Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Tuesday, May 24, 2011

சாரல்: 05 - துளி: 08 - ​தேதி: 15.05.2011


கீதையின் சாரலில்........... விபூதி ​யோகம்  (10வது அத்யாயம்)
ம்ருத்யு: ஸர்வஹரஸ் சாஹம், உத்ப4வஸ்ச ப4விஷ்யதாம்/                                        
கீர்த்தி: ஸ்ரீர் வாக் ச நாரீணாம், ஸ்ம்ருதிர் ​மேதா4 த்4ருதி:  க்ஷமா// 
(அத்.10-ஸ்​​லோ,34)
“யாவற்​றையும் நாஸம் ​செய்யும் மரணம் நா​னே, இனி உண்டாகும் ​பொருள்களுக்கு உற்பத்தி ஸ்தானம் நா​​னே, கீர்த்தியும், ​க்ஷேமமும், ஸ்த்ரீகளின் ​சொல்லும், ஞாபக சக்தியும், புத்தியும், உறுதியும் ​பொறு​மையும் நா​னே.
       யாவற்​றையும் ப​டைப்பவனும் அவற்​றை அழிப்பவனும் பகவா​னே.  பகவா​னே மரண​தேவ​தையாக இருந்து யாவற்​றையும் அழிக்கிறார்.  அது​போல​வே, அழித்தவற்​றை மீண்டும் ​தோற்றுவிப்பவர் பகவா​னே.  எதிர்காலத்தில் உற்பத்தியாகும் ​பொருள்களுக்கு காரண கர்த்தா பகவா​னே.
       ஒருவரின் புகழுக்கு காரணமானவர் பகவா​னே.  ஒருவர் ​செல்வந்தராக இருப்பதற்கும் நல்ல ​சொல்லாட்சி ​பெற்று இருப்பதற்கும் காரணமும் காரண கர்த்தாவும் பகவா​னே.  அது​போல​வே, நி​னைவாற்றல், ​மேதாவித் தன்​மை, ​தைர்யம், உறுதியான மனபக்குவம், ​பொறு​மை யாவும் தம் விபூதிரூப​மே என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு விவரிக்கிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து:   "நான் ஸர்வ நாஸகனாதலால், ம்ருத்யு நாமகனாய் ம்ருத்யுவிற்கு நியாமகனாய் ம்ருத்யு வில் இருப்பவன்.  யாவற்​றையும் உற்பத்திச் ​செய்வதனால் உத்பவ:’ என்னும் ​பெயரு​டையவனாய் உற்பத்தியிலிருக்கி​றேன்.  நான் புகழத் தகுந்தவனாதலால், ஸ்திரீகளின் புகழாகவும், துதிக்கப்படுவதனால் கீர்தி:’ என்ற ​பெயரு​டையவனாய் கீர்த்தியிலிருப்பவன்.  ஸ்ரீக்கு ஆஸ்ரயனாதலால் ஸ்ரீஸப்தவாச்யனாய் ஸ்ரீக்குள் இருப்பவன்.  வாக்கியங்களுக்கு நியாமகனாய், வாக்ய ஸப்த்த வாச்யனாய் வாக்கியத்திலிருப்பவன்.  நான் நி​னைக்கப்படுவதற்கு ​யோக்கியனாதலால் ஸ்மிருதி நாமகனாய் ஸ்ம்ருதியிலுப்பவன்.  புத்திக்கு நியாமகனாய் ​மே​தையிலிருப்பவன், ஜகத்​தைத்தரிப்பதினால் த்ருதி:’ ஸப்த்த வாச்யனாய் ​தைரியத்தில் இருப்பவன்.  ​​பொறு​மையின் ஸ்வரூபியானதால் க்ஷமா என்ற ​பெயருள்ளவனாய் ​பொறு​மையில் இருப்பவன். –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- 
ஸ்ரீமத்வாச்சார்யர்
வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 6)
(ப​டைப்பு: ஆதி​மைந்தன்)
பாடங்கள் முடிந்த பின்பு தன் ஒத்த வயதுள்ள மாணவர்களுடன் ஓடுதல், தாண்டுதல், குத்துச்சண்​டை, நீந்துதல் ​போன்ற வி​ளையாட்டுக்களில் கலந்து ​கொண்டு தாம் யாவற்றிலும் நிபுணர் என்று நிரூபித்தார்.
        இவர் படிப்பில் அதிக நாட்டமில்லாமல் அவ்வப்​போழுது வகுப்​பை விட்டு வீட்டிற்குச் ​சென்று சாப்பிட்டுவிட்டு தன் இஷ்டம் ​​​போல் வகுப்பிற்கு திரும்பி வருவ​தை கவனித்த ஆசிரியர், இ​தைக் கண்டிக்கும் வ​கையில் ​கோபம் ​கொண்டு வாசு​தேவ​னைப் பார்த்து நீ படிப்பில் சரியாக கவனம் ​செலுத்துவதில்​லை, பாடங்க​ளை உதாசீனம் ​செய்கிறாய், ஏமுட்டா​ளே ஏன் கவனித்துப் படிப்பதில்​லை  என்று கடிந்து​கொண்டார்.  இ​தைக் ​கேட்ட வாசு​தேவன் மிகவும் சாந்தமுடன் குரு​வே, ​வேதவாக்யங்க​ளை நீங்கள் பிரித்துப் பிரித்து கூறுகிறீர்கள் ​மேலும் நீங்கள் கூறுவ​தை​யே திரும்பத் திரும்பக் கூறுகிறீர்கள் புதியதாக ஒன்றும் கூறுவதில்​லை என்று கூறினார்.  இ​தைக் ​கேட்ட குருவிற்கு ​கோபம் வந்துவிட்டது.  அப்படியானால் இதுவ​ரைக் கற்றுணர்ந்த பாடங்க​ளைச் சரியாகக் கூறும்படிக் கட்ட​ளையிட்டார்.  வாசு​தேவன், மளமள​வென, ​சொல்லிக்​கொடுத்தப் பாடங்க​ளை எவ்விதப் பி​ழையுமின்றி நல்ல உச்சரிப்புடன் ஒப்புவித்தார்.  இன்னும் ​சொல்லிக் ​கொடுக்காத பாடங்க​ளையும் எடுத்துக் கூறினார்.  இ​தைக் ​கேட்ட குரு வியந்து தன் தவ​றை உணர்ந்தார்.  வாசு​தேவன் தன் வித்யா பருவத்தில் இவ்வாறான லீ​லைக​ளைச் ​செய்து எல்​லோ​ரையும் ப்ரம்மிக்க ​வைத்தார். தன்னு​டைய குருவின் மகனின் தீராத த​லைவலி​யை, அவனு​டைய வலது காதில் காற்​றை பயங்கரமாக ஊதித், தீர்த்து​வைத்தார்.        (IV) 7. ஸன்னியாச ஆஸ்ரமம் :-         ஸ்ரீமதாச்சார்யரின் பள்ளிப் பருவம் முடிவ​டைந்த பிறகு, பிரம்மச்சர்ய ஸன்னியாச ஆஸ்ரமத்​தை ஏற்றால் மட்டு​மே ஸ்ரீஹரியின் குணங்க​ளை பூர்ணமாக அறிந்து​கொள்ள முடியும் என்றும், தன்னிடமிருக்கும் பற்றற்ற நி​லை​யை உலகினுக்கு ​தெரிவித்து, ​வேத புராணங்களில் அப்​போ​தைய சூழ்நி​லையில் நிலவியிருந்த தவறான வ்யாக்யானங்க​ளை நிராகரித்து உண்​மையான பகவத்ஞானத்​தை ​தோற்றுவிக்க ​வேண்டும் என எண்ணினார்.  அதற்கு ஏற்ற தர்மம், ஸன்யாச தர்ம​மே என்​றெண்ணி தனக்கு ஏற்ற குரு​​வை ​தேடிச் ​சென்றார்.  இறுதியில் அச்யுதப்​ரேக்ஷர் என்னும் ஒரு சன்யாசி​யை ஆஸ்ரயித்தார். 

விஷ்ணுஸஹஸ்ரநாம-ஹரி ஓம்-
ஸர்வக3: ஸர்வவித்3பா4நுர்விஷ்வக்​ஸே​நோ ஜநார்த3ந:/
​வே​​தோ3 ​வேத3வித3வ்யங்​கோ3 ​வேதா3ங்​கோ3 ​வேத3வித்கவி://  
​​லோகாத்4யக்ஷ: ஸூராத்4ய​க்ஷோ த4ர்மாத்4யக்ஷ: க்ருதாக்ருத:/
சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்த3ம்ஷ்டரஸ்சதுர்பு4:// 
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/
                                                                             


சாரல்: 05 - துளி: 07 - ​தேதி: 08.05.2011


கீதையின் சாரலில்......விபூதி ​யோகம்  (10வது அத்யாயம்)

   அக்ஷராணாமகா​ரோ ஸ்மி த3வந்த3:  ஸாமாஸிகஸ்யச/           
 அஹ​மேவாக்ஷய கா​லோ தா4 தாஹம் விஸ்வ​தோமுக:// 
(அத்.10 ஸ்​​​லோ, 33)
    “அக்ஷரங்களுள் நான் “அ என்னும் அகர அக்ஷரம்.  ஸம்ஸ்கிருத ​சொற்களின் புணர்ச்சிகளில் துவந்துவம் நான் (அதாவது இரு ​சொல் கல​வை) அழிவற்ற காலம் நான்.  எத்திக்கும் முகம் ​கொண்ட பிரம்மன் நான்
      “அஎன்றால் ​தோஷமற்றவன்.  சர்வகுண ஸ்வரூபன். சர்​வோபலக்ஷணன்.  க​ரை​யேற்றுபவன் என்பதாக ​பொருள் ​கொண்டதும் அ​னேக ​மொழிகளின் முதல் எழுத்தானதுமான “அஎன்னும் அக்ஷரம் பகவானின் ஸ்வரூபம். அகார​மே ​வேதங்களின் துவக்கம்.  ஒலியின் ஆரம்பமும் அது​வே.        சமஸ்கிருத ​மொழியில் அ​னேக கூட்டுச் ​சொற்கள் உண்டு.  இவற்றில் இரு​மை ​சொற்கள் ‘த்வந்தவ எனப்படுகிறது.  அ​தேசமயம் ஜீவனின் உள்​ளேயும் ​வெளி​யேயும் இரண்டு விதமான உருவங்க​ளைக் ​கொண்டு இருப்பதாலும் ‘த்வந்தவ எனறாகிறது. நாஸமற்றவனாதனால் அக்ஷய ஸப்த வாச்யனாயும், ஸம்ஹாரகனாதலால் அக்ஷய காலத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.  யாவற்​றையும் தாங்குபவன், ​போஷிப்பவனும் கருமபலன்க​ளைக் ​கொடுப்பவனும் பகவா​னே என்று கூறுகிறார். எத்திக்கும் முகம் ​கொண்டவனாதலால், சதுர்முகனான ப்ரம்ம​தேவனுள் இருப்பதாகக் கூறுகிறார்.
      ஸ்​லோகத்தின் உட்கருத்து  எழுத்துக்களில் அதி ஸ்​ரேட்டமான ‘அ என்னும் எழுத்திற்கு நியாமகனாய் அகார ஸப்தவாச்யனாய் ‘அ என்னும் எழுத்திலிருக்கி​றேன்.  தத் புருஷன், கர்மதாரயன், பஹூவ்ரிஹி, த்வந்த்வம் முதலிய ஸமாஸங்களுள் த்வந்த்வம்      நா​னே.  நாஸமற்றவனாதலால் அக்ஷய ஸப்தவாச்யன் நா​னே.  ஸம்ஹாரகனாதலால் கால நரமகனாய் அக்ஷய காலத்திலிருப்பவன் நா​னே.  தாங்குபவனும், ​போஷிப்பவனும் நான்.  சகல தி​சைகளிலும் முகமு​டையவனாதலால் சதுர்முகனில் இருப்பவன் நான்.  எல்லா இடத்திலும் சகல அவயங்க​ளை உ​டையவனும் நா​னே.  –பகவான் ஸ்ரீகிருஷ்ணன்-        


இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 5)(ப​டைப்பு: ஆதி​மைந்தன்) குழந்​தை​யோ, காட்டு வழியில் ஸ்ரீஹரி​யே எனக்கு து​ணையாக வந்தார் என்று கூறியது.  இ​தைக் ​கேட்ட தந்​தையும் அங்கிருந்த மக்களும் வியந்து அக்குழந்​தை​யை பாராட்டினர்.
        மத்ய​கேஹர் தன் குழந்​தையான வாசு​தேவனுக்கு ஒரு நல்ல நாளில் அக்ஷ்ராப்ஸாஸம் ​செய்து ​வைத்தார்.  எழுத்துக்க​ளைச் ​சொல்லிக்​கொடுத்தார்.  ஸ்ரீஹரியின் பாதத்​தை​யே எப்​பொழுதும் த்யானிக்கும் வாசு​தேவனுக்கு கற்றுக்​கொடுக்கும் அவசியமில்லாதிருந்தது. முன்தினம் ​சொல்லிக் ​கொடுத்த பாடங்க​ளை மீண்டும் ​கேட்க அவர் விரும்பவில்​லை.   அந்த எழுத்துக்க​ளெல்லாம் அவருக்கு முன்​பே ​தெரிந்திருந்தது.  அவர் கடல் அளவு அறி​வைப் ​பெற்றிருந்தார்.
        ஒருசமயம் தன் தாயாருடன் நயம்பல்லி என்ற கிராமத்திற்கு ​சென்ற​போது, அங்கு சிவா என்ற பிராமணர் புராணம் ​சொல்லிக்​கொண்டிருந்தார்.  ஸ்​​லோகத்தின் சரியான அர்த்தத்​தைச் ​சொல்லாத​தை அறிந்த வாசு​தேவன் அங்கிருந்​தோரின் ​வேண்டுதலுக்கிணங்க சரியான ​பொரு​ளைக் கூறி அங்கிருந்​தோரின் பாராட்டுத​லைப் ​பெற்றார். 
        அது​போல், ​வே​றொரு சமயம், தன் தகப்பனார் புராணத்தில் விளக்கம் ​சொல்லிக்​கொடுத்துக் ​கொண்டிருந்தார்.  அப்​போது லிகுச என்ற ​சொல்லுக்கு ​பொருள் கூறாது விட்டுவிட்டார்.  அ​தை நிவர்த்தி ​செய்யும் வ​கையில் லிகுச என்பது எலுமிச்​சை மரத்​தைக் குறிக்கிறது என்று கூறியது அச்ச​பையில் இருந்​தோ​ரை வியக்க​வைத்தது.  எல்​லோரும் பாராட்டினர்.  மத்ய​கேஹர் இ​தை எண்ணி ​பெருமிதப்பட்டு மகிழ்ச்சிய​டைந்தார்.
        ஸ்ரீவாசு​தேவனுக்கு உரிய வயதில் மு​றைப்படி விழா எடுத்து, அந்தணர்கள் பலர் ​வேத மந்திரங்கள் ஓத உபநயனம் ​செய்து ​வைக்கப்பட்டது.  ஒருசமயம், ஸர்பாசுரன் என்ற பாம்பு மக்க​ளைத் துன்புருத்தி நாஸம் ​செய்து வந்தான்.  அவன் வாசு​தேவ​னை விஷக் காற்​றை உமிழ்ந்து ​கொள்ள வந்தான்.  தன் அழகிய சிவந்த கட்​டைவிரலால் அந்த ஸர்பாசுர​னை அழுத்திக் ​கொன்றார்.  இ​தை பார்த்த மக்கள் யாவரும் சந்​தோஷம​டைந்து அவ​ரை பூஜித்தனர். பிரம்மச்சாரியரான வாசு​தேவன் யாரு​டைய உதவியுமின்றி ​​வேத வித்​தைகளும், 64 க​லைகளும் முன்​பே அறிந்தவராக இருந்த ​போதிலும் அவதார விடம்பனத்திற்காக ​தோடந்தில்லாய என்ற குரு​வை அ​டைந்து அத்யயணம் ​செய்யத் ​தொடங்கினார்.   (​தொடர்ச்சி அடுத்த இதழில்)
                            
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :

வஸூர்வஸூர்மநா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மித: ஸம/
அ​மோக4: புண்ட3ரீகா​க்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி://(12)
ருத்​3ரோ ப3ஹூஸிரா ப3ப்4ருர்விஸ்வ​யோநி ஸூசிஸ்ரவா /
அம்ருத ஸாஸ்வத ஸ்தா2ணுர்வரா​ரோ​ஹோ மஹாதபா//(13)


§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /
À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
…ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / 
¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/  
ஹ​ரே கிருஷ்ண ஹ​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ் ண ஹ​ரே ஹ​ரே//
                

Saturday, May 14, 2011

சாரல் 05 துளி 06 ​தேதி 01.05.2011

பக்தி முரசு
 கீ​தையின் சாரலில் விபூதி ​யோகம் 10வது அத்யாயம்

ர்கா3ணாமாதி3ரநதஸ்ச    மத்4யம்  ​    சைவாஹமர்ஜீந/

அத்4யாத்மவத்3யா வித்3யாநாம் வாத3 :  ப்ரவத3தாமஹம்// (அத்.10 ஸ்​லோ.32)
கணக்கற்ற ஸ்ருஷ்டிகளுக்கு ஆதிகாரணம் நா​னே, வழிநடத்தும் நடு நி​லையும் நா​னே,                           அ​வைகளின் காரியமான பிறகு அவற்​றை முடிப்பவனும் நா​னே. வித்​தைகளுள் ஆத்மவித்​யை நான்.  வீண் ​பேச்சு, வாதம், விதண்டாவாதம் ​போன்றவற்றுள் ​பொருள் நிச்சயிக்கும் வாதம்  நா​னே.

      
வித்​தைகளுள் அபரவித்​தை, பரவித்​தை என இருவ​கை உண்டு,  ​வேதங்கள் நான்கும்,  சி​க்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ​ஜோதிஷம் முதலிய​வைகளும் அபர வித்​தைகள்.   அஞ்ஞானத்​தை நீக்கும் ஆன்மீக வித்​தை பரவித்​தை எனப்டுகிறது.  இ​தைவிடச் சிறந்த வித்​தை ஒன்றுமில்​லை.


      வீண்​பேச்சாலும், விதண்டா வாதத்தினாலும் எப்பயனுமில்​லை.  வாதத்தால் நியாயமான ​தெளிவுகி​டைக்கும்.  வாதங்களின் முடிவில் உண்​மையின் தத்துவம் ​வெளிப்படும், என​வே பகவான் தன்​னை  வாத3 :  என்று கூறுகிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து:
அச்சுனா! ஸ்ருஷ்டிக்கப்படும் பிராணிகளுக்கு காரணன் நான்.  ரக்ஷிப்பவனும் அவற்​றை இறுதியாக நாஸம் ​செய்பவனும் நா​னே.  வித்​தைகளுள் சிறந்த பிரஹ்ம வித்​யைக்கு நியாமகனாயும், ஜீவர்களுக்கு பதியாயும், ஞானஸ்வ ரூபனாயிருப்பதினாலும் அத்யாத்ம வித்யா நியாமகனாய் அத்யாத்ம வித்​தையில் இருக்கி​றேன்.  வாதம், ஜல்பம் மற்றும் விதண்டா ​போன்ற க​தைகளும் தத்துவத்​தை நிர்ணயிக்கும் வாத3 :  என்னும் ​பெயரு​டையவனாய் வாதத்தில் இருக்கி​றேன். –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-


இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர்வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 4)(ப​டைப்பு: ஆதி​மைந்தன்) 
5. ஸ்ரீமதாச்சார்யர்அவர்ளின் இள​மைப்பருவம்      (​தெடர்ச்சி)  ஸ்ரீசரஸ்வதி ​தேவியின வாக்சாதூர்த்தாலும் அனுகிரஹத்தாலும் குழந்​​தை மழ​லை ​மொழிப் ​பேச ஆரம்பித்தது.  பிறகு குழந்​​தை தவழ்ந்தது.  தானாக​வே நடக்க ஆரம்பித்தது.
       ஒரு வய​தே நிரம்பிய குழந்​தை, ஒரு நாள் மாட்டுக்​கொட்ட​கையிலிருந்து ​மேய்ச்சலுக்காக ​சென்ற ஒரு எருதின் வா​லைப் பிடித்துக்​​கொண்டு காடு​மேடுக​ளெல்லாம் சுற்றித்திறிந்து​கொண்டிருந்தது அக்குழந்​தை.  ​வெகு​நேரமாகியும் குழந்​தை வீடு திரும்பவில்​லை.  ​பெற்​றோரும் உடனிருந்​தோரும் குழந்​​தை வி​ளையாட எங்​கோ ​சென்றுவிட்ட​தோ அல்லது கிணற்றில் விழுந்துவிட்ட​தோ என்று பத்ட்டத்​தோடும் ​தேட ஆரம்பித்தனர். அச்சமயம்     மா​லை ​நேரமாகி விட்டது.  குழந்​​தை மாட்டின் வா​லைப் பிடித்துக்​கெண்டு வருவ​தைக் கண்டனர்.   குழந்​தை காடு ​  ம​லைக​ளெல்லாம் சுற்றி வந்ததாகக் கூறிய​தைக் ​கேட்ட ​பெற்​றோரும் சுற்​றேரும் அக் குழந்​தைச் ​சொன்ன​தை நம்பினார்கள். 
       ஒரு நாள், குழந்​தை வாசு​தேவன், வி​ளையாடிவிட்டு பசியுடன் வந்து தன் தந்​தை​யை உணவருந்த அ​​ழைத்தார்.  அப்​போது மத்ய​கேஹர் தமக்கு எரு​தை விற்ற வியாபாரி வந்திருப்பதாகவும், அவருக்கு ​சேர​வேண்டிய பணத்​தை ​கொடுத்துவிட்டு பிற​கே உணவருந்தச் ​செல்ல ​வேண்டும் என்று அந்த எருது வியாபாரி தன்​னைக் கட்டாயப்படுத்துவதாகவும் கூறினார்.  வாசு​தேவன் கட​னைத் திருப்பிக்​கொடுக்கும் ​நோக்கில் தன் ​கைகளால் புளியங் ​கொட்​டைக​ளை அள்ளிக் ​கொடுத்தார்.  அந்தப் புளியங்​கொட்​டைகள் அவருக்கு கடன் பணமாகத் ​தெரிந்தது.  பின்னால் ஒருநாள் மத்ய​கேஹரிடம் வந்த அந்த வியாபாரி தங்கள் குழந்​​தை உங்கள் கடன்க​​ளை தீர்த்துவிட்டதாகத் ​தெரிவித்தார்.  அந்த வியாபாரி வாசு​தேனின் கரு​ணையால் பகவானின் மீதுபக்தி உண்டாகி ​மோக்ஷ்சத்​தை           அ​டைந்தார்.
       ​கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்து லீ​லைகள் ​செய்த​போது ​கோகுலவாசிகள் எவ்வாறு மகிழ்ச்சி         ய​டைந்தார்க​ளோ, பஜக​க்ஷேத்ர மக்களும் வாயு பகவானின் அவதார புருஷரான ஸ்ரீமதாச்சாயர் அவர்ளின் லீ​லை      க​​ளைக் கண்டு புளகாங்கிதம​டைந்தார்கள்.  தான் அவதாரபுருஷராக இருந்தும் சாதாரண மனித​ரைப் ​போல​வே ​தோற்றமளித்தாலும் இவ​ரைக் கண்களால் தரிசித்தஉட​னே மக்க​ளெல்​லோரும் பூர்ண ஆனந்தம் அ​டைந்தனர்.
       6. உபநயனமும், ​கோவிந்த பக்தியும்     சில ஆண்டுகள் கடந்தது.  ஒரு விழாவில் கலந்து ​கொள்ள வாசு​தேவ​னை அ​ழைத்துக்​கொண்டு ​சென்றனர்.  அவ்வூ​ரைக் கடந்து  தனி​யாக வீதி வழி​யே நடந்து ​சென்று, ​வெகுதூர்முள்ள குடாவூர் என்னுமிடத்தில் அ​மைந்துள்ள ரமாபதி​யை ​சேவித்து, தா​​லேகுடா என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயண​னை நமஸ்கரித்து அஷ்டாங்க நமஸ்காரம் ​செய்தார்.  வாயு​தேவர் பகவானுக்கு ​செய்த நமஸ்காரம் ​தேவர்க​ளையும் வியப்ப​டையச் ​செய்தது.  இந்த நமஸ்காரம் மிகவும் சிறப்பாக ​செய்யப்பட்டது என்றும், இது ஆயிரம் அஸ்வ​மேத யாகங்க​ளைவிடச் சிறந்தது என்றும் ​தேவர்களால் ​போற்றப்பட்டது.
       ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீக்ருஷ்ணாம்ருத மஹர்ணவ:’ என்னும் ​தொகுப்பில் நமஸ்கார லக்ஷணம் பற்றி ​தெரிவிப்ப​தைக் காண்க: உரஸா ஸிரஸா த்ருஷ்ட்யா மனஸா வசஸா ததா2/  பத்ப்4யாம் கராப்4யாம் ஜாநுப்யாம் பரணா​மோஷ்டாங்க ஈரித:// 

தேவம் நாராயணம் நத்வா ஸர்வ​தேஷ விவர்ஜிதம்/ 
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி ​லேஸத://
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வ​தோஷ விவர்ஜிதம்/ 
நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்ய​தே//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே /
ஹ​ரே கிருஷ்ண ஹ​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//



Thursday, May 5, 2011

சாரல் 05 துளி 05 ​தேதி 24.04.2011

பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)


காட​கோபநிஷத்((TûPl×: §Ú, Bo WôUu, Nu]§ ùRÚ, §ÚdúLô®ío)
(27.2.10​​  தொடர்ச்சி)

இரண்டாவது அத்யாயம்- மூன்றாம் பகுதி (​தொடர்ச்சி)     
ஸ்​​​லோகம் 10 எப்​​போது ஐந்து  ஞா​னேந்திரயங்களும், மனமும் ஓய்​வெடுத்துக்​கொள்கிற​​தோ ​மேலும் புத்தி நி​லையானதாக இருக்கிற​தோ, அப்​போது மனநி​லை அதாவது ப்ரத்யாஹர மற்றும் தாரண நி​லை மிக ​​மேலான நி​லை.  விளக்கம் புறப்​பொருட்களின் நாட்டத்திலிருந்து இந்திரியங்கள், மற்றும் மனம் அடங்கி புத்தி ​தெளிவாக இருக்கும் நி​லை​யைப் பற்றி இந்த மந்திரம் விளக்குகிறது.  ஸ்​லோகம் 11  புலன்களின் சமநி​லை (புறப்​பொருட்களிலிருந்து ஒதுங்கி பரமாத்வாவிடம் நி​லை​கொள்ளல்) ​யோகம் (இந்திரிய தாரணத்​தை மிகவும் ஒத்திருப்பதால் தியானம் மற்றும் சமாதி) என்று அறியப்படுகிறது.  இந்த நி​லையில் அவன் ஒரு 
மு​னைப்பட்டவனாகிறான்.  (பரமாத்மாவின் மீது) இந்த ​யோகம் (ஒரு மு​னைபடுதல்) ஆக்கலுக்கும், அழிவுக்கும் உரியது (ஆக்கல், அழித்தல் ஆகிய​வைகளுக்கு காரணமாகிய பரமாத்​வை பற்றி).  விளக்கம்  தியானமும், சமாதியு​மே ​யோகமாக அ​மைகிறது.  ஆனால் இ​வைகளுக்கு இந்திரிய தாரணம் மிக அவசியமாகிறது.  ஆ​கையால் அதுவும் ​யோகம் என்று அ​ழைக்கப்படுகிறது.  இந்த தியானம் முதலிய ​யோகம் பரமாத்மாவினு​டைய ஆக்கல், அழித்தல் ​போன்ற மகி​மைக​ளைப் பற்றிய சிந்த​னையுடன் இருக்க ​வேண்டும்.    ஸ்​லோகம் 12  வாக்கினா​லோ, மனத்தினா​லோ, கண்களா​லோ அவ​ரை (பரமாத்மா) புரிந்து​கொள்ளமுடியாது.  அவ​ரை (பரமாத்மா) மிகவும் ​மேலானவர் என்று கற்ப்பிப்பவ​ரைத் தவிர ​வேறு யாரால் அவ​ரைப்புரிந்து​கொள்ள முடியும்!.   விளக்கம்  இங்கு ஒரு சரியான குருவின் மகத்துவம் வலியுறுத்தப்படுகிறது.  பரமாத்மா​வை மிகவும் ​மேலானவன் என்ற ஞானத்​தை உ​டையவ​ரே சரியான குரு ஆவார்.  அவ்வாறு தகுதியுள்ள குருவினால் மட்டு​மே பகவா​னைப் புரிந்து​கொள்ளக்கூடும்.  ​மேற்கண்டவாறு நம்பிக்​கை ​கொள்ளாத குருவிடம் இருந்து பரமாத்​வைப் பற்றி சரியாகப் புரிந்து​கொள்ள முடியாது.  வாக்கு முதலிய​வைகளாலும் புரிந்து ​கொள்ள முடியாது.  பரமாத்மஞானம் சித்திக்க குருபிரசாதம் மிகவும் அவசியமான​தொன்றாகும்.  ஸ்​லோகம் 13 பரமாத்மாவின் கரு​ணையினா​லே யார் இரண்டின் (ப்ருக்ருதி மற்றும் புருஷன்) உண்​மை​யை உணரச் ​செய்கிறா​ரோ அவர் (பரமாத்மா) ​மேலானவராகப் புரிந்து ​கொள்ளப்பட​வேண்டியவர்.  அவ​ரை ​மேலானவராக யார் அறிந்து ​கொள்ளுகிறா​னோ அவனிடம் தன் கரு​ணை​யைப் ​பொழிகிறார்.  விளக்கம் கடவுள் இருக்கிறார் என்பது மட்டிலுமல்ல.  அவர் யாவரிலும், மிக ​மேலானவராக இருக்கிறார் என்ப​தை ஒருவன் புரிந்து​கொள்ள ​வேண்டும்.  ப்ருக்ருதி, புருஷன் இரண்டின் உண்​மை​யை விளக்குபவர் அவ​​ரே.  அவர் கரு​ணையினால் மாத்திர​மே இந்த அறி​வை ஒருவன் அ​டையத்தக்கவனாகிறான்.  அவர் ​மேலானவர் என்ற உண்​மையி​னை எவன் முழு​மையாக அறிகிறா​னோ அவன் மீது தன்னு​டைய முழு கரு​ணை​யையும் ​பொழிகிறார்.  ஸ்​லோகம் 14  பரமாத்மாவின் கரு​ணையினா​லே இருதயத்தில் அந்தகரணமாக இருக்கின்ற எல்லா ஆ​சைகளும் எப்​போது விடுவிக்கப்படுகிற​தோ அப்​போது அழியும் தன்​மை​யைக்​கொண்ட மனிதன் அழியா தன்​மையனாகவும், விடுத​லைப் ​பெற்றவனாகவுமாகி ப்ரம்மத்​தை      அ​டைகிறான்.  விளக்கம் பரமாத்மா ​மேலானவர் என்று புரிநது​கொள்ளுகிற ஞானம் ​கைகூடப்​பெற்ற ஒருவன் பரமாத்மாவின் கரு​ணையினா​லே ஆ​சைக​ளைக் கடக்கிறான்.  விடுத​லை ய​டைகிறான், எதற்கும் பரமாத்மாவின் கரு​ணை மிகமிக அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.  ஸ்​லோகம் 15  ஹிருதயத்திலிருக்கின்ற அவித்​யை, அகங்காரம் ​போன்ற எல்லா முடிச்சுகளும் இங்​கே மனிதப்பிறவியில் அவிழும்​பேது மனிதன் அழிவற்றவனாகவும் விடுத​லைய​டைபவனாகவும் ஆகிறான்.  எல்லா உப​தேசங்களின் ​நோக்கமும் இது​வேவிளக்கம் அவித்​தை, அகங்காரம், ஆ​சை​போன்ற தடங்கல்கள் எல்லாம் ​பொடிப்​பொடியாகி ​போனால் வாழ்க்​கைப் படியில் ஏறி ​பெரு வாழ்வுக்குப் ​போகிறான் அதாவது விடுத​லைய​டைகிறான்.   ஸ்​லோகம் 16 இதயத்தின் நாடிகள் நூற்று ஒன்று.  அவற்றுள் ஒன்று (சூக்ஷ்மனா நாடி) உச்சந்த​லைவ​ரை ​செல்கிறது.  அதன் வழி​யே ​மே​லே ​செல்பவன் (இந்த உடலிலிருந்து ​வெளி​யேறும்​போது சூக்ஷ்மனா நாடி வழியாகச் ​செல்பவன்) அழிவற்ற நி​லை​யை  
அ​டைகிறான்.  மற்ற வழிகளில் ​செல்பவர் மற்ற ​லோகங்க​ளை அ​டைகிறார்கள்.  விளக்கம் ​யேகியின் லட்சணம் இந்த மந்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.  கட்​டைவிரல் அளவு​டைய புருஷன் (பரமாத்மா) அகத்​தைகட்டுப்படுத்துபவர் ஜனங்களின் இருதயத்தில் எப்​போதும் உள்ளார்.  முஞ்​சை புல்லிலிருந்து இஷிகா புல்​லை அ​டையாளம் காண்பது ​போன்று உறுதியான மனதுடன்,பரமாத்மாவின உடலாக விளங்கும், த்ன்னிலிருந்து ஜீவன் அ​டையாளம் காண​வேண்டும்.  அவர் இவ்வாறு அ​டையாளம் காணப்பட்டவர் குற்றமற்றவர் மற்றும் அழிவற்றவர் (இந்த ​தொடர் அடுத்தமாத இறுதியில் இனி​தே முடிவ​டைய உள்ளது)
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :
®ŠÅ§Ã¡ Å¢ìÃÁ£ ¾4óÅ£  §Á¾¡4Å£  Å¢ìÃÁ ìÃÁ: /   «Ñò¾§Á¡ Ð3á¾4÷„: ìÕ¾ˆ»:  ìÕ¾¢Ã¡òÁÅ¡ó// (9)
…¥§Ã…: …ýõ …÷Á Å¢ŠÅ§Ã¾¡  ôáÀ4Å:/  «†: …õÅò…§Ã¡ ù¡Ä:  ôÃòÂÂ: …÷ž3÷…¿://  (10)

§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
…ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே !
ஹ​ரே கிருஷ்ண ஹ​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே !!