பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
சாரல்: 05- துளி: 28- தேதி: 02.10.2011 கிழமை ஞாயிறு
கீதையின் சாரலில்.....விஸ்வரூபதர்சன யோகம் (11ம்-அத்யாயம்)
ப4வாப்யயெள ஹி பூ4தாநாம் ஸ்ருதெள விஸ்தரஸோ மயா//
த்வத்த கமலபத்ராக்ஷ மஹாத்ம்யமபி சாவ்யயம்/(அத்.11 ஸ்லோ.2)
முந்தைய அத்யாயங்களில் கூறியதை அர்சுனன் நினைவு கூறுகிறான். 7ம் அத்யாயம் 6ம் ஸ்லோகத்தில் ஏதத்3யோநீநி பூ4தானி ஸர்வாணீத்யுபதா4ரய/ அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக3த பரப4வ ப்ரலவயஸ்ததா2// இவ்வாறு பகவான் கூறியதைப் பார்த்தோம். அதாவது, “நான் இவ்வுலகில் ஜட மற்றும் சேதன பொருள்கள் யாவற்றிற்கும் உற்பத்திக்கான காரணம் நானே, பிரலயத்திற்கும் காரணம் நானே” என்பதாக 7ம் அத்யாயத்தில் கூறியதைக் கேட்ட அர்சுனன், தாமரைக் கண்களுடைய கண்ணா! என்று பகவானை அழைத்து, எல்லாப் பிராணிகளின் உற்பத்தி மற்றும் நாஸம் இவைகள் விஸ்தாரமாகக் கூறப்பட்டதும், அழிவற்ற மகாத்மியமும் முந்தைய அத்யாயங்களில் கூறப்பட்டதை அர்சுனன் நினைவுக்கு கொண்ர்கிறான்.
ஸ்லோகத்தின் உட்கருத்து “கமலக்கண்ணா! உன்னால் உயிர்களின் உற்பத்தி, நாஸம் இவைகள் விஸ்தாரமாகக் கேட்கப்பட்டது, மற்றும் அழிவற்ற் மஹாத்ம்யமும் என்னால் கேட்கப்பட்டதன்றோ!” –அர்சுனன்-
இங்கே ஒரு துளி: ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 14) (படைப்பு: ஆதிமைந்தன்) ஸ்ரீவேதவ்யாஸரின் தரிசனம் (VII) ஸ்ரீவிஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் மனம் வைத்தவராய், மோக்ஷ்சோயுபாயத்திற்கு சாதனமான மதத்தை தோற்றுவித்த ஸ்ரீமதாச்சார்யர் இமயமலையின் உச்சியில் அமைந்துள்ள மேல் பதிரிக்கு சென்றடைந்தார். அந்த க்ஷேத்ரத்தைக் கண்டு இறைவனின் ஸ்ருஷ்டியை எண்ணி மனதாரப் ப்ரார்த்தித்தார். அம்மலை பூக்களுடன் கூடிய அழகான பெரிய மரங்கள் நிறைந்ததாகவும், அங்கிருந்த நீர்நிலைகளில் தாமரைப் பூக்கள் கண்களுக்கு பொலிவைக் கொடுபக்பதாகவும், ஸத்ஜனங்களுக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் கொடுப்பதாகவும் அமைந்திருப்பதைக் கண்டு ஸ்ருஷ்டிகர்த்தாவான ஸ்ரீவிஷ்ணுவை மனதில் நினைத்து ப்ரார்த்தித்தார். மறுபக்கத்தில் பதிரி என்ற இலந்தை மரங்கள் நிறைந்த ப்ரதேசத்தையும், பணி நிறைந்த ப்ரதேசத்திலும் மரங்களும், கீச்சுகீச்சு என்ற ஒளியுடன் பறவைகள் இருந்ததையும் பார்த்து வியந்தார்.
அங்கே முனிவர்களும், ரிஷிகளும் நிறைந்த ஆஸ்ரமம் ஒன்று இருந்தது. ஆசார்யரின் பிரவேஸத்தைக்கண்டு அங்கிருந்த வைஷ்ணவ முனிவர்கள், ஸ்ரீமதாச்சார்யரைக் கண்டனர். அவருடைய முப்பத்திரண்டு லக்ஷணங்கள் பொருந்திய தேகமும், சந்திரனைப் போன்ற முகமும், ஆஜானுபாகுவான உடலமைப்பையும் கண்ட முனிவர்கள் வைத்தகண் எடுக்காமல் அவரையே வியப்பூட்டும் வகையில் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
அங்கே இருந்த முனிவர்கள், ஜடாமுடியுடன், ஞானப்பழமாய், பக்தி பரவசமாய், வைராக்கிய சீலராய் காமக்குரோதங்களை நீக்கி பற்றற்ற நிலையில் காற்றையே ஆகாரமாகக் கொண்டவர்களாய் இருந்தனர்.
கல்பதரு போன்ற இலந்தை மரத்தைச் சுற்றிலும் முனிவர்கள் அனேகம் இருக்க, சேஷ தேவனில் சயனிப்பவரும், கருடபகவானையே வாகனமாகக் கொண்டவரும், வேதத்திற்கு தலைவருமாகிய ஸ்ரீஹரியின் அம்ஸார்த்த ரூபமாக தேஜஸ் நிரம்பிய, சந்திரனைப் போன்ற பிரகாசமான முகப்பொலிவுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீவேதவியாச பகவானை தரிசித்த தருணத்தில், ஸ்தோத்ரம் செய்து, அஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
ஸ்ரீவேதவ்யாசர் ஸ்ரீமதாச்சர்யரைக் கைதூக்கி நிறுத்தி, நட்புடன் புன் முருவல் பூத்து, ஆலிங்கனம் செய்துகொண்டு, உரிய ஆசனம் கொடுத்து அமரச் செய்தார். அங்கிருந்த முனிவர்கள், வாயு பகவானின் அவதார புருஷராக வந்திருக்கும் ஆசார்யர்ருக்கு சம்பரதாய மரியாதை-உபசாரங்களை அளித்து கெளரவித்தனர். ஸ்ரீமதாச்சார்யர் ஆசனத்தில் அமர்ந்தபின்பு தாமும் அமர்ந்தனர்.
ஸ்ரீவேதவ்யாஸரிடம் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்களில் கூறப்படும் பகவத்தத்துவ ஞானத்தை கேட்டு தெரிந்துகொண்டு, அவரின் உள்ளத்தை நன்கு அறிந்தவராய் அவரை வணங்கி அவரிடம் அனுமதிப்பெற்று மேல் பதிரியிலிருந்து புறப்பட்டார்.
உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரை ஸ்தாபித்தல் :
தான் திரும்பி வருவேனோ, வரமாட்டானோ என்று கூறிச்சென்ற ஸ்ரீமதாச்சார்யர், நலமுடன் திரும்பி வந்ததைக் கண்ட சத்யதீர்த்தர் மற்றும் அங்கிருந்த சீடர்கள் மிகவும் மனமகிழ்ச்சியடைந்தனர்.
பிறகு, தம்மிடம் வாதம் செய்ய வந்த திறமைமிக்க பண்டிதர்களை எல்லாம் தன் வாதத்திறமையால் வென்று, பாட்ட, பிரபாகர, வைசேஷிக, நைய்யாயிக, சார்வாக, பெளத்த போன்ற ஆறு சித்தாந்தங்களை தகுந்த ஆதாரங்களைக் கொண்டு நிராகரித்தார். அங்கிருந்த அந்தணர்கள் ஸ்ரீமத்வரின் திறமை மிகுந்த வாதத்தைக் கண்டு “ஸர்வமும் அறிந்த ஞானி” என்றும் “ஸ்ரீமதாசார்யருக்கு சமமானவர் யாரமில்லை” என்றும் புகழாரம் சூட்டினார்கள். சாஸ்திரத்தில் வல்லவரான சோபன பட்டர் என்ற அந்தணர், ஸ்ரீமத்வரின் உண்மையான தத்துவத்தை ஏற்று ஆங்காங்கே பிரச்சாரம் செய்தார். (இன்னும் தொடரும்...........)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வதோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வதோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/
No comments:
Post a Comment