Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, October 29, 2011

சாரல் 05 துளி 30 ​தேதி 16.10.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
சாரல் 05 துளி 30 ​தேதி 16.10.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
 மந்ய​ஸே யதி3 தச்ச3க்யம் மயா தி3​ரஷ்டுமிதி ப்ர​போ4!/
யோ​கே3ஸ்வர த​தோ மேத்வம்த3ர்ஸயாத்மாநம்வ்யயம்//     (அத்.11ஸ்​லோ.4)
        அர்சுனன், ப்ரபு​​வே!, ​யோ​கேஸ்வரா என்று ப்ரார்த்திக்கிறான், “​ஹே க்ருஷ்ணா! உங்களின் விபூதி தத்துவங்க​ளை நான் ​கேட்டு அறிந்து​கொண்​டேன்.  நீங்கள் கூறியது எல்லாம் உண்​மைதான்.  எனக்கு அதில் பூர்ணமான நம்பிக்​கை உள்ளது.  நீங்கள் அ​தை தர்சனமாகக் காட்டினால் நான் இன்னும் பூர்ணதிருப்த்தி அ​டை​வேன்.  உங்களின் ஸ்வரூபத்​தை காண​வேண்டும் என்ற ஆவலும் எனக்கு அதிகரித்துள்ளது.  உங்களின் விஸ்வரூபத்​தை காண எனக்கு ​யோக்ய​தை இருக்குமானால் காண்பிப்பாயாக என்பதாக ​வேண்டுகிறான்.
        அர்சுனன் பகவானின் பக்தன்.  பகவானின் எல்லாயற்ற சக்தி​யை உணர்ந்தவன்.  ஸ்ரீகிருஷ்ணரின் அருளில்லாமல் அவரின் ஸ்வரூபத்​தை காண்பெ​தென்பது சாத்யமல்ல என்ப​தை உணர்ந்திருக்கிறான்.  சிந்த​னைக்கு எட்டாதவரும், எல்​லையற்றவருமான பகவா​னை அர்சுனன் யாசிக்கிறான்.  தனக்கு விஸ்வரூப​த்தைக் காண​வேண்டும் என்ற ​கோரிக்​கை நியாயமானது என்று கருதினால் தன்​னைத் தகுதியு​டையவனாகச் ​செய்து, தர்சனம் ​கொடுத்தருள ​வேண்டும் என்ப​தே அர்சுனனின் ப்ரார்த்த​னை.
ஸ்​லோகத்தின் உட்கருத்து  “மஹாப்ரபு​வே! நான் அந்த ரூபத்​தை காண சக்தியுள்ளவன் என்று நீ நி​னைத்தால், சகல சக்திகளுக்கும் ஈஸ்வரா, ​யோ​கேஸ்வ​ரா! என்றும் அழியாத உன்னு​டைய ஸ்வரூபத்​தை எனக்குக் காட்டுவாயாக. –அர்சுனன்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 14) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)     வேத மந்திரங்களின் உட்கருத்​தை அறியாது ​மே​லோட்டமான ​பொரு​ளை அறிந்த மக்களின் மனதில் ​வேதங்களின் உண்​மையானப் ​பொரு​ளை பதிய​வைத்து, ​ஸ்ரீ​வேதவ்யாஸர் ​போதித்த தத்துவ ஞானத்​தை விளக்கி, மோ​க்ஷோயுபாயத்திற்கான வி​சேஷ அர்த்தங்க​ளை எடுத்துக்கூறி, ஸஜ்ஜனர்க​ளை நல்வழிப்படுத்தி மீண்டும் ஸ்ரீபத்ரிகாஸ்ரமம் ​சென்ற​டைந்தார்.  அங்கு பகவான் ஸ்ரீ​வேதவ்யாஸ​ரை தரிஸித்து, நமஸ்கரித்து, மீண்டும் திரும்பிவந்து தம் சீடர்களுட​னே உடுப்பி ​க்ஷேத்ரம் வந்து தாம் ஸ்தாபித்த உடுப்பி ஸ்ரீகிருஷ்ண​ரை ப்ரார்த்தித்தார்.
ஸ்ரீமத்வாச்சார்யரின் அற்புத ​செயல்கள் : ஸ்ரீமதாச்சார்யர் பத்ரிகாஸ்ரமம் ​செல்லும் வழியில் நடந்த சில அற்புதமான வியக்க ​வைக்கும் நிகழ்ச்சிகள் ந​டை​பெற்றன.
ஒரு சமயம் ஈஸ்வர​தேவன் என்ற மன்னன் அவ்வழியாக ​சென்று ​கொண்டிருந்த வழி​போக்கர்க​ளை எல்லாம் வழிமறித்து, மண்​ணைத் ​தோண்டி எடுக்குமாறு கட்ட​ளையிட்டுக்​கொண்டிருந்தான். அவ்வ​மையம் ஸ்ரீமதாச்சார்யர் தம் சீடர்களுடன் அவ்வழி​யே ​செல்ல​வேண்டியதாயிற்று.  எல்​லோ​ரையும் ​போல​வே, ஸ்ரீமதாச்சார்ய​ரையும் நி​னைத்து, அம்மன்னன், மண்​ணைத் ​தோண்ட​வேண்டும் எனக் கட்ட​ளையிட்டான்.  அதற்கு ஸ்ரீமதாச்சார்யர் தாங்கள் சன்யாசிகளா​கையால் தமக்கு அனுபவம் இல்​லையா​கையால் அம்மண்​ணை​யே எவ்வாறு ​தோண்ட ​வேண்டும் என்று ​செய்துகாட்டுமாறுக் கூற, அம்மன்னன் ஒப்புக்​கொண்டு ​தோண்ட ஆரம்பித்தான், ஆச்சார்யரின் மஹாசக்தியினால் கட்டுண்ட அம்மன்னன், ஆச்சார்யரும், சீடர்களும் ​வெகுதூரம் ​சென்றபின்பும் ​தோண்டும் ​செய​லை நிறுத்தாமல் ​செய்து​கொண்​டே இருந்தது அங்கிருந்​தோ​ரை வியக்கச் ​செய்தது.
ஒரு சமயம், டில்லி​யை ஆட்சி ​செய்த பால்பன் என்ற மன்னன் தன் எதிரிகளின் மீது பயம் ​கொண்டு, எதிரிகள் கங்​கை நதி​யைக் கடக்கக் கூடாது என்பதற்காக, படகுகள் ​செல்வ​தை த​டை​செய்தான்.  அச்சமயம், ஆச்சார்யர் தம் சீடர்களுடன் கங்​கை​யைக் கடந்து அக்க​ரைக்குச் ​செல்ல ​வேண்டியதாயிருந்தது.  தம் சீடர்கள்   க​ரை​யைத் தாண்ட முயற்சிக்க ​வேண்டாம் எனக் கூறிய​தை அலட்சியம் ​செய்து, ஒரு சீட​ரை தம்​மை பிடிக்கச் ​சொல்லி, அவருக்கு பின் ஒவ்​வொருவராகப் பிடித்துக்​கொள்ள, கடக்க இயலாத கங்​கை​யை தம் சீடர்களுடன் எளிதாகக் கடந்து ​சென்றார். அவ்வ​மையம் க​ரை​யைச் சுற்றியிருந்த காவல்படை வீரர்கள், ஆச்சார்யர் தன் சில சீடர்களுடன் க​ரை​யைக் கடந்து வருவ​தைக் கண்டு, அவர்க​ளை எதிரிக​லென்​றெண்ணி, தங்களு​டைய இ​டைவா​ளைக் ​கையி​லேந்தி, “நில்லுங்கள்என்றும் ​“கொல்லுங்கள்என்றும் கூக்குரலிட்டு அருகில் ஓடி வந்த​தைக் கண்ட ஆச்சார்யர், “நீங்கள் அதிகம்​பேர் உள்ளீர்கள், நாங்க​ளோ சில​ரே உள்​ளோம்.  என​வே நீங்கள் பயப்பட​வேண்டாம்.  நாங்கள் உங்கள் மன்ன​னை ​நேசக்கரத்துடன் சந்திக்க விரும்புகி​றோம் என்று அவர்கள் ​பேசும் துருக்கிய ​மொழியில் ​பேசினார்.  ஆசார்யரின் ​மொழி​யைக் ​கேட்ட அவ்வீரங்கள் பாம்பு மகுடிக்கு மயங்குவது​போல் மயங்கி ​செய்வதறியாது அப்படி​யே நின்றுவிட்டனர்.  இந்நிகழ்வுக​ளை அரண்ம​​னை ​மேல்மாடியிலிருந்து பார்த்துக்​கொண்டிருந்த மன்னன், ஆச்சார்யரின் வியத்தகு ​செய​லையும், ​தோற்றத்​தையும் கண்டு கீழிறங்கி வந்தான். . (இன்னும் ​தொடரும்...........)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
       பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
       ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
       நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/            



Tuesday, October 11, 2011

சாரல் 05 :துளி 29: 09.10.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
சாரல்: 05- துளி: 29- ​தேதி: 09.10.2011 கிழ​மை ஞாயிறு
கீ​தையின் சாரலில்.....விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம்-அத்யாயம்)
   ஏவ​மேதத்3யதா2த்தத்வமாத்மாநம் பர​மேஸ்வர/
  த்3ரஷ்டுமிச்சா2மி ​தே ரூப​மைஸ்வரம் புரு​ஷோத்தம//(அத்.11 ஸ்​லோ.3)
       பகவானின் மீது பூர்ணமான நம்பிக்​கை ​கொண்டவன் அர்சுனன்.  இதுகாரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் கூறப்பட்ட உப​தேஸங்க​ளை ​செவிமடுத்து, அ​வையாவும் உண்​மை​யே என்று ஒப்புதல் அளித்துள்ளான். என​வே, “பர​மேஸ்வர! “புரு​ஷோத்தம!என்று அ​ழைக்கிறான்.  பகவானு​டைய சக்திகள் அ​னைத்​​தையும் ஒ​ரே ரூபமாக விஸ்வரூப தர்சனமாக காண விரும்புகிறான்.  பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் சாக்ஷாத் ஸ்ரீமந்நாராயண​னே என்ப​தை உலகிற்கு ​தெரிவிப்பதற்காகவும், ​மேலும்கூட பகவானு​டைய ஸ்வரூபத்​தை அர்சுனன் இதுவ​ரை பார்த்ததில்​லை என்பதற்காகவும், தர்சனத்​தை பார்ப்பதால் ​பெரும் பாக்கியசாலியாகவும், வாழ்வின் பய​னை எட்டியதாகவும் எண்ணுகிறான்,  என​வே, ஸ்ரீகிருஷ்ணரிடம் விஸ்வரூபத்​தை காண்பிக்க ​வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறான் அர்சுனன்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து  “பர​மேஸ்வரா! யாவற்றிக்கும் ஸ்வாமி​யே! நீ உன்​னைப் பற்றி வர்ணித்த​தெல்லாம் ஸத்யமான வாக்​கே யாகும்.  புருஷர்களில் ஸ்​​ரேஷ்ட​னே!,  புரு​ஷோத்தமா! உன்​னை த்யானம் ​செய்வதற்கியலாத அஸாத்ய சக்தியு​டைய ரூபத்​தை காண விரும்புகி​றேன்—அர்சுனன்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 14) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) உடுப்பி ஸ்ரீகிருஷ்ண​ரை ஸ்தாபித்தல்:  தான் திரும்பி வரு​வே​னோ, வரமாட்டா​னோ என்று கூறிச்​சென்ற ஸ்ரீமதாச்சார்யர், நலமுடன் திரும்பி வந்த​தைக் கண்ட சத்யதீர்த்தர் மற்றும் அங்கிருந்த சீடர்கள் மிகவும் மனமகிழ்ச்சிய​டைந்தனர்.
பிறகு, தம்மிடம் வாதம் ​செய்ய வந்த திற​மைமிக்க பண்டிதர்க​ளை எல்லாம் தன் வாதத்திற​மையால் ​வென்று, பாட்ட, பிரபாகர, ​வை​சேஷிக, ​நைய்யாயிக, சார்வாக, ​பெளத்த ​போன்ற ஆறு சித்தாந்தங்க​ளை தகுந்த ஆதாரங்க​ளைக் ​கொண்டு நிராகரித்தார்.  அங்கிருந்த அந்தணர்கள் ஸ்ரீமத்வரின் திற​மை மிகுந்த வாதத்​தைக் கண்டு “ஸர்வமும் அறிந்த ஞானி என்றும் “ஸ்ரீமதாசார்யருக்கு சமமானவர் யாரமில்​லை என்றும் புகழாரம் சூட்டினார்கள்.  சாஸ்திரத்தில் வல்லவரான ​​சோபன பட்டர் என்ற அந்தணர், ஸ்ரீமத்வரின் உண்​மையான தத்துவத்​தை ஏற்று ஆங்காங்​கே பிரச்சாரம் ​செய்தார்.
                            பூஜ்​யைக்குறியவரும் ஸ்ரீஹரி பக்தி உள்ளவரும்,    ஸ்ரீ​வேதவ்யாசரிடம்பாடம் கற்றவரும், ​தேவ​தைகளாலும் வணங்கப் படுபவரும், தத்வக்ஞானியும், தவறான ஞானம் ​கொண்டு தன்​னை வாதில் எதிர்ப்ப வ​ரை எல்லாம் ​வெல்பவரும், பகவத்தத்வ ஞானத்​தை ஏற்கும் தகுதியு​டைய ஸஜ்ஜனர்க​ளை ஸம்ஸாரக் கடலிலிருந்து க​ரை ஏற்றுபவரும் பூர்ணப்ரக்ஞரும், இருபத்​​​தொரு ஸாஸ்த்திர விவரணங்க​ளை நிராகர​ணை ​செய்து, கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால அறிஞர்களால் கூட ஒரு சிறு தவ​றேனும் கூற இயலாத ப்ரம்ம சூத்ர பாஷ்யத்​தை இயற்றியவருமான ஸ்ரீமதானந்த தீர்த்தர் என்றும் பூர்ணப்ரக்ஞர் என்றும் ​போற்றப்படுபவருமான ஸ்ரீமுக்யப்பராணருமான ஸ்ரீமத்வாச்சார்யர் அவர்கள், ஒருநாள் ​மேற்கு சமுத்திரக் க​ரையில் அமர்ந்து த்யானம் ​செய்து​கொண்டிருந்த ​போது, துவாரகா நகரத்திலிருந்து வந்த ஒரு கப்பல், புயற்காற்றினால் கடலில் மூழ்கவிருந்த​தைக் கண்டு, கப்ப​லை ​நோக்கி தனது காஷாய வஸ்த்திரத்​தை அ​சைத்தார். அந்தக்கண​மே சூறாவளிக் காற்று நின்று, கப்பல் ஸ்ரீமதாச்சார்யர் இருந்த க​ரை​யை அ​டைந்தது.  கப்பல் த​லைவன் தன் நன்றி​யை நமஸ்காரத்துடன் ​தெரிவித்து, கப்பலிலிருந்த நவரத்ன கற்க​ளை  ஸ்ரீமத்வருக்குச் சமர்ப்பித்தான். ஆனால் அ​தை ஏற்க மறுத்த ஸ்ரீமதாச்சார்யர், கப்பலின் முன்னும், பின்னும் பாரத்திற்காக ​வைக்கப்பட்டிருந்த ​கோபிச்சந்தன கட்டிகளில் மூன்​றை மட்டும் அளித்தால் ​போதுமானது என்று கூறினார். கப்பல் த​லைவன் பயபக்தியுடன் அந்த மூன்று ​கோபிச்சந்தன கட்டிக​ளைச் சமர்ப்பித்தான். அந்தக் கட்டிகளில் ஒன்றில், ​தேவகி பூஜித்த மத்துடன் கூடிய ஸ்ரீபாலகிருஷ்ண விக்ரகமும், மற்​றொன்றில் ஸ்ரீபலராமரு​டைய விக்ரகமும், இன்​னொன்றில் ஸ்ரீஜனார்த்தன விக்ரகமும், இருந்த​தை அறிந்த ஸ்ரீமதாச்சார்யர், அந்த விக்ரகங்க​ளை சிரஸில் ஏந்திக்​கொண்டு வரும்​போது வழியில் ஸ்ரீபலராம விக்ரகம் உள்ளக் கட்டி​யைப் பிளந்து அவ்விக்ரகத்​தை அந்த இடத்தி​லே​யே பிரதிஷ்​டை ​செய்தார்.  அந்த கிராமம் தான் வடபாண்​டேஸ்வரம் என வழங்கப்படுகிறது.பிறகு எர்ரபல்லி என்னுமிடத்தில் மற்​றொருக் கட்டி​யைப் பிளந்து ஸ்ரீஜனார்த்தன விக்ரகத்​தை அங்கு பிரதிஷ்​டை ​செய்தார்.  பிறகு எஞ்சிய கட்டி​யை சிரசில் தரித்துக்​கொண்டு உன்னதமான “துவாதஸ  ஸ்​தோத்திரத்​தை கானம் ​செய்து​கொண்டுவந்து உடுப்பி ​க்ஷேத்ரத்தில் ஸ்ரீஅனந்​தேஸ்வர ஸ்வாமி ​கோவிலுக்கு அருகில் மூன்றாவது கட்டி​யை  உ​டைத்து அதிலிருந்த ஸ்ரீகிருஷ்ண விக்ரகத்​தை பிரதிஷ்​டை ​செய்து எக்காலத்திலும் அ​னையாத இரண்டு விளக்குக​ளை ஏற்றி வழிபட்டார்.  பின்பு உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் ​கோவி​லை நிர்வகிப்பதற்காக எட்டு மடங்க​ளை நிறுவினார். தற்​போதும் இம்மடங்க​ளே அக்​கோவி​லை நிர்வகித்து வருகின்றன.பின்பு உடுப்பி க்ஷேத்ரத்தில் தனது பூர்வாசிரம் ச​கோதரரும், பிற்காலத்தில் ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர் என்று அ​ழைக்கப்பட்டவருமான, ​யோக்யாம்சர் “விஸ்வ​தேவாஸ்ருதிக​ளை ஓத, ஸ்ரீமதாச்சார்யர் ஒரு மஹா யாகத்​தை நடத்திக்காட்டினார். தேவ சமுதாய​மே வியக்கும் வ​கையில் இந்த யாக மு​றைகள் அ​மையப்​பெற்றிருந்தது. (இன்னும் ​தொடரும்...........)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//


ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே

சாரல் 05 துளி 28 02.10.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
சாரல்: 05- துளி: 28- ​தேதி: 02.10.2011 கிழ​மை ஞாயிறு
கீ​தையின் சாரலில்.....விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம்-அத்யாயம்)
   4வாப்ய​யெள ஹி பூ4தாநாம் ஸ்ரு​தெள விஸ்தர​ஸோ மயா//
   த்வத்த கமலபத்ராக்ஷ மஹாத்ம்யமபி சாவ்யயம்/(அத்.11 ஸ்​லோ.2)
      முந்​தைய அத்யாயங்களில் கூறிய​தை அர்சுனன் நி​னைவு கூறுகிறான்.  7ம் அத்யாயம் 6ம் ஸ்​லோகத்தில்  ஏதத்3​யோநீநி பூ4தானி ஸர்வாணீத்யுபதா4ரய/ அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக3த பரப4வ ப்ரலவயஸ்ததா2//  இவ்வாறு பகவான் கூறிய​தைப் பார்த்​தோம்.  அதாவது, “நான் இவ்வுலகில் ஜட மற்றும் ​சேதன ​பொருள்கள் யாவற்றிற்கும் உற்பத்திக்கான காரணம் நா​னே, பிரலயத்திற்கும் காரணம் நா​னே”  என்பதாக 7ம் அத்யாயத்தில் கூறிய​தைக் ​கேட்ட அர்சுனன், தாம​ரைக் கண்களு​டைய கண்ணா! என்று பகவா​னை அ​ழைத்து, எல்லாப் பிராணிகளின் உற்பத்தி மற்றும் நாஸம் இ​வைகள் விஸ்தாரமாகக் கூறப்பட்டதும், அழிவற்ற மகாத்மியமும் முந்​தைய அத்யாயங்களில் கூறப்பட்ட​தை அர்சுனன் நி​னைவுக்கு ​கொண்ர்கிறான்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து  “கமலக்கண்ணா! உன்னால் உயிர்களின் உற்பத்தி, நாஸம் இ​வைகள் விஸ்தாரமாகக் ​கேட்கப்பட்டது, மற்றும் அழிவற்ற் மஹாத்ம்யமும் என்னால் ​கேட்கப்பட்டதன்​றோ!–அர்சுனன்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 14) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) ஸ்ரீ​வேதவ்யாஸரின் தரிசனம் (VII) ஸ்ரீவிஷ்ணுவின் தாம​​​ரைப் பாதங்களில் மனம் ​வைத்தவராய், ​மோக்ஷ்​சோயுபாயத்திற்கு சாத​னமான மதத்​தை ​தோற்றுவித்த ஸ்ரீமதாச்சார்யர் இமயம​லையின் உச்சியில் அ​மைந்துள்ள ​மேல் பதிரிக்கு ​சென்ற​டைந்தார்.  அந்த ​க்ஷேத்ரத்​தைக் கண்டு இ​றைவனின் ஸ்ருஷ்டி​யை எண்ணி மனதாரப் ப்ரார்த்தித்தார்.  அம்ம​லை பூக்களுடன் கூடிய அழகான ​பெரிய மரங்கள் நி​றைந்ததாகவும், அங்கிருந்த நீர்நி​லைகளில் தாம​​​ரைப் பூக்கள் கண்களுக்கு ​பொலி​வைக் ​கொடுபக்பதாகவும், ஸத்ஜனங்களுக்கு அ​மைதி​யையும், ஆனந்தத்​தையும் ​கொடுப்பதாகவும் அ​மைந்திருப்ப​தைக் கண்டு ஸ்ருஷ்டிகர்த்தாவான ஸ்ரீவிஷ்ணு​வை மனதில் நி​னைத்து ப்ரார்த்தித்தார்.  மறுபக்கத்தில் பதிரி என்ற இலந்​தை மரங்கள் நி​றைந்த ப்ர​​தேசத்​தையும், பணி நி​றைந்த ப்ர​​தேசத்திலும் மரங்களும், கீச்சுகீச்சு என்ற ஒளியுடன் பற​வைகள் இருந்த​தையும் பார்த்து வியந்தார்.  
அங்​கே முனிவர்களும், ரிஷிகளும் நி​றைந்த ஆஸ்ரமம் ஒன்று இருந்தது.  ஆசார்யரின் பிர​வேஸத்​தைக்கண்டு அங்கிருந்த ​வைஷ்ணவ முனிவர்கள், ஸ்ரீமதாச்சார்ய​ரைக் கண்டனர்.  அவரு​டைய முப்பத்திரண்டு லக்ஷணங்கள் ​பொருந்திய ​தேகமும், சந்திர​னைப் ​போன்ற முகமும், ஆஜானுபாகுவான உடல​மைப்​பையும் கண்ட முனிவர்கள் ​வைத்தகண் எடுக்காமல் அவ​ரை​யே வியப்பூட்டும் வ​கையில் பார்த்துக்​கொண்​டே இருந்தனர்.
அங்​கே இருந்த முனிவர்கள், ஜடாமுடியுடன், ஞானப்பழமாய், பக்தி பரவசமாய், ​வைராக்கிய சீலராய் காமக்கு​ரோதங்க​ளை நீக்கி பற்றற்ற நி​லையில் காற்​றை​யே ஆகாரமாகக் ​கொண்டவர்களாய் இருந்தனர்.
கல்பதரு ​போன்ற இலந்​தை மரத்​தைச் சுற்றிலும் முனிவர்கள் அ​னேகம் இருக்க, ​சேஷ ​தேவனில் சயனிப்பவரும், கருடபகவா​னை​யே வாகனமாகக் ​கொண்டவரும், ​வேதத்திற்கு த​லைவருமாகிய ஸ்ரீஹரி​யின் அம்ஸார்த்த ரூபமாக ​தேஜஸ் நிரம்பிய, சந்திர​னைப் ​போன்ற பிரகாசமான முகப்​பொலிவுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீ​வேதவியாச பகவா​னை தரிசித்த தருணத்தில், ஸ்​தோத்ரம் ​செய்து, அஷ்டாங்க நமஸ்காரம் ​செய்தார்.
ஸ்ரீ​வேதவ்யாசர் ஸ்ரீமதாச்சர்ய​ரைக் ​கைதூக்கி நிறுத்தி, நட்புடன் புன் முருவல் பூத்து, ஆலிங்கனம் ​செய்து​கொண்டு, உரிய ஆசனம் ​கொடுத்து அமரச் ​செய்தார்.  அங்கிருந்த முனிவர்கள், வாயு பகவானின் அவதார புருஷராக வந்திருக்கும் ஆசார்யர்ருக்கு சம்பரதாய மரியா​தை-உபசாரங்க​ளை அளித்து ​கெளரவித்தனர். ஸ்ரீமதாச்சார்யர் ஆசனத்தில் அமர்ந்தபின்பு தாமும் அமர்ந்தனர்.
ஸ்ரீ​வேதவ்யாஸரிடம் ​வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்களில் கூறப்படும் பகவத்தத்துவ ஞானத்​தை ​கேட்டு ​தெரிந்து​கொண்டு, அவரின் உள்ளத்​தை நன்கு அறிந்தவராய் அவ​ரை வணங்கி அவரிடம் அனுமதிப்​பெற்று ​மேல் பதிரியிலிருந்து புறப்பட்டார்.  
உடுப்பி ஸ்ரீகிருஷ்ண​ரை ஸ்தாபித்தல்  :
தான் திரும்பி வரு​வே​னோ, வரமாட்டா​னோ என்று கூறிச்​சென்ற ஸ்ரீமதாச்சார்யர், நலமுடன் திரும்பி வந்த​தைக் கண்ட சத்யதீர்த்தர் மற்றும் அங்கிருந்த சீடர்கள் மிகவும் மனமகிழ்ச்சிய​டைந்தனர்.
பிறகு, தம்மிடம் வாதம் ​செய்ய வந்த திற​மைமிக்க பண்டிதர்க​ளை எல்லாம் தன் வாதத்திற​மையால் ​வென்று, பாட்ட, பிரபாகர, ​வை​சேஷிக, ​நைய்யாயிக, சார்வாக, ​பெளத்த ​போன்ற ஆறு சித்தாந்தங்க​ளை தகுந்த ஆதாரங்க​ளைக் ​கொண்டு நிராகரித்தார்.  அங்கிருந்த அந்தணர்கள் ஸ்ரீமத்வரின் திற​மை மிகுந்த வாதத்​தைக் கண்டு “ஸர்வமும் அறிந்த ஞானி என்றும் “ஸ்ரீமதாசார்யருக்கு சமமானவர் யாரமில்​லை என்றும் புகழாரம் சூட்டினார்கள்.  சாஸ்திரத்தில் வல்லவரான ​​சோபன பட்டர் என்ற அந்தணர், ஸ்ரீமத்வரின் உண்​மையான தத்துவத்​தை ஏற்று ஆங்காங்​கே பிரச்சாரம் ​செய்தார்.  (இன்னும் ​தொடரும்...........)

தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/