கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)
மஹர்ஷீணாம் ப்3ருகுரஹம், கி3ராமஸ்ம்யேகமக்ஷரம்/
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ sஸ்மி ஸ்தா2வரானாம்ம் ஹிமாலய:// (அத்.10 ஸ்லோ.25)
மஹரிஷிகள் பத்துபேர்கள் ஸ்ரீப்ரம்மாவின் மானஸ புத்ரராக தாமே ஸ்வயமாகத் தோன்றியவர்கள். இவர்களின் சாக்ஷ்சாத்கார ரூபத்தில் பகவானே தோற்றமளித்தார். மஹரிஷிகள்: 1. ப்ருகு 2. மரீசி 3. அத்ரி 4. அங்கிரஸ் 5. புலஹர் 6. க்ரது 7. மநு 8. தக்ஷர் 9. வஸிஷ்டர் 10. புலஸ்த்யர் எனப்படுகிறார்கள். இவர்களில் முக்கியமானவர் ப்ருகு முனிவர். இம்முனிவரைப் பற்றியதான கதைகள் அனேக புராணங்களில் அவ்வப்பொழுது கூறப்படுகிறது.எனவே,பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மஹரிஷிகளில் ப்ருகுவாக காட்சியளிப்பதாக என்று உபதேஸிக்கிறார்.
சொற்களுள் 'ஏகாக்ஷரமாக' அதாவது 'ஓம்' என்னும் பிரணவ மந்திரமாக 'ஓம்' என்னும் சப்பதத்தில் இருப்பதாகக் கூறுகிறார். காடகோபநிஷத்தில் (1.2.15ல்) யமன் ஓம் காரத்தின் பெருமையை விளக்கிக் கூறுவதைக் காணலாம் (சாரல் 2 துளி 35). இந்த ஓம் காரத்தில் எட்டு அக்ஷ்ரங்கள் உள்ளன. அதாவது அகாரம், உகாரம், மகாரம், நாத, பிந்து, கலா, சாந்தா, அதிசாந்தா என்பதான எட்டு ஸப்தங்கள் அடங்கியுள்ளன. இந்த ஓம் காரத்தின் விஸ்தாரமே வேதம். இந்த ஓம் காரம் ஓரெழுத்து எனப்படுகிறது. எனவே பகவான் ப்ரணவ மந்திரத்தில் ஓம்கார சப்தமாக இருப்பதாகக் கூறுகிறார். 'வேத்3யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜீரேவச'(ஸ் 17, அ9) என்பதாக 9ம் அத்யாயத்தில் கூறியதைப் பார்க்கிறோம்.
கர்மபலன் கருதி வேதங்களில் கூறப்பட்ட ஹோமங்கள் மூலம் செய்யப்படும் யாகங்கள் (யஜ்ஞை ரிஷ்ட்வா ஸ்வர்க3திம்) யாவும் சிறிது காலமே பலநைக் கொடுக்கும். அவைகள் சொர்கத்திற்கு செல்ல வேண்டுமானால் பயன்படும். ஆனால் பகவானின் ஸன்னிதானத்தை அடைய பக்தியுடன் ஜபங்கள் செய்யவேண்டும். ஆகையால் யக்ஞங்களில் சிறந்தது ஜபஞக்ஞம். ஜபத்தால் ஞானம் சித்திக்கிறது. ஞானத்தால் பகவானின் சாக்ஷாத் ரூபம் தெரிந்துகொள்ளலாம். மனதிற்குள் பகவானின் நாம ஜபம் சாலச்சிறந்தது. பகவான் மற்ற யக்ஞங்களைவிட பிறந்தவர்களைக் காப்பதற்காக 'ஜபயஜ்ஞன்' என்ற ரூபப்பெயருடன் ஜபத்திலிருப்பதாகக் கூறுகிறார்.
இமயமலையில் ஸ்ரீபத்ரிகாஸத்தில் ஸ்ரீநரநாராயணர் புனிதஸ்தலம் உள்ளது. ஸ்ரீவேதவ்யாஸ பகவானிடம் ஸ்ரீமதாச்சார்யர்ஸ்ரீமத்வர் இன்றும் வேத அத்யயணம் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இமயம் புனிதமான தவம் செய்யத்தகுந்த பூமியாக இருக்கிறது. அசையாப் பொருட்களில் இமயமலை ரூபமாகக் காட்சியளிப்பதாகக் கூறுகிறார்.
ஸ்லோகத்தின் உட்கருத்து : நான் மஹரிஷிகளில் உத்தமனான ப்ருகு மஹரிஷிக்கு நியாமகனாய் ப்ருகு நாமகனாய் ப்ருகு மஹரிஷியில் இருக்கிறேன். வாக்யங்களில் முக்கியமான ஓங்கார ஸப்த ரூபியாய் ஓங்காரத்திலிருக்கிறேன். யக்ஜங்களில் ஸ்ரேஷ்டமான ஜபயக்ஜத்தில், பிறந்தவர்களைக் காப்பதாலும், பூஜ்ஜைக்குரியவனாதனாளும், 'ஜபயஜ்ஞ:' என்னும் பெயருடன் ஜபம் என்னும் யஜ்ஞத்திலிருக்கிறேன். அசையாத பொருள்களில் உத்தமனான இமயமலைக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு ஆஸ்ரயனாய் இருப்பதால் 'இமயம்' என்ற பெயருடடையவனாய் ஹிமாலத்தில் இருக்கிறேன்-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : (10வது அத்யாயம்) அத்யாயச் சுருக்கம்: ஆயுதம் தரித்தவருள் நான் ராமன். மீன்களுள் மகரம். நதிகளுள் கங்கை நான். படைத்தல், காத்தல் அழித்தல் ஆகியவைகளும் நானே. வாதம் செய்வேரிடத்தில் வாத; என்ற பெயருள்ள ரூபத்துடன் இருக்கிறேன். அக்ஷ்ரங்களுள் நான் 'அ' வாக (அகரம்) உள்ளேன். த்வந்தவம் (அதாவது இருச்சொல் கலவை) நானே. காலம் நானே. நான்முக பிரம்மதேவரிடமும் நானே இருக்கிறேன். ம்ருத்யு, உற்பத்தி, கீர்த்தி, க்ஷேமம், ஞாபக சக்தி, புத்தி, உறுதி, பொறுமை யாவும் நானே. ஸாமங்களிடையே ப்ருஹத்ஸாமம் நான். மந்திரங்களில் காயத்ரீ நான். மாதங்களில் மார்கழியும், ருதுக்களில் வசந்தமும் நானே(ஸ்35). வஞ்சகர்களில் சூடாட்டமும், சக்தியுள்ளவர்களில் சக்தியும் நானே. ஜெயம், விடாமுயற்சியும் நிச்சய புத்தியும் நானே. கூரிய புத்தியுடையவர்களுள் சுக்ராச்சாரியராக இருக்கிறேன். அடக்கியாள்பவரிடம் அடக்கும் சக்தி நான். ஜெயத்தை விரும்புவோர்களின் ராஜநீதி நான். இரகசியங்களில் மெளனம் என்பது நான். ஞானிகளின் ஞானமும் நானே. அர்சுனா! ஸகல பிராணிகளுக்கும் எது வித்தோ அதுவும் நானே. இந்தப் பிரபஞ்சத்தில் நான் இல்லாத இடமில்லை. ஹே! பரந்தபா! என் தெய்வசக்தியை விளக்கும் விபூதிகளுக்கு எல்லையே இல்லை. நான் இப்போது உனக்கு கூறுவது சிலவற்றை மாத்திரமே. இவ்வுலகில் சிறப்புடையதாயும், தேஜஸ் உடையதாயும், சக்தி வாய்ந்ததாயும் உள்ள பொருட்கள் அனைத்தும் என் சக்தியின் அம்சத்தில் தோன்றியது என்று நீ அறிதல் வேண்டும். அர்சுனா! இவ்வாறு பலவற்றை அறிவதால் உனக்கு என்ன பயன்? சுருக்கமாய்ச் சொன்னால்,இவ்வுலகமனைத்தையு என் யோக சக்தியின் ஒரு பகுதியால் நான் தாங்கி நிற்கிறேன்"-
தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //
No comments:
Post a Comment