Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Wednesday, December 7, 2011

சாரல் 05 துளி 37 ​தேதி 04.12.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 சாரல் 05 துளி 37 ​தேதி 04.12.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூப தர்ஸன​யோகம் (அத்யாயம் 11)
கீதா ​ஜெயந்தி (06.12.2011)      
கீ​தையும் த்​வைதமும் (சிறப்பு மலர்)
ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண
​வேதவ்யாஸாத்மக லக்ஷ்மி ஹயக்ரீவாய நம

ஸ்ரீகிருஷ்ணபராமாத்மா அர்சுனனுக்கு “எல்லாம் வாசு​தேவ​னே என்னும் தத்துவத்​தை ஸ்ரீமத் பகவத்கீ​தையின் மூலம் உப​தேஸிக்கிறார்கள்.  ஆதிகுரு ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் அவர்கள், பகவான் ​போதித்த “ஹரி சர்​​வோத்தம தத்துவத்தின் ரகஸியங்க​ளை ​வெளி​கொணர்ந்து த்​வைத சித்தாந்த ​கோட்பாடுகளாக பிரகடனப்படுத்தினார்கள்.
        தன் புல​மைத் திற​மையால், ஸ்ரீவ்யாஸராஜர் த்​வைத சித்தாந்தக் கருத்துக்க​ளை ஒ​ரே ஒரு    ஸ்​லோகத்தில் ​ஜொலிக்குமாறு  ​செய்துள்ளார்கள்,
ஸ்ரீமந் மத்வ ம​தே ஹரி: பரதர: ஸத்யம் ஜகத்
தத்வ​தோ ​பே​தோ ஜீவகணா: ஹ​ரேரனுசரா:
நீ​சோச்ச பாவங்கதா: முக்திர் ​நைஜஸூகானுபூதிர
மலா பக்தி ஸ்ச தத்ஸாதனம் ஹ்யக்ஷாதித்
திரிதயம் பிரமாணம் அகில ஆம்நா​யைக ​வேத்​யோ ஹரி:
        இந்த நவரத்ன மா​லை எனச் ​சொல்லப்படும் ஸ்​லோகத்தில் ஒன்பது விதமான கருத்துக்கள் மத்வமத தத்துவமாக ​ஜொலிக்கச் ​செய்துள்ளார்கள்.
1. ஸ்ரீஹரி பரிபூர்ண குணமுள்ளவர், அவருக்கு நிகரான கடவுள் ​வே​றொன்றில்​லை.
2. உலகம் என்பது சத்யம் 3. பரமாத்மனும், ஜீவாத்மனும் ​வெவ்​வேறானவர்கள் இவர்களுக்குள்​ளே பஞ்ச ​பேதங்கள் உண்டு.  அ​வையாவன (அ) ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் ​பேதம் (ஆ) ஒரு  ஜீவனுக்கும் மற்​றொரு ஜீவனுக்கும் ​பேதம் (இ) ஜீவனுக்கும் ஜடத்திற்கும் ​பேதம் (ஈ) ஒரு ஜடப்​   பொருளுக்கும் மற்​றொரு ஜடப்​பொருளுக்கும் ​பேதம் (உ) ஜடப்​பொருளுக்கும் பரமாத்மாவிற்கும்  இ​டை​யே ​பேதம்  4. ஸ்ரீஹரி ஜீவர்க​ளை தம் கட்டுப்பாட்டில் ​வைத்திருப்பவர் ஆவார்.  ஜீவன்கள் ஸ்ரீஹரியின் தாஸர்கள். 5. ​வேதங்கள் உண்​மை  6. தன் ஜீவ ஸ்வரூபத்தின் ஆனந்தத்த​தை அனுபவிப்ப​தே முக்தி எனப்படும். 7. நிர்மலமான பக்தி​யே முக்திக்கு
வழி 8. ப்ரத்யக்ஷம், அனுமானம், ஆகமம் இவற்றின் மூலம்தான் ஞானம் ​பெற முடியும்.  9. ​வேதங்களில் ஸ்ரீஹரி அறியக்கூடியவர்.
ஸ்ரீமத் பகவத் கீ​தையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறும் கருத்துக்க​ளைக் காண்​போம்.
        அத்யாயம் 07 ஸ்​லோகம் 07 “என்​னைவிட உயர்ந்தது இவ்வுலகில் இல்​லை.  ஒரு நூலிலுள்ள மணிக​ளைப் ​போல் இவ்வுலகம் என்​னிடம் ​கோர்க்கப்பட்டுள்ளது
        அத்யாயம் 11 ஸ்​லோகம் 43 “ இந்த உலகினுக்கு தந்​தை நீர், அதனால் பூஜிக்கத் தகுந்தவர் நீர்.  குருவுக்கு குருவானவர் நீ​ரே.  மூவ்வுலகத்திலும் உமக்குச் சமமானவர் ​மேலானவர் ​வே​றொருவர் உண்​டோ!
உலகம் என்பது சத்ய​மே.  அத்யாயம் 13 ஸ்​லோகம் 20ல் “ப்ரக்ருதிம் புருஷம் ​சைவ, வித்தி4, அநாதீ3  உபா4வபி ப்ரக்ருதி, புருஷன் ஆகிய இரண்டு தத்துவங்களும் ஆதியில்லாத​வை என்று அறிவாய்
ஜீவனின் நி​லை யாது? அத்யாயம் 02 ஸ்​லோகங்கள் 11 மற்றும் 12ல் “ஞானிகள், உயிரிழந்தவர்கள் குறித்​தோ, உயிழிக்காதவர்க​ளைக் குறித்​தோ துக்கப்படமாட்டார்கள்.  நான் ஒரு​போதும் இல்லாமலிருந்தது என்பது இல்​லை, நீயும் அவ்வா​றே இல்லாமலிருந்ததில்​லை, இனி​மேலும் நா​மெல்​லோரும் இல்லாமல் ​போ​வோம் என்பதும் இல்ல​வே இல்​லை       
        ஜீவன் பகவானின் பிரதிபிம்பமாகும். ஜீவன் பகவா​னைவிட பன்மடங்கு ​வேறானவன். ஜீவனுக்கு சுகம் துக்கம் உண்டு.  அழியக்கூடிய உடலும் உணர்வுகளும் அதற்குண்டு.  அதற்​கென நியமிக்கப்பட்ட விதிகள் உண்டு,  ஜீவன் ஸாத்வீக, ராஜஸ மற்றும் தாமஸ குணங்களால் பாதிக்கப்படுபவன். இ​வையாவும் பகவானின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட​வை.  இ​வைகள் கீ​தையில் நன்கு விளக்கப்படுவ​தைக் காணலாம்.  அத்யாயம் 18 ஸ்​லோகம் 61ல்ஈஸ்வரஸ் ஸர்வபூ4தானாம், ஹ்ருத்​தே3​ஸே(அ)ர்ஜூன திஷ்ட2தி தேக​மெனும் இயந்திரத்தில் ஏற்றி​வைக்கப்பட்ட ​​பொம்​மைகள் ​போல எல்லா பிரயாணிக​ளையும் மாயா சக்தியினால் ஆட்டி ​வைத்துக்​கொண்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எல்லா பிராணிகளு​டைய இருதயத்தினுள் நிறிகின்றார்
அத்யாயம் 02 ஸ்​லோகம் 05ல்
“எனக்கு எண்ணற்றப் பிறப்புக்கள் இதுவ​ரையில் கழிந்துள்ளன.  உனக்கும் அப்படி​யே.  ஆனால் நான் அ​வை யாவற்​றையும் அறி​வேன்.  நீ​யோ அவற்​றை அறியமாட்டாய்.
​வேதங்கள் உண்​மை.  ​வேதங்கள் மூல​மே பகவான் அறியப்படுகிறார்.
அத்யாயம் 09 ஸ்​லோகம் 17 மற்றும் 18ல்
“இவ்வுலகிற்கு தந்​தை, தாய், பாட்டன், ​போஷிப்பவன், அறியப்பட ​வேண்டியவன், பரிசுத்தமானவனும் பரிசுத்தமாக்குபவனும் நா​னே.  ஓங்கார ருக், ஸாம, யஜூர் ​வேதங்களும் நா​னே”  “ஜீவன் அ​டைய விரும்பும் பரகதியும் நா​னே. இப்ப்ரபஞ்சத்​தை தாங்குபவனும் நா​னே, அதற்கு ஸ்வாமியும் நா​னே, யாவற்​றையும் சாக்ஷி ரூபமாய் பார்த்துக்​கொண்டிருப்பவனும் நானே, ஜீவன்கள் சுகமாய் வாழுமிடமும் நா​னே,
பயம​டைந்தவர்க​ளைக் காப்பவனும் நா​னே,  பிரதிபலன் விரும்பாமல் உபகரிப்பவனும்    நா​னே, இந்த ஜகத்​தை ஸ்ருஷ்டிப்பவனும் நா​னே, ஜகத்​தை நாஸம் ​செய்பவனும் நா​னே, யாவற்றின் இருப்பிடமும் நா​னே, ​பொக்கிஷம் நா​னே, இ​வையாவும் உண்டாகக் காரணமானவனும் என்றும் அழியாமலிருக்கும் வி​தையும் நா​னே.
அத்யாயம் 10 ஸ்​லோகம் 08
“நான் அ​னைத்துலகிற்கும் ஸ்ருஷ்டி கர்த்தா என்றும் என்னா​லே​யே அ​னைத்துலகும் இயங்குகிறது என்றும் ​தெரிந்து​கொண்டு ஞானிகள் என்​னை இ​டையறாத பக்தியுடன் சதாகாலமும் பூஜிக்கிறார்கள்.
பக்தி​யே முக்திக்கு வழிகாட்டுகிறது.  அத்யாயம் 02 ஸ்​லோகம் 72
“ஏக்ஷா ப்ராஹ்மீ ஸ்தி2தி: பார்த்த2, ​நைனாம் ப்ராப்ய விமுஹ்யதி/
ஸ்தித்2வா (அ)ஸ்யாம் அந்தகா​லே(அ)பி, ப்ரஹ்ம நிர்வான ம்ருச்சதி//
இது​வே ப்ரம்ம ஞானியின் லக்ஷணம்.  இ​தை அ​டைந்தவ​னே ஜீவன் முக்தன்.  அவனுக்கு ​மோஹம் என்பதில்​லை.  இந்த ​தேகம் அழியும் ​பொழுதும், இந்த நி​லையில் இருந்து, பிறகு சரீரமில்லாத, குணபூர்ணனான பகவா​னை அ​டைகிறான்.
        பக்தி என்ற படகி​லேறி பரமாத்மா என்ற் இலக்​கை அ​டைய முடியும்.  பக்தியுடன் கர்மமும் ஞானமும் பக்குவமான மு​றையில் ​கையாளப்படு​மேயானால் பகவா​னை அறிய முடியும்.  அது​வே ஆனந்தம் எனப்படும்.
        கீ​தையில் “பக்தி அ​னேக இடங்களில் ​போதிக்கப்படுகிறது.  “கட​மை​யைச் ​செய்து​கொண்​டே என்மீது பக்தி​யை ​செலுத்துவாயாக என்று பகவான் உப​தேஸிக்கிறார்.  “யார் என்​னை பிரியமுடன் ​நேசிக்கிறார்க​ளோ அவர்க​ளை நானும் பிரியமுடன் ​நேகிக்கி​றேன் “பிரி​யோ ஹி ஜ்ஞானி​னோ(அ)த்யர்த்த மஹம் ஸ ச மம ப்ரிய: பகவா​னைப் பற்றியதான ஞானத்துடன் கூடிய பக்தி சாலச் சிறந்தது.  பக்தியினால் ப​ரோக்ஷ ஞானமும், அப​ரோக்ஷஞானமும் அதிகரிக்கிறது.  இந்த பக்தியானது வளர வளர பக்கும​டைந்து “பக்குவபக்தி என்ப்படுகிறது.  இது ​மேலும் படிப்படியாக வளர்ந்து “பரிபக்வபக்தி”  மற்றும் “அதிபரிபக்வபக்தி”  எனப்படுகிறது.  இ​வைகள் “சாதனா பக்தி”  என்றாகிறது
        முக்திக்கு பின்பும் இந்த பக்தியானது ​தொடர்கிறது.  அத்யாயம் 8 ஸ்​லோகம் 22ல்
புருஷ: ஸ பர: பார்த்த பக்த்யா லப்யஸ் த்வனன்யயா/ யஸ்யாந்த: ஸ்தானி பூதானி ​யேன ஸர்வமிதம் ததம்//(VIII-22) ​வேறு விஷயத்தில் மன​தைச் ​செலுத்தாமல் பக்தி ​யோகத்​தை அனுஷ்டித்தால் அந்த பரம புருஷ​னை அ​டையலாம்.
        “அவ்வாறு என்​னைவிட ​வேறு ஒன்​றையும் சிந்த​னை ​செய்யாது என்னிட​மே மன​தை ​வைத்து என்​னை பரிவுடன் உபாஸ​னை ​செய்யும் பக்தர்களின் ​யோக ​க்ஷேமத்​தை அழியாமல் காப்பாற்றுகி​றேன்(அத் 9-ஸ்22)
        “அர்சுனா! இதுவ​ரையில் உனக்கு பூர்வ கர்மத்தால் ஏற்பட்டிருக்கும் தர்மங்க​ளையும்,  அதர்மங்க​ளையும் விட்டு, ஸகல வஸ்துக்களிலும் ஒ​ரே விதமாய் அந்தர்யாமியாய் ஒப்பில்லாதவனாய் விளங்கும் பகவான் நா​னே என்​​றெண்ணி. என்னிடத்தில் சரணாகதிய​டைவாய்.
நான் அப்​போது உனக்கு ஏற்படும் எல்லா இ​டையூருகளிலிருந்தும் விடுவித்து காப்பாற்றுகி​றேன்.  உன் முயற்சியால் ​மேற்​சொன்ன இ​டையூறுக​ளை விடுவிக்க முடியவில்​லை​யே என்று வருந்தா​தே.  என்​னை அநந்யமாய்ச் சரணமை​டைவ​தே அ​வைக​ளை நாசஞ் ​செய்துவிடும் (18-66)”          அத்யாயம் 10 ஸ்​லோகம் 10
இப்படியாக என்னிடத்தில் எல்​லையற்ற அன்​பை ​வைத்து, எப்​பொழுதும் என்னிட​மே மன​தை ​செலுத்தி, என்​னை​யே நி​னைந்து நி​னைந்து ​சேவிக்கிறவர்களுக்கு நான் புத்தி​யோகத்​தை அருள்கி​றேன்.  அதனால் அவர்கள் என் ஸ்வரூபத்​தை நன்கறிந்தவர்களாய் என்​னை​யே அ​டைகிறார்கள்.
        “என்​னை எவன் “ஹரி சர்​வோத்தமன் என்று அறிகி​றா​னோ அவ​னே யாவற்​றையும் அறிந்தவனாகிறான் (15-19)
        இவ்வாறாக மத்வ மத தத்துவங்களும் கீ​தையும் ஒன்றுக்​கொன்று ​தொடர்பு​டையது.  ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் “ஸ்ரீக்ருஷ்ணாம்ருத மஹார்ணவ:” என்னும் ​தொகுப்பில்
ஆ​லோட்3ய ஸர்வஸாஸ்த்ராணி விசார்ய ச புன: புன:/
இதந​மேகம் ஸீநிஷ்பண்ணம் த்4​யே​யோ நாராயண: ஸதா3//.
“ஸாஸ்த்ரங்கள் யாவற்​றையும் நன்றாக ​தெரிந்து​கொண்டபின்பு, இன்னும் அறிய​வேண்டும் என்று அலசிப்பார்த்தால் நாராயணன் ஒருவ​ரே எப்​போதும் த்யானம் ​செய்யப்பட ​வேண்டியவர் என்பதாக ​தொரிந்து​கொள்ளலாம்என்பதாகக் கூறுகிறார்.
பரமாத்மா ஸ்ரீகீதாச்சார்யர் ஸ்ரீமத் பகவத்கீ​தையின் ஊ​டே கூறிய உப​தேஸங்க​ளை ஸ்ரீமதாச்சார்யர் அவர்கள் தமது தத்துவங்களாக ஏற்று மத்வ மத​மெனும் ஓர் சிறப்பு​பெற்ற மதத்தி​னை ​பிரகைடனப்டுத்தி நம்​மை​யெல்லாம் பக்தியில் ஈடுபடுத்தி முக்தி​பெற வைப்பது​வே அல்லாது  ​வே​றென்ன குறிக்​கோலாகவிருக்கும் என்ப​தை சிந்த​னை​செய்து பார்ப்​போம்.
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

06.12.11 «ý¨È ¾¢Éõ ‚¸£¾¡ ¦ƒÂ󾢨 º¢ÈôÀ¡¸ ¦¸¡ñ¼¡Î§Å¡õ.  «ý¨È ¾¢Éõ  ‚Áò À¸Åò ¸£¨¾ Òò¾¸ò¾¢üÌ â¨ƒ¦ºöР ¸£¨¾ À¡Ã¡Â½õ ¦ºö§ÅñÎÁ¡ö Àì¾¢ ÓÃÍÅ¢ý Å¡º¸ Àì¾÷¸¨Ç «ýÒ¼ý  §¸ðÎ즸¡û¸¢§È¡õ.
Á¡÷¸º£÷„ Íò¾ ²¸¡¾º¢ (06.12.11) «ýÚ ‚…ò¿¡¾ ¾£÷ò¾÷ Òý¾¢Éõ(வீர​சோழபுரம்).  ‚ÌոǢý òÂ¡É Š§Ä¡¸õ:                 
  …ò¿¡¾ ÌÕ: À¡Ð §Â¡ ¾£§Ã¡ ¿Å ºóò¡¢¸¡õ/
  ¿Å¡õÕ¾ ¸¾¡ ¾£÷ò¾ ¾¡ñ¼Å¡É¢ ùº£ ìÙÀò//    ±ýÀ¾¡¸ ò¡ɢòÐ ‚ÌոǢý ¬º¢¨Âô ¦ÀէšÁ¡¸.

Àì¾¢ ÓÃÍ ±ýÈ þó¾ ´ÕÀì¸ Å¡Ã¡ó¾¢Ã þ¾Æ¢ý ஐந்தாவது ¬ñÊý 37 ÅÐ þ¾Æ¡¸  ‚¸£¾¡ ¦ƒÂó¾¢ (06.12.11) ±ýÚ þÕÀì¸î º¢ÈôÀ¢¾Æ¡¸ ¦ÅÇ¢ÅóЦ¸¡ñÊÕ츢ÈÐ.  §ÁÖõ þó¾ þ¾¨Æ šášÃõ þ¨½Â¾Çò¾¢ø  (internet)  www.bhakthimurasu.blogspot.com.  ±ýÈ Å¢Ä¡ºò¾¢ø ÀÊòÐ Á¸¢ÆÄ¡õ,
ஹ​ரே ராம
ஹ​ரே ராம
ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண
ஹ​​ரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//

  Email : geethaisevatrust @gmail.com-WEB: www.bhakthimurasu.blogspot.com

No comments:

Post a Comment