Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, August 20, 2011

சாரல் 05 துளி 23 தேதி 28.08.11

பக்திமுரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)  சாரல் 05 துளி 23 ​தேதி 28.08.11
இதழ்ஆசிரியர்:: ஆதி​மைந்தன்,  இ​ணை ஆசிரியர்:: வாயுமித்ரன்

ஸ்ரீகிருஷ்ணாவதார மஹி​மை (​சென்ற இதழ் ​தொடர்ச்சி)
(21.08.2011 ​கோகுலாஷ்டமி ஸ்​பெஷல்)
  பூதனா ப​கை​மையுணர்வுடன் ​செயல்பட்டாலும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தனது  பா​லையூட்டியதால் அவள் முக்திய​டைந்தாள்.   பூதனாவின் உடல் மீது ஸ்ரீகிருஷ்ணர்  வி​ளையாடும் பாக்கியம் அவளுக்குக் கி​டைத்தது.  பூதனாவின் உடல் கீ​ழே சாய்ந்தவுடன்  அங்கிருந்த ​கோபியர்கள் ​கோபாலர்க​ள் அ​னைவரும் தி​கைத்து நின்றார்கள்.  அவ்விடம் மாதா ய​சோ​தையும் ​ரோகிணியும் வி​ரைந்து வந்து பசுவின் வா​லைச் சுற்றி குழந்​தைக்கு திருஷ்டி சுற்றினார்கள்.  கன்றுகளின் பாததூளிக​ளை குழந்​தையின் ​மேல் தூவி, பசுவின் நீரால் குழந்​தை​யைக் குளிப்பாட்டினார்கள். பிறகு விஷ்ணுவின் நாமங்க​ளை ஜபித்தார்கள்.  அவ்வ​மையம் மதுராவிலிருந்து நந்த​கோபர் திரும்பி வந்து அவ்விடத்​தைச் ​சேர்ந்தார்.  நடந்த​வைக​ளைக் ​கேள்விப்பட்டு, வசு​தேவர் எச்சரித்த​தை உணர்ந்தவராக சிந்த​னை ​செய்தார்.  பகவான் ஸ்ரீஹரி​யைப் ப்ரார்த்த​னை ​செய்தார்.  “என் அன்புக் குழந்​தை​யே, ஸகல உற்பத்திற்கும் காரணமான ஸ்ரீஹரி உன்​னைக் காப்பாற்றட்டும், யாரு​டைய வராகக் ​கொம்பின் நுனியில் பூமியானது தாங்கப்பட்டுள்ள​தோ, அந்த ஸ்ரீவராகமூர்த்தி உன்​னை ரக்ஷிக்கட்டும், நகங்களின் நுனியால் ப​கைவனின் மார்​பைப் பிளந்த ஸ்ரீநரசிம்மமூர்த்தியான ஜனார்த்தனன் உன்​னைக் காப்பானாக, வாமன ரூபியாக வந்து மூன்றடி மண் ​கேட்டு மூவ்வுலகங்க​ளையும் அளந்த திருவக்ரமன் எப்​போதும் உன்​னைப் பாதுகாப்பானாக, உன்த​லை​யை ​கோவிந்தன் காக்கட்டும், உன் கண்டம​தைக் ​கேசவன் காக்க, உன் குறிஉட்பட்ட வயிற்​றை ஸ்ரீவிஷ்ணு காக்கட்டும், முழந்தாள், பாதங்க​ளை ஜனார்த்தனன் காக்க, முகம், கரங்கள், அவற்றின் கீழ்புறங்கள், மனம் மற்றுமுள்ள புலன்க​ளை ஸ்ரீமந் நாராயணன் காக்கட்டும், சங்கு சக்ரம், க​தை ஏந்திய எம்​பெருமானின் திருச்சங்கின் நாதஓ​சை உன் ப​கைவர்க​ளை நாசம் ​செய்யட்டும். திக்​கெட்டும் ஸ்ரீ​வைகுண்டநாதன் உன்​னைக் காப்பானாக!  மூ​லை​யை மதுசூதனனும், வானத்தில் ரிஷி​கேசனும் உன்​னை ரக்ஷிக்கட்டும், பூமியி​லே தரணிதரன் உன்​னைக் காப்பாற்றுவானாக.  என்று விஷ்ணுவின் நாமங்க​ளைக் கூறி நந்த​கோபர் குழந்​தையாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு சாந்திக்கிரி​யைச் ​செய்து அங்கிருந்த சகட்டின் கீழ்புறத்தில் ​தொட்டிலில் வளர்த்தினார்.  பூதனாவின் உடல் எரியூட்டப்பட்டதால் அதிலிருந்து வீசிய நறுமணம் ஊ​ரெங்கும் பரவியது.  இந்நறுமணத்​தை நுகர்ந்த அக்கிராமத்து மக்கள் “எங்கிருந்து இந்த நியர்த்தியான வாச​னை வருகிறது? என்று வினவத் ​தொடங்கினார்கள்.  இதன்மூலம் குழந்​தையாகிய ஸ்ரீகிருஷ்ணர் பூதனா என்னும் அரக்கி​யை ​கொன்றார் என்ற் ​செய்தி​யை அறிந்தார்கள்.  குழந்​தை​யை மனமார வாழ்த்தி  சந்​தோஷம​டைந்தார்கள்.        
       ஸ்ரீகிரஷ்ண​ரை விஷப்பாலூட்டிக் ​கொல்ல ​வேண்டும் என்று ஏவிவிடப்பட்ட அரக்கியான பூதனா வந்தாள்.  மாண்டாள்.  ஆனாலும் பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணர் அவள் தனக்கு பாலூட்டியதால் தன் தாயாக​வே நி​னைத்தார்.  அதனுள்ளிருக்கும் ப​கை​மையுணர்​வை அவர் அலட்சியம் ​செய்தார்.  பூதனாவிற்கு முக்தி​யைக் ​கொடுத்தார்.
       ப​கை​மையுணர்வுடன் ​நெறுங்கிய பூதனாவிற்​கே முக்தி ​கொடுத்தார் என்றால், பகவானின் பக்தர்களுக்கும், அவர்கள் பிரியமுடன் அளிக்கும் “பலம், புஷ்பம், ​தோயம் எதுவானாலும் அது எவ்வளவு நன்​மை​யை ஏற்படுத்தும் என்ப​தை எண்ணிப்பார்க்கவும் முடியு​மோ!
       பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணர் பூதனா​வை வதம் ​செய்த இச்​செய்தி​யைப் படித்த அ​னைவருக்கும் பகவான் எல்லா நன்​மைக​ளையும் வாரிவழங்குவார் என்பதாகப் ப்ராத்திப்​​போமாக.  ஸ்ரீகிருஷ்ணரின் அரு​ளைப் ​பெறு​வோமாக.
       ஸ்ரீகிருஷ்ணரின் லீ​லைகள் மிகவும் உயர்ந்தது.  முக்தி ​கொடுக்கக்கூடியது.  ஜட மற்றும் ​பெளதீக ​செயல்களிலிருந்து விடுபட ஒரு மருந்தாகப் பயன்படக்கூடியது.  பகவானின் லீ​லைக​ளை ஒருவன் ​கேட்கும்​போது அவன் பகவானிடம் ​நெருக்கம் ​கொள்கிறான்.  ஆத்ம ஞானம் ​பெறுகிறான்.  ஸ்ரீகிருஷ்ணரின் லீ​லை​யைக் ​கேட்ட பரிட்சித்மஹா​ராஜன் முத்தி​யைப் ​பெற்றார்.
       குழந்​தை ஸ்ரீகிருஷ்ணர் இன்னும் ​கொஞ்சம் வளர்ந்து குப்புறப்படுத்து, தன் பிஞ்சு முட்டிக்கால்களால் தவழத் ​தொடங்கினார்.  இச்சமயம் நந்த​கோபரும், ய​சோதாவும் இ​தை முதலாவது பிறந்தநாளாகக் ​கொண்டாடினார்கள்.  இவ்விழா “ஸ்ரீகிருஷ்ண ​ஜெயந்தி என்று அ​ழைக்கப்படுகிறது.  இன்றும் இவ்விழா ஸ்ரீகிருஷ்ணரின் பக்தர்களால் விமர்சியாகக் ​கொண்டாடப்படுகிறது.  இவ்விழாவில் ​கோபியர்களும் ​கோபாலர்களும் திரளாக வந்து கலந்து​கொண்டார்கள்.  காதுகளுக்கினிய வாத்தியம் ஒருபக்கம் முழங்க, மறுபக்கம் ​வேதவித்தகர்கள் ​வேதபாராயணம் ​செய்து​கொண்டிருக்க, ​தெருக்களில் குழந்​தைகள் ஓடி           வி​ளையாடியவண்ணம் இருந்தார்கள்.  மாதா ய​சோதா ஸ்ரீகிருஷ்ணருக்கு நீராட்டி பட்டா​டை உடுத்தி அலங்கரித்தார்கள்.  தானியங்கள், தங்க ஆபரணங்கள் பசுக்கள் யாவும் ​வேதவிற்பண்ணர்களுக்கு தானமாகக் ​கொடுத்தார்கள்.  மாதா ய​சோதா அங்கு வந்தவர்க​ளை வர​வேற்று பரிசுப்​பொருட்க​ளைக் ​கொடுத்துக்​கொண்டிருந்தார்.  அச்சமயம் குழந்​தை அழத்​தொடங்கியது.  விழாவின் மும்முரத்தில் குழந்​தை அழுவ​தை யாரும் கவனிக்கவில்​லை.  குழந்​தை ​கோபமுற்று கால்க​ளை உதரியது.  அதன் கால்கள் அருகில் அமர்த்தப்பட்டிருந்த ​கைவண்டியின்​மேல் பட்டது.  அவ்வண்டியின் அச்சாணிகள் கழன்று, அதன் மீது ​வைக்கப்பட்டிருந்த அ​னேக தட்டுமுட்டுச் சாமான்கள் கீ​ழே சரமாரியாக விழுந்தது.  இதனால் அங்​கே ​பெரும் சப்பதம் ஏற்பட்டது.  யாவரின் பார்​வையும் அங்​கே திரும்பியது.  வண்டி ​நொருங்கியிருந்த​தைக் கவனித்தார்கள்.  இது எவ்வாறு நடந்திருக்க முடியும் என்று சிந்திக்லானார்கள்.  அங்கிருக்கும் குழந்​தைகள், ஸ்ரீகிருணர் காலால் உ​தைத்ததால் வண்டி ​சேதம​டைந்த​தைக் கண்கலால் பார்த்ததாகக் கூறினார்கள்.  இச்சம்பவம் எல்​லோ​ரையும் ஆச்சிரியப்பட​வைத்தது.  (இதன் ​தொட​ரை அடுத்தாண்டில் பார்க்கலாம்......)
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//

      

No comments:

Post a Comment