Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Wednesday, December 7, 2011

சாரல் 05 துளி 35 ​தேதி 20.11.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 சாரல் 05 துளி 35 ​தேதி 20.11.2011
கீ​தையின் ச.ரலில்......விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
ஏவமுக்த்வா த​தோ ராஜந்மஹா​யோ​கே3ஸ்வ​ரோ ஹரி:/
3ர்ஸயாமாஸ பார்தா2ய பரமம் ரூப​மைஸ்வரம்//(அத்.11 ஸ்​லோ.9)
அங்​கே குரு​க்ஷேத்ரத்தில் பகவானுக்கும் அர்சுனனுக்கும் இ​டை​யே நடக்கும் சம்பாஷ​ணைகள் அ​னைத்​​தையும் ஸஜ்ஜயர் திருடராஷ்ர மஹாராஜனுக்கு தம் இடத்திலிருந்து​கொண்டு விமர்சித்துக்​கொண்டிருக்கிறார்.  வ்யாஸ பகவான் ஸஞ்ஜயருக்கு அளித்த அபூர்வ அல்லது ​தெய்வீக பார்​வையால் இருக்கும் இடமான த்ருடராஷ்ரரின் அரண்ம​ணையிலிருந்து​கொண்டு ​போர்களத்தின் நிகழ்வுகள் அ​னைத்​தையும் ராஜாவிற்கு விவரிக்கிறார்.
        பகவானின் ஸ்வரூபத்​தை அதாவது விராட் ரூபத்​தை ஸஜ்ஜயர் ஐந்து ஸ்​லோகங்களில் விவரிக்கிறார்.  இச் ஸ்​லோகத்தில் ஸஜ்ஜயர் அர்சுனனுக்கு பகவான் விஸ்வரூபத்​தை காட்டி அருளிய​தைச் ​சொல்கிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து   “​ஹே ராஜ​னே!  மகா ​யோ​கேஸ்வரனான ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு ​சொல்லி, பிறகு பார்த்தனுக்கு தன் உத்தமமான ஈஸ்வர வடிவத்​தைக் காட்டியருளினார்.-ஸஜ்ஜயர்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 17) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)  ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் தன் சாதுர்மாஸ்ய வ்ரத காலத்​தை பாகவத ப்ரவசனம் ​சொல்வதி​லே​யே அதிக கவனம் ​செலுத்தினார். அதற்காக அதிக ​நேரத்​தைச் ​செலவிட்டார்கள்.  அவரு​டைய சீடர்களும் அவரின் பக்தி ப்ரவசனத்திற்கு ஈடுபாடு ​கொடுத்து மிகவும் ஆர்வமுடன் ​கேட்டனர் என்பது மிகவும் முக்கிமானது. அவரு​டைய பிரவசனம் ​தெள்ளத்​தெளிவான மிதமான ​வேகத்துடன் நடுவில் தடங்கள்கள் ஏதுமின்றி கனீ​ரென்றக் குரலில் இன்னும் ​கேட்க​வேண்டும் என்ற ஆர்வத்​தை உண்டாக்குவதாக இருந்தது.  ஸ்ரீமத்வரின் சித்தாந்தச் சிந்த​னைகளும், ​போத​னைகளும் ஸ்ரீமந்நாராயண​னே முழுமுதற்கடவுள். அவனுக்கு ஈடுஇ​ணையான ​தெய்வம் ​வே​றொன்றுமில்​லை.  ஸ்ரீமந்நாராயணன் பிறப்பு, இறப்பு இல்லாலதவர்.  ஆதியும் அந்தமும் இல்லாதவர். அனந்தானந்த கல்யாண குணங்கள் ​கொண்ட குணாதீதன்.  ஸ்ருஷ்டி கர்தாவும் அவ​ரே.  யாவற்றிற்கும் காரணமாயும் காரணகர்தாவாயும் உள்ளவர். அவ​ரே பரமாத்மா. சர்வஜ்ஞன். சுகஸ்வரூபி. ஞானஸ்வரூபி, ஆனந்தஸ்வரூபி, சக்திஸ்வரூபி, ​ஜோதிஸ்வரூபி, கருணாசமுத்ரன்.  ஸ்வதந்த்ரன்.  அவன் அழகிற்கு உபமானம் ஏதுமில்​லை.  அழ​கே உருவானவன்.  கருணாமூர்த்தி,  ​வேதவித்தகன்.  எங்கும் நி​றைந்தவன். சர்​வோத்தமன். அவ்யக்தமூர்த்தி என்பதாக ஸ்ருதி வாக்கியங்களிலிருந்தும், ஸ்ரீமத்பாகவதம், ஸ்ரீமத்ராமாயணம் ​போன்ற புனித நூல்களிலிருந்து ப்ரமாண ப்ர​மேயங்களுடன் பகவானின் ஸந்நிதானத்​தை எடுத்துக்கூறி சஜ்ஜனர்க​ளை ஆனந்தத்தின் எல்​லைக்​கே அ​ழைத்துச் ​சென்றார்கள் என்றால் மி​கையாகாது. பிரம்ம​தேவனும், இந்திரனும், ருத்ரனும் ஏன் ஸ்ரீமஹாலக்ஷ்மி ​தேவியும்கூட ஸ்ரீமந்நாராயணனின் பூர்ண குணங்க​ளை அறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.  “ஸ்ரீஹரிகதாம்ருத ஸார வில் “குணதாரதம்ய சந்தி-20ல் ஸ்ரீஜகன்நாத தாஸர் கூறும்​போது, “ஸ்ரீமத்வரின் சீடர்கள் “பஞ்ச ​பேத ஞானம் மற்றும் “தாரதம்ய ஞானம்இவற்றில் ​தெளிவு​பெறாமல் முக்தி என்பது இல்​லை.  இது ஸ்ரீமதானந்த தீர்த்தரின்(ஸ்ரீமத்வரின்) கட்ட​ளையாகிறது.  இந்த ஞானம் பாவ​மெனும் அரண்யத்திற்கு காட்டு தீ​யைப்​போலவும், சம்சார​மெனும் சமுத்திரத்திற்கு படகு ​போலவும், ​வைகுண்டம் ​செல்வதற்கு படிக்கட்டுகளாகவும் அ​மைகிறது. “ இ​தை ​யோக்கியர்கள் மட்டு​மே அறிவார்கள் என்றும் ஞானிகள்    இத​னை மற்ற பக்தர்களுக்கு எடுத்துச்​சொல்லி சுகப்படுவார்கள் என்றும் எடுத்து​ரைக்கிறார். மேலும் இந்தச் ஸந்தியில் ​தேவ​தைகளின் தாரதம்யம் வி​சேஷமாக விவரிக்கப்படுவ​தை வாசக பக்தர்கள் அவசியம் ​தெரிந்து​கொள்ள​வேண்டும்.  இ​தைத் ​​தொடர்ந்து ​வேறு சிலர் பகவா​னை எவ்வா​றெல்லாம் எடுத்தாளுகிறார்கள் என்ப​தை “ஸ்ரீபூர்ண ப்ரக்ஞ தர்ஸனம் என்ற நூலின் ஆசிரியர் நமஸ்காரத்திற்குறிய ஸ்ரீ டா. வ்யாஸன​கெ​ரே ப்ரபஞ்ஜனாசார்ய என்னும் மஹாவித்வாம்ஸர் இவ்வாறு  கூறுகிறார், “சிலருக்கு ஜகத்​தே மித்​யை (இல்லாத ஒன்று எனவும்), இன்னும் சிலருக்கு ஜகன்னாதனான ஸ்ரீஹரி​யே மித்​யை, மற்றும் சிலருக்கு இரண்டும் மித்​யை, ஆனால் ஜகத்து மட்டும் ஸத்யமானது.  ஜகன்னாதன் அதன் நியாமகன். சிலருக்கு பகவான் உருவமில்லாதவன்.  மற்றும் சிலருக்கு பகவான் உருவமுள்ளவன்.  ஆனால் அவன் ப்ராக்ருதமானவுருவமில்லாது இருப்பவனாதலால் உருவமற்றவ​னே.  க்ஞான, ஆனந்தாதி அப்ராக்ருத உருவமுள்ளவனாக இருப்பவனாதலால் அவன் உருவமுள்ளவன்.  சிலருக்கு ப்ரம்மம் ஸகுணன் மற்ற சிலருக்கு ப்ரம்மம் நிர்குணன்.  அவன் க்ஞான, ஆனந்தாதி ஸகல அனந்தானந்த கல்யாண குணபூர்ணனாதலால் ஸகுணன்.  ஸத்வம், ரஜஸ். தமஸ் என்ற ப்ரக்ருத குணரளிதனானதால் அவன்நிர்குணன்.(இன்னும்தொடரும்...........)                                     
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம 
ஹ​ரே ராம
ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண 
ஹ​​ரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//


No comments:

Post a Comment