Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Monday, January 24, 2011

சாரல் 4 துளி 45 தேதி 06.02.11


கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)
புரோத4ஸாம் ச முக்2யம் மாம் வித்3தி4 பார்த2 ப்ருஹஸ்பதிம்/
ஸோநாநீநாமஹம் ஸ்கந்த3: ஸரஸாமஸ்மி ஸாக3ர:// (அத்.10.ஸ்லோ.24)
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இந்த விபூதி யோகத்தின் மூலம் தனது ரூபங்களின் தத்துவங்களை சிறிதேனும் கோடிட்டுக்காட்டுகிறார். ஆனாலும் பகவானின் விபூதி ரூபங்கள் கணக்கிலடங்காது. தேவர்களுக்கெல்லாம் தலைவன் இந்திரன். தேவேந்திரனின் குரு ப்ருஹஸ்பதி. இவர் அங்கிரஸின் புத்திரர். ஸப்த்த ரிஷிகளில் முக்கியமானவர் இவர். பகவான் வாமன அவதாரம் எடுத்த்போது வாமனராக ப்ருஹஸ்பதியிடம் வேதஸாஸ்த்ரங்களைக் கற்றார். இவருடைய உபதேஸங்கள் சிறப்புபெற்றவையாக உள்ளது. புரோகிதர்களுள் அதிஸ்ரேஷ்டரான ப்ருஹஸ்பதியுள் இருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள வெண்டுமாய் உபதேஸிக்கிறார். 
ஸேநாதிபதியர்களுள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் சிறந்தவர் ஸ்கந்தன் அல்லது கார்த்திகேயன். இவருக்கு அனேக பெயர்கள் உண்டு. ஸ்ரீமுருகர் சிவபெருமானின் குமாரர். தேவர்களின் ஸேனைக்கு இவரே அதிபதி. எனவே ஸேனாதிபதியர்களில் ஸ்ரேஷ்டனாக ஸ்கந்தனில் (முருகனாக காட்சிகொடுப்பதாக) இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
உலகில் அனேக நீர்தேக்கங்கள் உள்ளன. இவற்றில் யாவற்றையும்விட சிறந்தது பெரியது ஸமுத்ரமே. எனவே பகவான் நீர் நிலைகளில் ஸமுத்ரம் என்னும் பெயருடைய ரூபமாக இருப்பதாக கூறுகிறார்.
ஸ்லோகத்தின் உட்கருத்து : அர்சுனா! புரோஹிதர்களில் உத்தமனான ப்ருஹஸ்பதியாச்சார்யருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு ப்ருஹஸ்பதியில் இருப்பவன் நான் என்று தெரிந்துகொள். ஸேனாதிபதிகளுள் ஸ்ரேஷ்டரான ஸ்கந்தனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டும், இப்பிரபஞ்சத்தை வெளிப்படுத்துவதினால் 'ஸ்கந்த:' என்னும் பெயருடன் ஸ்கந்தனில் இருக்கிறேன். ஸரோவரங்களில் (அதாவது நீர்த்தேக்கங்களில்) சிறந்ததான ஸமுத்ரத்திற்கு நியாமகனாய் ஸமுத்ரனில் இருக்கிறேன். அதாவது ஸாகரத்தை ஸ்வீகாரம் செய்பவனாதலால் 'ஸாகரன்' என்னும் ரூபத்துடன் சமுத்திரத்தில் இருக்கிறேன்-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : (10வது அத்யாயம்) அத்யாயச் சுருக்கம்: "நீரே பரமபுருஷர் என்றும், பரம பவித்ரமான புராண புருஷர் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும் ஆதிதைவம், பிறப்பற்றவர், பரமமேஸ்வரர் என்றும் சகல ரிஷிகளும், தேவரிஷியான நாரதரும், அஸித்ர தேவர், வியாஸரேன்றவர்களும் கொண்டாடுகிறார்கள். நீங்களும் அவ்வாறே கூறியுள்ளீர்கள். இதுவரையில் நீர் சொன்னது யாவும் உண்மை என்றே நம்புகிறேன். உங்களின் ஸ்வரூபத்தை தேவர்களும் கூட அறியமுடியவில்லை. நீரே உம்மை அறிவீர். ஹே! புருஷோத்தம ஸகல லோகங்களுக்கும் அதிபதியே! தேவ தேவனே! ஜகத்பதியே! உமது பெருமைகளை ஒன்று விடாமல் எனக்குச் சொல்லும்படி வேண்டுகிறேன். யோகேஸ்வரா! உன்னையே த்யானஞ் செய்துகொண்டு இருக்கிறேன். எந்தெந்த ஸ்வரூபங்களால் நான் உன்னை தியானஞ் செய்ய வேண்டும்? உன்னுடைய யோக சக்தியையும் விபூதியையும் எனக்கு விரிவாக மறுபடியும் கூறுவாயாக. உன் அம்ருதம் போன்ற வார்த்தைகள் எனக்கு போதும் என்ற த்ருப்தியை எப்போதும் அளிப்பதில்லை". இவ்வாறு அர்சுனன் பகவானை ப்ரார்த்தனை செய்து கொள்கிறார். 
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்சுனனை நோக்கி (19 to 42) ஹே! அர்சுனா! "நீ இவ்வாறு கேட்டது எனக்கு சந்தோஷம்தான். என் சக்திகளிலும் விபூதிகளிலும் முக்கியமானவைகளை உனக்கு கூறுகிறேன். ஏனென்றால் விஸ்தாரமாகச் சொல்வதற்கு எல்லையே இல்லை. ஸகல ஜீவன்களின் ஹிருதயத்தில் இருக்கிறேன். அவைகளுக்கு ஆதியும் நடுவும் முடிவும் நானே. நானே விஷ்ணு, நானே ஸீர்யன், நானே மரீசி, நட்சத்திரங்களில் சந்திரன் நான். வேதங்களில் ஸாமவேதம் நானே. நான் தேவர்களுள் இந்திரன். இந்திரியங்களுள் மனதாக இருக்கிறேன். பிராணிகளிடத்தில் அறிவாக இருக்கிறேன். பதினோரு ருத்ரர்களுள் சங்கரன் நானே, யக்ஷர்கள் ராக்ஷசர்களுள் குபேரன் நான். நானே அக்னி, மலைகளுள் மேரு. புரோஹிதர்களுள் சிரேஷ்டரான பிருஹஸ்பதி நான். சேனைத் தலைவர்களிடையே முருகன் நான். நீர் நிலைகளிடையே சமுத்திரன் நான். மஹரிஷிகளுள் ப்ருகு நான். ஏகாக்ஷரமான ஓம் எனும் பிரணவம் நான். யக்ஞங்களுள் ஜபமாயிருக்கிறேன். அசையாப் பொருள்களிடையே ஹிமாலய மலையாக இருக்கிறேன். நானே விருக்ஷங்களுள் அரசமரம், தேவரிஷிகளுள் நாரதர், கந்தர்வர்களுள் சித்ரரதன், சித்தர்களில் கபில முனியாக இருக்கிறேன். குதிரைகளில் உச்சைசிரவஸ், யானைகளுள் ஐராவதம், மனிதர்களுள் அரசன் நான். ஆயுதங்களுள் வஜ்ராயுதம் நான். பசுக்களுள் காமதேனு, பிறப்புகளுக்கு காரணமான மன்மதன் நான். ஸர்பங்களுள் வாசுகி. பாம்புகளில் ஆதிசேஷன். ஜலதேவதைகளுள் வருணன் நான். பித்ரு தேவருள் அர்யமன். தண்டிப்பவர்களுள் யமன் நான். நான் தைத்யர்களுள் பிரஹ்லாதன். தர்மபலன்களில் நான் காலதேவதை. மிருகங்களுள் ஸிம்ஹம். பக்ஷிகளுள் கருடன் நான். பரிசுத்தம் செய்யும் பொருளில் நான் வாயு".
தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

No comments:

Post a Comment