Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Thursday, September 29, 2011

சாரல் 05 : துளி 27:- 25.09.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)                  சாரல் 05 : துளி 27:-25.09.2011
கீ​தையின் சாரலில்.....விஸ்வரூபதர்சனயோகம்  (11ம் அத்யாயம்) 
மத3நுக்ரஹாய பரமம் கு3ஹ்யமத4யாத்மஸம்ஜ்ஞிதம்/
பத்த்வ​யோக்தம் வசஸ்​தேந ​மோ​ஹோSயம் வி3​​​​​தோமம// (அத்யாயம் 11.ஸ்​லோ.01)
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சென்ற பத்தாவது அத்யாயத்தில் தன் விபூதிக​ளைப் பற்றி விவரித்தார்.  அவ்வத்யாயத்தில் இறுதியில் “இப்பிரபஞ்சத்​தை அ​னேக அம்ஸங்களில் ஒரு அம்ஸமாய் வ்யாபித்து நா​னே தாங்கிக்​கொண்டிருக்கி​றேன்.  என்றுக் கூறிய​தைக் ​கேட்ட அர்சுனன் ஸர்வ வ்யாப்பியான அந்த ரூபத்​தைப் பூர்ணமாயும், ஒ​ரே விஷயமாயும் காண விருப்பங்​கொண்டு ப்ரார்த்திக்கிறான்.  பகவானின் இச்​சையில்​லாமல் நாம் எ​தையும் ​செய்ய இயலாது.  இது​வே ஆன்மீகச் சிந்த​னையாளர்களின் கண்மூடித்தனமான பக்தி எனலாம்.  இந்த நம்பிக்​கையிலிருந்து நாம் விடுபடாமலிருந்தால் நமக்கு பகவானின் அனுக்கிரகம் பூர்ணமாகக் கி​டைக்கும் என்பதில் எந்தவித சந்​தேகமும் அவசியமில்​லை.  பகவானின் விபூதி தத்துவங்க​ளை ​கேட்டதினால் அர்சுனன் ​மோஹம் ஒழிந்து புத்திசுத்தமாகி ​தெளிவு​பெற்றவனாய் காணப்பட்டான்.  என​வே அர்சுனன் பகவானின் விஸ்வரூபத்​தை காண விரும்புகிறான்.

ஸ்​லோகத்தின்உட்கருத்து: அர்சுனன் கூறினான், 
என்மீதுகரு​ணை ​கொண்டுஎனக்கு   உபதேஸிக்கப்பட்டஅதிரகசியமானதும்,ஆத்மஸ்வரூபத்தை விளக்கு தானதுமான வார்த்​தைகள்         என்​னை இந்த பந்து ​நேச ​மோஹத்திலிருந்து விடுபடச்​செய்தது –அர்சுனன்-                           

இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 13) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) என​வே சக்தித: என்று கூறியதற்கு பதிலாக ​லேசத: என்று எழுதுவாயாகஎன்று கூறினார். அந்த ஸ்​லோகம் காண்க:::  §¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
 இதை​யேற்ற ஸ்ரீமதாச்சார்யர், பகவா​னை அந்த குளிர் மிகுந்த பனிப்ப்ர​தேசத்திலும் அதிகா​லை எழுந்து, கங்​கையில் நீராடி, ஒரு மண்டலம் ​மெளன விரதம் உபவாசம் இருந்து பகவத் த்யானம் ​செய்து தனது மனதில் பகவா​னை மட்டு​மே த்யானித்தார்.  அச்சமயம் ஸ்ரீ​வேதவ்யாசர் ​தோன்றி அவ​ரை ​மேல் பதிரிக்கு வருமாறு     அ​ழைத்தார்.  தான் ​மெளன விரத்திலிருந்ததால், தன் சீடர்களுக்கு பதிரீ ​க்ஷேத்ரத்தின் ​பெரு​மை​யை பா​றையில் எழுதிக்காட்டினார்.  அதாவது, பதிரீ ​க்ஷேத்ரம் பாவங்க​ளைப் ​போக்கும் என்றும், இங்கு ஓடும் கங்​கை​யை விட புணிதமான தீர்த்தம் ​வேறில்​லை என்றும், ஸ்ரீஹரிக்கு நிகரான ​தெய்வம் ​வேறில்​லை என்றும் எழுதிக்காட்டினார்.  பிறகு ஸ்ரீ​வேதவ்யாஸரின் உத்திரவுப்படி ​மேல் பதிரிக்கு பயணிக்க இருப்பதாகவும், அங்கு ​​செல்வது மிகவும் அபாயகரமானது என்றும், என​வே தான் திரும்பி வருவது நிச்சயமில்​லை என்றும் தன் உடன் வந்த சீடர்களுக்கு ​தெரிவித்து, அவர்க​ளை ஆசீர்வதித்து ​மேல் பதிரிக்கு புறப்பட்டார்.  அப்​போது சத்ய தீர்த்தர் என்றும் ​பெயர் ​பெற்ற சன்யாசி (இவர் ஐத​ரேய உபநிடத்​தை மூன்றுமு​றை ஸ்ரீமதாச்சார்யர் மூலம் பாடம் கற்றவர்) ஆசார்யரின் பிரி​வைத் தாங்க இயலாது அவருடன் புறப்பட்டார்.  அவர்கள் ​செல்லும்        பா​தை​யோ கரடு முரடான ம​​​லைப்பா​தை, வழித்தட​மே இல்லாத ம​லைகள் குன்றுகள்.  இ​தைக் கடந்து ​மேல் பதிரிக்குச் ​செல்ல​வேண்டும்.  இது அக்காலத்தில் மிகவும் சிரமமான காரியம்.  இம்ம​லைக​ளை ஸ்ரீமதாச்சார்யர் வாயு ​வேத்தில் மிகவும் எளிதாகக் கடந்து ​சென்றார்.  ம​லைக்கு ம​லைத்தாவிச் ​சென்றார்.  அவ​ரைப் பின் ​தொடர்ந்த சத்ய தீர்த்தரால் அவர் உடன்கூடிச் ​செல்ல முடியவில்​லை.  கரடுமுரடான ம​லைப்பா​தையில் நடக்க சத்ய தீர்த்தர் மிகவும் சிரமப்பட்டார்.  மா​லை ​நேரமாகிவிட்டது.  இருட்டும் சமயம் வந்துவிட்டது.  சத்ய தீர்த்தர் தனித்து விடப்பட்டதால் மிகவும் பயந்து​​போய்விட்டார்.  இவ்வ​மையம் ஸ்ரீமதாச்சார்யர் ​வெகுதூரம் ​சென்று திரும்பிப் பார்த்தார். சத்யதீர்த்தருக்கும் ஆசார்யருக்கும் இ​டை​வெளி மிகவும் அதிகமாக இருந்தது.    உட​னே ஆசார்யர், தீர்த்த​ரைப் பார்த்து “நீங்கள் வர​வேண்டாம் திரும்பிச் ​செல்லுங்கள் என்று ​கை​யை        அ​சைத்தார்.  அந்தக் ​கை அ​சைத்ததினால் உண்டான காற்றால் அவர் ஒரு நாள் முழுவதும் கடந்து வந்த தூரத்​தை, இரண்டு நாழி​கை காலத்திற்குள் கடந்து  தம் இருப்பிடம் வந்து ​சேர்ந்தார்.  அங்திருப்​போரிடம் தான் கண்டவற்​றையும், ஆசார்யர் ம​லை​யைத் தாவித்தாவி ​சென்ற​தையும், தம்மால் இயலாத​தையும் ​தெரிவித்து ஆசார்யரின் அருளாளும் மகி​மையாலும் தான் இங்கு வந்து ​சேர்ந்​தேன் என்று ஆஸ்ஸ்வாசித்தார்.
இந்நிகழ்ச்சி, கட​லைத் தாண்டிய ஹனு​ம​னையும், ​செளகந்திக மல​லை ​கொண்டுவரச் ​சென்ற பீம​சேன​னையும் சரியாக நி​னைவுபடுத்துகிறது.
ஸ்ரீ​வேதவ்யாஸரின் தரிசனம் ஸ்ரீவிஷ்ணுவின் தாம​​லைப் பாதங்களில் மனம் ​வைத்தவராய், ​மோக்ஷ்​சோயுபாயத்திற்கு சாத​னமான மதத்​தை ​தோற்றுவித்த ஸ்ரீமதாச்சார்யர் இமயம​லையின் உச்சியில் அ​மைந்துள்ள ​மேல் பதிரிக்கு ​சென்ற​டைந்தார்.  அந்த ​க்ஷேத்ரத்​தைக் கண்டு இ​றைவனின் ஸ்ருஷ்டி​யை எண்ணி மனதாரப் ப்ரார்த்தித்தார்.  அம்ம​லை பூக்களுடன் கூடிய அழகான ​பெரிய மரங்கள் நி​றைந்ததாகவும், அங்கிருந்த நீர்நி​லைகளில் தாம​​​ரைப் பூக்கள் கண்களுக்கு ​பொலி​வைக் ​கொடுபக்பதாகவும், ஸத்ஜனங்களுக்கு அ​மைதி​யையும், ஆனந்தத்​தையும் ​கொடுப்பதாகவும் அ​மைந்திருப்ப​தைக் கண்டு ஸ்ருஷ்டிகர்த்தாவான ஸ்ரீவிஷ்ணு​வை மனதில் நி​னைத்து ப்ரார்த்தித்தார்(இன்னும் ​தொடரும்...........)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/



Wednesday, September 21, 2011

சாரல் 05 : துளி 26:- 18.09.2011

பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 


சாரல் 05 :  துளி 26:-  18.09.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம்
 (11ம் அத்யாயம்)

அத்யாயச் சுருக்கம்:  ​(சென்ற இதழின் ​தொடர்ச்சி...) (அர்சுனன்:-)    நான் இதுநாள் வ​ரை உன் விஸ்வரூபத்​தைப் பார்த்ததில்​லை.  தற்​போது உன் விஸ்வரூபம் கண்டவுடன் மிகவும் சந்​தோஷம​டைகி​றேன்.  உன் இந்த ரூபம் என் மதிற்கு பயத்​தை உண்டாக்கி தன்பம​டையச் ​செய்கிறது.  ஆ​கையால் பகவா​னே! உமது பூர்வ ரூபத்தில் காட்சி ​கொடும்.  என்னிடம் கிரு​பை புரிவாயாக.  ​ஹே ஸ்ரீகிருஷ்ணா! உன் பழய ரூபமான சங்கு, சக்ரம், கிரீடம், க​தையுடன்ான ​தோற்றத்​தைக் காண விரும்புகி​றேன்.  எண்ணற்ற ​கைகளுடன் எல்லா இடத்திலும் வ்யாபித்திருப்வ​ரே!  நீர் நான்கு ​கைகளுடன் தரிசனம் ​கொடுக்க ​வேண்டுகி​றேன்.   
பகவான் ( ஸ்ரீகிருஷ்ணர் விஸ்வரூபத்​தை ம​றைத்துக்​கொண்டு முன்​போல பழய ரூபத்​தை ஏற்று அர்சுன​னை ​நோக்கிக் கூறுகிறார்)     அர்சுனா! உன் ​மேல் அன்பு ​கொண்​டேன்.  உனக்கு அனுக்ரஹம் ​செய்யும் ​நோக்​கோடு என் ஐஸ்வர்ய ​யோக சக்தியால் இவ்விஸ்வரூப தர்ஸனத்​தைக் காட்டி அருளி​னேன்.  ஒளி மிக்கதும்,  ஆதியும் முடிவுமில்லாததும், யாவற்றிக்கும் முதன்​மையாக விளங்கும் இந்த விஸ்வரூபம் உன்​னைத் தவிற ​வே​றொருவருக்கு இதுவ​ரையில் காண்பிக்கப்படவில்​​​லை. (மாதா ய​சோதா மண் தின்ற வாயில் கண்டதும், ​கொளரவ ச​பையில் துரி​யோதனன் கண்டதும் கூட நீ கண்டதற்கு ஒப்பாகாது என்பதாக கூறுகிறார்)
​வேதாத்யாயணம், யாகயக்ஞம், தானதர்மங்கள், ​வைதீகக் கிரி​யைகள் மற்றும்கூட கடு​மையான தவத்தினாலும் இம்மானுட​​லோகத்தில் உன்​னைத் தவிர ​வே​றொருவர் இந்த விஸ்வரூபத்​தைப் பார்ப்ப​தென்பது ஸாத்யமற்றது.  அதிபயங்கரமான இந்த ரூபத்​தைப் பார்த்து நீ பயப்பட ​வேண்டாம்.  உன் புத்தி மயக்கத்தால் அறிவீனமும் ​வேண்டாம்.  பயம் நீங்குவாயாக.  ஸந்​தோஷமாக மீண்டும் என் பூர்வ ரூபத்​தைப் பார்.
ஸஞ்சயர்  உலக​தைத்துள்ளும் உ​றைந்து வசிக்கும் வாசு​​தேவனை அர்சுன​னைப் பார்த்து இங்கணம் கூறினார்.  மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணராக குளிர்ந்த பார்​வையுடன் ​தோன்றி பயத்தால் நடுங்கும் அர்சுன​னை சமாதானப்படுத்தி ​தேற்றினார்.
அர்சுனன்  கிருஷ்ணா! உனது அழகான கிருஷ்ண வடிவத்​தைப் பார்த்த பிறகுதான் எனக்கு பிரக்​ஞை வந்தது.  மனம் ​தெளிந்தது.  இயற்​கைக் தன்​மை எய்தியவனாய் இருக்கி​றேன்.
பகவான் நீ பார்த்த இந்த விஸ்வரூபத்​தை ​தேவர்களும் பார்க்க விரும்புவார்கள்.  நீ பார்த்த இந்த ரூபத்​தை ​வேத அத்யயணங்கள் ​செய்வதா​லோ, தவத்தின் மூல​மோ, அல்லது தானங்கள் ​செய்வதா​லோ, அல்லது யாகம் ​செய்வதா​லோ பிறர் பார்ப்பது என்பது முடியாத காரியம்.  ​லெளகீக விஷயங்களிலிருந்து சிந்த​னை​யைத் திருப்பி, என்​னை​யே நாட்டம் ​கொள்ளும் பக்தியினால் மட்டு​மே இந்த ரூபத்​தைப் பார்க்க முடியும்.  பார்த்தபடி அறியவும் அதன்படி உணரவும் முடியும்.  பாண்டவா! எனக்கு பிடித்தமான கர்மங்க​ளை​யே ​செய்து​கொண்டு, என்​னைவிட ​மேலான ​பொருள் ஒன்றில்​லை எனக் கருதி, என்னிடம் பக்தி​கொண்டு, பற்றி​னை அகற்றி, எல்லா பிராணிகளிடத்திலும் அன்புகாட்டி ​தோஷமற்றிப்பவ​னே என்​னை அ​டைகிறான்
மத்கர்மக்ருந்மத்பர​மோ மத்34க்த: ஸங்க3வர்ஜித:/
நிர்​வைர: ஸர்வபூ​4தோஷூ ய: ஸ மா​​மேதி பாண்ட3// (11-55)
இவ்வாறாக ஸ்ரீமத்பகவத் கீ​தையில் ஸ்ரீகிருஷ்ணார்ஜூன சம்பாஷ​ணையில் 11ம் அத்யாயமான விஸ்வரூப தர்ஸன ​யோகம்-அத்யாயச் சுருக்கம் இனி​தே முடிவுற்றது.
​யே ஸ்மரந்தி ஸதா விஷ்ணும் ஸங்க2 சக்ரகதா34ரம்/
ஸர்வபாப விநிர் முக்தா: பரம் ப3ரம்ஹ விஸந்தி ​தே//   (ஸ்ரீமத்வர் ---ஸ்ரீக்ருஷ்ணாம்ருத மஹர்ணவ:)
​சென்ற அத்யாயத்தின் க​டைசி ஸ்​லோகத்தில் பகவான் அர்சுனனுக்கு இவ்வாறு உப​தேஸிக்கிறார்
“ஓ அர்சுனா!  என்னால் ​சொல்லப்பட்டதும், நீ ​தெரிந்து ​கொண்டதுமான முன்னால் ​சொல்லப்பட்ட சூர்யன் முதலியவர்களுக்கு நியாமகனாய் இருக்கும் விபூதி ரூபத்தினால் உனக்கு என்ன பயன்?  இப் ப்ரபஞ்சத்​தை அ​னேக அம்ஸங்களில் ஒரு அம்ஸமாய் வ்யாபித்து நா​னே தாங்கிக்​கொண்டு இருக்கி​றேன். –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-

​​தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/ பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/ நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
 தகவலுக்காக: ஆச்சார்ர் ஸ்ரீமத்வர் தம் சீடர்கள் சிலருடன் பத்ரிகாஸம் ​சென்று அங்குள்ள ஸ்ரீநரநாராயண ஸ்வாமி​யை நமஸ்கரித்து தான் இயற்றிய கீதா பாஷ்ய நூ​லை காணிக்​கையாக சமர்ப்பித்தார்.  ஸ்ரீநரநாராயண​னை தனி​மையில் தரிசித்து, தான் எழுதிய கீதா பாக்ஷ்யத்தின் மங்களா சரண ஸ்​லோகத்​தை ​சொன்னார்.  அதில் “சக்திதவஸ்மி  அதாவது “தன் சக்தி அளவு கூறுகி​றேன்”  என்று படித்த​தை கவனித்த ​ஸ்வாமி நாராயணர், ஆச்சார்ய​ரை ​நோக்கி “நீ கீ​தையில் இருக்கின்ற எல்லா ஸ்​லோகங்களின் உட்​பொரு​ளை நன்கு விளக்கக்கூடிய சக்தி ​பெற்றவனாக இருந்தும் இவ்வளவு மட்டு​மே எடுத்துக்கூறியுள்ளாய்.  என​வே சக்தித: என்று கூறியதற்கு பதிலாக ​லேசத: என்று எழுதுவாயாகஎன்று கூறினார். அந்த ஸ்​லோகம் காண்க:::
§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/

Monday, September 19, 2011

சாரல் 05 : துளி 25:- 11.09.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
துளி:5, தேதி:11.09.11
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம்            (11ம் அத்யாயம்)
அத்யாயச் சுருக்கம்:  ​(சென்ற இதழின் ​தொடர்ச்சி...) விஷ்ணு​வே! ​தேவ ​தேவ! ஜகத்பதி​யே! உமது இந்த ரூபத்​​தைக் கண்ட உடன் நான் மிகவும் நடுநடுங்கிப் ​போ​னேன்.  இதனால் எனக்கு துணிவும் சுகமும் இல்​லை.  அ​மைதியும் எனக்கில்​லை.  நான் திக்ப்ரமம் பிடித்தவ​னைப் ​போலிருக்கி​றேன்.  உலகாளுகின்ற மன்னர் கூட்டமும், திருதாஷ்டிரரு​டைய புத்திரர்கள் அ​னைவரும், அப்படி​யே பீஷ்மர்,          து​ரோணர், கர்ணன் மற்றும்கூட எமது யுத்த வீரர்களும் உமது முகங்களில் வந்து விழுகிறார்கள்.  சிலர் உமது ​கோ​ரைப்பற்களின் நடுவில் சிக்கிக்​கொண்டு த​லை துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.  ஸமுத்திரத்​தை ​நோக்கி​யே நதிகள் திரண்​டோடுவ​தைப்​போல, இவ்வுலக வீரர்கள் யாவரும் ஜ்வலிக்கும் உன் வாயில் புகுகிறார்கள். விட்டில் பூச்சிகள் நாசம​டைவதற்காக சுடர்விட்டு எரியும் தீயில் புகுவ​தைப் ​போல, உலகத்துயிர்கள் யாவும் நாசம​டைவதற்காக​வே உன் வாயில் வந்து விழுகின்றன.  உமது கனல் வீசும் முகத்தால் உலக​னைத்​தையும், உயிர் வாழும் கூட்டங்க​ளையும் விழுங்குகிறாய்.  மிகவாக ரத்தம் ​பெருகும் உதடுக​ளை நாவால் நக்குகிறாய்.  இவ்வாறாக உக்ரரூபத்துடன் ​தோன்றும் நீர் யார்?  எனக்கு அறிவிப்பாயாக.  ​தேவ ஸ்​ரேஷ்ட​னே! உனக்கு நமஸ்காரங்கள்.  எனக்கு அருள்புரிய ​வேண்டுகி​றேன்.  உன்​னை அறிவதற்கு விரும்புகி​றேன்.  உன் ​செயல்பாடுக​ளை என்னால் அறியமுடியவில்​லை.
பகவான்: (பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ​கோரரூபத்​தை எடுத்ததற்கான காரணத்​தைச் ​சொல்லுகிறார்)          ​ஹே! அர்சுனா! இப்பிரபஞ்சத்​தை ஸம்ஹாரம் ​செய்வதற்காக கால ​தேவனாய் இருக்கி​றேன்.  இப்​போர்களத்தில் நின்றிருக்கும் ​போர் வீரர்கள் அ​னைவரும் என்னால் மரணம​டையப் ​போகிறார்கள்.  (இப்​​போரில் பாண்டவர்கள் ஐவர், அஸ்வத்தாமா, க்ருபாச்சார்யர், க்ருதவர்மா ஆகி​யோர் தவிர மற்​றோர்கள் இறப்பது திண்ணம் என்ப​தை அர்சுனனுக்கு முன்கூட்டி​யே அறிவிக்கிறார்)  உன் எதிரிக​ளைக் ​கொன்றுவிடுவ​தோ அல்லது விடுவிப்ப​தோ உன்​கையிலில்​லை.  அவ்வாறு எண்ணினாயானால் அது உனது அஜ்ஞான​மே யாகும்.  என​வே நா​னே யாவற்​றையும் நாஸம் ​செய்யும் சக்தி​கொண்டவனாய் இருப்பதால் நீ யுத்தம் ​செய்வதற்கு எழுந்திரு.  ஸத்ருக்க​ளை அழி.  ​பெய​ரையும் புக​ழையும் அ​டைவாயாக.  இப்​போர் வீரர்கள் எல்​லோரும் முன்ன​மே என்னால் ​கொல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  என​வே, நீ ​வெறும்காரணன் மாத்திர​மே என்ப​தை அறிவாயாக.  இரு​கைகளால் ​போர்புரியும் வீர​னே அர்சுனா!  து​ரோண​ரையும், பீஷ்ம​ரையும், ஜயத்ரத​னையும், கர்ண​னையும் மற்றும் உள்ள ​போர் வீரர்க​ளையும் என்னால் ​கொல்லப்பட்டவர்க​ளைப் ​போலிருக்கின்ற இவர்க​ளைக் ​கொல்வாய்.  பயப்படா​தே.  வருந்தா​தே.  யுத்தம்​செய்.  ​போரில் எதிரிக​ளை ​வெல்பவனாக இரு.
ஸஞ்சயன்:-(திருதராஷ்ரரிடம்கூறுகிறார்)  ​கேசவனு​டைய இந்த வார்த்​தைக​ளைக் ​கேட்ட அர்சுனன் மிகவும் நடுக்கமுற்றவனாயும் பயந்தவனாயும் ​கைகூப்பி வணங்கி மிகவும் பவ்யமானக் குரலில் கூறலானான்.
அர்சுனன்:- ஹ்ருஷீ​கேச! உன்னு​டைய கீர்த்தியால் உலகம​னைத்தும் சந்​​தோஷம​டைகிறது.  மக்கள் உன்னிடத்தில் அன்பு ​செலுத்துகிறார்கள்.  ராக்ஷஸர்கள் பயந்து ஓடுகிறார்கள்.  ஸித்த கணங்கள் உன்​னை வணங்குகிறார்கள்.  யா​ரையும்விட ​மேலானவன் நீ.  பிரம்ம​னைப் ப​டைத்தவன் நீ.  உன்​னை நமஸ்கரிப்பதில் ஆச்சிர்யம் ஏதுமில்​லை.  எல்​லையற்றவன் நீ.  ஜகத்திற்கு இருப்பிடமானவன் நீ​யே.  உண்​மையும் இன்​மையும் அதற்கும் ​மேலானவனும் நீ​யே.  ஆதி​தேவ!  ​தேவர்களுக்கும்​ தேவன் நீ. என்றும் அழியாத ஆத்மஸ்வரூபியான பரம புருஷன் நீ.  இப்பிரபஞ்சத்தின் ஆதாரம் நீ​யே.  யாவற்​றையும் அறிகிறவனும் அறிய​வேண்டியவரும் நீ​யே. பரமபதம் என்று ​சொல்லப்படுகின்ற ​வைகுண்டமும் நீ​யே.  எல்​லையற்ற ரூபத்துடன் நீ​​யே இப்பிரபஞ்சம் முழுவதும் வ்யாபித்திருக்கிறாய்.   
வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி நீ​ரே.  பிரம்மாவிற்கு தந்​தை நீ.  உமக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள்.  ​தேவ​தேவ​னே! ஆயிரம் மு​றையும் உமக்கு நமஸ்காரங்கள்.  அதற்கும் அதிகமாகவும் உமக்கு நமஸ்காரங்கள்.  (மீண்டும் மீண்டும் பகவா​னை நமஸ்கரிக்கிறான் அர்சுனன்)  ​ஹே ​லோகநாதா! உன் ​பெரு​மைக​ளையும், இந்த விஸ்வரூபத்​தையும் அறியாதவனாக இருந்துவிட்​டேன்.  உன்னிடம் அதிகமான அன்பு​கொண்டு உன்​னை அன்​னோன்ய நண்பனாக நி​னைத்​தேன்.  அதனா​லோ என்ன​வோ, உன்​னை “அ​டே கிருஷ்ணா அ​டே யாதவா “அ​டே நண்பாஎன்​றெல்லாம் துடுக்குத்தனமாய் விளித்திருக்கி​றேன்.  யாவற்​றையும் ​பொருத்தருள​வேண்டும்.  நான் பரிஹாசமாகக் கூறிய​தையும், ​வேடிக்​கையாக அவமதித்த​தையும் க்ஷமித்தருள ​வேண்டும்.  நான் உன்னுடன் வி​ளையாடியது, படுத்துறங்கிறது, உண்பது, வீற்றிருப்பு யாவற்​றையும் ​பொருத்தருள​வேண்டும்.  என்​னை மன்னித்தருள ​வேண்டுகி​றேன். 
        ஒப்பற்ற ​பெரு​மை ​பெற்றவ​னே! ​கோவிந்தா! இப்பிரபஞ்சத்திற்கு தகப்பன் நீ.  பூ​​ஜைக்குரியவர் நீமூவ்வுலகங்களிலும் உமக்கு ஒப்பானவர் இல்​லைஉனக்கு ​மேலான ​வே​றொருவருண்​டோ?
        ஆ​கையால் ​தேவ​தேவா! நான் என் உட​லைத் தாழ்த்தி மண்டியிட்டு நமஸ்கரிக்கி​றேன்.  ஸர்​வேஸ்வரா! பூ​ஜைக்குரியவ​ரே!  நீர் என்னிடம் கிரு​பை ​செய்ய ​வேண்டுமாய் ப்ரார்த்திக்கி​றேன்.  மகன் ​செய்த பி​ழை​யைத் தந்​தை ​பொறுப்பது​போலும், நண்பன் ​செய்யும் ஏளனத்​தை நண்பன் ​பொறுப்பது ​போல, ம​னைவி ​செய்த அபராதத்​தை கணவன் ​பொறுப்பது ​போல உமக்கு அறியா​மையால் நான் ​செய்த தவ​றைப் ​பொறுத்தருள​வேண்டுகி​றேன். (இன்னும் உள்ளது)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/ 
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/ 
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//



Monday, September 5, 2011

சாரல் 05 துளி 24 04.09.2011

பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
சாரல் 05   துளி 24  04.09.2011
இதழ் ஆசிரியர்: ஆதி​மைந்தன்:: இ​ணை ஆசிரியர்: வாயுமித்ரன்
கீ​தையின் சாரலில் விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)

ஸ்ரீமத் ஹனுமத்பீ4ம மத்4வாந்தர்க்கத ராமக்ருஷ்ண
​வேத3வ்யாஸாத்மக லக்ஷ்மிஹயக்ரீவாய நம:/  ஓம்
     அத்யாயச் சுருக்கம்:  ஸ்ரீகிருஷ்ணரின் அந்தர்யாமியான ரூபங்க​ளை தியானிப்பது சம்மந்தமான விஷயங்கள் ​சென்ற அத்யாயத்தில் ​சொல்லப்பட்டது.  பகவானு​டைய அருள் இல்லாமல், அ​வைக​ளை உண்​மையாகவும் பூர்ணமாகவும் அறிவ​தென்பதும், தியானஞ்​செய்வ​தென்பதும் ஸாத்யமானது அல்ல.  அந்த ரூபங்க​ளை ஒருமுகப்படுத்தி ஒ​ரே ​தொகுப்பாக ​நேரி​டையாக அர்சுனனுக்கு தர்சனம் ​கொடுத்து வர்ண​னை ​செய்கிறார் கீதாசார்யர்.  10வது அத்யாயத்தின் விரிவாக்கம் இது எனலாம்.
அர்சுனன்: “நீ அருள் ​செய்தாய், உன் உப​தேஸத்தால் நான் புத்திமயக்கத்திலிருந்து விடுபட்​டேன்.  உன் மஹி​மைக​ளையும், நீர் ​செய்கின்ற உற்பத்தி மற்றும் அழி​வையும் ​சொல்லக்​கேட்​டேன்.  பரம்​பொரு​ளே!   ​​லோகேஷ்வரரான உமது ரூபத்​தை நீர் வர்ணித்தபடி​யே நான் பார்க்க சித்தமாக உள்​ளேன்.  மஹாப்ரபு​வே! ஸகல சக்திக்கும் ஈஸ்வரா! நான் உன் விஸ்வரூபத்​தை பார்க்க தகுதியும் சக்தியும் உள்ளவனாக இருந்தால், என்றுமழியாத உன் ஸ்வரூபத்​தை எனக்கு காண்பிப்பாயாக.
ஸ்ரீகிருஷ்ணர்: அர்சுனா பலவிதங்களில் ​தோற்றமளிக்கும் என் ரூபங்க​ளைப் பார்.  பல வர்ணங்களும், உருவங்களும் பல ஆயிரம் கணக்கில் ​தெரிவ​தைப் பார்.  ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அச்லினி ​தேவர்கள் மருத்துக்கள் ​போன்ற ​தேவகணங்க​ளையும், நீ இதுவ​ரையில் பார்த்திறாத பல அபூர்வங்க​ளையும், ஆச்சிர்யங்க​ளையும் பார்.  நீ இங்கிருந்து​கொண்​டே, இப்பிரபஞ்சம் முழுவ​தையும் பார்.  இன்னும் ​பல்வேறு விஷயங்க​ளையும் என் ​தேகத்தில் ஒ​ரேயிடத்தில் பார்.  ஆனால் இப்​போதிருக்கும் உன் சாதாரணப் பார்​வையால் நீ பார்க்க முடியாதாக​யைால், நான் உனக்கு ​தெய்வத்தன்​மை ​பொருந்திய திவ்யமானப் பார்​வை​யைக் ​கொடுக்கி​றேன்.  அப்பார்​வை மூலம் என் ஈஸ்வர ஸ்வரூபத்​தை விளக்கும் ​யோகத்​தைப் பார்.
ஸஞ்சயர் :  “திருதிராஷ்ர மஹாராஜ​ரே! ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு கூறிவிட்டு, பார்த்தனுக்கு ஸர்​வோத்தமமான ஈஸ்வர வடிவத்​தை காட்டியருளினார்அவ்வடிவம் பல முகங்க​ளையும் கண்க​ளையும் ​கொண்டதாகவும், பல அற்புதக் காட்சிகள் நி​றைந்ததாகவும், திவ்யமான பல ஆபரணங்கள் மற்றும் பல ஆயுதங்கள் உ​டையதாகவும், திவ்யமா​லைக​ளையும், ஆ​டைக​ளையும் அணிந்து, பல்​வேறு வாச​னை ​பொருள்க​ளைால் பூசப்பட்டு, எங்​கெங்கு காணினும் முகங்களாக, எல்​லையற்ற மஹா ஆச்சிர்யமானதுமான மஹாபுருஷ​னைப் பார்த்தான்.
        வானத்திலிருக்கும் ஆயிரம் சூரியன்கள் ஒன்றுகூடி ஒ​ரே சமயம் பிரகாசிக்குமானால், அது எந்தளவு காந்தியுடன் இருக்கு​மோ, அது மஹா புருஷரிடமிருந்து உண்டாயிற்று. 
        அப்​போது பாண்டவ புத்திரன், அங்​கே ​தேவ​தேவனான கண்ணனு​டைய ​தேஹத்தில் இப்பிரபஞ்சம் முழுவ​தையும் ஒரு​சேரக் கண்டான்.  பிறகு தனஞ்​செயன் ஆச்சர்யத்தால் ​வெள​​வெளத்து நின்றான்.  பயத்தால் அவன் ​தேகம் நடுங்குவது​போல் இருந்தது.  புளங்காகிதம் அ​டைந்தவனாய் ​தேவ​தேவ​னைக் ​கைகூப்பி நமஸ்கரித்து த​லைவணங்கி அஞ்சலி​செய்து கூறலானான்.
அர்சுனன்:  (பகவானு​டைய அதிஅற்புதமான சக்திவாய்ந்த ரூபத்​தைக் கண்ணுற்ற அர்சுனனின் மனதில்     சி​நேக பாவ​னை நீங்கி பயமும் பக்தியும் ஓங்கி நின்றது.  பகவா​னை ​நோக்கி ப்ரார்த்திக்கிறான்)
        “​தேவ​தேவ! உன் ​தேகத்தில் பலவித உயிர்க் கூட்டங்க​ளையும், ​தேவர்க​ளையும் அணிஅணியாகக் காண்கி​றேன்.  தாம​ரை மலரில் வீற்றிருக்கும் பிரம்ம​னையும், சிவ​பெருமா​ளையும், பலரிஷிக​ளையும் மற்றும் ​தெய்வீகம் நி​றைந்த நாகங்க​ளையும் பார்க்கி​றேன்.  ​​லோகநாதா! எண்ணிக்​கையிலடங்காத வாயும், வயிறும் கண்களும் உ​டையவறாகவும், எல்​லையற்ற ரூபத்​தை உ​டையவறாய் உன்​னை எங்கும் காண்கி​றேன்.  விச்​வேச்வரா! உன்னு​டைய ஆதியும், நடுநி​லையும் முடி​வையும் அறிய முடியவில்​லை.  உன்​னை கிரீடம் தரித்த வறாயும், க​தை​யேந்தியவனாயும், சக்ராயுதபாணியாயும் பார்க்கி​றேன்.  எப்புறமும் உன் ஒளி வீசுகிறது.  அவ்​வொளி கண்க​ளைக் கூசச் ​செய்கிறது.  ஒளி நி​றைந்த ​நெருப்புக் ​கொழும்பாய், சூர்யன் ​போன்று பிரகாசிக்கிறாய்.  அளவிடுவதற்கு அறியதாய் உள்ள உன்​னை எவ்விடத்திலும் காண்கி​றேன். நீ அழிவற்றவன், நீ ஸர்​வோத்தமன்.  இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரம் நீ.  மாறுபாடில்லாதவன்.  தர்மத்​தை ரக்ஷிக்கிறவன் நீ.  நீ பரமபுருஷன் என்று எண்ணுகி​றேன்.  நீ ஆதியும், நடுவும், முடிவுமில்லாதவன்.  எல்​லையற்ற சக்தியு​​டையவன் நீ.  எல்​லையற்ற ​கைக​ளையும் அவயங்க​ளையும் உ​டையவன் நீ.  சந்திர சூர்யர்க​ளை ​நேதிதிரங்களாயு​டையவன் நீ.  ​கொழுந்துவி​​டெறியும் ​நெருப்​பைப் ​போல வாயு​டையவன் நீ.  தன் ​தேஜஸினால் இவ்வுல​கை​யே எரிக்கும் சக்தி​பெற்றவறாகக் காட்சியளிக்கிறாய்.  மஹாத்ம​னே!  வானுக்கும், மண்ணுக்கும் நடுவிலுள்ள சகலத்திக்குகளிலும் நீ​யே நி​றைந்திருக்கிறாய்.  உன்னு​டைய இந்த அற்புதமான ​கோரரூபத்​தைக் கண்டு மூவ்வுலகங்களும் துன்பம​டைகிறது.       இ​தோ ​தோன்றும் ​தேவக்கூட்டங்கள் உம்மிடத்தில் புகுகிறார்கள்.  சிலர் பயந்தவர்களாய் ​கைகூப்பி உன்​னைத் துதிக்கிறார்கள்.  மஹரிஷிகளும், சித்தர்களும் உன்​னை ஸ்​​ஸோத்திரம் ​செய்கிறார்க்ள்.   ருத்தரர், ஆதித்யர், வசுக்கள், ஸாத்யர், விச்வ​தேவர், அசுவினி ​தேவர்கள், மருத்துக்கள், பித்ருக்கள், கந்தர்வர், யக்ஷர், அசுரர், ஸித்தர் எல்​லோரு​மே வியப்புற்று உன்​னைப் பார்க்கிறார்கள்.  உன் பல முகங்களையும் ஒவ்​​வொரு முகத்தில் கண்க​ளையும், ​கைக​ளையும், து​டைக​ளையும், கால்க​ளையும், வயிறுக​ளையும்  உள்ளதாய் பற்பல ​கோ​ரைப்பற்களால் அதிபயங்கரமாய் இருக்கும் உமது மஹத் மஹாரூபத்​தைப் பார்த்து யாவரும் பயம் ​கொள்கிறார்கள்.  நானும் அச்சமுருகி​றேன்".  
(அடுத்தவாரம் ​​தொடரும்)
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/                     
வெளியீடு: கீ​தை ​​ஸேவா டிரஸ்ட் & ஜனனி  ​சென்டர், மணம்பூண்டி, Email : geethaisevatrust@gmail .com