Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, April 22, 2011

சாரல் 05 துளி 02 தேதி 03.04.2011


கீதையின் சாரலில். . . . . விபூதி யோகம் (10வது அத்யாயம்)
அநந்தஸ்சாஸ்மி நாக3ாநாம் வருணோ யாத3ஸாமஹம்/
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யதாமஹம்// ( அத்-10. ஸ்லோ.29)

"நாகப்பாம்புகளுள் ஆதிசேஷனாக இருக்கிறேன். நீரில் வாழும் உயிரினங்களுள் நான் வருணன், பித்ருக்களுள் நான் அர்யமா, தண்டித்து அடக்கி நீதி வழங்குபரில் நான் யமன்".
ஆதிசேஷன் : பகவானிடமே தோன்றியவர். ஆயிரம் தலைகளையுடையவர். பகவான் ஆனந்தசயத்திற்கு படுக்கையாக இருப்பவர். பகவானின் பக்தர். ஸேவகள். பகவான் அவதரிக்கும் போது தானும் உடன் இருந்து கைங்கைர்யம் செய்பவர். ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத்தின் போது பலராமராகவும் அம்ஸாவதாரமெடுத்தவர். சேஷனில் சிறந்தவர் ஆதிசேஷன்.
வருணன்: எட்டு திக்குகளுக்கும் பாலகர். ஸமுத்திரத்திற்கு அரசன். பகவானுடைய சிறந்த பக்தர்.
அர்யமா: பித்ருக்கள் மொத்தம் 7 போர்கள். இவர்களில் சிறந்தவர் அர்யமா.
யமன்: தர்ம ஸாஸ்த்திரத்தை தீவிரமாக நிலைநாட்டுபவர். கர்மமே கண்ணாக இருப்பவர். சிறந்த ஞானி. பகவானிடம் பக்திகொண்டவர். காடகோபநிஷத்தில் நசிகேதனுக்கு ஆத்ம ஞானத்தை போதித்தவர். நீதி தவறாது நடுநிலையுடன் நீதிவழங்குபவர்.
ஸ்லோகத்தின் உட்கருத்து: ஆயிரம் தலையுடைய ஸர்பங்களில் உத்தமனான ஆதிஸேஷனுக்கு நியாமகனாயும், குணபூர்ணனும் அனந்தசேஷனுமானதால் 'அனந்த:' என்னும் ஸர்பத்திலிருக்கிறேன். நீர்நிலைகளில் வசிக்கும் பிராணிகளில் வருணனுக்கு நியாமகனாயும், ஆனந்தத்தை கொடுப்பவனாகவும், 'வருண:' என்னும் பெயருடையவனாய் வருணனில் இருக்கிறேன். பித்ருக்களில் சிறந்தவனான ஆர்யமா என்னும் தேவதைக்கு நியாமகனாயும், அறிய வேண்டியதை அறிபவனாகவும் ஆர்யமா என்னும் பெயருடையவனாய் இருக்கிறேன். தண்டித்தருள்பவருள் யமனுக்கு நியாமகனாயும், யாவற்றையும் நியமிப்பவனாய் யமஸப்த வாச்சனாய் யமனில் இருக்கிறேன். -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்- 
இங்​கே ஒரு துளி:        ஹரி ஓம்
ஸ்ரீமத்வாச்சார்யர்- வாழ்க்கை வரலாறு மற்றும் தத்துவம் (படைப்பு: ஆதிமைந்தன்)
காந்தாய கல்யாண குணைக தா4மனே நவத்யுநாத ப்ரதிம ப்ரபா4யா/
நாராயணாயகில காரணாய ஸ்ரீப்ராண நாதாய நமஸ்கரோமி// (ஸ்ரீ ஸூமத்வ விஜயம் முதல் ஸ்லோகம்)
          ஸ்ரீமந் நாராயணனித் திருக்குமாரரே ஸ்ரீவாயுதேவர். பாரதி பதியான வாயு பகவான் ஸர்வ ஜீவோத்தமர். சர்வதேஷ நிவாரணர். ஸ்ரீவாயு பகவான் ஸ்ரீஹரியின் ஆன்மீகமான தாஸர். பக்தர். வாயு பகவான் த்ரோதாயுகத்தில் ஸ்ரீஹனுமராக அவதரித்து ஸ்ரீராமச்சந்ர மூர்த்தியை ஸேவித்தார். அவரே த்வாபர யுகத்தில் ஸ்ரீபீமஸேனராக அவதரித்து ஸ்ரீகிருஷ்ண பகவானை ஸேவித்தார். அவரே கலியுகத்தில் ஸ்ரீமத்வாச்சார்ய்ராக அவதரித்து ஸ்ரீவேதவியாஸ பகவானை பூஜித்தார்.
            நம்முடைய படிப்பறிவிற்கு எட்டியவரை ஸ்ரீமத்வருடைய காலம் 1238 முதல் 1317 வரை நம் கண்களுக்கு தெரியுமாறு அவதரித்து சஜ்ஜனர்களுக்கு த்வைத சித்தாந்தத்தை உபதேஸம் செய்தார் என்பது உண்மை. இதற்கு சாக்ஷியாக அவருடனே அவருடைய காலத்திலே வாழ்ந்த ஸ்ரீநாராயண பண்டிதாசார்யர் அவர்கள் இயற்றிய மஹா காவ்யம் 'ஸ்ரீ ஸூமத்வ விஜயம்'. இந்நூல் ஸ்ரீமதாசார்யர் அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் உத்தமமான காவியம். இதன் ஆசிரியர் ஸ்ரீமதாசார்யர் அவர்களின் சமகாலத்தவராதலால் இதில் பொய்யும், கற்பனையும் அல்லது மிகைப்படுத்தி கூறுவதற்கும் அவசியம் ஏதுமில்லை என்பதால் இந்நூலே ஸ்ரீமதாசார்யர் அவர்களின் அவதார மஹிமைகளை நமக்கு தெரிவிப்பதற்கு பிரமாணமான நூலாக இருக்கிறது என்பது சத்யம். 'ஸ்ரீ ஸூமத்வ விஜயம்' என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீமதாச்சார்யர் அவர்களின் வாழ்க்கை வரவாற்றை எனது யோக்யாம்ஸத்திற்கு ஏற்றவாறு சுருக்கமாக எடுத்துரைக்க விழைகிறேன்.
1. ஸ்ரீமத்வரின் அவதார நோக்கம்: நம் நாட்டில் ஏராளமான மதங்கள் தனக்கே உரிய கருத்துக்களுடன் தம்முடைய மதத்தை ஆணித்தரமாக நிலைநிறுத்த விரும்பின. வேதமே அப்பிரமாணிகம் அதை நம்ப வேண்டான் என்ற கருத்தினை ஒரு சில மதங்களும், வேதமே சத்யம் என்று கூறி வேதத்திற்கு ஒவ்வாத அர்த்தங்களை மக்களிடையே திணித்து ஒருசில மதங்களும் நிலவி வந்தன. சத்யமான இப் பிரபஞ்சமே பொய் என்றும், பகவானுக்கு குணங்களே கிடையாது என்றும், ஜீவப்பிரம்மத்திற்கு அபேதத்தை நிரூபிக்கும் குரல்களும், சாதுக்களின் மனதிற்கு சஞ்சலத்தை அளித்தன. தர்மமார்கம் தெரியாது சஜ்ஜனர்கள் தவித்தனர். அச்சமயத்தில் தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி ஸ்ரீமந்நாராயணனை அனுகி, இந்த சமயத்தில் உதவிகரம் நீட்ட வேண்டினர். அவ்வமயம் ஸ்ரீவிஷ்ணு தனக்கு கலியுகத்தில் அவதாரம் இல்லாததால் வாயு பகவானை பாரத பூமியில் பிறக்கவும், வேத சாஸ்த்திரங்கள் மற்றும் பிரம்ம சூத்திரங்களுக்கு சரியான அர்த்தங்களைக் கூறி ஜீவர்களுக்கு உண்மையான ஞானத்தை அளிக்க உத்திரவிட்டார். எனவே வாயு பகவான் இந்த அணைக்கு உட்பட்டு ஸ்ரீமத்வராக அவதாரம் செய்து ஜனங்களுக்கு சரியான ஞானத்தை அளித்துள்ளார்.
             ஸ்ரீமத்வர் அவர்களுக்கு அனேக பெயர்கள் உண்டு. அவற்றில் 1. வாசுதேவ 2. பூர்ணபிர்க்ஞ்னா 3. ஆனந்த தீர்த்ர் இம்மூன்றும் முக்கிய பெயர்களாகும். இன்னும் அனுமான தீர்த்தர், தஸப்ரமதி, ஸூகதீர்த்தர் போன்ற பெயர்களுமுண்டு. ( இதன் தொடர்ச்சியை அவ்வப்போது இடம் இருக்கும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கொடுக்கிறோம்)

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் / 
நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 


No comments:

Post a Comment