கீதையின் சாரலில்.....விபூதி யோகம் 10வது அத்யாயம்
பிரஹ்லாத3ஸ்மி தை3த்யாநாம் கால : கலயதாமஹம்/
ம்ருகா3ணாம் ச ம்ருகே3ந்த்3ரோSஹம் வைநதேயஸ்ச பக்ஷிணாம்//
(அத்.10.ஸ்லோ.30)
(அத்.10.ஸ்லோ.30)
“அசுர வம்ஸத்தவருள் நான் ப்ரஹ்லாதன், ஜீவன்கள் தம் கர்மபலன்களை தகுந்த நேரம் மற்றும் இடத்திலும் அனுபவிக்கும்படி செய்யும் சக்திகளில் நான் காலதேவன், மிருகங்களுள் நான் சிங்கம், பக்ஷிகளுள் நான் கருடன்”.
தைத்யர்கள் : அதிதியின் மைந்தர்கள் ஆதித்யர்கள். இவர்கள்
இறைவனுடைய பக்தர்கள். திதியின் மைந்தர்கள் தைத்தியர்கள். இவர்கள் நாத்திகர்கள். திதியும், அதிதியும் சகோதரிகள் ஆவார்கள். பிரஹ்லாதர் தைத்யருள் பிறந்தவரேயாயினும் மிகச் சிறந்த பாகவதேத்தமர். பிரஹ்லாதரின் பக்தி சிறப்பு பெற்றது.
இறைவனுடைய பக்தர்கள். திதியின் மைந்தர்கள் தைத்தியர்கள். இவர்கள் நாத்திகர்கள். திதியும், அதிதியும் சகோதரிகள் ஆவார்கள். பிரஹ்லாதர் தைத்யருள் பிறந்தவரேயாயினும் மிகச் சிறந்த பாகவதேத்தமர். பிரஹ்லாதரின் பக்தி சிறப்பு பெற்றது.
காலம்: காலம் என்பது நேரத்தைக் குறிக்கிறது. காலன் என்பது யமதூதர்களுக்கு பெயர். கர்மங்களை குறிப்பிட்ட நேரத்திலும் குறிப்பிட்ட இடத்தை அனுசரித்தும் செய்விக்கும்படி செய்யும் சக்தி கால தேவனுக்கு உண்டு.
சிங்கம்: மிருகங்களுக்கு அரசன் சிம்மம்.
வைனதேயன் : தக்ஷனின் புத்ரியான வினதை வைனதேயனின் தாய் ஆவார். எனவே இப்பெயர் பெற்றவர். பகவானுடைய வாகனம். பக்ஷிகளில் சிறந்தவர் கருடபகவான். இவர் தேவஸ்வரூபியானவர். ஸ்லோகத்தின் உட்கருத்து : “ தைத்யர்களுள் ஸ்ரேஷ்டரான ப்ரஹ்லாதனுக்கு நியாமகனாய் ப்ரஹ்லாதனில் இருக்கிறேன். பந்தங்களை உண்டாக்குபவர்களில் உத்தமனான காலனுக்கு நியாமகனாய் சரியாக தெரிந்துகொள்ளவதனாலலும் காலநியாமகனாய் காலனில் நான் இருக்கிறேன். என்னைத் தேடும் பக்தர்களுக்கு ஸ்வாமியாய் ம்ருதேந்த்ர என்னும் பெயருடையவனாய், மிருகங்களில் உத்தமனான சிம்மத்திற்கு நியாமகனாய் ஸிம்மத்திலிருக்கிறேன். பக்ஷிகளில் ஸ்ரேஷ்டனான கருடபக்ஷிக்கு இதர பக்ஷிகளைவிட முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு என்னை விசேஷமாய் துதிப்பவருக்கு ஆஸ்ரயனாய் இருந்துகொண்டு வைனதேய ஸப்த வாச்யனாய் கருட பக்ஷியில் இருக்கிறேன்”. –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமதவாச்சார்யர் – (பகுதி 2)(படைப்பு: ஆதிமைந்தன்) 2. அவதரித்த காலம் மற்றும் க்ஷேத்ரம் : ஸ்ரீமத்வர் கர்நாடக மாநிலம் பாஜகா என்னுமிடத்தில் 1238ம் ஆண்டு விளம்பி வருடம் ஆடிமாதம் சுக்லபக்ஷச தசமி (விஜயதசமி) அன்று மத்யான வேலையில் புதன் கிழமையன்று ஸ்ரவண நக்ஷ்சத்திரத்தல் அவதரித்தார். கர்னாடக மாநிலத்தில் உடுப்பி என்ற புண்ணிய க்ஷேத்ரத்திற்கு தென் கிழக்கே எட்டு கி.மீ தூரத்தில் பஜக க்ஷேத்ரம் என்ற சிறிய கிராமம் உள்ளது. தற்போது இக்கிராமம் பெல்லே என்று அழைக்கப்படுகிறது. முன்காலத்தில் உடுப்பி, ரஜதபீடத்தில் மிகவும் பிரசித்தமான ஸ்ரீஅனந்தேஸ்வரர் தேவாலயம் இருக்கிறது. ஸாக்ஷாத் ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமியே இங்கு லிங்க வடிவில் உள்ளார். அப்பேர்பெற்ற புண்ணிய பூமியின் அருகே அமைந்த பாஜக க்ஷேத்ரத்தில் ஸ்ரீபகவத்பாதர் அவதாரம் செய்தார்.
3. ஸ்ரீமத்வரின் தாய் தந்தையர்: ஸ்ரீமத்வர், மத்யகேஹ பட்டர் என்ற அந்தணருக்கும் ஸ்ரீவேதவதி அம்மையாருக்கும் மகனாக அவதரித்தார். மத்யதகஹ பட்டரின் இயற்பெயர் நாராயணபட்டர் என்பது, அவரது குலத்தின் பெயர் நட்டெந்தில்லயா என்பது. இவர் புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் வேதங்களை நன்கு கற்றுணர்ந்த வித்வாம்ஸர். இவர் உபன்யாஸம் செய்வதில் வல்லவர். இவர் சிறந்த வல்லமைப் பெற்றிருந்தாலும்கூட இவருக்கு ஆண் குழந்தை இல்லை என்ற குறை இருந்தது, எனவே இந்த தம்பதிகள் ஸ்ரீஅனந்தேஸ்வரரை ஆண் குழந்தை வரம் வேண்டி நீண்ட நாட்களாக பிரார்த்தனை செய்து வந்தனர். அவர்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாகவும், உண்மையான தத்துவத்தை உலகினுக்கு எடுத்துரைக்கவும் ஸ்ரீமதாச்சார்யர் அவதரித்தரார்.
ஹனும பீம அவதாரங்களில் கர்பவாசமின்றி பிறந்தது போலவே, லோகத்திற்கு
தலைவரான ஸ்ரீவாயு பகவான், முப்பத்திரண்டு லக்ஷணங்களுடனும் ஒன்பது துவாரங்கள் உள்ள, பிறக்கப்போகும் குழந்தையினுள் இருந்த ஜீவனை வெளியேற்றி தோஷமற்றவராய் அவ்வுடலினுள் புகுந்து அவதரித்தார்.(2) .....(தெடரும்,,)
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!
No comments:
Post a Comment