Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Thursday, January 20, 2011

சாரல் :4 துளி :44 தேதி :23.01.11

கீதையின் சாரலில்........ விபூதியோகம் (பத்தாவது அத்யாயம்)
ருத்ராணாம் ஸங்கரஸ் சாஸ்மி, வித்தேஸோ யக்ஷரக்ஷஸாம்/ 
வஸூனாம் பாவகஸ்வாஸ்மி, மேரு: ஸிகரிணாமஹம்// (அத்யாயம் 10 ஸ்லோ.23)  
பகவான் தன்னுடைய அதி ஸ்ரேஷ்டமான விபூதி ரூபத்தை மேலும் விவரிக்கிறார். ருத்ர ரூபங்கள் பதின்னொன்று. அவர்களில் மங்களத்தைக் கொடுப்பவரும், தமஸ் குணங்களை நிர்வகிப்பவரும், மனதிற்குச் சாந்தியைக் கொடுப்பவருமான ருத்ர ரூபமாக இருப்பதாகக் கூறுகிறார். ராக்ஷ்ஸர்யகளுக்கும் அரசராக குபேரன் இருக்கிறார். இதில் யக்ஷர்களில் சிறந்தவரும்,ஸம்பத்திற்கு அதிபதியானவருமான குபேரனுள் இருப்பதாகவும் கூறுகிறார். எட்டு விதமான அஷ்ட வசுக்களால் எல்லாவற்றையும் சுத்தி செய்பவனாக இருக்கும் அக்னியில் பாவக என்னும் பெயருள்ளவனாக இருப்பதாகக் கூறுகிறார். நக்ஷத்திரங்களுக்கும், தீவுகளுக்கும் தலைமையகம் மேருபர்வதம். அங்கே நவரத்தினங்களும் குவிந்து கிடக்கிறபடியால் அது மிகவும் ஸ்ரேஷ்டமானது. மலைகளுள் மேருவாக இருக்கிறேன் என்று கூறுகிறார். குறிப்புகள் : (1) ருத்திரர்கள் பதின்னொருவர் யாவர் ? 1. ஹரன் 2. பஹூரூபன் 3. த்ரியம்பகன் 4. அபராஜிதன் 5. வ்ருஷாகபி 6. சம்பு 7. கபர்த்தீ 8. ரைவதன் 9. ம்ருக்வ்யாதன் 10. சர்வன் 11. கபாலி ; இவர்களுள் மங்கள ரூபமாய் மங்களங்களை அளிப்பவர் சம்பு என்னும் சங்கரன். (ஹரிவம்சம் 1.3.51) (2) யக்ஷர்கள் மற்றும் ராக்ஷசர்கள் :- அகஸ்தியர், விச்ரவஸ் என்பவர்கள் பிலஸ்திய ரிஷியின் குமாரர்கள். இவர்களில் விச்ரவஸ்சுக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவியிடம் யக்ஷர்களுக்குப் பதியாகிய குபேரனும், மற்றொரு ராக்ஷஸ மனைவியிடம் ராவணன், கும்பகர்ணன் விபீஷணன் ஆகியோர் புத்ரர்கள் (பாகவதம் 10.10) (3) அஷ்ட வஸூக்கள் :- பிரம்ம புத்ரராகிய தர்மர், தக்ஷன் குமாரியாகிய வசுதேவியிடம் பெற்ற பிள்ளைகள் அஷ்டவஸூக்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் 1. துரோணன் 2. துருவன் 3. அர்க்கன் 4. அக்னி (பாவகன்) 5. தோஷ: 6. வஸூ 7. விபாவஸூ. இந்த அஷ்ட வஸூக்களில் சிறந்தவர் அக்னி.
ஸ்லோகத்தின் உட்கருத்து : பதினோறு ருத்ரர்களுள் உத்தமனான, சுகத்திற்கு காரணமான ஸங்கரன் என்னும் ருத்ரனுக்கு மற்ற ருத்ரர்களைவிட ஸ்ரேஷ்டத்தைக் கொடுத்துக்கொண்டு ஸங்கரன் என்னும் பெயருடன் ஸங்கரனுள் இருக்கிறேன். யக்ஷர்கள் ராக்ஷசர்களுள் செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு 'வித்தேஸ;' என்னும் பெயருடன் குபேரனுள் இருக்கிறேன். எட்டு வஸூக்களுள் அக்னிக்கு நியாமகனாய் மற்ற வஸூக்களைவிட பாவக என்னும் அக்னிக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டே யாவற்றையும் சுத்தி செய்வதனால் பாவக என்னும் பெயருடன் அக்னியில் இருக்கிறேன். பர்வதங்களுள் (சிகரங்கள் மற்றும் மலைகள்) ஸ்ரேஷ்டமான மேரு பர்வதத்திற்கு நியாமகனாய், என்க்கு ப்ரேரகன் இல்லாததால் மேரு என்ற பெயருள்ள ரூபத்துடன் மேரு மலைக்குள் இருக்கிறேன். -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-  
இங்கே ஒரு துளி : (10வது அத்யாயம்) அத்யாயச் சுருக்கம்: ஹே அர்சுனா ! தேவர்களும் ரிஷிகளும் என்னை அறியமாட்டார்கள். நான் அவர்களுக்கெல்லாம் ஆதி காரணமாய் இருக்கிறேன். நான் பிறப்பற்றவன். ஆதியற்றவன். ஸகல லோகங்களுக்கும் மஹேசுவரன் என்று அறிகிறவன் ஸகல பாபங்களிலிருந்து விடுபடுகிறான். புத்தி, ஞானம், மோஹமின்மை, பொறுமை, அகிம்சை, சமயுத்தி, திருப்தி, தவம், தானம், கீர்த்தி, அகீர்த்தி போன்ற பாவங்கள் என்னிடமிருந்தே உண்டாகின்றன. ஏழு மஹரிஷியர்களும், ஸனகர் முதலிய நான்கு குமாரர்களும் 14 மனுக்களும் என் மன ஸங்கல்பத்தால் உண்டானவர்கள். அவர்களிடமிருந்து இந்த உலகமும் ப்ரஜைகளும் உண்டானார்கள். இந்த என் மகிமையையும் சக்தியையும் உண்மையாய் அறிபவன் ஒரு சிறந்த பக்திமான். இதில் சந்தேகமில்லை. என்னை நன்றாக அறிந்துகொண்ட பக்தர்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் நானே என்றும்:என்னிடமிருந்தே அனைத்துலகும் தோன்றியது என்றும் அறிந்து உபாஸிக்கிறார்கள். என்னிடத்திலேயே சிந்தனையை வைத்து ஸ்திரமாக உபாஸனை செய்வோருக்கு என்னை அடையும் புத்தியையும் ஞானத்தையும் அவர்களுக்கு நானே அளிக்கிறேன். இறுதியில் அவர்களுடைய அக்ஞானத்தை ஞான தீபத்தால் நானே நாசஞ்செய்கிறேன். இவ்வாறு (1 to 10 ) பகவான் அர்சுனனுக்கு உபதேஸித்ததை தொடர்ந்து அர்சுனன் கீழ்வருமாறு கூறுகிறார் (12 to18) 
இன்னும் ஒரு துளி: தனக்கும், பரம்பொருளுக்கும் இடையே உள்ள வித்யாசத்தை அறிந்து கொள்ளாதவன், மற்றும் தன்னையே பரம்பொருளுடன் ஒப்பிட்டுக் கொடுப்பவன், இம்மாதிரியான சிந்தனையிருந்து, பரம்பொருளின் உண்மையான அறிவு பெறப்படுவதில்லை, ஜீவனும், பிரம்மனும் எதிரெதிரான குணங்களைக் கொண்டிருப்பதனால் வேறானவர்கள். அவர்களே அபேதம் என்று அறியும் அறிவானது தவறான அறிவாகும். இந்த மாறுபட்ட குணங்களே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (காடகோபநிஷத் பாகம் 2 ஸ்லோகம் 9 சாரல் 04 துளி 01 லிருந்து) 
தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் / 
நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //
 

No comments:

Post a Comment