Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, October 29, 2011

சாரல் 05 துளி 30 ​தேதி 16.10.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
சாரல் 05 துளி 30 ​தேதி 16.10.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
 மந்ய​ஸே யதி3 தச்ச3க்யம் மயா தி3​ரஷ்டுமிதி ப்ர​போ4!/
யோ​கே3ஸ்வர த​தோ மேத்வம்த3ர்ஸயாத்மாநம்வ்யயம்//     (அத்.11ஸ்​லோ.4)
        அர்சுனன், ப்ரபு​​வே!, ​யோ​கேஸ்வரா என்று ப்ரார்த்திக்கிறான், “​ஹே க்ருஷ்ணா! உங்களின் விபூதி தத்துவங்க​ளை நான் ​கேட்டு அறிந்து​கொண்​டேன்.  நீங்கள் கூறியது எல்லாம் உண்​மைதான்.  எனக்கு அதில் பூர்ணமான நம்பிக்​கை உள்ளது.  நீங்கள் அ​தை தர்சனமாகக் காட்டினால் நான் இன்னும் பூர்ணதிருப்த்தி அ​டை​வேன்.  உங்களின் ஸ்வரூபத்​தை காண​வேண்டும் என்ற ஆவலும் எனக்கு அதிகரித்துள்ளது.  உங்களின் விஸ்வரூபத்​தை காண எனக்கு ​யோக்ய​தை இருக்குமானால் காண்பிப்பாயாக என்பதாக ​வேண்டுகிறான்.
        அர்சுனன் பகவானின் பக்தன்.  பகவானின் எல்லாயற்ற சக்தி​யை உணர்ந்தவன்.  ஸ்ரீகிருஷ்ணரின் அருளில்லாமல் அவரின் ஸ்வரூபத்​தை காண்பெ​தென்பது சாத்யமல்ல என்ப​தை உணர்ந்திருக்கிறான்.  சிந்த​னைக்கு எட்டாதவரும், எல்​லையற்றவருமான பகவா​னை அர்சுனன் யாசிக்கிறான்.  தனக்கு விஸ்வரூப​த்தைக் காண​வேண்டும் என்ற ​கோரிக்​கை நியாயமானது என்று கருதினால் தன்​னைத் தகுதியு​டையவனாகச் ​செய்து, தர்சனம் ​கொடுத்தருள ​வேண்டும் என்ப​தே அர்சுனனின் ப்ரார்த்த​னை.
ஸ்​லோகத்தின் உட்கருத்து  “மஹாப்ரபு​வே! நான் அந்த ரூபத்​தை காண சக்தியுள்ளவன் என்று நீ நி​னைத்தால், சகல சக்திகளுக்கும் ஈஸ்வரா, ​யோ​கேஸ்வ​ரா! என்றும் அழியாத உன்னு​டைய ஸ்வரூபத்​தை எனக்குக் காட்டுவாயாக. –அர்சுனன்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 14) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)     வேத மந்திரங்களின் உட்கருத்​தை அறியாது ​மே​லோட்டமான ​பொரு​ளை அறிந்த மக்களின் மனதில் ​வேதங்களின் உண்​மையானப் ​பொரு​ளை பதிய​வைத்து, ​ஸ்ரீ​வேதவ்யாஸர் ​போதித்த தத்துவ ஞானத்​தை விளக்கி, மோ​க்ஷோயுபாயத்திற்கான வி​சேஷ அர்த்தங்க​ளை எடுத்துக்கூறி, ஸஜ்ஜனர்க​ளை நல்வழிப்படுத்தி மீண்டும் ஸ்ரீபத்ரிகாஸ்ரமம் ​சென்ற​டைந்தார்.  அங்கு பகவான் ஸ்ரீ​வேதவ்யாஸ​ரை தரிஸித்து, நமஸ்கரித்து, மீண்டும் திரும்பிவந்து தம் சீடர்களுட​னே உடுப்பி ​க்ஷேத்ரம் வந்து தாம் ஸ்தாபித்த உடுப்பி ஸ்ரீகிருஷ்ண​ரை ப்ரார்த்தித்தார்.
ஸ்ரீமத்வாச்சார்யரின் அற்புத ​செயல்கள் : ஸ்ரீமதாச்சார்யர் பத்ரிகாஸ்ரமம் ​செல்லும் வழியில் நடந்த சில அற்புதமான வியக்க ​வைக்கும் நிகழ்ச்சிகள் ந​டை​பெற்றன.
ஒரு சமயம் ஈஸ்வர​தேவன் என்ற மன்னன் அவ்வழியாக ​சென்று ​கொண்டிருந்த வழி​போக்கர்க​ளை எல்லாம் வழிமறித்து, மண்​ணைத் ​தோண்டி எடுக்குமாறு கட்ட​ளையிட்டுக்​கொண்டிருந்தான். அவ்வ​மையம் ஸ்ரீமதாச்சார்யர் தம் சீடர்களுடன் அவ்வழி​யே ​செல்ல​வேண்டியதாயிற்று.  எல்​லோ​ரையும் ​போல​வே, ஸ்ரீமதாச்சார்ய​ரையும் நி​னைத்து, அம்மன்னன், மண்​ணைத் ​தோண்ட​வேண்டும் எனக் கட்ட​ளையிட்டான்.  அதற்கு ஸ்ரீமதாச்சார்யர் தாங்கள் சன்யாசிகளா​கையால் தமக்கு அனுபவம் இல்​லையா​கையால் அம்மண்​ணை​யே எவ்வாறு ​தோண்ட ​வேண்டும் என்று ​செய்துகாட்டுமாறுக் கூற, அம்மன்னன் ஒப்புக்​கொண்டு ​தோண்ட ஆரம்பித்தான், ஆச்சார்யரின் மஹாசக்தியினால் கட்டுண்ட அம்மன்னன், ஆச்சார்யரும், சீடர்களும் ​வெகுதூரம் ​சென்றபின்பும் ​தோண்டும் ​செய​லை நிறுத்தாமல் ​செய்து​கொண்​டே இருந்தது அங்கிருந்​தோ​ரை வியக்கச் ​செய்தது.
ஒரு சமயம், டில்லி​யை ஆட்சி ​செய்த பால்பன் என்ற மன்னன் தன் எதிரிகளின் மீது பயம் ​கொண்டு, எதிரிகள் கங்​கை நதி​யைக் கடக்கக் கூடாது என்பதற்காக, படகுகள் ​செல்வ​தை த​டை​செய்தான்.  அச்சமயம், ஆச்சார்யர் தம் சீடர்களுடன் கங்​கை​யைக் கடந்து அக்க​ரைக்குச் ​செல்ல ​வேண்டியதாயிருந்தது.  தம் சீடர்கள்   க​ரை​யைத் தாண்ட முயற்சிக்க ​வேண்டாம் எனக் கூறிய​தை அலட்சியம் ​செய்து, ஒரு சீட​ரை தம்​மை பிடிக்கச் ​சொல்லி, அவருக்கு பின் ஒவ்​வொருவராகப் பிடித்துக்​கொள்ள, கடக்க இயலாத கங்​கை​யை தம் சீடர்களுடன் எளிதாகக் கடந்து ​சென்றார். அவ்வ​மையம் க​ரை​யைச் சுற்றியிருந்த காவல்படை வீரர்கள், ஆச்சார்யர் தன் சில சீடர்களுடன் க​ரை​யைக் கடந்து வருவ​தைக் கண்டு, அவர்க​ளை எதிரிக​லென்​றெண்ணி, தங்களு​டைய இ​டைவா​ளைக் ​கையி​லேந்தி, “நில்லுங்கள்என்றும் ​“கொல்லுங்கள்என்றும் கூக்குரலிட்டு அருகில் ஓடி வந்த​தைக் கண்ட ஆச்சார்யர், “நீங்கள் அதிகம்​பேர் உள்ளீர்கள், நாங்க​ளோ சில​ரே உள்​ளோம்.  என​வே நீங்கள் பயப்பட​வேண்டாம்.  நாங்கள் உங்கள் மன்ன​னை ​நேசக்கரத்துடன் சந்திக்க விரும்புகி​றோம் என்று அவர்கள் ​பேசும் துருக்கிய ​மொழியில் ​பேசினார்.  ஆசார்யரின் ​மொழி​யைக் ​கேட்ட அவ்வீரங்கள் பாம்பு மகுடிக்கு மயங்குவது​போல் மயங்கி ​செய்வதறியாது அப்படி​யே நின்றுவிட்டனர்.  இந்நிகழ்வுக​ளை அரண்ம​​னை ​மேல்மாடியிலிருந்து பார்த்துக்​கொண்டிருந்த மன்னன், ஆச்சார்யரின் வியத்தகு ​செய​லையும், ​தோற்றத்​தையும் கண்டு கீழிறங்கி வந்தான். . (இன்னும் ​தொடரும்...........)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
       பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
       ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
       நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/            



No comments:

Post a Comment