சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனின் ஸ்வரூபமே ஆனந்தம் என்று வேத ஸப்தங்கள் சொல்கிறது.
ஆனந்தோ ப்ரஹ்மே திவ்ய ஜானாத்/
ஆனந்தாத் தேவ கல்விமானி பூதானி நிஜாயந்தே//
ஆனந்தே நஜாதானி நிஜீவந்தி /
ஆனந்தம் ப்ரயம் ஜவிஸம் விசந்தீதி//
உலகில் காணப்படும் எல்லாப்பொருட்களும் ஆனந்தமயமான ப்ரம்மத்தைத் தவிர வேறானதொன்றுமில்லை என்று வேதங்கள் நமக்கு தெரிவிக்கிறது. எல்லா ஜீவகோடிகளும் அந்த ஆனந்தத்திலிருந்தே வந்திருக்கிறார்கள். அதனாலே எல்லோருக்கும் அந்த ஆனந்தத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் ஆனந்தம் எது என்று வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம். உலகில் சிறிய ஜீவனான எறும்பிலிருந்து அனைத்து ஜீவன்களைப் படைக்கும் பெரிய ஜீவனான ஸ்ரீப்ரம்மா வரையிலான அனைத்து ஜீவன்களும் ஆனந்தத்தை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா ஜீவன்களும் ஏதோ ஒரு இச்சையை உத்தேஸித்தே ஜீவிக்கின்றன. எல்லா ஜீவன்களுக்கும் சந்தோஷம் அல்லது ஸுகம் என்பது முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. மனிதன் இந்திரியங்களால் சுகங்களை அனுபவிக்கிறான். அதாவது கண்களால் அழகான காட்சிகளைப் பார்க்கும்போதும், காதுகளால் இனிய இசையைக் கேட்கும்போதும், வாயால் சுவையான பதார்த்னதங்களைச் சுவைக்கும்போதும், மூக்கால் மகரந்தமான வாசனையை நுகரும்போதும் மகிழ்ச்சியடைந்து சுகத்தை அனுபவிக்கிறான். இவ்வாறு எல்லா இந்திரியங்களினாலும் தற்காலிகமான சுகங்களை அனுபவிக்கிறான். அவன் அனுபவிக்கும் சுகத்திற்கு ஒரு எல்லை யுண்டு. சுகத்தை அனுபவித்தப் பிறகு துக்கம் என்பது அவனைத் தொடர்கிறது. இந்தச் சுகத்தையும் துக்கத்தையும் மாறிமாறி அனுபவிக்க நேர்கிறது. அவனுக்கு சுகம் கிடைக்கும்போது சந்தோஷமடைந்து அதுவே ஆனந்தம் என்று நினைக்கிறான். ஒரு சிந்தாமணியோ, ஒரு கல்பகவிருக்ஷமோ கிடைத்தால் கூட ஒருவன் நினைத்ததைப் பெறமுடியும். ஆனால் அவனால் உண்மையான ஆனந்தத்தை பெற இயலாது. மனிதன் ஆனந்தத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பகவான் இந்த உலகத்தைப் படைகிகிறார். இதை வேதம் "ஆனந்த அத்யேவயதேஷ ஆகாஸ ஆனந்தோ தஸ்யாத" என்பதாகக் கூறுகிறது. இதற்கு ஸ்ரீமதாச்சார்யர் விளக்கம் கொடுக்கும் போது "ஆனந்தோத்ரேக: கருணாபூர்ணவரப்ரத" என்று சொல்கிறார். அதாவது பகவானின் விஸ்த்தாரமான ஸம நோக்குடன் கூடியதான மனமும், தனிச் சிறப்புடன் கூடியதான கருணையும், ஜீவன்களைப் படைத்து ஆனந்தத்தை அறியவைத்து முக்திக்கு வழிவகுக்கவும் ஸ்ருஷ்டி மேற்கொள்ளப்படுவதாக அறிகிறோம்.
ஆனந்தமயமான ஸ்ரீமந்நாராயணனின் ஸ்வரூபத்தை அறிய ஒருவன் எத்தனையோ கோடி ஜன்மங்கள் எடுத்து ஸாதனைகள் புரியவேண்டும். இந்த ஸாதனைகளில் இரண்டுவிதமுண்டு. ஒன்று, ஒருவன் தன்னிச்சையாக, ஞானவைராக்ய்ய பக்தியுடன் அமர்ந்து தவம் செய்து, பகவானை அறிய முற்படுவது. இதற்கு உதாரணமாக ஸ்ரீபீஷ்மாச்சார்யரைச் சொல்லலாம். மற்றொன்று யதார்த்த பக்தியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பகவானை அறிந்துகொள்வது. இதற்கு கோபியர்களை உதாரணமாக மேற்கோள்காட்டலாம். ஒவ்வொருவரும் தம் ஹிருதயத்தில் வாமனரூபியாக அமர்ந்திருக்கும் பரமாத்மனை அறிந்துகொள்வதே ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடியது.
இறைவன் கண்ணுக்கு தெரியாத அந்தர்யாமியாக இருக்கிறார். எனவே அவரை தெரிந்துகொள்வது என்பது ஒரு தனி மனிதனாக முயற்சிப்பது ஸாத்யமன்று. ஆனால் ஒரு குரு பிரத்யக்ஷயமாக கண்ணுக்கு புலப்படும்படியாக இருக்கிறார். ஒருவன் ஒரு குருவை ஆஸ்ரயித்தே பரமாத்மாவை தெரிந்துகொண்டு ஆனந்தம் எது என்பதை அறியமுடியும். இது யோக்யமான ஸ்ரீகுருகளின் மூலமே ஸாத்யமாகிறது.
வாசக பக்தர்களுக்கு இந்த 2011ஆம் ஆண்டு ஆனந்தமாக அமைய நித்யமும் ஞான, வைராக்ய, பக்தி சிந்தனையுடன் ஹரி ஸர்வோத்தம தத்துவத்தை போதனை செய்துகொண்டிருக்கின்றவரும் ஸ்ரீஉத்ராதி மடத்தின் பீடாதிபத்யத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பவருமான ஸ்ரீ1008ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த குருகளின் பாதார விந்தங்களைச் சரணடைந்து
மோத3 தீர்த்தகராப்ஜோத் தஸத்யாத்மயதி ஸேகரம்/
நமாமி அனிஷம் ப4க்த்யா தத்வஞானார்த ஸித்த4யே//
என்பதாக த்யானித்து இந்தப் புத்தாண்டில் ஞானமும் வைராக்கியமும் பக்தியும் வளர்ந்து ஆரோக்யமும், ஐஸ்வர்யமும் பெறுக ஸ்ரீகுருகளவர்களை ஆஸ்ரயித்து நமஸ்கரித்து சரணடைகிறேன். /ஸ்ரீக்ருஷ்ணார்பணமஸ்து/ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment