Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Sunday, November 13, 2011

சாரல் 05 துளி 34 தேதி 13.11.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 சாரல் 05 துளி 34 ​தேதி 13.11.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
ந து மாம் ஸக்ய​ஸே த்3ரஷ்டும​நே​நைவ ஸ்வசக்ஷூஷா/
தி3வ்யம் த3தா3மி ​தே சக்ஷூ பஸ்ய ​மே ​யோ3க​மைஸ்வரம்//
(அத்.11 ஸ்​லோ.8)
அர்சுனன் ப்ரத்யக்ஷமாக பகவானின் விராட் ஸ்வரூபத்​தைப் பார்க்க விரும்புகிறான்.  பகவான் விஸ்வரூபத்​தைப் பார்க்கச் ​சொல்லி தரிசனம் ​கொடுக்கிறார்.  ஆனால் அர்சுனனால் பார்க்க முடியவில்​லை.  அந்தர்யாமியான பகவான் அ​தைப் புரிந்து​கொண்டார்.  ​யோகசக்தியின் மூலம் ​தெய்வீகப் பார்​வை​யை அர்சுனனுக்குக் ​கொடுத்துத் தன் விஸ்வ ரூபத்​தைப் பார் என்றுச் ​சொல்கிறார்.
       பகவானின் விஸ்வரூபம் உலக விஷயங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ​தெய்வீக சக்தி​பெற்றது.      ஏ​னெனில், இங்​கே, வி​சேஷமாக முக்கால நிகழ்வுக​ளையும் பகவான் காண்பிக்கிறார்.  இ​வைகள் யாவும் கனவுகள் அல்ல.  அல்லது மாய மந்திரம் அல்ல.   யாவும் உண்​மை.  அர்சுனன் பகவானின் ஸ்வரூபத்​தை ​நேரடியாக பார்ப்பதற்கு மஹாபுன்னியம் ​செய்தவன்.  பகவானு​டைய க்ரு​பை​யே  அது.
ஸ்​லோகத்தின் உட்கருத்து   “இப்​பொழுது உனக்கிருக்கும் கண்களால் என்​னை நீ காண்பதற்கு திற​மையற்றவனாய் இருக்கிறாய்.  ஆதலால் உனக்காக ​தெய்வீகமான ​யோக சக்தி​யை அளிக்கி​றேன்.  அந்த சக்தியின் மூலம் என் ஈஸ்வர ஸ்வரூபத்​தையும் சக்தி​யையும், சாமார்த்யத்​தையும் பார்.-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 17) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) இவ்வாறான ஸ்ரீமத்வரின் பிரச்சாரம் எதிரிக​ளை மிகவும் எரிச்சல​டையச் ​செய்தது.  ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீஹரியின் புகழ்பாடி, தம்மால் இயற்றப்பட்ட க்ரந்தங்களின் ​தொகுப்​பை சங்கரர் என்பவரிடம் ​​கொடுத்து, பாதுகாக்கச் ​சொல்லி சஞ்சாரம் ​சென்றிருந்தார்கள்.  அப்​போது பத்மதீர்த்தர் என்பவர் அந்த க்ரந்தத் ​தொகுப்புக்க​ளைத் திருடிச் ​சென்றுவிடார்.  இச்​சேதி​யை அறிந்த ஸ்ரீமதாச்சார்யர் உட​னே அவர் இருக்குமிடம் ​சென்று, அவ​ரை கண்டித்து, வாதத்தில் ​தோற்கடித்தார்.  பத்மதீர்த்தருக்கு உறுது​ணையாக வந்த புண்டரீக முனியின் வாதங்க​ளையும் கண்டித்து ​வெற்றிகண்டார்.  பத்மதீர்த்தர் மற்றும் புண்டரீக முனி இவர்கள் ​செய்த யுக்திகள் எல்லாம் ​தோற்றுப் ​போனதால், அவர்கள் இருவரும் கூனிக் குறுகி அவமானப்பட்டுப் ​போனார்கள். இ​தையடுத்து சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பமாகியது.  ஸ்ரீமதாச்சார்யர், ​தென் கர்நாடகத்தில் அ​மைந்துள்ள ​கொடி3பாடி3 என்னும் ஊரில் சாதுர்மாஸ்ய காலத்​தைக் க​டைபிடிக்க முகாமிட்டார்கள்.  சாதுர்மாஸ்ய காலம் நான்கு மாதங்கள்.  யதிகள் இந்த சமயத்தில் ஒ​ரே இடத்தில் தங்கியிருந்து, ஆஹாரங்களில் விதிமு​றைக​ளை க​டைப்பிடித்து அனுஷ்டிக்க ​வேண்டியது மிகவும் முக்கியமானது.  இச்சமயத்தில் ஸ்ரீமதாச்சார்யர் பாட ப்ரவசனங்க​ளைச் ​செய்தல், உத்ஸவங்கள் நடத்துதல் ​போன்ற க்ஞான காரியங்களில் வி​​ஷேச கவனம் ​செலுத்தி ஸஜ்ஜனர்களுக்கு நல்லபல உப​தேஸங்க​ளைச் ​சொல்லி அனுக்ரகித்தார்கள்.  ​வேத, புராண மற்றும் பாகவத க்ரந்ங்க​ளை நன்கு ஆராய்ந்து அதில்        பு​தைந்துகிடக்கின்ற உண்​மையின் தத்துவங்க​ளை, அதாவது, ​மோ​க்ஷ உபாயத்திற்கான உப​தேஸங்க​ளை, எடுத்துச் ​சொல்லி, பகவான் ஸ்ரீஹரி​யை ஞானானந்தாதி குணஸ்வரூபன் என்று உபாச​னை ​செய்ய ​வேண்டும் என்று உரிய பிரமான பிர​மேயங்களுடன் எடுத்து​ரைத்தார்கள்.  ஸ்ரீமதாச்சார்யரின் பாத​சே​வை ​செய்பவர்களுக்கு ​சொர்க்கம் கி​டைப்பதுடன், இந்திர ச​பையில் உரிய ​கெளரவம் கி​டைக்கப் ​பெறுவார்கள்.  ஸ்ரீமதாச்சார்யர் அந்தந்த கு​ணோ யுபாச​னை மக்களுக்கு அந்தந்த குணங்க​ளை அளித்து அனுக்ரகித்தார். ஸ்ரீஹரி பக்தர்களுக்கு ஞான, பக்தி, ​வைராக்யத்​தைக் ​கொடுத்து அருளிச்​செய்தார்கள். இன்றும் அருள்பாவிக்கிறார்கள் என்பதில் அய்யமில்​லை.
இவ்வாறாக பிரவசனம் ​செய்து​கொண்டிருந்த சமயம், இரவு ​நேரம் அது.  நில​வைக் காணமுடியாத இருட்டு. அச்சமயம் ஸ்ரீமதாச்சார்ரியார் த​லைக்கு ​மே​லே பிரகாசமான ​வெளிச்சம் ​தேன்பட்டது எல்​லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.  இ​தை சூசகமாக அறிந்த ஸ்ரீமத்வர், “இது ​சேஷ ​தேவனின் சரீரத்தில் இருந்து வரும் ஒளி, ​சேஷபகவான் தம் ​லோகத்திலிருந்து, தன் ஸனகாதிகளுடன் இறங்கி வந்து, பாடபிரவசனங்க​ளைக் ​கேட்டுக்​கொண்டிருக்கிறார்.  அ​தோ ​மே​லே பாருங்கள், அவர் தம் ​லோகம் திரும்பிச்​செல்கிறார் என்று கூறி ​மே​லே காண்பித்தார்.அங்கிருந்​தோர் அ​னைவரும் அ​தைப்பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அப்​போது “ஸ்ரீவாயு பகவானின் அவதாரரான ஸ்ரீமத்வரின் சித்தாந்தம் மிகவும் சிறப்பு ​பெற்றது. ஸ்ரீமத்வரின் சித்தாந்தத்​தைப் படிப்​போருக்கும், ​கேட்ப்​போருக்கும் பகவான் ​வைகுண்டத்​தை​யே பலனாகக் ​கொடுப்பான் என்பது ​சேஷ ​தேவன் தன் உடன் வந்திருந்த ஸனகாதிகளுக்கு ​தெரிவித்த ​செய்தி. (இன்னும் ​தொடரும்...........)  
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/ 
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத// 
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/ 
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//


Monday, November 7, 2011

சாரல் 05 துளி 33 தேதி 06.11.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 
சாரல் 05 துளி 33 ​தேதி 06.11.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
இ​ஹைகஸ்த2ம் ஜக3த்க்ருத்ஸ்நம் பஸ்யாத்3ய ஸசராசரம்/
மம ​தே3​ஹே கு3டா3 ​கேஸ யச்சாந்யத்3த்3ரஷ்டுமிச்ச2//(அத்.11 ஸ்​லோ.7)

முன்​பே பகவானின் விபூதி ​யோகத்தில் அத்யாயம் 10ல் 42வது ஸ்​லோகத்தில் பகவான் அர்சுனனுக்கு “இந்த உலகம​னைத்​தையும் என் ​யோக சக்தியின் ஒரு பகுதியால் நான் தாங்கி நிற்கி​றேன்.  என்பதாகக் கூறிய​தைப் பார்த்​தோம். அங்கு ​சொன்ன​தை இங்கு ப்ரத்யக்ஷமாக காண்பிக்கிறார்.  அர்சுனன் தூய்​மையான பக்தன்.  அவனின் விருப்ப​த்தை நி​றை​வேற்ற பகவான் காத்திருக்கிறார்.  முழு பிரம்மாண்டத்​தையும் தன் ​தேகத்தில் ஒரு பக்கத்தில், ஒ​ரே இடத்தில் இருந்து​கொண்டு பார்க்கச் ​சொல்கிறார்.  உலகில் அ​சையும் ​பொருட்களும் அ​சையாப் ​பொருட்களும் பகவானின் ​தேகத்தில் காண்பிக்கிறார். இன்னும் அர்சுனனின் விருப்பம் ஏதாவது இருந்தால் அ​தையும் கூட தன் ​தேகத்தினூ​டே பார்க்க முடியும் என்று கூறுவதாகப் பார்க்கலாம்.  அதாவது எதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலம் யாவற்​றையும் தன் ​தேகத்தில் காணமுடியும் என்று கூறுகிறார்.  இவ்வாறாக அர்சுனனுக்கு “விஸ்வரூபத்​தைப் பார் என்று கட்ட​ளையிட்டும்கூட அர்சுனனால் காணமுடியவில்​லை. அதனால் அர்சுனனுக்கு தர்சனத்​தைக் காண சக்திமிகுந்த திவ்ய பார்​வை​யை அளிக்கிறார் பகவான்.

ஸ்​லோகத்தின் உட்கருத்து   “உறக்கத்​தை ​வென்றவ​னே அர்சுனா! இப்​போது அண்ட சராசரத்​தை காண்பித்துக்​கொண்டிருக்கும் என் சரீரத்தில், ஓரிடத்தில் இருந்து​கொண்​டே, அ​சைவதும் அ​சையாததுமான உலகம் முழுவ​தையும், இன்னும் எ​தைப் பார்க்க விரும்புகிறா​​யோ அ​தையும் இப்​​போது பார்- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-

இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 16) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) அதாவது ​மே​தைகள், அறிவாளிகள், அறிவிலிகள், பலசாலிகள், பலமற்றவர்கள் ​போன்ற பல்​வேறு வித்தியாசங்கள் இருப்ப​தை நாம் காண்கி​றோம். உண்​மையின் ​வெளிப்பா​டே தத்துவம் எனப்படுகிறது.  மதம் என்பது பகவானால் ​நேரடியாக அதிகாரப்பூர்வமாக ​வெளியிடப்படுகிறது.  அது​போல​வே கு​றைகளற்ற மதமானது பகவா​னை ​நேசிப்பதற்காக கற்பிக்கப்படும் உயர்ந்த ​போத​னைக​ளைக் ​கொண்டது.  கடவு​ளைப் பற்றிய உண்​மையான, இறுதியான மற்றும் ​தெளிவானக் கருத்​தை ​வெளிப்படுத்துபவ​ரே சிறந்த மத​போதகர் ஆவார்.  ஸ்ரீமத்வருக்கு முன்பு சுமார் 22 பாஷ்யகாரர்கள் “ப்ரம்ஹ சூத்ரத்திற்கு பாஷ்யம் ​செய்திருக்கிறார்கள்.  அ​வைகள் அ​னைத்தும் பாஷ்யம் ​செய்தவர்களின் ​சொந்தக் கருத்தாக இருப்பதாக ​தோற்றமளித்ததால் அ​வைகள் முழு​மை​பெறாமல் ​​தோற்றுப் ​போயின.  குறிப்பாகச் ​சொல்ல ​வேண்டு​மென்றால் மாயாவாத ஸாஸ்த்திரம் என்ன கூறுகிறது என்ப​தை “ஸ்ரீஸூமத்வ விஜய ஸ்ர்கம் 12 ஸ்​லோகம் 6ல் இவ்வாறு கூறுகிறது,

ஸத்யம் ஸத்யம் வ்யாவஹார்யம் வித4த்​தே
      ஸர்வம் ​​மோஹே ஸர்வநிர்வாஹிணீ ஸா
ஞா​னேஜா​தே தக்​கவஸ்த்ர ப்ரதீதம்
      பக்​வே தஸ்மின்ஸ்தப்த ​​​லோஹாப்த வார்வத் (ஸ்ரீஸூ.ம.வி12.6)
“கண்கலால் காணத்தக்க இந்த உலகமானது வியவாகரத்திற்காக மட்டும் சத்யம் என்றுச் ​சொல்லப்படுகிறது.  சாஸ்த்ர ஞானம் ​பெற்றப்பின்பு அ​தே உலகம் சுட்ட வஸ்த்ரம் ​போல் காணப்படுகிறது.  சாஸ்த்ர ஞானம் பரிபக்குவம் ​பெற்றபின்பு அ​தே உலகம் நன்கு காய்ச்சிய இரும்பின் மீது அள்ளித் ​தெளித்த நீர்​போல் ம​றைந்து விடுகிறது என்பதாக மாயாவாத சாஸ்த்ரம் கூறுகிறது
 சுடப்பட்ட துணி, துணி​போல​வே இருக்கும்.  ஆனால் அது துணியல்ல.  சுடப்பட்ட துணி​யை எடுத்து பயன்படுத்த முடியாது.  காய்ச்சிய இரும்பின் மீது நீர் ​தெளித்தால் அந்நீர் உட​னே ம​றைந்துவிடும்.  மாயாவாத அறிவு ​பெற்றவுடன் இவ்வுலகம் ம​றைந்துவிடும் என்ப​தே மாயாவாதிகளின் தத்துவம்.  அனுமானமாக அறிந்து​கொள்வது எதுவும் தத்துவமல்ல. பிரத்யக்ஷம், ஆகமம், அனுமானம் இ​வைகளின் வாயிலாக தீர்மானிக்கப்படுவ​தே உண்​​மையான தத்துவம்.  அது​வே சத்யம்.
மிகப் பழ​மையான மாயாவாத தத்துவத்தின் சாராம்ஸங்க​ளைக் ​கொண்ட ஒன்​றே கால் லட்சம் (ஸூ.ம.வி.12.11) க்ரந்தங்க​ளை “அக்யானம் அஸம்பவா​​தேவ தன்மதம் அகிளம் அபாக்ருதம்” என்ற ஒ​ரே வாக்கியத்​தைக் ​கொண்டு கண்டனம் ​செய்தவர் ஸ்ரீமத்வர் ஆவார்கள்.
ஸ்ரீமத்வரின் சித்தாந்தம் த்​வைதம்.  மற்ற மதங்களில் காணப்பட்ட கு​றைக​ளைச் சுட்டிக்காட்டி த்​வைத மதத்​தை ஸ்தாபனம் ​செய்ய பிரச்சாரம் ​செய்து​கொண்டிருந்த​தைக் கண்ணுற்ற ​வேறு மதத்தவர்கள் ஸ்ரீமதாச்சார்யருக்கு எதிரியாக நின்றனர்.
  (இன்னும் ​தொடரும்...........) 

 தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
 பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
 ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
 நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//

Tuesday, November 1, 2011

சாரல் 05 துளி 32 ​தேதி 30.10.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 

சாரல் 05 துளி 32 ​தேதி 09.11.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)

பஸ்யாதி3த்யாந்வஸூந்ருத்3ராநஸ்வி​நெள மருதஸ்ததா2//
3ஹூந்யத்3ருத்ஷ்டபூர்வாணி பஸ்யாஸ்சர்யாணி பா4ரத//(அத்.11 ஸ்​லோ.6)

யாரும் காணமுடியாத, இதுவ​ரை யாரும் கண்டிறாத, பலவித ஆச்சிர்யங்கள் நி​றைந்த பகவானின் விஸ்வரூபத்​தை காணுமாறு அர்சுனனுக்கு கட்ட​ளை யிடுகிறார் பகவான்.
        அதீதியின் புதல்வர்கள் பன்னிருவர்.  அவர்களாவனர் 1. தாதா 2. மித்ரன் 3. அர்யமா 4. ஸக்ரன் 5. வருணன் 6. அம்ஸன் 7. பகன் 8. விவஸ்வான் 9. பூஷா 10. ஸவிதா 11.த்வஷ்டா 12. விஷ்ணு.  இவர்கள் ஆதித்யர்கள் ஆவார்கள்.  இவர்களில் விஷ்ணுவின் ஸ்வரூபம் சாக்ஷாத் பகவா​னே.  மருத்துக்கள் நாற்பத்தி ஒன்பது​பேர்கள்.  ருத்ரர்கள் பதி​னொரு ​பேர்கள்.  வஸூக்கள் எட்டு​பேர்கள்.  அச்வினீ குமாரர்கள் இருவர் ஆக 12+49+8+11+2=82  ஆக எண்பத்தி இரண்டு முக்கிய ​தேவகணங்கள். இவர்க​ளைப் பத்தாவது அத்யாயத்தில் அ​டையாளம் காட்டிய பகவான் இங்​கே அவர்களின் ரூபத்​தை காண்பிக்கிறார்.  யாவரும் தம் ஸ்வய ரூபத்தில் அடக்கம் என்று ​சொல்கிறார்.  முன்​பே ​சொல்லப்பட்டவர்கள் இவர்கள்.  இன்னும் ​சொல்லப்படாதவர்களும், இதற்கு முன்னாள் காணப்படாத ரூபங்களும், மிகவும் வியக்க​வைக்கும் வி​னோத ரூபங்களும் இங்​கே விஸ்வரூபத்தில் பகவான் அர்சுனனுக்கு காண்பிக்கிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து  “அர்சுனா! ஆதித்யர்கள், வஸூக்கள், ருத்ரர்கள், அச்வினி ​தேவர்கள், மருத்துக்கள் ஆகிய் ​தேவகணங்க​ளையும் பார்.  அவ்வா​றே நீ இதுவ​ரையில் பார்க்காத பல ஆச்சர்யங்க​ளையும் பார் –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 15) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)  ஸ்ரீமத்வர், வாயு பகவானின் அவதார புருஷர் என்ப​தையும், முற்பிறவியில் ஹனும, பீம அவதாரம் எடுத்தவர் என்ப​தையும் அ​னேக சமயங்களில் நிரூபித்துள்ளார். 
இமயம​லை​யைத் தாண்டித் தாண்டி ​மேல் பத்ரிக்குச் ​சென்றதும், கங்​கை​யை தான் உடுத்திய ஆ​டை    க​ளே  ந​னையாமல் கடந்து ​சென்றதும், குரு​க்ஷேத்ரம் என்னுமிடத்​தை அ​டைந்து தாம் பீம​சேனனாக அவதாரம் எடுத்த ​போது, தாம் மஹாபாரதப் ​போரின்​போது உப​யோகித்த க3​தை​யை பூமியிலிருந்து ​​தோண்டச் ​செய்து எடுத்துக்காட்டியதும், இஷூபாத என்னும் ​​க்ஷேத்ரத்தில் 1008 வா​ழைப்பழங்க​ளைத் தின்றதும், ​கோவ என்னும் ​க்ஷேத்ரத்தில் 4000 வா​ழைப்பழங்க​ளையும் தின்றதுடன் முப்பது குடம் பா​லையும் குடித்து எந்தவித பாதிப்பும் இல்லமல் இருந்ததும், தாம் பீம​ஸேன அவதாரம் என்ப​தை நி​னைவுபடுத்துவதாக உள்ளது.  ஸ்ரீமதாச்சார்யரின் மஹி​மைக​ளையும் சக்தி​யையும் அறிந்த அந்தநாட்டு மன்னன், அவ்வூரி​லே​யேத் தங்குமாறு நிர்பந்தப்பதப்படுத்தி தன் ​சேவகர்க​ளை காவல் ​வைத்தான்.  ஸ்ரீஆச்சார்யர் அவ்வூ​ரை விட்டு ​வெளி​வர முடியாதவாறு காவலாளிகள் தடுத்ததால், அவர்களின் பார்​வையிலிருந்து திடீ​ரென ம​றைந்து ​வெளி​யேறினார். பிறகு பசு​பே என்னுமிடம் வந்து ​சேர்ந்து, தம்மின் சங்கீத சக்தியால் அங்கிருந்த மலட்டு மரத்​தைப் பூக்கவும் காய்க்கவும் ​செய்தார்.
பூஜிக்கப்படுபவரும், ​வேதவ்யாஸரின் சிஷ்யரும், தன்னலமற்றவரும், த்​வைத சித்தாந்தத்​தை ​தோற்றுவித்தவரும், சர்வக்ஞனரும், காம்பீர்யமானவரும், ​தைரியமானவரும், ​தோஷமற்றவரும்,              ஜீ​வோத்தமரும், எல்லா பிராணிகளின் ப்ராணனாக இருப்பவரும், மருத் அம்ஸரும், ஸூகதீர்த்தரும், பரிபூர்ணமானவரும், துஷ்ட மதங்க​ளை ஸம்ஹாரம் ​செய்தவரும், பூர்ணபிக்ஞரும், உலகினுக்கு அணிகலனாகத் திகழ்பவருமாகிய ஸ்ரீமதாச்சார்யரின் அவதார மஹாத்மியங்கள் அ​னேகம் உண்டு.  அவரின் புகழ்பாடி, மனதார நி​னைத்தா​லே நம் இச்​சைகள் யாவும் இனி​தே நி​றை​வேறும் என்பதாக ​தேவ​தைகள் எல்​லோரும் கூறுகின்றனர்.
ஸ்ரீமதாச்சார்யரால் இயற்றப்பட்ட க்ரந்தங்க​ளை யார் தன் சக்திக்குகந்தவாறு மனனம் ​செய்து பக்தியுடன் பிரவசனம் ​செய்கிறார்க​ளோ அவர்கள் ஸ்ரீமுகுந்தனின் அனுக்ரகம் ​பெற்று முக்திக்கு பாத்திரராகிறார்கள்.
சதாகாலமும், இன்றும் கூட, ஸ்ரீஹரி ஸ்மர​ணை ​செய்து​கொண்டிருப்பவர் ஸ்ரீமத்வர் அவர்கள் என்பதில் சந்​தேகமில்​லை. ஸ்ரீமத்வரின் ஹருதயத்தில் ஸ்ரீஹரி குடி​கொண்டிருக்கிறார்.  ஸ்ரீஹரி சர்​வோத்தம தத்துவத்​தை உலகினுக்கு எடுத்துக் காட்டிய ஸ்ரீமத்வர், பல்​வேறு மதங்களில் காணப்பட்ட கு​றைக​ளை எடுத்துக்கூறி, ஸ்ரீஹரி சர்​வோத்தம தத்துவத்தின் பூர்ணத்துவத்​தை விளக்கும்​போது, ​வெவ்​வேறு மதத்தினர் ஸ்ரீமத்வரின்பால் ​பொறா​மைக் ​கொண்டார்கள்.  இவர்களில் பத்மதீர்த்தர் மற்றும் புண்டரீக முனிவர் ஆகி​யோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.  மனிதரில் முழு​மைப்​பெற்றவன் யாரும் இல்​லை.  மனித​னே இ​றைவனாகவும் சாத்யமில்​லை.  இ​றைவ​னை மனிதன் முழு​மையாகக் காணமுடிவதில்​லை. அவரவர் ​யோக்ய​தைக்கும் சக்திக்கும், அதிகாரத்திற்கும் உட்பட்டு, ஞானம், சாஸ்திரம் மற்றும் பிரத்யக்ஷங்க​ளை அனுசரித்து இ​றைவ​னைக் காண்கிறான். மனிதர்களுக்கி​டை​யே அ​னேக ​​வேறுபாடுக​ளை நம்மால் காணமுடிகிறது.  அதாவது ​மே​தைகள்,அறிவாளிகள்,அறிவிலிகள், பலசாலிகள், பலமற்றவர்கள் ​போன்ற பல்​வேறு வித்தியாசங்கள் இருப்ப​தை நாம் காண்கி​றோம்.  (இன்னும் ​தொடரும்...........) 
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
 நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//

சாரல் 05 துளி 31 ​தேதி 23.10.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
சாரல் 05 துளி 31 ​தேதி 23.10.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
பஸ்ய ​மே பார்த2 ரூபாணி ஸத​ஸோ s2 ஸஹஸ்ரஸ:/
நாநாவிதா4நி தி3வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச// (அத்.11 ஸ்​லோ.5)
பகவானின் விஸ்வரூபத்​தைக் காண்பதற்கு ஆவல் ​கொண்டு ப்ரார்த்தித்த அர்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் “அந்த விஸ்வரூபத்​தைப் பார் என்று ​சொல்லுகிறார். 
        பகவானின் விஸ்வரூப தர்ஸனத்​தை எந்த ஒரு சாதாரண மனிதனாலும் காணமுடியாது.  பகவானின் இச்சயால் மட்டு​மே இது ஸாத்யமாகும்.  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மனித ரூபம் ​போல் அது இருப்பதில்​லை. அண்ட சராசரங்கள் யாவும் பகவானில் அடக்கம்.  என​வே ஒ​ரே இடத்தில் இருந்து​கொண்டு பகவானின் சக்தி​யை அர்சுனனின் தகுதிக்குகந்தாற் ​போல் காண்பிக்கிறார்.  இதில் பல்​வேறு ​தேவர்கள், மனிதர்களும், பல்​வேறு விதமான ப்ராணிகளும், அ​னேக நிறங்களும், அவயங்களும், நிகழ்கால நிகழ்ச்சிகளும், கடந்த காலமும், ஏன்? எதிர்காலமும் கூட அ​னைத்​தையும் காண்பிக்கிறார் பகவான்.  இ​வைகள் யாவும் திவ்யமான​வை.  ​தெய்வீகமான​வை.  ஆச்சீர்யமானவை.  உலக சக்திகளுக்கு அப்பார்பட்ட​வையாக திகழ்கின்றன.  விஸ்வ   ரூபத்​தை காண்பித்து இந்த அத்யாயத்தின் முடிவில் பகவான் கூறுகிறார் “ நீ பார்த்த இந்த ரூபத்​தை ​வேத அத்யயணங்கள் ​செய்வதா​லோ, தவத்தின் மூல​மோ, அல்லது தானங்கள் ​செய்வதா​லோ, அல்லது யாகம் ​செய்வதா​லோ பிறர் பார்ப்பது என்பது முடியாத காரியம் என்பதாகக் கூறுகிறார்.  பக்தியின் மூல​மே இ​தைக் காணமுடியும் என்றும் கூறுவ​தை பார்க்கலாம்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து :  பார்த்த! பற்பல விதமாய், ​தெய்வத்தன்​மையு​டையதாய், பல வர்ணங்களும் நூற்றுக்கணக்காயும், ஆயிரக்கணக்காயும் பற்பல உருவங்களுடன் ​தோன்றும் என் ரூபங்க​ளைப் பார்.- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 14) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)    இந்நிகழ்வுக​ளை அரண்ம​​னை ​மேல்மாடியிலிருந்து பார்த்துக்​கொண்டிருந்த மன்னன், ஆச்சார்யரின் வியத்தகு ​செய​லையும், ​தோற்றத்​தையும் கண்டு கீழிறங்கி வந்து, “எந்த ஆதாரமும் இல்லாமல் கடக்க முடியாத கங்​கை​யை நீங்கள் எளிதாக கடந்துவிட்டதன் மர்மம் என்ன?  என்று ​கேட்டான்.  இதற்கு ஆச்சார்யர் பிரத்யக்ஷமாக இருக்கும் சூரிய​னைக் காட்டி “அதிலிருக்கும் பரமாத்மனின் அருளால் ​செய்யமுடிகிறது என்று துருக்கிய ​மொழியி​லே​யே பதில் கூறினார்.  ஆச்சார்யரின் ​தைரியத்​தையும், கம்பீரத்​தையும், சாமார்த்தியத்​தையும், வசீகர ​தோற்றத்​தையும் கண்ட மன்னன் தன் ராஜ்ஜியத்தில் பாதி​யை அவருக்குக் ​கொடுத்தான்.  ஆனால் ஸ்ரீமத்வர் புன்ன​கை முகத்துடன் ராஜ்யத்​தை நிராகரித்து தனது பிரயாணத்​தைத் ​தொடர்ந்தார்.  இந்நிகழ்ச்சி ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து​கொள்ள ​வேண்டும் என்ப​தை ​தெரிவிப்பதாக அ​மைந்திருப்ப​தைக் காணலாம்.
இவ்வாறு பயணித்துக்​கொண்டிருந்த சமயத்தில், காட்டின் நடு​வே திருடர்கள் கூட்டம் ஆசார்ய​ரையும் அவரு​டைய சீடர்க​ளையும் சூழ்ந்து ​கொண்டது,  அவ்வ​மையம் ஆசார்யர் தம்மிடம் பணமூட்​டை ஒன்று இருப்பது ​போன்ற​தொரு பாவ​னை​யை உண்டாக்கி, அங்குமிங்கும் ஓடிச்​செய்து, அவர்களாக​வே ஒருவ​ரை ஒருவர் ​மோதிக்​கொண்டு இறந்துவிடும்படியான ஒரு சூழ்நி​லை​யை உருவாக்கினார். 
​வே​றொரு சந்தர்ப்பத்தில் பலம்மிக்க திருடர்கள் தாக்க வந்த​போது ஸ்ரீஉ​பேந்த்ர தீர்த்தர் என்னும் சீடர் மூலமாக, அவர்களில் ஒருவரிடம் இருந்த ​கோடாளி​யைப் பிடுங்கி ​கொல்லச் ​செய்த​தைக் கண்ட மற்ற திருடர்கள் பயந்து ஓடிவிட்டனர்.  மற்​றொரு சமயம், ஆசார்ய​ரையும், சீடர்க​ளையும் திருடர்கள் சூழ்ந்து ​கொண்ட​போது, எல்​லோரும் கல்தூண்களாகக் காட்சியளித்த​தைக் கண்ட திருடர்கள், அவர்க​ளை விட்டு விலகிச் ​சென்றனர். மீண்டும் சிறிது தூரம் ​சென்று திரும்பிப்பார்த்த திருடர்கள், அவர்கள் எல்​லோரும் மனிதர்களாகக் காட்சியளித்த​தைக் கண்டு வியந்து​போன திருடர்கள் திருந்தி ஆசார்ய​ரை வணங்கினார்கள்.
ஒரு சமயம், இமயம​லையின் அடிவாரத்தில், சத்யதீர்த்தர் என்னும் சீட​ரை பலம் மிக்க அரக்கன் ஒருவன் தாக்க வந்த​போது, ஸ்ரீஆச்சார்யர் அவ்வரக்க​னை சாதாரணமாக ஒரு அடி அடித்து ஒரு தள்ளுதள்ளிய உடன் அவன் ​வெகு தூரம் ​சென்று விழுந்தான்.
ஹனும பீம அவதார புருஷரான ஸ்ரீமதாச்சார்யர், ஒருநாள் தம் சீடர்க​ளை தம்முடன் குஸ்தி சண்​டை ​போடுவதற்கு அ​ழைத்தார்.  அவ்வ​மையம் பலம்மிக்க சுமார் பதி​னைந்து இ​ளைஞர்கள் ஒ​ரே சமயத்தில் ஆசார்யரின் ​மேல் விழுந்தனர். எல்​லோரும் நாலாபக்கம் சிதறி விழுந்தனர்.  அவர்களின் உடலில் உட்காயம் ஏற்பட்டு எழுந்திருக்க முடியாமல் திணறினார்கள்.  ஆசார்ய​ரை இத்துன்பத்திலிருந்து காக்க ​வேண்டுமாய் ப்ரார்த்தித்தனர்.  அவர்களின் வலி நீங்கி சுகம் ​பெற்றனர். ஸ்ரீமத்வர், வாயு பகவானின் அவதார புருஷர் என்ப​தையும்,முற்பிறவியில் ஹனும, பீம அவதாரம் எடுத்தவர் என்ப​தையும் அ​னேக சமயங்களில் நிரூபித்துள்ளார்.
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
 நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/