்தின் உட்கருத்து : மரங்களின் வகையில் அரச மரத்திற்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு, குதிரையைப்போல் இருப்பதனால்ன, அஸ்வத்த: என்ற நாமகனாய் அரசமரத்திலிருக்கிறேன். தேவர்களில் ஞானத்தைக் கொடுக்கும் நாரதன் என்ற பெயருடையவனாய் நாரதரிலிருக்கிறேன். எத்தனையோ கந்தர்வர்களில் சித்ரரதனுக்கு ஸ்ரேஷ்டத்தைக் கொடுத்துக்கொண்டு விசித்ரரான அதிதேவாதிகளை ரதமாயுடையவனானதால் சித்ரரதன் என்னும் பெயருடையவனாய் சித்ரரதனுள் இருக்கிறேன். ஸித்தர்களில் மெளன சீலனாய், சுகரூபனாய், ரக்ஷிப்பவனாய் ஜகத்தை என்னிடத்திலே வைத்திருப்பவனாய் ஸாக்ஷ்ாத்ரூபகனாய் கபிலர் நானே.-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : (10வது அத்யாயம்) அத்யாயச் சுருக்கம்: "ஆயுதம் தரித்தவருள் நான் ராமன். மீன்களுள் மகரம். நதிகளுள் கங்கை நான். படைத்தல், காத்தல் அழித்தல் ஆகியவைகளும் நானே. வாதம் செய்வோரிடத்தில் 'வாத:' என்ற பெயருள்ள ரூபத்துடன் இருக்கிறேன். அக்ஷ்ரங்களுள் நான் "அ" வாக (அகரம்) உள்ளேன். த்வந்த்வம் (அதாவது இருச் சொல் கலவை) நானே, காலம் நானே. நான்முக பிரம்மதேவரிடமும் நானே இருக்கிறேன். ம்ருத்யு, உற்பத்தி, கீர்த்தி, க்ஷேமம், ஞாபகசக்தி , புத்தி, உறுதி, பொறுமை யாவும் நானே. ஸாமங்களிடையே ப்ருஹத்ஸாமம் நான். மந்திரங்களில் காயத்ரீ நான். மாதங்களில் மார்கழியும் நிச்சய புத்தியும் நானே. விருஷ்ணி வம்சத்தில் வாசுதேவன் நான். பாண்டவர்களுள் தனஞ்செயன் என்ற நீயும் (அர்சுனனும்) நானே, ஜெயத்தை விரும்புவோர்களின் ராஜநீதி நான். இரகசியங்களில் மெளனம் என்பது நான். ஞானிகளின் ஞானமும் நானே. அர்சுனா ஸகல பிராணிகளுக்கும் எது வித்தோ அதுவும் நானே. இந்தப் பிரபஞ்சத்தில் நான் இல்லாத இடமில்லை. ஹே! பரந்தபா! என் தெய்வசக்தியை விளக்கும் விபூதிகளுக்கு எல்லையே இல்லை. நான் இப்போது உனக்கு கூறுவது சிலவற்றை மாத்திரமே. இவ்வுலகில் சிறப்புடையதாயும், தேஜஸ் உடையதாயும், சக்தி வாய்ந்ததாயும் உள்ள பொருட்கள் அனைத்தும் என் சக்தியின் அம்சத்தில் தோன்றியது என்று நீ அறிதல் வேண்டும். அர்சுனா இவ்வாறு பலவற்றை அறிவதால் உனக்கு என்ன பயன்? சுருக்கமாய் சொன்னால், இவ்வுலகமனைத்தையும் என் யோக சக்தியின் ஒரு பகுதியால் நான் தாங்கி நிற்கிறேன்".
இன்னும் ஒரு துளி : (காடகோபநிஷத் அத்2 பகுதி2 ஸ்லோகம் 10 :) விளக்கம் :மேற்கண்ட இரண்டு உவமானங்களிலிருந்து கீழ்கண்ட விஷயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. 1. பரமாத்மா ஒருவரே 2. அவர் அநேக பிம்ப வடிவங்கள் உடையவர். 3. ஜீவன்கள் அநேகம். அவைகள் பரமாத்மாவின் பிரதிபிம்பங்கள். ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் பிம்ப வடிவத்தின் பிரதிபிம்பம். இந்த உதாரணங்களைக் கீழ்கண்டபடியும் ஆராயலாம். 1. அக்னி மற்றும் வாயு ஒருவரே (சேதன அக்னி அல்லது சேதன வாயு என அறியப்படுபவன். 2. இந்த அக்னியும், வாயுவும் அநேக பொருட்களில் ஒளி மற்றும் வாயு அம்சத்தில் பரவியுள்ளார். இந்த அம்சங்களே பிம்பங்கள். 3. ஒளி மற்றும் வாயுவை உள்ளடக்கிய அநேக பொருட்களிலுள்ள அசேதன அக்னி அல்லது அசேதன வாயு பிரதிபிம்பங்கள். 

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத// 
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //