10வது அத்யாயம்
விஸ்தரேணாத்மநோ யோக3ம் விபூதிம் ச ஜநார்தந/
பூய: கதய: த்ருப்திர்ஹி ஸ்ருண்வதோ நாஸ்தி மேs ம்ருதம்// (அத் 10 ஸ்லோ.18)
முந்தைய அத்யாயங்களில் சொன்னதைவிட இன்னும் விஸ்தாரமாக கூறு ஜநார்தனா ! என்று விளம்புகிறார் அர்சுனன். அம்ருதம் போன்ற உன் வார்த்தைகளில் கூறவேண்டுமாய் பிரார்த்திக்கிறார். ஜநார்தனா என்றால் துஷ்ட ஜனங்களை அழிப்பவர், ஸம்ஸாரத்தை அழிப்பவர், பிறப்பில்லாதவர், பக்த ஜனங்களால் ப்ரார்த்திக்கப்படுபவர். மோக்ஷத்தைக் கொடுப்பவர் என்று பொருள். பகவான் இவ்வுலகில் பல்வேறாக வ்யாபித்திருக்கும் சக்தியே இங்கு யோகம் எனப்படுகிறது. அந்த மஹாசக்தி யின் விரிவாக்கமே விபூதி என்பதாகும். மஹா சக்தி மற்றும் விபூதியின் தத்துவ அறிவு பக்தியை உண்டாக்கும்.இந்த ரகஸியத்தை தெரிந்துகொண்டு அர்சுனன் மேலும் விளக்கமாகச் சொல்லுங்கள் என்று வேண்டுகிறார். பகவானைப் பற்றிய அறிவு, லீலைகள், ப்ரபாவங்கள், விபூதிகள் யாவும் திரும்பத்திரும்ப கேட்டாலும் புதியதான விஷயத்தைக் கேட்பதுபோலவே இருக்கும். அவைகள் தெகட்டவே தெகட்டாது. அம்ருதத்தை உண்டாலும் தெகட்டிவிடும், ஆனால் பகவானை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஒருவன் மனதில் உதித்து விட்டால் அவைகள் ஆனந்தத்தையே கொடுக்கும். போதும் என்ற உணர்வே இருக்காது. பகவானே வழிகாட்டியாக நிற்கிறார். இவற்றில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அர்சுனன் பகவானின் வார்த்தைகளால் பகவானைப் பற்றியதான விபூதிகளை விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறார். பகவானின் வார்த்தைகள் அம்ருதமாய் இனிக்கிறது. இதைக் கேட்பதற்கு பக்தியும் ஆர்வமுமே முக்கியமாகிறது. லெளகீக விஷயங்களும், பொளதீகப் பொருட்களும் என்றும் அழியக்கூடியது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியதான அறிவு மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடியது. இதை ஸ்ரீவ்யாஸபகவான் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியிருப்பதைக் காணலாம். ஸ்ரீமத் பாகவதம் 03-25-36 ல் ஸ்ரீகபிலதேவர் தமது தாய் தேவஹூகதிக்கு உபதேசிக்கிறார் , "எனது உண்மையான பக்தர்கள் எனது பல்வேறு வடிவங்கள். அவர்கள் எனது எழில்மிகு முகத்தையும், உடலையும் காண்பதில் ஆனந்தம் அடைகின்றனர். என் லீலைகள், பார்வை, புன்சிரிப்பு, யாவும் அவர்களுக்கு ஆன்மீக உணர்வை கொடுக்கிறது. அதனால் அவர்களின் மனங்கள் என் சிந்தனையில் ஆழ்கிறது. அவர்களின் வாழ்வை எனக்கு அர்ப்பணிக்கிறார்கள். இவர்கள் முக்தியை அல்லது வேறு இன்ப சுகங்களை வேண்டுவதில்லை. இருந்தபோதிலும், அவர்களுக்கு என் லோகமான ஸ்ரீவைகுண்டத்தில் இடமளிக்கிறேன்" என்று கூறுகிறார். ஸ்லோகத்தின் உட்கருத்து : ஹே ஜனார்த்தன ! உன்னுடைய வல்லமை, சக்தி யாவும் உன்னுடைய ஸன்னிதானத்தினால் அந்தந்த பதார்த்தங்களுக்கு ஸ்ரேட்டமான தத்துவத்தைக் கூறிக்கொண்டே அவைகளிலிருக்கும் தத்ரூபங்களை விஸ்தாரமாகச் சொல்லும். உன்னுடைய வாக்யம்ருதத்தை கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு திருப்த்தியில்லை-அர்சுன உவாச-
இங்கே ஒரு துளி : பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஹே அர்சுனா! உன் சிந்தனையை என்னிடத்திலேயே வை. என்னைக் குறித்தே பக்தியைச் செய். நீ செய்யும் யாக-யக்ஞங்களை எனக்கு ஸமர்ப்பணம் செய். நீ செய்யும் நமஸ்காரங்களை எனக்கு மட்டுமே செய். இப்படியாக எனக்காகவே உன் கைங்கரியங்களை செய்துகொண்டிருந்தால் என்னையே அடைவாய். இது ஸத்யம்(18-65). யாருடைய உள்ளம் எப்போதும் கீதையில் ஆனந்தம்பெறுகிறதோ, அவனே அக்னி தேவதையை பூஜித்தவனாகிறான். அவனே இடைவிடாது ஜபம் செய்தவனாகிறான். அவனே செய்யவேண்டிய எல்லா கர்மங்களையும் பூர்ணமாகச் செய்தவனாகிறான் மேலும் எல்லாம் உணரப்பெற்ற பண்டிதனாகிறான்-ஸ்ரீகிதாமஹாத்ம்யம்-
தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //
No comments:
Post a Comment