Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Tuesday, November 1, 2011

சாரல் 05 துளி 31 ​தேதி 23.10.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
சாரல் 05 துளி 31 ​தேதி 23.10.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
பஸ்ய ​மே பார்த2 ரூபாணி ஸத​ஸோ s2 ஸஹஸ்ரஸ:/
நாநாவிதா4நி தி3வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச// (அத்.11 ஸ்​லோ.5)
பகவானின் விஸ்வரூபத்​தைக் காண்பதற்கு ஆவல் ​கொண்டு ப்ரார்த்தித்த அர்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் “அந்த விஸ்வரூபத்​தைப் பார் என்று ​சொல்லுகிறார். 
        பகவானின் விஸ்வரூப தர்ஸனத்​தை எந்த ஒரு சாதாரண மனிதனாலும் காணமுடியாது.  பகவானின் இச்சயால் மட்டு​மே இது ஸாத்யமாகும்.  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மனித ரூபம் ​போல் அது இருப்பதில்​லை. அண்ட சராசரங்கள் யாவும் பகவானில் அடக்கம்.  என​வே ஒ​ரே இடத்தில் இருந்து​கொண்டு பகவானின் சக்தி​யை அர்சுனனின் தகுதிக்குகந்தாற் ​போல் காண்பிக்கிறார்.  இதில் பல்​வேறு ​தேவர்கள், மனிதர்களும், பல்​வேறு விதமான ப்ராணிகளும், அ​னேக நிறங்களும், அவயங்களும், நிகழ்கால நிகழ்ச்சிகளும், கடந்த காலமும், ஏன்? எதிர்காலமும் கூட அ​னைத்​தையும் காண்பிக்கிறார் பகவான்.  இ​வைகள் யாவும் திவ்யமான​வை.  ​தெய்வீகமான​வை.  ஆச்சீர்யமானவை.  உலக சக்திகளுக்கு அப்பார்பட்ட​வையாக திகழ்கின்றன.  விஸ்வ   ரூபத்​தை காண்பித்து இந்த அத்யாயத்தின் முடிவில் பகவான் கூறுகிறார் “ நீ பார்த்த இந்த ரூபத்​தை ​வேத அத்யயணங்கள் ​செய்வதா​லோ, தவத்தின் மூல​மோ, அல்லது தானங்கள் ​செய்வதா​லோ, அல்லது யாகம் ​செய்வதா​லோ பிறர் பார்ப்பது என்பது முடியாத காரியம் என்பதாகக் கூறுகிறார்.  பக்தியின் மூல​மே இ​தைக் காணமுடியும் என்றும் கூறுவ​தை பார்க்கலாம்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து :  பார்த்த! பற்பல விதமாய், ​தெய்வத்தன்​மையு​டையதாய், பல வர்ணங்களும் நூற்றுக்கணக்காயும், ஆயிரக்கணக்காயும் பற்பல உருவங்களுடன் ​தோன்றும் என் ரூபங்க​ளைப் பார்.- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 14) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)    இந்நிகழ்வுக​ளை அரண்ம​​னை ​மேல்மாடியிலிருந்து பார்த்துக்​கொண்டிருந்த மன்னன், ஆச்சார்யரின் வியத்தகு ​செய​லையும், ​தோற்றத்​தையும் கண்டு கீழிறங்கி வந்து, “எந்த ஆதாரமும் இல்லாமல் கடக்க முடியாத கங்​கை​யை நீங்கள் எளிதாக கடந்துவிட்டதன் மர்மம் என்ன?  என்று ​கேட்டான்.  இதற்கு ஆச்சார்யர் பிரத்யக்ஷமாக இருக்கும் சூரிய​னைக் காட்டி “அதிலிருக்கும் பரமாத்மனின் அருளால் ​செய்யமுடிகிறது என்று துருக்கிய ​மொழியி​லே​யே பதில் கூறினார்.  ஆச்சார்யரின் ​தைரியத்​தையும், கம்பீரத்​தையும், சாமார்த்தியத்​தையும், வசீகர ​தோற்றத்​தையும் கண்ட மன்னன் தன் ராஜ்ஜியத்தில் பாதி​யை அவருக்குக் ​கொடுத்தான்.  ஆனால் ஸ்ரீமத்வர் புன்ன​கை முகத்துடன் ராஜ்யத்​தை நிராகரித்து தனது பிரயாணத்​தைத் ​தொடர்ந்தார்.  இந்நிகழ்ச்சி ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து​கொள்ள ​வேண்டும் என்ப​தை ​தெரிவிப்பதாக அ​மைந்திருப்ப​தைக் காணலாம்.
இவ்வாறு பயணித்துக்​கொண்டிருந்த சமயத்தில், காட்டின் நடு​வே திருடர்கள் கூட்டம் ஆசார்ய​ரையும் அவரு​டைய சீடர்க​ளையும் சூழ்ந்து ​கொண்டது,  அவ்வ​மையம் ஆசார்யர் தம்மிடம் பணமூட்​டை ஒன்று இருப்பது ​போன்ற​தொரு பாவ​னை​யை உண்டாக்கி, அங்குமிங்கும் ஓடிச்​செய்து, அவர்களாக​வே ஒருவ​ரை ஒருவர் ​மோதிக்​கொண்டு இறந்துவிடும்படியான ஒரு சூழ்நி​லை​யை உருவாக்கினார். 
​வே​றொரு சந்தர்ப்பத்தில் பலம்மிக்க திருடர்கள் தாக்க வந்த​போது ஸ்ரீஉ​பேந்த்ர தீர்த்தர் என்னும் சீடர் மூலமாக, அவர்களில் ஒருவரிடம் இருந்த ​கோடாளி​யைப் பிடுங்கி ​கொல்லச் ​செய்த​தைக் கண்ட மற்ற திருடர்கள் பயந்து ஓடிவிட்டனர்.  மற்​றொரு சமயம், ஆசார்ய​ரையும், சீடர்க​ளையும் திருடர்கள் சூழ்ந்து ​கொண்ட​போது, எல்​லோரும் கல்தூண்களாகக் காட்சியளித்த​தைக் கண்ட திருடர்கள், அவர்க​ளை விட்டு விலகிச் ​சென்றனர். மீண்டும் சிறிது தூரம் ​சென்று திரும்பிப்பார்த்த திருடர்கள், அவர்கள் எல்​லோரும் மனிதர்களாகக் காட்சியளித்த​தைக் கண்டு வியந்து​போன திருடர்கள் திருந்தி ஆசார்ய​ரை வணங்கினார்கள்.
ஒரு சமயம், இமயம​லையின் அடிவாரத்தில், சத்யதீர்த்தர் என்னும் சீட​ரை பலம் மிக்க அரக்கன் ஒருவன் தாக்க வந்த​போது, ஸ்ரீஆச்சார்யர் அவ்வரக்க​னை சாதாரணமாக ஒரு அடி அடித்து ஒரு தள்ளுதள்ளிய உடன் அவன் ​வெகு தூரம் ​சென்று விழுந்தான்.
ஹனும பீம அவதார புருஷரான ஸ்ரீமதாச்சார்யர், ஒருநாள் தம் சீடர்க​ளை தம்முடன் குஸ்தி சண்​டை ​போடுவதற்கு அ​ழைத்தார்.  அவ்வ​மையம் பலம்மிக்க சுமார் பதி​னைந்து இ​ளைஞர்கள் ஒ​ரே சமயத்தில் ஆசார்யரின் ​மேல் விழுந்தனர். எல்​லோரும் நாலாபக்கம் சிதறி விழுந்தனர்.  அவர்களின் உடலில் உட்காயம் ஏற்பட்டு எழுந்திருக்க முடியாமல் திணறினார்கள்.  ஆசார்ய​ரை இத்துன்பத்திலிருந்து காக்க ​வேண்டுமாய் ப்ரார்த்தித்தனர்.  அவர்களின் வலி நீங்கி சுகம் ​பெற்றனர். ஸ்ரீமத்வர், வாயு பகவானின் அவதார புருஷர் என்ப​தையும்,முற்பிறவியில் ஹனும, பீம அவதாரம் எடுத்தவர் என்ப​தையும் அ​னேக சமயங்களில் நிரூபித்துள்ளார்.
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
 நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/

No comments:

Post a Comment