பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
சாரல் 05 துளி 33 தேதி 06.11.2011
கீதையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன யோகம் (11ம் அத்யாயம்)
இஹைகஸ்த2ம் ஜக3த்க்ருத்ஸ்நம் பஸ்யாத்3ய ஸசராசரம்/
மம தே3ஹே கு3டா3 கேஸ யச்சாந்யத்3த்3ரஷ்டுமிச்ச2ஹ//(அத்.11 ஸ்லோ.7)
முன்பே பகவானின் விபூதி யோகத்தில் அத்யாயம் 10ல் 42வது ஸ்லோகத்தில் பகவான் அர்சுனனுக்கு “இந்த உலகமனைத்தையும் என் யோக சக்தியின் ஒரு பகுதியால் நான் தாங்கி நிற்கிறேன்”. என்பதாகக் கூறியதைப் பார்த்தோம். அங்கு சொன்னதை இங்கு ப்ரத்யக்ஷமாக காண்பிக்கிறார். அர்சுனன் தூய்மையான பக்தன். அவனின் விருப்பத்தை நிறைவேற்ற பகவான் காத்திருக்கிறார். முழு பிரம்மாண்டத்தையும் தன் தேகத்தில் ஒரு பக்கத்தில், ஒரே இடத்தில் இருந்துகொண்டு பார்க்கச் சொல்கிறார். உலகில் அசையும் பொருட்களும் அசையாப் பொருட்களும் பகவானின் தேகத்தில் காண்பிக்கிறார். இன்னும் அர்சுனனின் விருப்பம் ஏதாவது இருந்தால் அதையும் கூட தன் தேகத்தினூடே பார்க்க முடியும் என்று கூறுவதாகப் பார்க்கலாம். அதாவது எதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலம் யாவற்றையும் தன் தேகத்தில் காணமுடியும் என்று கூறுகிறார். இவ்வாறாக அர்சுனனுக்கு “விஸ்வரூபத்தைப் பார்” என்று கட்டளையிட்டும்கூட அர்சுனனால் காணமுடியவில்லை. அதனால் அர்சுனனுக்கு தர்சனத்தைக் காண சக்திமிகுந்த திவ்ய பார்வையை அளிக்கிறார் பகவான்.
ஸ்லோகத்தின் உட்கருத்து “உறக்கத்தை வென்றவனே அர்சுனா! இப்போது அண்ட சராசரத்தை காண்பித்துக்கொண்டிருக்கும் என் சரீரத்தில், ஓரிடத்தில் இருந்துகொண்டே, அசைவதும் அசையாததுமான உலகம் முழுவதையும், இன்னும் எதைப் பார்க்க விரும்புகிறாயோ அதையும் இப்போது பார்”- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி: ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 16) (படைப்பு: ஆதிமைந்தன்) அதாவது மேதைகள், அறிவாளிகள், அறிவிலிகள், பலசாலிகள், பலமற்றவர்கள் போன்ற பல்வேறு வித்தியாசங்கள் இருப்பதை நாம் காண்கிறோம். உண்மையின் வெளிப்பாடே தத்துவம் எனப்படுகிறது. மதம் என்பது பகவானால் நேரடியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. அதுபோலவே குறைகளற்ற மதமானது பகவானை நேசிப்பதற்காக கற்பிக்கப்படும் உயர்ந்த போதனைகளைக் கொண்டது. கடவுளைப் பற்றிய உண்மையான, இறுதியான மற்றும் தெளிவானக் கருத்தை வெளிப்படுத்துபவரே சிறந்த மதபோதகர் ஆவார். ஸ்ரீமத்வருக்கு முன்பு சுமார் 22 பாஷ்யகாரர்கள் “ப்ரம்ஹ சூத்ரத்திற்கு” பாஷ்யம் செய்திருக்கிறார்கள். அவைகள் அனைத்தும் பாஷ்யம் செய்தவர்களின் சொந்தக் கருத்தாக இருப்பதாக தோற்றமளித்ததால் அவைகள் முழுமைபெறாமல் தோற்றுப் போயின. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் மாயாவாத ஸாஸ்த்திரம் என்ன கூறுகிறது என்பதை “ஸ்ரீஸூமத்வ விஜய” ஸ்ர்கம் 12 ஸ்லோகம் 6ல் இவ்வாறு கூறுகிறது,
ஸத்யம் ஸத்யம் வ்யாவஹார்யம் வித4த்தே
ஸர்வம் மோஹே ஸர்வநிர்வாஹிணீ ஸா
ஞானேஜாதே தக்கவஸ்த்ர ப்ரதீதம்
பக்வே தஸ்மின்ஸ்தப்த லோஹாப்த வார்வத் (ஸ்ரீஸூ.ம.வி12.6)
“கண்கலால் காணத்தக்க இந்த உலகமானது வியவாகரத்திற்காக மட்டும் சத்யம் என்றுச் சொல்லப்படுகிறது. சாஸ்த்ர ஞானம் பெற்றப்பின்பு அதே உலகம் சுட்ட வஸ்த்ரம் போல் காணப்படுகிறது. சாஸ்த்ர ஞானம் பரிபக்குவம் பெற்றபின்பு அதே உலகம் நன்கு காய்ச்சிய இரும்பின் மீது அள்ளித் தெளித்த நீர்போல் மறைந்து விடுகிறது என்பதாக மாயாவாத சாஸ்த்ரம் கூறுகிறது”
சுடப்பட்ட துணி, துணிபோலவே இருக்கும். ஆனால் அது துணியல்ல. சுடப்பட்ட துணியை எடுத்து பயன்படுத்த முடியாது. காய்ச்சிய இரும்பின் மீது நீர் தெளித்தால் அந்நீர் உடனே மறைந்துவிடும். மாயாவாத அறிவு பெற்றவுடன் இவ்வுலகம் மறைந்துவிடும் என்பதே மாயாவாதிகளின் தத்துவம். அனுமானமாக அறிந்துகொள்வது எதுவும் தத்துவமல்ல. பிரத்யக்ஷம், ஆகமம், அனுமானம் இவைகளின் வாயிலாக தீர்மானிக்கப்படுவதே உண்மையான தத்துவம். அதுவே சத்யம்.
மிகப் பழமையான மாயாவாத தத்துவத்தின் சாராம்ஸங்களைக் கொண்ட ஒன்றே கால் லட்சம் (ஸூ.ம.வி.12.11) க்ரந்தங்களை “அக்யானம் அஸம்பவாதேவ தன்மதம் அகிளம் அபாக்ருதம்” என்ற ஒரே வாக்கியத்தைக் கொண்டு கண்டனம் செய்தவர் ஸ்ரீமத்வர் ஆவார்கள்.
ஸ்ரீமத்வரின் சித்தாந்தம் த்வைதம். மற்ற மதங்களில் காணப்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டி த்வைத மதத்தை ஸ்தாபனம் செய்ய பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததைக் கண்ணுற்ற வேறு மதத்தவர்கள் ஸ்ரீமதாச்சார்யருக்கு எதிரியாக நின்றனர்.
(இன்னும் தொடரும்...........)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வதோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வதோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே//
No comments:
Post a Comment