Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Tuesday, November 1, 2011

சாரல் 05 துளி 32 ​தேதி 30.10.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 

சாரல் 05 துளி 32 ​தேதி 09.11.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)

பஸ்யாதி3த்யாந்வஸூந்ருத்3ராநஸ்வி​நெள மருதஸ்ததா2//
3ஹூந்யத்3ருத்ஷ்டபூர்வாணி பஸ்யாஸ்சர்யாணி பா4ரத//(அத்.11 ஸ்​லோ.6)

யாரும் காணமுடியாத, இதுவ​ரை யாரும் கண்டிறாத, பலவித ஆச்சிர்யங்கள் நி​றைந்த பகவானின் விஸ்வரூபத்​தை காணுமாறு அர்சுனனுக்கு கட்ட​ளை யிடுகிறார் பகவான்.
        அதீதியின் புதல்வர்கள் பன்னிருவர்.  அவர்களாவனர் 1. தாதா 2. மித்ரன் 3. அர்யமா 4. ஸக்ரன் 5. வருணன் 6. அம்ஸன் 7. பகன் 8. விவஸ்வான் 9. பூஷா 10. ஸவிதா 11.த்வஷ்டா 12. விஷ்ணு.  இவர்கள் ஆதித்யர்கள் ஆவார்கள்.  இவர்களில் விஷ்ணுவின் ஸ்வரூபம் சாக்ஷாத் பகவா​னே.  மருத்துக்கள் நாற்பத்தி ஒன்பது​பேர்கள்.  ருத்ரர்கள் பதி​னொரு ​பேர்கள்.  வஸூக்கள் எட்டு​பேர்கள்.  அச்வினீ குமாரர்கள் இருவர் ஆக 12+49+8+11+2=82  ஆக எண்பத்தி இரண்டு முக்கிய ​தேவகணங்கள். இவர்க​ளைப் பத்தாவது அத்யாயத்தில் அ​டையாளம் காட்டிய பகவான் இங்​கே அவர்களின் ரூபத்​தை காண்பிக்கிறார்.  யாவரும் தம் ஸ்வய ரூபத்தில் அடக்கம் என்று ​சொல்கிறார்.  முன்​பே ​சொல்லப்பட்டவர்கள் இவர்கள்.  இன்னும் ​சொல்லப்படாதவர்களும், இதற்கு முன்னாள் காணப்படாத ரூபங்களும், மிகவும் வியக்க​வைக்கும் வி​னோத ரூபங்களும் இங்​கே விஸ்வரூபத்தில் பகவான் அர்சுனனுக்கு காண்பிக்கிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து  “அர்சுனா! ஆதித்யர்கள், வஸூக்கள், ருத்ரர்கள், அச்வினி ​தேவர்கள், மருத்துக்கள் ஆகிய் ​தேவகணங்க​ளையும் பார்.  அவ்வா​றே நீ இதுவ​ரையில் பார்க்காத பல ஆச்சர்யங்க​ளையும் பார் –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 15) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)  ஸ்ரீமத்வர், வாயு பகவானின் அவதார புருஷர் என்ப​தையும், முற்பிறவியில் ஹனும, பீம அவதாரம் எடுத்தவர் என்ப​தையும் அ​னேக சமயங்களில் நிரூபித்துள்ளார். 
இமயம​லை​யைத் தாண்டித் தாண்டி ​மேல் பத்ரிக்குச் ​சென்றதும், கங்​கை​யை தான் உடுத்திய ஆ​டை    க​ளே  ந​னையாமல் கடந்து ​சென்றதும், குரு​க்ஷேத்ரம் என்னுமிடத்​தை அ​டைந்து தாம் பீம​சேனனாக அவதாரம் எடுத்த ​போது, தாம் மஹாபாரதப் ​போரின்​போது உப​யோகித்த க3​தை​யை பூமியிலிருந்து ​​தோண்டச் ​செய்து எடுத்துக்காட்டியதும், இஷூபாத என்னும் ​​க்ஷேத்ரத்தில் 1008 வா​ழைப்பழங்க​ளைத் தின்றதும், ​கோவ என்னும் ​க்ஷேத்ரத்தில் 4000 வா​ழைப்பழங்க​ளையும் தின்றதுடன் முப்பது குடம் பா​லையும் குடித்து எந்தவித பாதிப்பும் இல்லமல் இருந்ததும், தாம் பீம​ஸேன அவதாரம் என்ப​தை நி​னைவுபடுத்துவதாக உள்ளது.  ஸ்ரீமதாச்சார்யரின் மஹி​மைக​ளையும் சக்தி​யையும் அறிந்த அந்தநாட்டு மன்னன், அவ்வூரி​லே​யேத் தங்குமாறு நிர்பந்தப்பதப்படுத்தி தன் ​சேவகர்க​ளை காவல் ​வைத்தான்.  ஸ்ரீஆச்சார்யர் அவ்வூ​ரை விட்டு ​வெளி​வர முடியாதவாறு காவலாளிகள் தடுத்ததால், அவர்களின் பார்​வையிலிருந்து திடீ​ரென ம​றைந்து ​வெளி​யேறினார். பிறகு பசு​பே என்னுமிடம் வந்து ​சேர்ந்து, தம்மின் சங்கீத சக்தியால் அங்கிருந்த மலட்டு மரத்​தைப் பூக்கவும் காய்க்கவும் ​செய்தார்.
பூஜிக்கப்படுபவரும், ​வேதவ்யாஸரின் சிஷ்யரும், தன்னலமற்றவரும், த்​வைத சித்தாந்தத்​தை ​தோற்றுவித்தவரும், சர்வக்ஞனரும், காம்பீர்யமானவரும், ​தைரியமானவரும், ​தோஷமற்றவரும்,              ஜீ​வோத்தமரும், எல்லா பிராணிகளின் ப்ராணனாக இருப்பவரும், மருத் அம்ஸரும், ஸூகதீர்த்தரும், பரிபூர்ணமானவரும், துஷ்ட மதங்க​ளை ஸம்ஹாரம் ​செய்தவரும், பூர்ணபிக்ஞரும், உலகினுக்கு அணிகலனாகத் திகழ்பவருமாகிய ஸ்ரீமதாச்சார்யரின் அவதார மஹாத்மியங்கள் அ​னேகம் உண்டு.  அவரின் புகழ்பாடி, மனதார நி​னைத்தா​லே நம் இச்​சைகள் யாவும் இனி​தே நி​றை​வேறும் என்பதாக ​தேவ​தைகள் எல்​லோரும் கூறுகின்றனர்.
ஸ்ரீமதாச்சார்யரால் இயற்றப்பட்ட க்ரந்தங்க​ளை யார் தன் சக்திக்குகந்தவாறு மனனம் ​செய்து பக்தியுடன் பிரவசனம் ​செய்கிறார்க​ளோ அவர்கள் ஸ்ரீமுகுந்தனின் அனுக்ரகம் ​பெற்று முக்திக்கு பாத்திரராகிறார்கள்.
சதாகாலமும், இன்றும் கூட, ஸ்ரீஹரி ஸ்மர​ணை ​செய்து​கொண்டிருப்பவர் ஸ்ரீமத்வர் அவர்கள் என்பதில் சந்​தேகமில்​லை. ஸ்ரீமத்வரின் ஹருதயத்தில் ஸ்ரீஹரி குடி​கொண்டிருக்கிறார்.  ஸ்ரீஹரி சர்​வோத்தம தத்துவத்​தை உலகினுக்கு எடுத்துக் காட்டிய ஸ்ரீமத்வர், பல்​வேறு மதங்களில் காணப்பட்ட கு​றைக​ளை எடுத்துக்கூறி, ஸ்ரீஹரி சர்​வோத்தம தத்துவத்தின் பூர்ணத்துவத்​தை விளக்கும்​போது, ​வெவ்​வேறு மதத்தினர் ஸ்ரீமத்வரின்பால் ​பொறா​மைக் ​கொண்டார்கள்.  இவர்களில் பத்மதீர்த்தர் மற்றும் புண்டரீக முனிவர் ஆகி​யோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.  மனிதரில் முழு​மைப்​பெற்றவன் யாரும் இல்​லை.  மனித​னே இ​றைவனாகவும் சாத்யமில்​லை.  இ​றைவ​னை மனிதன் முழு​மையாகக் காணமுடிவதில்​லை. அவரவர் ​யோக்ய​தைக்கும் சக்திக்கும், அதிகாரத்திற்கும் உட்பட்டு, ஞானம், சாஸ்திரம் மற்றும் பிரத்யக்ஷங்க​ளை அனுசரித்து இ​றைவ​னைக் காண்கிறான். மனிதர்களுக்கி​டை​யே அ​னேக ​​வேறுபாடுக​ளை நம்மால் காணமுடிகிறது.  அதாவது ​மே​தைகள்,அறிவாளிகள்,அறிவிலிகள், பலசாலிகள், பலமற்றவர்கள் ​போன்ற பல்​வேறு வித்தியாசங்கள் இருப்ப​தை நாம் காண்கி​றோம்.  (இன்னும் ​தொடரும்...........) 
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
 நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//

No comments:

Post a Comment