பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
சாரல் 05 துளி 24 04.09.2011
இதழ் ஆசிரியர்: ஆதிமைந்தன்:: இணை ஆசிரியர்: வாயுமித்ரன்
கீதையின் சாரலில் விஸ்வரூபதர்சன யோகம் (11ம் அத்யாயம்)
சாரல் 05 துளி 24 04.09.2011
இதழ் ஆசிரியர்: ஆதிமைந்தன்:: இணை ஆசிரியர்: வாயுமித்ரன்
கீதையின் சாரலில் விஸ்வரூபதர்சன யோகம் (11ம் அத்யாயம்)
ஸ்ரீமத் ஹனுமத்பீ4ம மத்4வாந்தர்க்கத ராமக்ருஷ்ண
வேத3வ்யாஸாத்மக லக்ஷ்மிஹயக்ரீவாய நம:/ ஓம்
அத்யாயச் சுருக்கம்: ஸ்ரீகிருஷ்ணரின் அந்தர்யாமியான ரூபங்களை தியானிப்பது சம்மந்தமான விஷயங்கள் சென்ற அத்யாயத்தில் சொல்லப்பட்டது. பகவானுடைய அருள் இல்லாமல், அவைகளை உண்மையாகவும் பூர்ணமாகவும் அறிவதென்பதும், தியானஞ்செய்வதென்பதும் ஸாத்யமானது அல்ல. அந்த ரூபங்களை ஒருமுகப்படுத்தி ஒரே தொகுப்பாக நேரிடையாக அர்சுனனுக்கு தர்சனம் கொடுத்து வர்ணனை செய்கிறார் கீதாசார்யர். 10வது அத்யாயத்தின் விரிவாக்கம் இது எனலாம்.
அர்சுனன்: “நீ அருள் செய்தாய், உன் உபதேஸத்தால் நான் புத்திமயக்கத்திலிருந்து விடுபட்டேன். உன் மஹிமைகளையும், நீர் செய்கின்ற உற்பத்தி மற்றும் அழிவையும் சொல்லக்கேட்டேன். பரம்பொருளே! லோகேஷ்வரரான உமது ரூபத்தை நீர் வர்ணித்தபடியே நான் பார்க்க சித்தமாக உள்ளேன். மஹாப்ரபுவே! ஸகல சக்திக்கும் ஈஸ்வரா! நான் உன் விஸ்வரூபத்தை பார்க்க தகுதியும் சக்தியும் உள்ளவனாக இருந்தால், என்றுமழியாத உன் ஸ்வரூபத்தை எனக்கு காண்பிப்பாயாக.
ஸ்ரீகிருஷ்ணர்: “அர்சுனா பலவிதங்களில் தோற்றமளிக்கும் என் ரூபங்களைப் பார். பல வர்ணங்களும், உருவங்களும் பல ஆயிரம் கணக்கில் தெரிவதைப் பார். ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அச்லினி தேவர்கள் மருத்துக்கள் போன்ற தேவகணங்களையும், நீ இதுவரையில் பார்த்திறாத பல அபூர்வங்களையும், ஆச்சிர்யங்களையும் பார். நீ இங்கிருந்துகொண்டே, இப்பிரபஞ்சம் முழுவதையும் பார். இன்னும் பல்வேறு விஷயங்களையும் என் தேகத்தில் ஒரேயிடத்தில் பார். ஆனால் இப்போதிருக்கும் உன் சாதாரணப் பார்வையால் நீ பார்க்க முடியாதாகயைால், நான் உனக்கு தெய்வத்தன்மை பொருந்திய திவ்யமானப் பார்வையைக் கொடுக்கிறேன். அப்பார்வை மூலம் என் ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்கும் யோகத்தைப் பார்.
ஸஞ்சயர் : “திருதிராஷ்ர மஹாராஜரே! ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு கூறிவிட்டு, பார்த்தனுக்கு ஸர்வோத்தமமான ஈஸ்வர வடிவத்தை காட்டியருளினார். அவ்வடிவம் பல முகங்களையும் கண்களையும் கொண்டதாகவும், பல அற்புதக் காட்சிகள் நிறைந்ததாகவும், திவ்யமான பல ஆபரணங்கள் மற்றும் பல ஆயுதங்கள் உடையதாகவும், திவ்யமாலைகளையும், ஆடைகளையும் அணிந்து, பல்வேறு வாசனை பொருள்களைால் பூசப்பட்டு, எங்கெங்கு காணினும் முகங்களாக, எல்லையற்ற மஹா ஆச்சிர்யமானதுமான மஹாபுருஷனைப் பார்த்தான்.
வானத்திலிருக்கும் ஆயிரம் சூரியன்கள் ஒன்றுகூடி ஒரே சமயம் பிரகாசிக்குமானால், அது எந்தளவு காந்தியுடன் இருக்குமோ, அது மஹா புருஷரிடமிருந்து உண்டாயிற்று.
அப்போது பாண்டவ புத்திரன், அங்கே தேவதேவனான கண்ணனுடைய தேஹத்தில் இப்பிரபஞ்சம் முழுவதையும் ஒருசேரக் கண்டான். பிறகு தனஞ்செயன் ஆச்சர்யத்தால் வெளவெளத்து நின்றான். பயத்தால் அவன் தேகம் நடுங்குவதுபோல் இருந்தது. புளங்காகிதம் அடைந்தவனாய் தேவதேவனைக் கைகூப்பி நமஸ்கரித்து தலைவணங்கி அஞ்சலிசெய்து கூறலானான்”.
அர்சுனன்: (பகவானுடைய அதிஅற்புதமான சக்திவாய்ந்த ரூபத்தைக் கண்ணுற்ற அர்சுனனின் மனதில் சிநேக பாவனை நீங்கி பயமும் பக்தியும் ஓங்கி நின்றது. பகவானை நோக்கி ப்ரார்த்திக்கிறான்)
“தேவதேவ! உன் தேகத்தில் பலவித உயிர்க் கூட்டங்களையும், தேவர்களையும் அணிஅணியாகக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனையும், சிவபெருமாளையும், பலரிஷிகளையும் மற்றும் தெய்வீகம் நிறைந்த நாகங்களையும் பார்க்கிறேன். லோகநாதா! எண்ணிக்கையிலடங்காத வாயும், வயிறும் கண்களும் உடையவறாகவும், எல்லையற்ற ரூபத்தை உடையவறாய் உன்னை எங்கும் காண்கிறேன். விச்வேச்வரா! உன்னுடைய ஆதியும், நடுநிலையும் முடிவையும் அறிய முடியவில்லை. உன்னை கிரீடம் தரித்த வறாயும், கதையேந்தியவனாயும், சக்ராயுதபாணியாயும் பார்க்கிறேன். எப்புறமும் உன் ஒளி வீசுகிறது. அவ்வொளி கண்களைக் கூசச் செய்கிறது. ஒளி நிறைந்த நெருப்புக் கொழும்பாய், சூர்யன் போன்று பிரகாசிக்கிறாய். அளவிடுவதற்கு அறியதாய் உள்ள உன்னை எவ்விடத்திலும் காண்கிறேன். நீ அழிவற்றவன், நீ ஸர்வோத்தமன். இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரம் நீ. மாறுபாடில்லாதவன். தர்மத்தை ரக்ஷிக்கிறவன் நீ. நீ பரமபுருஷன் என்று எண்ணுகிறேன். நீ ஆதியும், நடுவும், முடிவுமில்லாதவன். எல்லையற்ற சக்தியுடையவன் நீ. எல்லையற்ற கைகளையும் அவயங்களையும் உடையவன் நீ. சந்திர சூர்யர்களை நேதிதிரங்களாயுடையவன் நீ. கொழுந்துவிடெறியும் நெருப்பைப் போல வாயுடையவன் நீ. தன் தேஜஸினால் இவ்வுலகையே எரிக்கும் சக்திபெற்றவறாகக் காட்சியளிக்கிறாய். மஹாத்மனே! வானுக்கும், மண்ணுக்கும் நடுவிலுள்ள சகலத்திக்குகளிலும் நீயே நிறைந்திருக்கிறாய். உன்னுடைய இந்த அற்புதமான கோரரூபத்தைக் கண்டு மூவ்வுலகங்களும் துன்பமடைகிறது. இதோ தோன்றும் தேவக்கூட்டங்கள் உம்மிடத்தில் புகுகிறார்கள். சிலர் பயந்தவர்களாய் கைகூப்பி உன்னைத் துதிக்கிறார்கள். மஹரிஷிகளும், சித்தர்களும் உன்னை ஸ்ஸோத்திரம் செய்கிறார்க்ள். ருத்தரர், ஆதித்யர், வசுக்கள், ஸாத்யர், விச்வதேவர், அசுவினி தேவர்கள், மருத்துக்கள், பித்ருக்கள், கந்தர்வர், யக்ஷர், அசுரர், ஸித்தர் எல்லோருமே வியப்புற்று உன்னைப் பார்க்கிறார்கள். உன் பல முகங்களையும் ஒவ்வொரு முகத்தில் கண்களையும், கைகளையும், துடைகளையும், கால்களையும், வயிறுகளையும் உள்ளதாய் பற்பல கோரைப்பற்களால் அதிபயங்கரமாய் இருக்கும் உமது மஹத் மஹாரூபத்தைப் பார்த்து யாவரும் பயம் கொள்கிறார்கள். நானும் அச்சமுருகிறேன்".
(அடுத்தவாரம் தொடரும்)
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/
வெளியீடு: கீதை ஸேவா டிரஸ்ட் & ஜனனி சென்டர், மணம்பூண்டி, Email : geethaisevatrust@gmail .com
No comments:
Post a Comment