Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Tuesday, May 24, 2011

சாரல்: 05 - துளி: 08 - ​தேதி: 15.05.2011


கீதையின் சாரலில்........... விபூதி ​யோகம்  (10வது அத்யாயம்)
ம்ருத்யு: ஸர்வஹரஸ் சாஹம், உத்ப4வஸ்ச ப4விஷ்யதாம்/                                        
கீர்த்தி: ஸ்ரீர் வாக் ச நாரீணாம், ஸ்ம்ருதிர் ​மேதா4 த்4ருதி:  க்ஷமா// 
(அத்.10-ஸ்​​லோ,34)
“யாவற்​றையும் நாஸம் ​செய்யும் மரணம் நா​னே, இனி உண்டாகும் ​பொருள்களுக்கு உற்பத்தி ஸ்தானம் நா​​னே, கீர்த்தியும், ​க்ஷேமமும், ஸ்த்ரீகளின் ​சொல்லும், ஞாபக சக்தியும், புத்தியும், உறுதியும் ​பொறு​மையும் நா​னே.
       யாவற்​றையும் ப​டைப்பவனும் அவற்​றை அழிப்பவனும் பகவா​னே.  பகவா​னே மரண​தேவ​தையாக இருந்து யாவற்​றையும் அழிக்கிறார்.  அது​போல​வே, அழித்தவற்​றை மீண்டும் ​தோற்றுவிப்பவர் பகவா​னே.  எதிர்காலத்தில் உற்பத்தியாகும் ​பொருள்களுக்கு காரண கர்த்தா பகவா​னே.
       ஒருவரின் புகழுக்கு காரணமானவர் பகவா​னே.  ஒருவர் ​செல்வந்தராக இருப்பதற்கும் நல்ல ​சொல்லாட்சி ​பெற்று இருப்பதற்கும் காரணமும் காரண கர்த்தாவும் பகவா​னே.  அது​போல​வே, நி​னைவாற்றல், ​மேதாவித் தன்​மை, ​தைர்யம், உறுதியான மனபக்குவம், ​பொறு​மை யாவும் தம் விபூதிரூப​மே என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு விவரிக்கிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து:   "நான் ஸர்வ நாஸகனாதலால், ம்ருத்யு நாமகனாய் ம்ருத்யுவிற்கு நியாமகனாய் ம்ருத்யு வில் இருப்பவன்.  யாவற்​றையும் உற்பத்திச் ​செய்வதனால் உத்பவ:’ என்னும் ​பெயரு​டையவனாய் உற்பத்தியிலிருக்கி​றேன்.  நான் புகழத் தகுந்தவனாதலால், ஸ்திரீகளின் புகழாகவும், துதிக்கப்படுவதனால் கீர்தி:’ என்ற ​பெயரு​டையவனாய் கீர்த்தியிலிருப்பவன்.  ஸ்ரீக்கு ஆஸ்ரயனாதலால் ஸ்ரீஸப்தவாச்யனாய் ஸ்ரீக்குள் இருப்பவன்.  வாக்கியங்களுக்கு நியாமகனாய், வாக்ய ஸப்த்த வாச்யனாய் வாக்கியத்திலிருப்பவன்.  நான் நி​னைக்கப்படுவதற்கு ​யோக்கியனாதலால் ஸ்மிருதி நாமகனாய் ஸ்ம்ருதியிலுப்பவன்.  புத்திக்கு நியாமகனாய் ​மே​தையிலிருப்பவன், ஜகத்​தைத்தரிப்பதினால் த்ருதி:’ ஸப்த்த வாச்யனாய் ​தைரியத்தில் இருப்பவன்.  ​​பொறு​மையின் ஸ்வரூபியானதால் க்ஷமா என்ற ​பெயருள்ளவனாய் ​பொறு​மையில் இருப்பவன். –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- 
ஸ்ரீமத்வாச்சார்யர்
வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 6)
(ப​டைப்பு: ஆதி​மைந்தன்)
பாடங்கள் முடிந்த பின்பு தன் ஒத்த வயதுள்ள மாணவர்களுடன் ஓடுதல், தாண்டுதல், குத்துச்சண்​டை, நீந்துதல் ​போன்ற வி​ளையாட்டுக்களில் கலந்து ​கொண்டு தாம் யாவற்றிலும் நிபுணர் என்று நிரூபித்தார்.
        இவர் படிப்பில் அதிக நாட்டமில்லாமல் அவ்வப்​போழுது வகுப்​பை விட்டு வீட்டிற்குச் ​சென்று சாப்பிட்டுவிட்டு தன் இஷ்டம் ​​​போல் வகுப்பிற்கு திரும்பி வருவ​தை கவனித்த ஆசிரியர், இ​தைக் கண்டிக்கும் வ​கையில் ​கோபம் ​கொண்டு வாசு​தேவ​னைப் பார்த்து நீ படிப்பில் சரியாக கவனம் ​செலுத்துவதில்​லை, பாடங்க​ளை உதாசீனம் ​செய்கிறாய், ஏமுட்டா​ளே ஏன் கவனித்துப் படிப்பதில்​லை  என்று கடிந்து​கொண்டார்.  இ​தைக் ​கேட்ட வாசு​தேவன் மிகவும் சாந்தமுடன் குரு​வே, ​வேதவாக்யங்க​ளை நீங்கள் பிரித்துப் பிரித்து கூறுகிறீர்கள் ​மேலும் நீங்கள் கூறுவ​தை​யே திரும்பத் திரும்பக் கூறுகிறீர்கள் புதியதாக ஒன்றும் கூறுவதில்​லை என்று கூறினார்.  இ​தைக் ​கேட்ட குருவிற்கு ​கோபம் வந்துவிட்டது.  அப்படியானால் இதுவ​ரைக் கற்றுணர்ந்த பாடங்க​ளைச் சரியாகக் கூறும்படிக் கட்ட​ளையிட்டார்.  வாசு​தேவன், மளமள​வென, ​சொல்லிக்​கொடுத்தப் பாடங்க​ளை எவ்விதப் பி​ழையுமின்றி நல்ல உச்சரிப்புடன் ஒப்புவித்தார்.  இன்னும் ​சொல்லிக் ​கொடுக்காத பாடங்க​ளையும் எடுத்துக் கூறினார்.  இ​தைக் ​கேட்ட குரு வியந்து தன் தவ​றை உணர்ந்தார்.  வாசு​தேவன் தன் வித்யா பருவத்தில் இவ்வாறான லீ​லைக​ளைச் ​செய்து எல்​லோ​ரையும் ப்ரம்மிக்க ​வைத்தார். தன்னு​டைய குருவின் மகனின் தீராத த​லைவலி​யை, அவனு​டைய வலது காதில் காற்​றை பயங்கரமாக ஊதித், தீர்த்து​வைத்தார்.        (IV) 7. ஸன்னியாச ஆஸ்ரமம் :-         ஸ்ரீமதாச்சார்யரின் பள்ளிப் பருவம் முடிவ​டைந்த பிறகு, பிரம்மச்சர்ய ஸன்னியாச ஆஸ்ரமத்​தை ஏற்றால் மட்டு​மே ஸ்ரீஹரியின் குணங்க​ளை பூர்ணமாக அறிந்து​கொள்ள முடியும் என்றும், தன்னிடமிருக்கும் பற்றற்ற நி​லை​யை உலகினுக்கு ​தெரிவித்து, ​வேத புராணங்களில் அப்​போ​தைய சூழ்நி​லையில் நிலவியிருந்த தவறான வ்யாக்யானங்க​ளை நிராகரித்து உண்​மையான பகவத்ஞானத்​தை ​தோற்றுவிக்க ​வேண்டும் என எண்ணினார்.  அதற்கு ஏற்ற தர்மம், ஸன்யாச தர்ம​மே என்​றெண்ணி தனக்கு ஏற்ற குரு​​வை ​தேடிச் ​சென்றார்.  இறுதியில் அச்யுதப்​ரேக்ஷர் என்னும் ஒரு சன்யாசி​யை ஆஸ்ரயித்தார். 

விஷ்ணுஸஹஸ்ரநாம-ஹரி ஓம்-
ஸர்வக3: ஸர்வவித்3பா4நுர்விஷ்வக்​ஸே​நோ ஜநார்த3ந:/
​வே​​தோ3 ​வேத3வித3வ்யங்​கோ3 ​வேதா3ங்​கோ3 ​வேத3வித்கவி://  
​​லோகாத்4யக்ஷ: ஸூராத்4ய​க்ஷோ த4ர்மாத்4யக்ஷ: க்ருதாக்ருத:/
சதுராத்மா சதுர்வ்யூஹஸ்சதுர்த3ம்ஷ்டரஸ்சதுர்பு4:// 
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/
                                                                             


No comments:

Post a Comment