Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, July 15, 2011

சாரல் 05 துளி 11 ​தேதி 05.06.11

கீ​​தையின் சாரலில் விபூதி ​யோகம் 10ம் அத்யாயம் 

த்3யூதம் ச2லயதாமஸ்மி ​தேஜஸ்​​தேஜஸ்விநாமஹம்
  ஜ​​யோஸ்மி வ்யவஸா​யோஸ்மி ஸத்த்வம் ஸத்த்வதாமஹம் (அத்.10-ஸ்​லோ.36)

“பிற​ரை வஞ்சித்து  ஏமாற்றும் ​தொழில்களில் சூடாடும் ​தொழில் நா​னே.  ​தேஜஸூள்ள அதாவது ஒளிரும் பதார்த்தங்களில் ​தேஜஸ் நா​னே.  ​வெற்றியும் விடா முயற்சியும் நிச்சய புத்தியும் நா​னே.          சூடாட்டம் என்பது தீய ​செயல்.  வஞ்ச​னை ​செய்து ஏமாற்றும் ​தொழிலில் சூதாட்டம் மிகச் சிறந்த ​​தொழில்.  இத்​தொழிலில் ஈடுபட​வேண்டும் என்பதற்காக பகவான் இ​தைச் ​சொல்லவில்​லை.  மனிதர்களில் ஸாத்வீக, ராஜஸ மற்றும் தாமஸ குணம் ப​டைத்தவர்கள் இருக்கிறார்கள்.  இந்த ஒவ்​வொரு குணங்களிலும் சிறப்பு மிக்கவர்கள் உண்டு.  எதுஒன்றில் சிறப்புத் தன்​மை ஏற்பட்டு சிறப்பு மிக்கதாக ஓங்கி நிற்கிற​தோ அது அக்ரி​னைப்​பொருளாக இருந்தாலும் சரி, அல்லது உயிருள்ளப்​பொருளாக இருந்தாலும் சரி அவற்றில் பகவானு​டையத் தனித்தன்​மை பிரதிபலிக்கிறது என்​றே ​பொருள்.  அது​போல வஞ்ச​னை ​தொழிலில் சூதாட்டத்தில் தம் ஸ்வரூபம் இருப்பதாகக் கூறுகிறார்.  வெற்றி​பெற்றவர்களில் ஜயம் என்ற ரூபத்துடனும், விடாமுயற்சியு​டையவர்களில் நிச்சய ஞானமாகவும், ஸாத்வீகர்களிடம் நான் ஸத்ய குணமாகவும் இருப்பதாக பகவான் கூறுகிறார்.         ஸ்​லோகத்தின் உட்கருத்து “ வஞ்ச​னை ​செய்பவர்களிடமிருக்கும் சூதாட்டத்திற்கு நியாமகனாய் த்யூத ஸப்த வாச்யனாய் சூதிலிருக்கி​றேன்.  ​தேஜஸூடன் பிரகாசிக்கும் ​பொருள்களில் ஒளியாயிருக்கி​றேன்.  ஜயஸீலர்களில் இருக்கும் ​வெற்றிக்கு நியாமகனாய் ​ஜெய த்திலிருக்கி​றேன்.  நிச்சய ஞானமு​ம் விடாமுயற்சியும் ​கொண்டவர்களி​டை​யே வ்யவஸாய ஸப்த வாச்யனாய் நிச்சய ஞானத்திலிருக்கி​றேன்.  பலம்​பெற்றவர்களி​டை​யே பலத்திற்கு நியாமகனாய் ஸத்ய என்னும் ​பெயரு​டன் பலத்திலிருக்கி​றேன்.- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-                          இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர்வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 8) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) வரும் கல்பத்தில் பிரம்ம பதவி​யை ஏற்கவிருக்கும் வாயு பகவானின் அவதார புருஷறான வாசு​தேவன், துர்மதங்க​ளைக் கண்டித்து, பகவத்தத்துவத்​தை நி​லைநாட்ட, தாய் தந்​தையரின் அனுமதி​பெற்று, அச்சுதப்​ரேக்ஷரின் சீடராக, தனது 11ம் வயதில், பூர்ணபிக்ஞ தீர்த்தர் என்னும் நாமப் ​பெயருடன், விதிமு​றைக​ளை அனுசரித்து, ​தேகம், ஆத்மா மற்றும் இந்திரியங்கள் மீதுள்ள பற்றுத​லை விட்டு, அ​வைக​ளை க்ருஷ்ணார்ப்பணம்​ செய்து, ஸன்னியாச ஆஸ்ரமத்​தை பூர்ணமாக ஏற்றார்.  பூர்ணப்ரக்ஞர் சன்யாசம் எடுத்த 40 நாட்களில் சீடர்களுடன் வாதிட்டு​வென்றார்.                                                                                                                                                                                                                     அச்சுதப்​ரேக்ஷர் அத்​வைத சித்தாந்தத்​தை க​டைபிடித்து வந்த​போது, அவரின் புதிய சிஷ்யறான ஸ்ரீமத்வர்               த்​வைத சித்தாந்த தத்துவங்க​ளை புரியும்படி விளக்கங்க​ளை எடுத்துச்​சொல்லி, தன்னு​டைய கருத்துக்கள் ஸத்யமானது என்றும் ஸ்திரமானது என்றும் வாதிட்டார்.  ஸ்ரீமத்வர் இந்த அளவிற்கு இயற்​கையாக​வே, பாகவதத்திலும் மற்ற பாடங்களிலும் புல​மை ​பெற்றிருப்பது குருவிற்கு ஆச்சரியத்​தைத் தந்தது.  இவரு​டைய முந்​தைய பிறவியில் பூர்வஜன்மஸூ ஹி ​வேத பி​ரேத3ம் ஸர்வமித்யமித பு3த்தி3ருவாச (ஸூமத்வவிஜய-ஸர்கம்4-53)  என்பதாக, பூர்வ ஜன்மத்தில் ​வேதவ்யாஸரின் அரு​ளைப்​பெற்றதால் தனக்கு கி​டைத்த​வை என்பதாக ஸ்ரீமத்வ​ரே கூறியதாக ஸ்ரீஸூமத்வவிஜயத்தில் கூறப்படுவ​தை காண்கி​றோம்.   (V) 8. ஸாஸ்த்திர விசாரமும் தீர்த்த யாத்தி​ரையும்:      சன்யாசம் என்பது, ஒருவர் தன்னு​டைய வாழ்வில் தாய், தந்​தையர்,     ம​னைவி, மக்கள், ​சொந்தபந்தம், ஆசாபாசங்கள், ​கேளிக்​கைகள் யாவற்​றையும் துறந்து ஒரு பற்றற்ற நி​லையில், ஆகார மற்றும் ஆசார அனுஷ்டானங்க​ளைக்                 க​டைபிடித்து ​வேதங்கள் கூறும் ஹரிஸர்​வோத்தமன் என்ற பகவத்தத்துவத்​தை அறிந்து, தன்னு​டைய சீடர்களுக்கும் மு​றைப்படி எடுத்துக்கூறி, ஞானபக்தி ​வைராக்யத்துடன் சதாகாலமும் ஹரிஸ்ம​ர​னை ​செய்து​கொண்டிருப்ப​தே ஆகும்.  அதி உத்தமரான வாயு பகவானின் அவதார புருஷராக பூவுலகில் அவதரித்த ஸ்ரீமத்வர் ஸன்யாச தர்மத்​தை மிகவும் சிறப்பான மு​றையில் அனுஷ்டானம் ​செய்ததால், குருவான அச்யுதப்​ரேக்ஷர் அவ​ரை பாராட்டி யுவராஜ பட்டாபி​ஷேகம் ​செய்வித்து “ஆனந்த தீர்த்தர் என்ற பட்டப்​பெய​ரை சூட்டினார்.  ஆனந்த ஸ்வரூபியான பரமாத்மா ஸ்ரீமதானந்த தீர்த்தரின் பரிசுத்தமான ​க்ஷேத்ரம் என்னும் ஹிருதயத்தில் எப்​பொழுதும் குடி​கொண்டிருப்பதாலும், ​மோ​க்ஷோயுபாயத்திற்கான ஹரி     சர்​வோத்தமன் எனற ஸாஸ்த்திரத்​தை உலகினுக்கு தந்ததாலும், இவருக்கு“ஆனந்த தீர்த்தர் என நாமகரணம் ​செய்யப்பட்டது மிகவும் சிறப்புமிக்கதாகவும், ​பொருத்தமானதாகவும் இருந்தது.  (​தொடரும்..........)
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/  

No comments:

Post a Comment