Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Wednesday, December 7, 2011

சாரல் 05 துளி 36 ​தேதி 27.11.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 சாரல் 05 துளி 36 ​தேதி 27.11.2011
கீ​தையின் சாரலில்.......விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
அ​னேகவக்த்ர நயநம​நேகாத்3 பு4தத2ர்ஸநம்/
 அ​நேகதி3வ்யாப4ரணம் தி3வ்யா​​நே ​கோத்3யதாயுத4ம்//(அத்.11 ஸ்​லோ.10)

ஸஜ்ஜயர் திருடராஸ்ட்ர மஹா ராஜனுக்கு பகவானின் விஸ்வரூப தர்ஸனத்தில் தான் கண்ட உருவத்​தை விவரிக்கிறார். ஸஜ்ஜயர் பகவானின் விராட் ரூபத்தில் கணக்கிலடங்காத எண்ணற்ற முகங்க​ளைக் காண்கிறார்.  அதற்குகந்தாற்​போன்ற எண்ணற்ற கண்களும் அதில் முக்கியமானதாக சூரிய, சந்திரர் என்றும் கூறப்படுகிறது.  இந்த மாதிரியான தர்ஸனம் காணக் கி​டைக்காதது.  வியப்ப​பைக் ​கொடுப்பதாக உள்ளது.  இ​தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.  விசித்ரம், வி​னோதம் மிகவும் அற்புதம்.  அதுமட்டுமல்ல பகவான் “அ​னேக திவ்ய ஆபரணங்க​ளை அணிந்து​ காட்சி​கொடுக்கிறார்.  பகவான் அ​னேக திவ்யமான ஆயுதங்க​ளைத் தாங்கியவறாகக் காட்சி ​கொடுக்கிறார்.  இவ்வாயுதங்கள் ​போர் ​செய்வதற்குறிய ஆயுதங்களாகும். இவ்வாறு ஸஜ்ஜயர் ராஜனுக்கு தான் கண்டு​கொண்டிருக்கின்ற பகவானின் அதிஅற்புதமடான விஸ்வரூப தர்ஸனத்​தை விவரித்துக்​கொண்டிருக்கிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து   “​எண்ணி​றைந்த முகங்களும், கண்களும், எண்ணி​றைந்த ஆச்சிர்யமான காக்ஷிகளும், எண்ணற்ற திவ்ய ஆபரணங்களும், கணக்கிலடங்காத திவ்ய ஆயுதங்களு  மு​டையதாய் உள்ளது -ஸஜ்ஜயர்-

இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 18) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)  அக்காலம் ​தொடங்கி இக்காலம் வ​ரை “கடவுள்என்ற கண்களுக்குத் ​தெரியாத ஒரு ​தெய்வீக சக்தி​யை “உருவமுள்ளவன் என்றும் “உருவமில்லாதவன்என்றும் “ஸகுணன்என்றும் “நிர்குணன் என்றும் பல்​வேறு ​கோணங்களில் உருவகம் ​செய்து​​கொண்டவர்களாய், தங்களது அபிப்ராய​மே ஸ்திரமானது என்ற ம​னோ பக்குவத்​தை உ​டையவர்களாய், அன்றுமுதல் இன்றும்கூட ஜீவித்துக்​கொண்டிருக்கும் உள்ளங்கள் அ​னேகம் அ​னேகம்.  இவ்வாறானக் கருத்துக்க​ளைக்​கொண்ட உள்ளங்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீ​தை அத்யாயம் 7      ஸ்​லோகம் 10ல் இவ்வாறுக் கூறுகிறார்,
3ஹூநாம் ஜன்மனாமந்​தே, ஜ்ஞோனவான் மாம் ப்ரபத்3ய​தே/
வாஸூ​தே3வஸ் ஸர்வமிதி, ஸ மஹாத்மா ஸூதுர்3லப:4//
“பிறவிகள் பல கடந்தும் வாசு​தே​னே ஸர்வம் என்று அறிந்தவன் என்​னை அ​டைகிறான்.      அத்த​கைய மஹாத்மா மிகவும் அறிது
Ø  புருஷ ஏ​வேதம் ஸர்வம் – புருஷ ஸூக்தம்
Ø  வாஸநாத் வாஸூ​தேவஸ்ய வாஸிதம் ​தே ஜகத் த்ரயம்
ஸர்வபூத நிவா​ஸோ ஸி வாஸூ​தேவ ந​மோஸ்து​தே-ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்-
Ø  ஈஸா வாஸ்யம் இதம் ஸர்வம் – ஸ்ரீஈ​ஸோபநிடத் –
Ø  யச்சாபி ஸர்வபூ4தானாம், பீ3ஜம் த த3ஹமர்3ஜூன –கீ​தை X-39
இவ்வாறாக “ஹரி ஸர்​வோத்தமன் என்னும் தத்துவத்​தை எடுத்து​ரைப்பதற்கு இன்னும் அ​னேக ஆதாரங்க​ளை எடுத்து​றைக்க முடிந்தாலும் கூட அவற்​றை முழுமனதுடன் ஏற்றுக்​கொள்ளும் ஆத்மாக்கள் மிகவும் அறி​தே.
Ø  பகவானின் பரிபூர்ணத்துவத்​தை
“ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ம என்ற ஸ்ருதி வாக்யம் நிரூபணம் ​செய்கிறது.  அவ்வா​றே பரம்மா என்று பகவானுக்கு ​பெயர் வந்த விவரம், “ஸர்​வேஷூ பூ​தேஷூ ஏத​மேவ பிரம்ம என்ற வாய்க்கியத்தால் நிரூபிக்கப்படுகிறது.  ​வேதங்கள், உபநிடதங்கள் மூலம் பகவா​னை அறியலாம் என்பது “ஸர்​வே ​வேதா:  “ஸர்​வே ​கோஷா: வ்யாஹ்ருதீஹி ப்ராணருச என்ற் வாக்யங்களிலிருந்து ​தெரியப்படுத்தப்படுகிறது.  இவ்வாறாக ஸ்ருதிகளில் முடங்கிக்கிடந்த “விஷ்ணு சர்​வோத்தமத்துவத்​தை மு​றைப்படுத்தி ​வெளிச்சத்திற்கு ​கொணர்ந்தவர் ஸ்ரீமத்வர் என்பதில் அய்யப்பாடு ஏதுமில்​லை.
       பகவான் ஸ்ரீமந்நாராயணன் “ஸ்ருஷ்டி கர்த்தா என்பதற்கு ஸ்ரீமத்பகவத் கீ​தை அத்யாயம் 7-10வது   ஸ்​லோகத்தில் பகவான் கூறுகிறார்:
பீ3ஜம் மாம் ஸர்வபூ4தாநாம் வித்3தி4 பார்த2 ஸநாதநம் “ என்​னை எல்லாப் பிராணிகளுக்கும் அனாதியான வி​தை ​போன்ற நிமித்த காரணமாக அறிவாயாக”      (இன்னும்தொடரும்...........)  

தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம
ஹ​ரே ராம
ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண
ஹ​​ரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//








No comments:

Post a Comment