Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Thursday, February 10, 2011

சாரல் 4 துளி 47 தேதி 20.02.11

கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)
அஸ்வத்த2: ஸர்வவ்ருக்ஷ்ாணாம் தேவர்ஷீணாம் ச நாரத:/
க3ந்தர்வாணாம் சித்ரரத2: ஸித்3த4ாநாம் கபிலோ முநி:// (அத்.10 ஸ்லோ.26)

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, மரங்களுள் அரச மரமாகவும், தேவர்களுள் நாரதராகவும், கந்தர்வர்களுள் சித்ரரதனாகவும், ஸித்தர்களுள் கபில முனியாகவும் காட்சியளிப்பதாகக் கூறுகிறார்.
அரசமரம் : அரசமரம் தெய்வாம்ஸம் பொருந்திய மரமாக எல்லோராலும் வணங்கப்படுகிறது. இந்த மரத்தில் பகவானின் ஸந்நிதானம் இருப்பதால் அனேக ரிஷிகளும் கூட அரசமரத்தை பக்தியுடன் வேண்டிவணங்குகின்றனர். அரசமரம் பல நோய்களை நீக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
ஸ்ரீநாரதர் : இவர் தேவரிஷி யாவார். பக்திக்கு உதாரணமாகத் திகழ்பவர். ப்ரஹ்லாதனுக்கு கருவிலேயே நாராயண மந்திரத்தை போதித்தவர். ஸ்ரீவேதவ்யாஸ பகவான் வேதங்களை நான்காகப் பிரித்தும், ப்ரஹ்மசூத்ரங்களை இயற்றியும் த்ருப்த்தியடையாமல் குழம்பிய நிலையில் இருந்தசமயம் ஸ்ரீநாரத பகவான் அவரிடம் பகவானின் லீலைகளை விளக்கி எழுதுமாறுச் சொல்ல ஸ்ரீமத்பாகவதம் பிறந்தது. அதுபோலவே ஸ்ரீமத்ராமாயணம் இவரின் அனுகிரகத்தால் உறுப்பெற்றது. இவர் பிரம்மாவின் மானஸ புத்ரராக மனதிலிருந்து தோன்றிய மஹான். பகவானின் நாமத்தைப் பாடிக்கொண்டே இருப்பவர். வேத வேதாந்தங்கள் மற்றும் உபநிடத்துக்ளின் உண்மைப் பொருளை அறிந்தவர்.
கந்தர்வர் : இவர்கள் கந்தர்வ லோகத்திலிருப்பவர்கள். மிகவும் அழகானவர்கள். இவர்கள் சங்கீதம், நாட்டியம், அபிநயம் போன்றவற்றைச் சிறப்பாகச் செய்பவர்கள். மனிதர்களில் சிலர் அனேக புண்யங்களைச் செய்துவிட்டு கந்தர்வர்களாக கந்தர்வலோகத்தை அடைவர். மேலும் கல்பகாலத்தின் தொடக்கத்திலிருந்தே கந்தர்வர்களாக இருப்பவர்களும் உண்டு. இவர்கள் தேவ கந்தர்வர்கள் எனப்படுகிறார்கள். இவர்களுக்கு தலைவன் சித்ரரதன்.
ஸித்தர்கள் : தர்மம், நியாயம், வைராக்யம் நிறையப்பெற்று அஷ்ட மகா சித்திகளைப் பெற்றவர்கள். தன் ஞானத்தால் ஸித்திகளை அடையப்பெற்றவர்கள். இவர்களில் மிகச் சிறப்புபெற்றவர் கபிலர். ஏனென்றால் இவர் பகவானின் சாக்ஷ்ாட் அவதார ரூபம். ஸ்ரீமத்பாகவதம் 01,03,10ல் "பஞ்சம: கபிலோ நாம ஸித்தேச: கால-விப்லுதம்" என்பதாகக் கூறுகிறது. அவதார ரூபங்களில் கபிலர் ஐந்தாவதாகத் தோன்றியவர். இவர் கர்தமா-தேவக்ஷூதிக்கு மகனாகப்பிறந்து தன் தாய்க்கு ஞான உபதேஸம் செய்தவர். 
ஸ்லோகத்தின் உட்கருத்து : மரங்களின் வகையில் அரச மரத்திற்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு, குதிரையைப்போல் இருப்பதனால்ன, அஸ்வத்த: என்ற நாமகனாய் அரசமரத்திலிருக்கிறேன். தேவர்களில் ஞானத்தைக் கொடுக்கும் நாரதன் என்ற பெயருடையவனாய் நாரதரிலிருக்கிறேன். எத்தனையோ கந்தர்வர்களில் சித்ரரதனுக்கு ஸ்ரேஷ்டத்தைக் கொடுத்துக்கொண்டு விசித்ரரான அதிதேவாதிகளை ரதமாயுடையவனானதால் சித்ரரதன் என்னும் பெயருடையவனாய் சித்ரரதனுள் இருக்கிறேன். ஸித்தர்களில் மெளன சீலனாய், சுகரூபனாய், ரக்ஷிப்பவனாய் ஜகத்தை என்னிடத்திலே வைத்திருப்பவனாய் ஸாக்ஷ்ாத்ரூபகனாய் கபிலர் நானே.-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : (10வது அத்யாயம்) அத்யாயச் சுருக்கம்: "ஆயுதம் தரித்தவருள் நான் ராமன். மீன்களுள் மகரம். நதிகளுள் கங்கை நான். படைத்தல், காத்தல் அழித்தல் ஆகியவைகளும் நானே. வாதம் செய்வோரிடத்தில் 'வாத:' என்ற பெயருள்ள ரூபத்துடன் இருக்கிறேன். அக்ஷ்ரங்களுள் நான் "அ" வாக (அகரம்) உள்ளேன். த்வந்த்வம் (அதாவது இருச் சொல் கலவை) நானே, காலம் நானே. நான்முக பிரம்மதேவரிடமும் நானே இருக்கிறேன். ம்ருத்யு, உற்பத்தி, கீர்த்தி, க்ஷேமம், ஞாபகசக்தி , புத்தி, உறுதி, பொறுமை யாவும் நானே. ஸாமங்களிடையே ப்ருஹத்ஸாமம் நான். மந்திரங்களில் காயத்ரீ நான். மாதங்களில் மார்கழியும் நிச்சய புத்தியும் நானே. விருஷ்ணி வம்சத்தில் வாசுதேவன் நான். பாண்டவர்களுள் தனஞ்செயன் என்ற நீயும் (அர்சுனனும்) நானே, ஜெயத்தை விரும்புவோர்களின் ராஜநீதி நான். இரகசியங்களில் மெளனம் என்பது நான். ஞானிகளின் ஞானமும் நானே. அர்சுனா ஸகல பிராணிகளுக்கும் எது வித்தோ அதுவும் நானே. இந்தப் பிரபஞ்சத்தில் நான் இல்லாத இடமில்லை. ஹே! பரந்தபா! என் தெய்வசக்தியை விளக்கும் விபூதிகளுக்கு எல்லையே இல்லை. நான் இப்போது உனக்கு கூறுவது சிலவற்றை மாத்திரமே. இவ்வுலகில் சிறப்புடையதாயும், தேஜஸ் உடையதாயும், சக்தி வாய்ந்ததாயும் உள்ள பொருட்கள் அனைத்தும் என் சக்தியின் அம்சத்தில் தோன்றியது என்று நீ அறிதல் வேண்டும். அர்சுனா இவ்வாறு பலவற்றை அறிவதால் உனக்கு என்ன பயன்? சுருக்கமாய் சொன்னால், இவ்வுலகமனைத்தையும் என் யோக சக்தியின் ஒரு பகுதியால் நான் தாங்கி நிற்கிறேன்".
இன்னும் ஒரு துளி : (காடகோபநிஷத் அத்2 பகுதி2 ஸ்லோகம் 10 :) விளக்கம் :மேற்கண்ட இரண்டு உவமானங்களிலிருந்து கீழ்கண்ட விஷயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. 1. பரமாத்மா ஒருவரே 2. அவர் அநேக பிம்ப வடிவங்கள் உடையவர். 3. ஜீவன்கள் அநேகம். அவைகள் பரமாத்மாவின் பிரதிபிம்பங்கள். ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் பிம்ப வடிவத்தின் பிரதிபிம்பம். இந்த உதாரணங்களைக் கீழ்கண்டபடியும் ஆராயலாம். 1. அக்னி மற்றும் வாயு ஒருவரே (சேதன அக்னி அல்லது சேதன வாயு என அறியப்படுபவன். 2. இந்த அக்னியும், வாயுவும் அநேக பொருட்களில் ஒளி மற்றும் வாயு அம்சத்தில் பரவியுள்ளார். இந்த அம்சங்களே பிம்பங்கள். 3. ஒளி மற்றும் வாயுவை உள்ளடக்கிய அநேக பொருட்களிலுள்ள அசேதன அக்னி அல்லது அசேதன வாயு பிரதிபிம்பங்கள். 

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத// 
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

No comments:

Post a Comment