Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Thursday, September 29, 2011

சாரல் 05 : துளி 27:- 25.09.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)                  சாரல் 05 : துளி 27:-25.09.2011
கீ​தையின் சாரலில்.....விஸ்வரூபதர்சனயோகம்  (11ம் அத்யாயம்) 
மத3நுக்ரஹாய பரமம் கு3ஹ்யமத4யாத்மஸம்ஜ்ஞிதம்/
பத்த்வ​யோக்தம் வசஸ்​தேந ​மோ​ஹோSயம் வி3​​​​​தோமம// (அத்யாயம் 11.ஸ்​லோ.01)
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சென்ற பத்தாவது அத்யாயத்தில் தன் விபூதிக​ளைப் பற்றி விவரித்தார்.  அவ்வத்யாயத்தில் இறுதியில் “இப்பிரபஞ்சத்​தை அ​னேக அம்ஸங்களில் ஒரு அம்ஸமாய் வ்யாபித்து நா​னே தாங்கிக்​கொண்டிருக்கி​றேன்.  என்றுக் கூறிய​தைக் ​கேட்ட அர்சுனன் ஸர்வ வ்யாப்பியான அந்த ரூபத்​தைப் பூர்ணமாயும், ஒ​ரே விஷயமாயும் காண விருப்பங்​கொண்டு ப்ரார்த்திக்கிறான்.  பகவானின் இச்​சையில்​லாமல் நாம் எ​தையும் ​செய்ய இயலாது.  இது​வே ஆன்மீகச் சிந்த​னையாளர்களின் கண்மூடித்தனமான பக்தி எனலாம்.  இந்த நம்பிக்​கையிலிருந்து நாம் விடுபடாமலிருந்தால் நமக்கு பகவானின் அனுக்கிரகம் பூர்ணமாகக் கி​டைக்கும் என்பதில் எந்தவித சந்​தேகமும் அவசியமில்​லை.  பகவானின் விபூதி தத்துவங்க​ளை ​கேட்டதினால் அர்சுனன் ​மோஹம் ஒழிந்து புத்திசுத்தமாகி ​தெளிவு​பெற்றவனாய் காணப்பட்டான்.  என​வே அர்சுனன் பகவானின் விஸ்வரூபத்​தை காண விரும்புகிறான்.

ஸ்​லோகத்தின்உட்கருத்து: அர்சுனன் கூறினான், 
என்மீதுகரு​ணை ​கொண்டுஎனக்கு   உபதேஸிக்கப்பட்டஅதிரகசியமானதும்,ஆத்மஸ்வரூபத்தை விளக்கு தானதுமான வார்த்​தைகள்         என்​னை இந்த பந்து ​நேச ​மோஹத்திலிருந்து விடுபடச்​செய்தது –அர்சுனன்-                           

இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 13) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) என​வே சக்தித: என்று கூறியதற்கு பதிலாக ​லேசத: என்று எழுதுவாயாகஎன்று கூறினார். அந்த ஸ்​லோகம் காண்க:::  §¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
 இதை​யேற்ற ஸ்ரீமதாச்சார்யர், பகவா​னை அந்த குளிர் மிகுந்த பனிப்ப்ர​தேசத்திலும் அதிகா​லை எழுந்து, கங்​கையில் நீராடி, ஒரு மண்டலம் ​மெளன விரதம் உபவாசம் இருந்து பகவத் த்யானம் ​செய்து தனது மனதில் பகவா​னை மட்டு​மே த்யானித்தார்.  அச்சமயம் ஸ்ரீ​வேதவ்யாசர் ​தோன்றி அவ​ரை ​மேல் பதிரிக்கு வருமாறு     அ​ழைத்தார்.  தான் ​மெளன விரத்திலிருந்ததால், தன் சீடர்களுக்கு பதிரீ ​க்ஷேத்ரத்தின் ​பெரு​மை​யை பா​றையில் எழுதிக்காட்டினார்.  அதாவது, பதிரீ ​க்ஷேத்ரம் பாவங்க​ளைப் ​போக்கும் என்றும், இங்கு ஓடும் கங்​கை​யை விட புணிதமான தீர்த்தம் ​வேறில்​லை என்றும், ஸ்ரீஹரிக்கு நிகரான ​தெய்வம் ​வேறில்​லை என்றும் எழுதிக்காட்டினார்.  பிறகு ஸ்ரீ​வேதவ்யாஸரின் உத்திரவுப்படி ​மேல் பதிரிக்கு பயணிக்க இருப்பதாகவும், அங்கு ​​செல்வது மிகவும் அபாயகரமானது என்றும், என​வே தான் திரும்பி வருவது நிச்சயமில்​லை என்றும் தன் உடன் வந்த சீடர்களுக்கு ​தெரிவித்து, அவர்க​ளை ஆசீர்வதித்து ​மேல் பதிரிக்கு புறப்பட்டார்.  அப்​போது சத்ய தீர்த்தர் என்றும் ​பெயர் ​பெற்ற சன்யாசி (இவர் ஐத​ரேய உபநிடத்​தை மூன்றுமு​றை ஸ்ரீமதாச்சார்யர் மூலம் பாடம் கற்றவர்) ஆசார்யரின் பிரி​வைத் தாங்க இயலாது அவருடன் புறப்பட்டார்.  அவர்கள் ​செல்லும்        பா​தை​யோ கரடு முரடான ம​​​லைப்பா​தை, வழித்தட​மே இல்லாத ம​லைகள் குன்றுகள்.  இ​தைக் கடந்து ​மேல் பதிரிக்குச் ​செல்ல​வேண்டும்.  இது அக்காலத்தில் மிகவும் சிரமமான காரியம்.  இம்ம​லைக​ளை ஸ்ரீமதாச்சார்யர் வாயு ​வேத்தில் மிகவும் எளிதாகக் கடந்து ​சென்றார்.  ம​லைக்கு ம​லைத்தாவிச் ​சென்றார்.  அவ​ரைப் பின் ​தொடர்ந்த சத்ய தீர்த்தரால் அவர் உடன்கூடிச் ​செல்ல முடியவில்​லை.  கரடுமுரடான ம​லைப்பா​தையில் நடக்க சத்ய தீர்த்தர் மிகவும் சிரமப்பட்டார்.  மா​லை ​நேரமாகிவிட்டது.  இருட்டும் சமயம் வந்துவிட்டது.  சத்ய தீர்த்தர் தனித்து விடப்பட்டதால் மிகவும் பயந்து​​போய்விட்டார்.  இவ்வ​மையம் ஸ்ரீமதாச்சார்யர் ​வெகுதூரம் ​சென்று திரும்பிப் பார்த்தார். சத்யதீர்த்தருக்கும் ஆசார்யருக்கும் இ​டை​வெளி மிகவும் அதிகமாக இருந்தது.    உட​னே ஆசார்யர், தீர்த்த​ரைப் பார்த்து “நீங்கள் வர​வேண்டாம் திரும்பிச் ​செல்லுங்கள் என்று ​கை​யை        அ​சைத்தார்.  அந்தக் ​கை அ​சைத்ததினால் உண்டான காற்றால் அவர் ஒரு நாள் முழுவதும் கடந்து வந்த தூரத்​தை, இரண்டு நாழி​கை காலத்திற்குள் கடந்து  தம் இருப்பிடம் வந்து ​சேர்ந்தார்.  அங்திருப்​போரிடம் தான் கண்டவற்​றையும், ஆசார்யர் ம​லை​யைத் தாவித்தாவி ​சென்ற​தையும், தம்மால் இயலாத​தையும் ​தெரிவித்து ஆசார்யரின் அருளாளும் மகி​மையாலும் தான் இங்கு வந்து ​சேர்ந்​தேன் என்று ஆஸ்ஸ்வாசித்தார்.
இந்நிகழ்ச்சி, கட​லைத் தாண்டிய ஹனு​ம​னையும், ​செளகந்திக மல​லை ​கொண்டுவரச் ​சென்ற பீம​சேன​னையும் சரியாக நி​னைவுபடுத்துகிறது.
ஸ்ரீ​வேதவ்யாஸரின் தரிசனம் ஸ்ரீவிஷ்ணுவின் தாம​​லைப் பாதங்களில் மனம் ​வைத்தவராய், ​மோக்ஷ்​சோயுபாயத்திற்கு சாத​னமான மதத்​தை ​தோற்றுவித்த ஸ்ரீமதாச்சார்யர் இமயம​லையின் உச்சியில் அ​மைந்துள்ள ​மேல் பதிரிக்கு ​சென்ற​டைந்தார்.  அந்த ​க்ஷேத்ரத்​தைக் கண்டு இ​றைவனின் ஸ்ருஷ்டி​யை எண்ணி மனதாரப் ப்ரார்த்தித்தார்.  அம்ம​லை பூக்களுடன் கூடிய அழகான ​பெரிய மரங்கள் நி​றைந்ததாகவும், அங்கிருந்த நீர்நி​லைகளில் தாம​​​ரைப் பூக்கள் கண்களுக்கு ​பொலி​வைக் ​கொடுபக்பதாகவும், ஸத்ஜனங்களுக்கு அ​மைதி​யையும், ஆனந்தத்​தையும் ​கொடுப்பதாகவும் அ​மைந்திருப்ப​தைக் கண்டு ஸ்ருஷ்டிகர்த்தாவான ஸ்ரீவிஷ்ணு​வை மனதில் நி​னைத்து ப்ரார்த்தித்தார்(இன்னும் ​தொடரும்...........)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/



No comments:

Post a Comment