Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, August 20, 2011

சாரல் 05 துளி 23 தேதி 28.08.11

பக்திமுரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)  சாரல் 05 துளி 23 ​தேதி 28.08.11
இதழ்ஆசிரியர்:: ஆதி​மைந்தன்,  இ​ணை ஆசிரியர்:: வாயுமித்ரன்

ஸ்ரீகிருஷ்ணாவதார மஹி​மை (​சென்ற இதழ் ​தொடர்ச்சி)
(21.08.2011 ​கோகுலாஷ்டமி ஸ்​பெஷல்)
  பூதனா ப​கை​மையுணர்வுடன் ​செயல்பட்டாலும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தனது  பா​லையூட்டியதால் அவள் முக்திய​டைந்தாள்.   பூதனாவின் உடல் மீது ஸ்ரீகிருஷ்ணர்  வி​ளையாடும் பாக்கியம் அவளுக்குக் கி​டைத்தது.  பூதனாவின் உடல் கீ​ழே சாய்ந்தவுடன்  அங்கிருந்த ​கோபியர்கள் ​கோபாலர்க​ள் அ​னைவரும் தி​கைத்து நின்றார்கள்.  அவ்விடம் மாதா ய​சோ​தையும் ​ரோகிணியும் வி​ரைந்து வந்து பசுவின் வா​லைச் சுற்றி குழந்​தைக்கு திருஷ்டி சுற்றினார்கள்.  கன்றுகளின் பாததூளிக​ளை குழந்​தையின் ​மேல் தூவி, பசுவின் நீரால் குழந்​தை​யைக் குளிப்பாட்டினார்கள். பிறகு விஷ்ணுவின் நாமங்க​ளை ஜபித்தார்கள்.  அவ்வ​மையம் மதுராவிலிருந்து நந்த​கோபர் திரும்பி வந்து அவ்விடத்​தைச் ​சேர்ந்தார்.  நடந்த​வைக​ளைக் ​கேள்விப்பட்டு, வசு​தேவர் எச்சரித்த​தை உணர்ந்தவராக சிந்த​னை ​செய்தார்.  பகவான் ஸ்ரீஹரி​யைப் ப்ரார்த்த​னை ​செய்தார்.  “என் அன்புக் குழந்​தை​யே, ஸகல உற்பத்திற்கும் காரணமான ஸ்ரீஹரி உன்​னைக் காப்பாற்றட்டும், யாரு​டைய வராகக் ​கொம்பின் நுனியில் பூமியானது தாங்கப்பட்டுள்ள​தோ, அந்த ஸ்ரீவராகமூர்த்தி உன்​னை ரக்ஷிக்கட்டும், நகங்களின் நுனியால் ப​கைவனின் மார்​பைப் பிளந்த ஸ்ரீநரசிம்மமூர்த்தியான ஜனார்த்தனன் உன்​னைக் காப்பானாக, வாமன ரூபியாக வந்து மூன்றடி மண் ​கேட்டு மூவ்வுலகங்க​ளையும் அளந்த திருவக்ரமன் எப்​போதும் உன்​னைப் பாதுகாப்பானாக, உன்த​லை​யை ​கோவிந்தன் காக்கட்டும், உன் கண்டம​தைக் ​கேசவன் காக்க, உன் குறிஉட்பட்ட வயிற்​றை ஸ்ரீவிஷ்ணு காக்கட்டும், முழந்தாள், பாதங்க​ளை ஜனார்த்தனன் காக்க, முகம், கரங்கள், அவற்றின் கீழ்புறங்கள், மனம் மற்றுமுள்ள புலன்க​ளை ஸ்ரீமந் நாராயணன் காக்கட்டும், சங்கு சக்ரம், க​தை ஏந்திய எம்​பெருமானின் திருச்சங்கின் நாதஓ​சை உன் ப​கைவர்க​ளை நாசம் ​செய்யட்டும். திக்​கெட்டும் ஸ்ரீ​வைகுண்டநாதன் உன்​னைக் காப்பானாக!  மூ​லை​யை மதுசூதனனும், வானத்தில் ரிஷி​கேசனும் உன்​னை ரக்ஷிக்கட்டும், பூமியி​லே தரணிதரன் உன்​னைக் காப்பாற்றுவானாக.  என்று விஷ்ணுவின் நாமங்க​ளைக் கூறி நந்த​கோபர் குழந்​தையாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு சாந்திக்கிரி​யைச் ​செய்து அங்கிருந்த சகட்டின் கீழ்புறத்தில் ​தொட்டிலில் வளர்த்தினார்.  பூதனாவின் உடல் எரியூட்டப்பட்டதால் அதிலிருந்து வீசிய நறுமணம் ஊ​ரெங்கும் பரவியது.  இந்நறுமணத்​தை நுகர்ந்த அக்கிராமத்து மக்கள் “எங்கிருந்து இந்த நியர்த்தியான வாச​னை வருகிறது? என்று வினவத் ​தொடங்கினார்கள்.  இதன்மூலம் குழந்​தையாகிய ஸ்ரீகிருஷ்ணர் பூதனா என்னும் அரக்கி​யை ​கொன்றார் என்ற் ​செய்தி​யை அறிந்தார்கள்.  குழந்​தை​யை மனமார வாழ்த்தி  சந்​தோஷம​டைந்தார்கள்.        
       ஸ்ரீகிரஷ்ண​ரை விஷப்பாலூட்டிக் ​கொல்ல ​வேண்டும் என்று ஏவிவிடப்பட்ட அரக்கியான பூதனா வந்தாள்.  மாண்டாள்.  ஆனாலும் பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணர் அவள் தனக்கு பாலூட்டியதால் தன் தாயாக​வே நி​னைத்தார்.  அதனுள்ளிருக்கும் ப​கை​மையுணர்​வை அவர் அலட்சியம் ​செய்தார்.  பூதனாவிற்கு முக்தி​யைக் ​கொடுத்தார்.
       ப​கை​மையுணர்வுடன் ​நெறுங்கிய பூதனாவிற்​கே முக்தி ​கொடுத்தார் என்றால், பகவானின் பக்தர்களுக்கும், அவர்கள் பிரியமுடன் அளிக்கும் “பலம், புஷ்பம், ​தோயம் எதுவானாலும் அது எவ்வளவு நன்​மை​யை ஏற்படுத்தும் என்ப​தை எண்ணிப்பார்க்கவும் முடியு​மோ!
       பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணர் பூதனா​வை வதம் ​செய்த இச்​செய்தி​யைப் படித்த அ​னைவருக்கும் பகவான் எல்லா நன்​மைக​ளையும் வாரிவழங்குவார் என்பதாகப் ப்ராத்திப்​​போமாக.  ஸ்ரீகிருஷ்ணரின் அரு​ளைப் ​பெறு​வோமாக.
       ஸ்ரீகிருஷ்ணரின் லீ​லைகள் மிகவும் உயர்ந்தது.  முக்தி ​கொடுக்கக்கூடியது.  ஜட மற்றும் ​பெளதீக ​செயல்களிலிருந்து விடுபட ஒரு மருந்தாகப் பயன்படக்கூடியது.  பகவானின் லீ​லைக​ளை ஒருவன் ​கேட்கும்​போது அவன் பகவானிடம் ​நெருக்கம் ​கொள்கிறான்.  ஆத்ம ஞானம் ​பெறுகிறான்.  ஸ்ரீகிருஷ்ணரின் லீ​லை​யைக் ​கேட்ட பரிட்சித்மஹா​ராஜன் முத்தி​யைப் ​பெற்றார்.
       குழந்​தை ஸ்ரீகிருஷ்ணர் இன்னும் ​கொஞ்சம் வளர்ந்து குப்புறப்படுத்து, தன் பிஞ்சு முட்டிக்கால்களால் தவழத் ​தொடங்கினார்.  இச்சமயம் நந்த​கோபரும், ய​சோதாவும் இ​தை முதலாவது பிறந்தநாளாகக் ​கொண்டாடினார்கள்.  இவ்விழா “ஸ்ரீகிருஷ்ண ​ஜெயந்தி என்று அ​ழைக்கப்படுகிறது.  இன்றும் இவ்விழா ஸ்ரீகிருஷ்ணரின் பக்தர்களால் விமர்சியாகக் ​கொண்டாடப்படுகிறது.  இவ்விழாவில் ​கோபியர்களும் ​கோபாலர்களும் திரளாக வந்து கலந்து​கொண்டார்கள்.  காதுகளுக்கினிய வாத்தியம் ஒருபக்கம் முழங்க, மறுபக்கம் ​வேதவித்தகர்கள் ​வேதபாராயணம் ​செய்து​கொண்டிருக்க, ​தெருக்களில் குழந்​தைகள் ஓடி           வி​ளையாடியவண்ணம் இருந்தார்கள்.  மாதா ய​சோதா ஸ்ரீகிருஷ்ணருக்கு நீராட்டி பட்டா​டை உடுத்தி அலங்கரித்தார்கள்.  தானியங்கள், தங்க ஆபரணங்கள் பசுக்கள் யாவும் ​வேதவிற்பண்ணர்களுக்கு தானமாகக் ​கொடுத்தார்கள்.  மாதா ய​சோதா அங்கு வந்தவர்க​ளை வர​வேற்று பரிசுப்​பொருட்க​ளைக் ​கொடுத்துக்​கொண்டிருந்தார்.  அச்சமயம் குழந்​தை அழத்​தொடங்கியது.  விழாவின் மும்முரத்தில் குழந்​தை அழுவ​தை யாரும் கவனிக்கவில்​லை.  குழந்​தை ​கோபமுற்று கால்க​ளை உதரியது.  அதன் கால்கள் அருகில் அமர்த்தப்பட்டிருந்த ​கைவண்டியின்​மேல் பட்டது.  அவ்வண்டியின் அச்சாணிகள் கழன்று, அதன் மீது ​வைக்கப்பட்டிருந்த அ​னேக தட்டுமுட்டுச் சாமான்கள் கீ​ழே சரமாரியாக விழுந்தது.  இதனால் அங்​கே ​பெரும் சப்பதம் ஏற்பட்டது.  யாவரின் பார்​வையும் அங்​கே திரும்பியது.  வண்டி ​நொருங்கியிருந்த​தைக் கவனித்தார்கள்.  இது எவ்வாறு நடந்திருக்க முடியும் என்று சிந்திக்லானார்கள்.  அங்கிருக்கும் குழந்​தைகள், ஸ்ரீகிருணர் காலால் உ​தைத்ததால் வண்டி ​சேதம​டைந்த​தைக் கண்கலால் பார்த்ததாகக் கூறினார்கள்.  இச்சம்பவம் எல்​லோ​ரையும் ஆச்சிரியப்பட​வைத்தது.  (இதன் ​தொட​ரை அடுத்தாண்டில் பார்க்கலாம்......)
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//

      

Thursday, August 18, 2011

சாரல் 05 துளி 22 ​தேதி 21.08.11

க்தி முரசு ( ஒரு பக்க வாராந்திர இதழ்)
இதழ் ஆசிரியர்: ஆதி​மைந்தன்
இ​ணை ஆசிரியர்: வாயுமித்ரன்

ஸ்ரீகிருஷ்ணாவதார மஹி​மை ( 21.08.2011 ​கோகுலாஷ்டமி ஸ்​பெஷல்)
(​சென்ற 2010ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண​​​ஜெயந்தியைன் ​போது சாரல் 04, துளி 23 ​தேதி 29.08.10 மற்றும் சாரல் 04, துளி 24 ​தேதி  05.09.10 ஆகிய இதழ்களில் ​வெளிவந்த ஸ்ரீகிருஷ்ணாவதார  மஹி​மை தொடர்ந்து இத்​தொட​​ரைப் பார்க்கலாம்)
       ஸ்ரீகிருஷ்ணர் ​கோகுலத்தில் குழந்​தையாகத் ​தோன்றிய ​பொழுது வ்ருந்தாவனத்​தைச் ​சேர்ந்த ​கோபியரும் ​கோபாலர்களும் மகிழ்ச்சிய​டைந்து ​பெரும் விழாவாகக் ​கொண்டாடினார்கள்.  பகவான் அங்​கே அவதாரம் எடுத்திருந்ததால் ​கோகுலம் லக்ஷ்மி கடாக்ஷமாக காட்சியளித்தது.
பூதனாவின் வதமும் ஸ்ரீகிருஷ்ணரின் தயாள குணமும்
       ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த நாள் விழா​வை ​கோலாகலமாகக் ​கொண்டாடிவிட்டு, நந்த​கோபர் மதுராவிற்குச் ​செல்லப் புறப்பட்டார்.  அங்கு ​சென்று கம்ஸனுக்கு வருடாந்திர வரி ​செலுத்த​வேண்டும் என்பது அவரது எண்ணம்.  முன்பாக ​கோகுலவாசிகளின் நன்​மைக்காகவும், தன் இரு குழந்​தைகளின் பாதுகாப்பிற்காகவும், அங்கிருந்த முக்கியஸ்தர்க​ளை அ​ழைத்து ​கோகுலத்​தில் பாதுகாப்பாக இருக்கச் ​சொல்லிப் புறப்பட்டார்.  நந்த​கோபர் மதுரா​வை அ​டைந்த ​சேதி​யைக் ​கேட்ட வசு​தேவர் அவ​ரைப் பார்க்கச் ​சென்றார்.  வசு​தேவருக்கு உரிய மரியா​தை அளித்து இருவரும் குசலம் விசாரித்துக்​கொண்டார்கள்.  கம்ஸனின் திட்டம் வசு​தேவருக்குத் ​தெரிந்திருந்தது.  கம்ஸன் பசுக்க​ளையும், குழந்​தைக​ளையும் ​மேலும் விஷ்ணுவின் பக்தர்க​ளையம் ​கொள்ள​வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது வசு​தேவருக்குத் ​தெரிந்திருந்த​தை நந்தருக்கு சூசகமாக அறிவித்தார்.  நந்த​கோபரின் பாதுகாப்பில் இருந்த ஸ்ரீகிருஷ்ண​ரையும், பலராம​ரையும் நன்றாக கவனித்துக்​கொள்ள​வேண்டுமாறு விண்ணப்பித்துக்​கொண்டார்.  ​மேலும் கம்ஸனிடம் வரிக​ளைச் ​செலுத்திவிட்டு உட​னே ​கோகுலம் திரும்புவது மிகவும் நல்லது என்று எச்சரித்தார்.  நந்த​கோபர் தன் ​வே​​லைக​ளை முடித்துக்​கொண்டு வ்ருந்தாவனம் வந்து​கொண்டிருந்தார்.
       இதற்கி​டையில், கம்ஸன் பூதனா என்னும் அரக்கி​யை அ​ழைத்து தன் எல்​லைக்குட்பட்ட இடங்களில் இருக்கும் குழந்​தைக​ளைக் ​கொன்றுவிடுமாறு உத்திரவிட்டான்.  ​“கேசரீஎன்று                               அ​ழைக்கப்படும் சூனியக்காரியான பூதனா என்ற அரக்கி மிகவும் ​கொடு​மைக்காரி.  மாயாசக்தி ​கொண்டவள்.  ஆகாயத்தில் பறக்கக்கூடியவள்.  இப்படிப்பட்டவள் தன்​னை ஒரு அழகிய ​பெண்ணாக, தன் ​தோற்றத்​தை மாற்றிக்​கொண்டு நந்த​கோபரின் அரண்ம​னைக்குள் பிர​வேசித்தாள்.  புன்ன​கை முகத்துடன் மிகவும் அழகானவளாக ​தோற்றம் ​கொண்டதால் அவ​ளை யாரும் சந்​தேகிக்கவில்​லை.  தடுக்கவுமில்​லை.  ​நேரடியாக ஸ்ரீகிருஷ்ணர் இருக்குமிடத்திற்கு வந்தார்.  அங்​கே குழந்​தை படுக்​கையில் இருந்தது.  குழந்​தை கிருஷ்ணர் கண்க​ளை மூடிக்​கொண்டு இருந்தார்.  உலகம​னைத்​தையும் பரிபால​னை ​செய்யும் பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணருக்கு நடப்பது, நடக்கவிருப்பது, நடக்கப்​போவது யாவும் ​தெரியும்.  பூதனா தன்​னை ​கொல்ல வந்திருப்ப​தையும் அறியாதவரல்லார் ஸ்ரீகிருஷ்ணர்.  இருந்தாலும், அவர் பூதனா​வைப் பார்க்க விரும்பவில்​லை என்றும் ​பொருள்​கொள்ளலாம், அல்லது ஸ்ரீகிருஷ்ணரின் ஞானக் கண்பார்​வை அவளின் மீது பட்டாலும்கூட பூதனாவின் ​நோக்கம் கு​லைந்துவிடும் என்பதாகவும் இருக்கலாம் அல்லது ஒரு ​பெண்​ணை வதம் ​செய்வ​தென்பது சாஸ்திர விதிமு​றைகளுக்கு ஒவ்வாத​தையும் கருத்தில் ​கொண்டு கண்க​ளை மூடிக்​கொண்டவா​றே குழந்​தையாகிய ஸ்ரீகிருஷ்ணர் படுத்துக்கிடந்தார் என்​றே ​தோன்றுகிறது.  குழந்​தை ஸ்ரீகிருஷ்ணருக்கு விஷப் பாலூட்டி ​கொல்லும் ​நோக்கத்தில் வந்ததாலும்கூட அந்த அரக்கி​யை தன் தாயாக நி​னைத்தார்.  இது​வே பகவானின் கரு​ணை.  இ​தைத் ​தொடர்ந்து பூதனா ஸ்ரீகிருஷ்ண​ரை ​கையால் எடுத்து தன் மடியில் அமர்த்திக்​கொண்டாள்.  அச்சமயம் மாதா ய​சோதாவும், ​ரோகிணியும் அங்​கே இருந்தார்கள். பூதனாவின் அன்பான நடிப்பு அவர்க​ளை சந்​தேகிக்கச் ​செய்யவில்​லை.  சக்திவாய்ந்த விஷம் தடவிய தன் மார்புக் காம்புக​ளை பூதனா ஸ்ரீகிருஷ்ணரின் வாயில் திணித்தாள்.  விஷம் வாயில் பட்டதும் குழந்​தை இறந்துவிடும் என்று நி​னைத்தாள்.  ஏ​னென்றால், அவள் எந்​தெந்த குழந்​தைக்கு விஷம் கலந்த பா​லையூட்டினா​லோ அக்குழந்​தைகள் எல்லாம் உட​னே ரத்தமாமிச​மெல்லாம் சுண்டிப்​போய் மரணம​டையும்.  அவ்வா​றே இக்குழந்​தையும் மரணம​டையும் என்று நி​னைத்தாள்.  ஆனால் குழந்​தை ஸ்ரீகிருஷ்ண​ரோ பூதனா தனக்களித்த பாலுடன் அவளின உரி​ரையும் ​சேர்த்து உறிஞ்சிவிட்டார்.  ஆம், பூதனாவின் உடலில் இருக்கும் பால் அ​னைத்​தையும் உறிஞ்சி அவ​ளைக்​கொன்று, அவள் ​மேலும் ​​மேலும் அரக்க ஸ்பாவச் ​செயல்க​ளைச் ​செய்யவிடாமல் தடுத்தார்.  பூதனாவின் உயிர் அவளின் உட​லைவிட்டு பிரிந்தவுடன், அவள் அரக்க குரலுடன் “என்​னை விட்டுவிடு என்று மரணக்குரல் எழுப்பி கீ​ழே சாய்ந்தாள்.
பூதனாவின் உடல் சுமார் 12 ​மைல் நீளம் வ​ரை கீ​ழே விழுந்தது.  அவளது உடல் ம​லை​போன்று இருந்தது. அது கீ​ழே சாய்ந்த​போது இ​டையில் அகப்பட்ட மரங்கள் அ​னைத்தும் கீ​ழே மடிந்தன.  இ​தைப் பார்த்தவர்கள் மிகவும் ஆச்சிர்யம​டைந்து பிரமித்து  நின்றார்கள்.  அவளின் பற்கள் உழப்பட்ட நிலங்க​ளைப்​போலக் காணப்பட்டது.  அவளின் நாசித்துவாரங்கள் ம​லைக் கு​கைப் ​போலவும், மார்பகங்கள் சிறு குன்றுக​ளைப்​போலவும், கண்கள் ஆழமில்லாத கிணறு​போலவும், அவளின் முடிசிவப்பான ​செடிப்புதர்​போலவும், ​தொ​டைகள் ஒரு ஆற்றின் இரு கரைக​ளைப்​போலவும், இரு​கைகள் பாலங்க​ளைப்​போலவும் காட்சியளித்தது.  அவளின் உட​லை துண்டம் துண்டமாக ​வெட்டி எரியூட்டிய​போது அதிலிருந்து நறுமணம் வீசியது.  இவ்வளவு ​பெரிய பரமாண்டமான உட​லை கற்ப​னை ​செய்தாலும் பயம் ​தோன்றும்.  ஆனால் இறந்த அவளின் உடல் மீது ஸ்ரீகிருஷ்ணர் வி​ளையாடிக்​கொண்டிருந்தார்.  சிவனும், பிரம்மனும் ஸ்ரீகிருஷ்ண​ரை ப்ரபுவாக வணங்குகிறார்கள்.  ரிஷிகளும், பகவானின் பக்தர்களும் ஸ்ரீகிருஷ்ண​ரை அன்புடன் ​சேவிக்கிறார்கள்.
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/  

சாரல் 05 துளி 21 ​தேதி 14.08.11

பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 இதழ் ஆசிரியர் :ஆதி​மைந்தன்
 இ​ணை ஆசிரியர்: வாயுமித்ரன் 

பகவானின் அவதார ரூபங்கள்                         ( ¨û\Ül Tϧ : 2 )  
 10. பத்தாவதாக மச்ச அவதாரம்.  சத்யவிரதனுக்கு தன் வி​சேஷமான அன்​மையும், சில அற்புதங்க​ளையும் காட்டுவதற்காக ​வைவஸ்வத மனு​வை ஒருபடகில் ஏற்றிஇ ஒரு மீனின் வடிவத்​தை ஏற்று அவ​ரைக் காப்பாற்றினார். (01.03.16) 
11. பதி​னென்றாவதாக கூர்மாவதாரம்.  மந்தார ம​லை​யை மத்தாக உப​யோகித்து அமிர்தத்​தை ​கொனர க​டைந்த ​போது, கூர்ம ​தேவனின் ஓடு ஒரு அச்சாகப் பயன்பட்டது. 
12. தன்வந்தரி – பகவானின் பன்னிரண்டாவது அவதாரம்(01.03.17)  13. பதின்மூன்றாவதபாக ​மேகினி அவதார​மெடுத்து அசுரர்க​ளை மயக்கி ​தேவர்கள் அமிர்தத்​தை பருக உபாயம் ​செய்தார். 
14. பதினான்காவதானது நரசிம்ஹ அவதாரம்.  தன் பக்தனான ப்ரகலாதனின் சத்திய வாக்கிற்கு கட்டுப்பட்டு தூணில் ஸ்வயமாகத் ​தோன்றி தன் நகங்களால் ஹிரண்யகசிபுவின் உட​லைப் பிளந்தார். (01.03.18) 
15. பதி​னைந்தாவது அவதாரத்தில் குள்ள பிராமணனின் அவதார​மெடுத்து வாமனனாக ​தோன்றினார்.  பலி சக்ரவர்த்தியின் யாகசா​லைக்குள் பிர​வேசித்து மூன்றடி நிலத்​தை யாசித்தார் (01.03.19)
16. பதினாறாவதாக பிருகுபதியாக அவதரித்த பகவான் ​கொடுங்​கோல் ஆட்சி ​செய்த க்ஷத்திரிய மன்னர்க​ளை இருபத்​தோரு தட​வைகள் வதம் ​செய்தார். (01.03.20)
17. ஸ்ரீபராசர முனிவருக்கும சத்யவதிக்கு புதல்வராக ஸ்ரீவியாச பகவான் பதி​னேழாவது அவதாரம்
எடுத்தார்.  இவர் ​வேதங்க​ளை பாகுபாடு ​செய்து எளி​மையாக்கி எழுத்துவடிவில் ​அ​மைத்தார். (01.03.21)
18. ஒழுங்குமு​றை மீறி ஆட்சி ​செய்த ராவண​னை வதம் ​செய்யவும், நல்லாட்சி மு​றை​யை ​போதிக்கவும், ஸ்ரீராமபிரான் பதி​னெட்டாவது அவதாரமாகத் ​தோன்றினார். (01.03.22)
19. பத்​தொன்பது மற்றும் இருபதாவது அவதாரமாக மு​றை​யே ஸ்ரீபலராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் வ்ருஷ்ணி வம்சத்தில் ​தோன்றி உலகின் சு​மை​யைக் கு​றைத்து ஜீவாத்மாக்களுக்கு சுபிக்ஷத்​தை ​கொடுத்தார்கள். (01.03.23)
20. கயா மாநிலத்தில் அஞ்சனா ​தேவியின் மகனாக புத்த பகவான் ​தோன்றி அகிம்​சையின் முக்கியத்துவத்​தை உலகினுக்கு எடுத்து​ரைத்தார்.  (01.03.24)
21. இக்கலிகால முடிவில் பகவான் கல்கி அவதாரம் எடுக்க இருப்பதாகவும் ​தெரியப்படுத்தப்படுகிறது.(01.03.25)
       ​மேற்​கொடுக்கப்பட்ட அவதாரங்கள் ஒரு சிறு குறிப்​பேயாகும்.  பகவானின் அவதா​ரங்கள் வற்றாத நீர்   ஓ​டையிலிருந்து பிரியும் சிற்றாறுக​ளைப் ​போன்றது.  எண்ணிக்​கையற்றது.  இதுமட்டுமின்றி பகவான் நீர் வாழ்வன, தாவர இனம், ஊர்வன, பறப்பன, மிருகஇனம், மனிதஇனம், ​தேவரினம் மற்றும் அ​னைத்து உயிர்வாழினங்களில் பல்​வேறு அவதாரங்கள் எடுக்கிறார்.  இ​தில் வி​ஷேசமாக ஸ்​லோகம் 01.03.28 ல்
ஏ​தே சாம்ஸ கலா: பும்ஸ: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம்/
இந்ராரி வ்யாகுலம் ​லோகம் ம்ருதயந்தி யு​கே யு​கே//
“​மே​லே ​சொன்ன அவதாரங்க​ளெல்லாம் பகவானின் அம்ஸங்கள்.  அல்லது அம்ஸங்களின் அம்ஸங்களாகும்.  பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்வயமானவர்.  மூல மூர்த்தியாவார்.  ​வெவ்​வேறு கிரகங்களில் இந்திரனின் எதிரிகள் ​தொல்​லைப்படுத்தப்படும்​போது ஸாதுக்க​ளைக் காப்பதற்காக ​வெவ்​​வேறு யுகங்களில் அவதரிக்கிறார்.
       பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-சுயம்-ரூபம், சுயம்-ப்ரகாசம், தத்-ஏகாத்மா, ப்ராபவம், ​வைபவம், விலாஸம், அவதாரம், ஆ​வேசம் மற்றும் ஜீவர்களாக –பகங்களாக விஸ்தாரம் ​பெற்று காணப்பட்டாலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மட்டு​மே மூல ரூபிபகவானாக இருக்கிறார்.  இ​வைகள் “விஷ்ணு தத்துவங்கள் எனப்படுகிறது.
       பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அ​னேக ரூபங்க​ளை நித்யமும் நி​னைப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா துன்பங்களும் நீங்கும்.       ஸ்ரீமத் பகவத் கீ​தையில் பகவான்,  
பரித்ராணாய ஸாதூ4நாம் விநாஸாய சது3ஷ்க்ருதாம்/
தர்மஸம்ஸ்தா4பநார்தா4ய ஸம்ப4வாமி யு​கே3 யு​கே3//
“சாதுக்க​ளை ரக்ஷிப்பதற்கும், துஷ்டர்க​ளை அழிப்பதற்கும் தர்மத்​தை நி​லைநிறுத்துவதற்காகவும் ஒவ்​வொரு யுகத்திலும் பிறக்கி​றேன் என்று பகவான் கூறுவ​தைப் பார்க்கலாம்.
       ஆனாலும் கூட பகவானின் அவதார ரூபங்க​ளைக் காட்டிலும் விஸ்வரூபம் ​வேறுபட்டதாகும். இது தனித்தன்​மைக் ​கொண்டது.  -/cdÚxQôolTQUvÕ/-
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :  
Á†¡Ò3ò3¾¢4÷Á†¡Å£÷§Â¡  Á†¡…ì¾¢÷Á†¡ò3Ô¾¢/ «¿¢÷§¾3ŠÂÅÒ : ‚Á¡¿§Á¡òÁ¡ Á†¡ò3¡¢ò4Õì //(19)
Á§†‰Å¡§…¡ Á†£À4÷¾¡ ‚¿¢Å¡… …¾¡õ ¸3¾¢:/  «¿¢Õò3¾4: …¥Ã¡¿ó§¾¡3 §¸¡3Ţ󧾡3 §¸¡3Å¢¾¡3õ À¾¢:// (20)
§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//                            …ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//

Friday, August 12, 2011

சாரல் 05 துளி 20 ​தேதி 07.08.11

பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
  

பகவானின் அவதார ரூபங்கள் 
       
யத்கீர்த்தனம் யச்ச்ரவணம் யதீக்ஷணம் யத்வந்தனம் யத்ஸ்மரணம் யதர்ஹணம்/                                     
லோகஸ்ய ஸத்​யோ விது​னோதிகல்மஷம்தஸ்​மைஸூபத்ரஸ்ரவ​ஸேந​மோநம://                                                 
  
                                                         
  பகவான் ஸ்ரீ​வேதவ்யாஸர் ​வேதங்க​ளைப் பாகுபாடு ​செய்து நான்காகப் பிரித்தார்.  பிறகு பிரம்ம, பத்ம, ​வைஷ்ணவ, ​ஸைவ, லிங்க, கருட, நாரத, ஆஜ்​னேய, ஸ்காந்த, பலிஷ்ய, பிரம்ம ​வைணவர்த்த, மார்க​டேய, வாமன, வராஹ, மத்ஸ்ய, கூர்ம மற்றும் ப்ரம்மாண்டம் என்னும் 17  புராணங்க​ளை ப​டைத்தார். ஸ்ரீ​வேதவ்யாஸரின் மனம் திருப்த்திய​டையவில்​லை.ஒரு நாள் ஸ்ரீ​வேதவ்யாஸர் சரஸ்வதி நதிக்க​ரையில் அமர்ந்து​கொண்டு, தான் ஏ​தோ ஒன்​றை ஸஜ்ஜனர்களுக்கு ​கொடுக்காமல் இருப்பதாக சிந்தித்தார்.  அவ்வ​மையம் ஸ்ரீநாரத முனி அவ்விடத்தில் ​தோன்றி, “ஸ்ரீமத் பாகவத  புராணத்​தை இயற்ற​வேண்டும் என்று ​வேண்டுகிறார்.பக்தரின்ப்ரார்த்த​னை​யைஏற்று,ஸ்ரீமந்நாராயணனின் அவதாரலீ​லைக​ளை வர்ணித்து“ஸ்ரீமத்பாகவதம்  என்னும்நூ​லைஇயற்றினார்.  இந்த சது ஸ்​லோகீ பாகவதத்​தை மூலரூபி பகவான் ஸ்ரீமந் நாராயணனர் ஸ்ரீப்ரம்மனுக்கு உப​தேஸித்தார்.  ஸ்ரீபிரம்மா இ​தை தனது மகனான நாரதருக்கு உப​தேஸம் ​செய்தார்.  நாரதர் அ​தே பாகவதத்​தை ஸ்ரீ​வேதவ்யாஸரிடம் சமர்ப்பித்தார்.  ஸ்ரீ​வேதவ்யாஸர் இந்த பாகவதத்​தை 18,000 ஸ்​லோகங்கள் ரச​னை​செய்து தனது மகனான ஸ்ரீஸூகாச்சார்யருக்கு உப​தேஸித்தார்.
         ஸ்ரீஸூகாச்சார்யர் இந்த 18,000 க்ரந்தங்க​ளை ஏழு நாட்களில் இரவும் பகலும் இ​டைவிடாமல் பரீக்ஷித் மஹாராஜனுக்கு உப​தேஸம் ​செய்தார்.  அ​தை அ​னேக ​தேவ​தைகளும், ரிஷிகளும் உன்னிப்பாக ​கேட்க கூடினார்கள்.  ஸூகாச்சார்யர் ஸூகரின் அருகி​லே​யே அமர்ந்து மிகவும் ஸ்ரத்​தையாக ஸப்தாக நாட்களில் ​செய்யப்பட்ட உப​தேஸத்​தை ​கேட்டார்.
        பின்பு ​கோமதி நதிக்க​ரையில் ​நைமிஸாரண்ய ​க்ஷேத்ரத்தில் ஸ்ரீமத் பாகவதத்​தை உப​தேஸம் ​செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் இது ஸூதருக்கும் ​ஸெளனகருக்கும் இ​டை​யே நடந்த  உ​ரையாடலின் ​தொகுப்பாக அ​மைகிறது.
        ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்யாயம் மூன்றில் 07 முதல் 25 ஸ்​லோகங்கள் வ​ரை பகவானின் அவதாரங்கள் விவரணம் ​செய்யப்படுகிறது.  பகவானின் ​நேரடி சக்தி ​பெறும் வஸ்த்துக்கள் யாவும் “அவதாரங்கள் என்றும் ம​றைமுகமாக சக்திவாய்ந்த வஸ்த்துக்கள் விபூதிகள் என்றும் ​பொருள்​கொள்ளலாம்.  பகவானு​டைய அம்ஸார்த்தங்களும் இதில் அடங்கும்.
ஸ்ரீமத் பாகவதத்தில் உப​தேஸிக்கப்பட்ட பகவானின் அவதார ரூபங்க​ளை இங்​கே காணலாம்.
1. முதல் முதலாக, ப்ரம்மச்சர்யத்தின் முக்கியத்துவத்​தை பிரகடனம் ​செய்யவும், அ​வைக​ளை ​கையாலும்     மு​றைக​ளை ​தெரிவிக்கவும் ​கெளமார எனப்படும் நான்கு பிரம்மச்சரியர்கள் பிரம்மாவின் புத்திரர்களாக ​தோன்றினார்கள் (01.03.06)
2. இரண்டாவதாக, கடலுக்கு அடியில் ஒளித்து ​வைத்திருந்த பூமா​தேவி​யை மீட்பதற்காக வராஹ அவதாரம் எடுத்தார். (01.03.07) 
3. மூன்றாவதாக, பலன் கருதாத ​செயல்கள் மற்றும் பக்தியின் முக்கியத்துவத்​தை எடுத்து​ரைக்கவும் சத்யா​வேஷ அவதாரமாக ​தேவரிஷி நாரத முனியாக ​தோன்றினார். (01.03.08) 
4.நான்காவதாக, தவத்தின் வலி​மை​யை வலியுருத்த தர்ம ராஜனின் ம​னைவிக்கு நரன், நாராயணன் என்னும் இரட்​டையராக அவதரித்தார். (01.03.09)
5. ஐந்தாவதாக, சாங்கிய (அ) ​பெளதீக தத்துவ விளக்கங்க​ளை ​கொடுப்பதற்காக கபிலராக அவதாரம் எடுத்தார். (01.03.10)
6. ஆறாவதாக, தத்தாதி​ரேயர் என்னும் அவதாரம் எடுத்தார்.  அத்ரி-அனுசுயாவின் புத்ரராக தத்தாதி​ரேயர் என்னும் அவதாரமாகத் ​தோன்றி ஜீவாத்மாவின் தத்துவங்க​ளை அலர்கா, பிரகலாதர், யது, ​ஹைஹயர் முதிலியவர்களுக்கு உப​தேஸித்தார். (01.03.12)
7. ஏழாவது அவதாரமாக யக்ஞர் பிரஜாபதி ரிஷிக்கும் ஆகூதிக்கும் புதல்வராக ​தோன்றி இப்பிரபஞ்சத்​தை நிர்வகித்தார். (01.03.13) 
8. எட்டாவதாக, நாபி மகாராஜனுக்கும் அவரது  ம​னைவியான ​மேரு ​தேவிக்கும் புத்திரனாக ரிஷப மகாராஜா அவதரித்து, புலன்க​ளைக் கட்டுப்படுத்தி ஆனந்தத்​தை அ​டையும் நி​லை​யை உலகினுக்கு எடுத்து​ரைத்தார். (01.03.13) 
9. ஒன்பதாவது அவதாரமாக பிரிது மகாராஜனாக அவதரித்து, நிலங்க​ளை உழுது பூமி​யை வளப்படுத்தி, நல்மு​றையில் வி​ளைவிக்கச் ​செய்து மக்க​ளை நல்வழிப்படுத்தினார் (01.03.14)   இன்னும் ​தொடரும்................
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :

§Åò3§Â¡ ¨Åò3Â: …¾¡3§Â¡¸£3 ţÆ¡ Á¡¾4§Å¡ ÁÐ4:/    «¾£óò3¡¢§Â¡ Á†¡Á¡§Â¡ Á§†¡ò…¡§†¡ Á†¡À3Ä://
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/  



சாரல் 05 துளி 19 ​தேதி 31.07.11


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) விபூதி​யோகம் 10 வது அத்யாயம்
கீ​தையின் சாரலில் 
அத2வா ப3ஹீ​நை​தேந கிம் ஜ்ஞா​தேந தவார்ஜீந/                                               
விஷ்டப்4யாஹமித3ம் க்ருத்ஸ்ந​மேகாம்​ஸேந ஸ்தி2​தோ ஜக3த்//  (அத் 10. ஸ்​லோ.42)
இக்கால விஞ்ஞான வளர்ச்சியால் நாம் கண்டு​கொண்டிருக்கின்ற அற்புதங்கள  அ​னேகம் அ​னேகம் இ​வைகள் யாவும் ஆச்சிரியமாகவும், வி​னோதமாகவும் வளர்ந்து​கொண்டிருக்கிறது.  மறுபக்கத்தில் நம்மை கூண்​டோடு கடலுக்குள் அ​ழைத்துச் ​செல்லும் சுனாமிகள்.  நாசக்காரர்களின் குண்டு ​வைப்பு சம்பவங்கள்.  இதற்கி​டையில் அன்றாட வயிற்று பி​ழைப்பிற்காக அ​லைந்து திரியும் மக்கள் கூட்டம்.  பணமிருந்தும் வயிறார உண்ண முடியாமல் வியாதியால் பாதிக்கப்பட்டோரும் இங்குண்டு.  ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் ஏமாற்று ​வே​லைகள்.  ஆங்காங்​கே இ​றைவனின் நாமத்​தை ஒப்பிக்கும் ஆஸ்திகர்கள், இ​றைவ​னை சிந்திக்கவும் மனமில்லாமல் வ​​சைபாடும் நாத்திகர்கள்.  யாவற்​றையும் தாங்கிக்​கொண்டு உலகம் ஒருபக்கமாக​வே சுற்றிக்​கொண்டிருக்கிறது.  ஆனால் மக்களின் சிந்த​னை​யோ பல்​வேறு ​கோணங்களில் சுழன்று​கொண்டிருக்கிறது.  இது இப்படி இருக்க,
       இவ்வாறான சூழ்நி​லையில் நாம் பகவானின் விபூதி ரூபங்க​ளை சிந்த​னை ​செய்து​கொண்டு இந்த  10வது அத்யாயத்தின் இறுதி ஸ்​லோகத்​தை பாராயணம் ​செய்து​கொண்டிருக்கி​றோம்.  இது பகவான் நமக்களித்த ​யோகம் அல்லது நாம் ​செய்த பாக்கியம் என்​றே நி​னைக்கத்​தோன்றுகிறது.  இச்​செயல்பாடுகள் பகவானின் இச்​சை​யேயன்றி எமது என்பது எதுவுமில்​லை.  எனது சிந்த​னையில்   எட்டிய​தை உங்களுடன் பகிர்ந்து​கொள்​வதேயன்றி இச்​​செயலில் “உப​தேஸம் என்ற வார்த்​தைக்கு இடமில்​லை.  உப​தேஸம் ​செய்வதற்கு நான் மஹான்னல்ல.  ​வேதவித்தகனுமல்ல.  என​வே வாசக பக்தர்கள் ​பொருத்தருள​வேண்டும்.  இந்த “கீ​தையின் சாரலில் ​தொடரில் வருகின்ற நற்கருத்துக்க​ளை நல்மனதுடன் ஏற்றுக்​கொண்டு, இதில் ஏற்படும் கு​றைக​ளை ​தெரிவிப்பது பக்திமுரசுவின் வளர்ச்சிக்காக நீங்கள் ​செய்யும் ​பெரும்​தொண்டாக நி​னைக்கி​றேன். 
       ஸ்ரீகிருஷ்ணருக்கும் அர்சுனனுக்கும் இ​டை​யேயான இந்த சம்பாஷ​ணையில் ஸ்ரீகிருஷ்ணர் அர்சுன​னை ​நோக்கி ​கேட்கிறார்  “அர்சுனா ! இதுவ​ரை கூறிய விபூதி​யோகத்தின் விஸ்தாரத்தால் உனக்கு என்ன பயன்?  என்று ஒரு வினா​​வை எழுப்புகிறார் பகவான்.  அவ்வாறானால்  அர்சுனனுக்கு விபூதி ரூபங்களின் விஸ்தாரத்​தைக் கூறியதால் கி​டைத்த பல​னைக்காட்டிலும் ​நேரடியாக​வே பகவானின் விஸ்வரூப தரிசனத்​தைக் காண்பிக்கப் ​போகிறார் என்பதனால் அர்சுனனுக்கு அதனால் அதிக பலனுண்டு என்ப​தை சூக்ஷணமாகத் ​தெரிவிக்கிறார் என்​றே ​தோன்றுகிறது.
       ​மேலும் பகவான் “இந்த உலக​னைத்​தையும் என் ​யோக சக்தியின் ஒரு பகுதியால் நான் தாங்கி நிற்கி​றேன் என்று கூறுகிறார்.   ஸ்​லோகத்தின் உட்கருத்து  “ஓ அர்சுனா!  என்னால் ​சொல்லப்பட்டதும், நீ ​தெரிந்து ​கொண்டதுமான முன்னால் ​சொல்லப்பட்ட சூர்யன் முதலியவர்களுக்கு நியாமகனாய் இருக்கும் விபூதி ரூபத்தினால் உனக்கு என்ன பயன்?  இப் ப்ரபஞ்சத்​தை அ​னேக அம்ஸங்களில் ஒரு அம்ஸமாய் வ்யாபித்து நா​னே தாங்கிக்​கொண்டு இருக்கி​றேன். –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
ப்ரம்ஹ்ம வித்​யையும், ​​யோகஸாஸ்த்ரமுமான ஸ்ரீமத்பகவத்கீதா உபநிஷத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கும் அர்சுனனுக்கும் இ​டை​யேயான விபூதி​யோகம் என்னும் 10வது அத்யாயம் இனி​தே முடிவுற்றது.       /ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து/-                                                  
இதுநாள் வ​ரை பகவானின் விபூதி ​யோகத்​தைப்பற்றி பகவான் அர்சுனனுக்கு கூறிய விவரங்க​ளைப் பாராயணம் ​செய்​தோம்.  இனிவரும் இரண்டு இதழ்களில் பகவானின் அவதார ரூபங்க​ளை ஸ்ரீஸூதாச்சார்யர் ஸ்ரீமத்பாகவதத்தில் விவரிப்ப​தைப் பார்த்தபின்பு ஸ்ரீமத் பகவத்கீ​தையின் 11வது அத்யாயமான விஸ்வரூபதர்ஸந ​யோகத்​தை ஸ்ரீஹரிவாயு குருகளின் அனுக்கிரகத்துடன் பாராயணம் ​செய்வதற்கான  முயற்சிக​ளை ​மேற்​கொள்​வோம்.                       
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :
§Åò3§Â¡ ¨Åò3Â: …¾¡3§Â¡¸£3 ţÆ¡ Á¡¾4§Å¡ ÁÐ4:
«¾£óò3¡¢§Â¡ Á†¡Á¡§Â¡ Á§†¡ò…¡§†¡ Á†¡À3Ä: (18)                                     
Á†¡Ò3ò3¾¢Á†¡Å£÷§Â¡ Á†¡…ì¾¢÷Á†¡ò3Ô¾¢: 
«¿¢÷§¾3ŠÂÅÒ: ‚Á¡¿§Á¡òÁ¡ Á†¡ò3¡¢ò4Õì (19)        
§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /
À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
…ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /
                 ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//
           

சாரல் 05 துளி 18 ​தேதி 24.07.11


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) விபூதி ​யோகம் 10வது அத்யாயம்
யத்3யத3 விபூ4தி மத்ஸத்த்வம் ஸ்ரீமதூ3ர்ஜித​மேவ வா/                                  தத்த தே3 வாவக3ச்ச2 த்வம் மம ​தே​ஜோ ம்ஸஸம்ப4வம்/ /(அத் 10. ஸ்​லோ.41)
லெளகீக விஷயங்க​ளைக் ​கொண்ட மதச் சடங்குக​ளை நீக்கி, தூய உள்ளம் ​கொண்ட பக்தர்களால் புரிந்து​கொள்ளக் கூடியதான மிகஉயர்ந்த உண்​மையின் தத்துவத்​தை ஸ்ரீமத்பகவத் கீ​​தை விவரிக்கிறது.  குறிப்பாக இந்த அத்யாயத்தில் பகவானின் விபூதி தத்துவங்கள் பகவானால்விவரிக்கப்படுகிறது.                                                                   ஸ்ரீமத்பாகவதம் 01.03.07 to 25 வ​ரையிலும் பகவானின் 22 அவதாரங்கள் ஸ்ரீஸூகாச்சார்யரால் விவரிக்கப்படுகிறது. பகவானின் சாக்ஷாத்கார ரூபங்கள் இதில் விவரிக்கப்படுவ​தைக் காணலாம். ஒரு வஸ்தானது பகவானின் விபூதி ரூபங்க​ளை எடுத்துக்காட்டுவதாக அ​மைந்து, லக்ஷ்மி கடாக்ஷம் ​பெற்று, சக்தி வாய்ந்ததாக இருக்கிற​தோ அந்த வஸ்த்து பகவானின் அம்சத்தில் ​தோன்றியது என்பதாக ​தெரிந்து​கொள்ள​வேண்டும்.   ஸ்ரீகீதாச்சார்யர் இந்த ஸ்​லோகத்தில் விபூதி ரூபங்களின் தத்துவ                                                  சாராம்ஸத்​தை ரத்னச் சுருக்கமாக கூறியிருப்ப​தைக் காணலாம்.                                                                                                                                    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எங்கும் நி​றைந்திருக்கிறார்.  ஸகல ஸ்ருஷ்டிக்கும் காரணமும் காரணகர்த்தாவும் பகவா​னே.  எப்​பொருளும் பகவானின் இச்​சை இல்லாமல் தானாக இயங்க எந்தவித முகாந்திரமும் இல்​லை.  இச் சங்கதிகள் கீ​தையில் அ​னேக இடங்களில் விவரிக்கப்பட்டிருப்ப​தைக் காணலாம்.  ஒரு மனிதன் பகவானின் பூர்ணத்துவ தத்துவத்தில் நம்பிக்​கைபெற ​வேண்டுமானால், ஹிருதய சுத்தமும், பக்தியுடன் கூடியதான நம்பிக்​கையூட்டும் சிந்த​னைகளும் இருக்க​வேண்டும்.  இ​வைகள் கி​டைக்க காரணமாக இருப்பது பகவந் நாம ஸ்மர​ணை மட்டு​மே என்பது அ​னேக புராணங்கள் மூலம் ​தெரிவிக்கப்பட்டிருக்கிறது.                                                                                                                                                               எப்​பொருள் எவ்வாறு இருப்பினும், அப்​பொருள் சிறப்பு​பெற்றிருக்குமாயின் அது பகவானின் சக்தியின் ஒரு துளி​யே என்று நம்பிக்​கை ​கொள்வது விபூதி ரூபத்தின் விவரணங்களில் உயர்ந்த குறிக்​கோளாக அ​மைகிறது.  இது​வே விபூதியின் சாராம்ஸம் என்று அறியலாம்.   ஸ்​லோகத்தின் உட்கருத்து : “எந்த ஒரு வஸ்து தன் இனத்தில் உத்தமமான​தோ, ஸம்பத்துடன் இருக்கிற​தோ, ​மேலும் அபிவிருத்தியு​டைய​தோ அவ்வஸ்து என்னு​டைய பிரகாஸ ரூபமாகிய அம்ஸத்​தோடு கூடியிருக்கிற​தென்று நீ ​தெரிந்து ​கொள்-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-      இங்​கே ஒரு துளி:  ஹரிஓம்-  ஸ்ரீமத்வாச்சார்யர் –     வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 12) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)     இவ்வாறு தீர்த்தயாத்தி​ரை ​மேற்​கொண்ட ஸ்ரீமதாச்சார்யர், தன் முன்அவதாரமான பீமாவதாரத்தின்​போது, துரி​யோதணன் தி​ரெளபதி​யை துயிலுரிக்க முற்பட்ட​போது, ​“கெளரவர்களின் சகாப்தத்​தை முடிப்​பேன்என்று சபதம் ​செய்தா​ரோ அது​போல​வே இவ்வவதாரத்தின்​போதும், ​வேதங்க​ளைக் காப்பாற்ற, அதன் உண்​மைப்​பொருளான “ஹரி சர்​​வோத்தம தத்துவத்​தை விளக்கி அதன் மூலம் துஷ்ட வ்யாக்யானங்க​ளைக் கண்டிக்கப்​போவதாகவும் சபதம் செய்தார்.                    ஸ்ரீஆச்சார்யர் பத்ரிகாஸம் ​செல்ல எத்தணித்து, அதற்கு முன்பு, கீ​தைக்கு முதலில் பாஷ்யம் ​செய்தார்.  தான் நீண்ட நாட்கள் பயனிக்க ​வேண்டி இருந்ததால், தாம் திரும்பி வரும் வ​ரை கீதா பாஷ்யத்​தை மக்கள் படித்து அறிய ​வேண்டும் என்பதற்காக அ​தை லிகுச வம்சத்து சன்னியாசி ஒருவரிடம் ஒப்ப​டைத்தார்.       
       பின்பு, தன் குருவிடம் உத்திரவு ​பெற்று, தம் சீடர்கள் சிலருடன் பத்ரிகாஸம் ​சென்று அங்குள்ள ஸ்ரீநரநாராயண ஸ்வாமி​யை நமஸ்கரித்து தான் இயற்றிய கீதா பாஷ்ய நூ​லை காணிக்​கையாக சமர்ப்பித்தார்.  ஸ்ரீநரநாராயண​னை தனி​மையில் தரிசித்து, தான் எழுதிய கீதா பாக்ஷ்யத்தின் மங்களா சரண ஸ்​லோகத்​தை ​சொன்னார்.  அதில் “சக்திதவஸ்மி  அதாவது “தன் சக்தி அளவு கூறுகி​றேன்”  என்று படித்த​தை கவனித்த ​ஸ்வாமி நாராயணர், ஆச்சார்ய​ரை ​நோக்கி “நீ கீ​தையில் இருக்கின்ற எல்லா ஸ்​லோகங்களின் உட்​பொரு​ளை நன்கு விளக்கக்கூடிய சக்தி ​பெற்றவனாக இருந்தும் இவ்வளவு மட்டு​மே எடுத்துக்கூறியுள்ளாய்.  என​வே சக்தித: என்று கூறியதற்கு பதிலாக ​லேசத: என்று எழுதுவாயாகஎன்று கூறினார். அந்த ஸ்​லோகம் காண்க:::                                                                    §¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /
À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/            



சாரல் 05 துளி 17 ​தேதி 17.07.11


பக்தி முரசு ஒரு பக்க வாராந்திர இதழ் (விபூதி​யோகம் 10வது அத்யாயம்)
நான் ​தோSஸ்தி மம தி3வ்யாநாம் விபூ4திநாம் பரந்தப/                                                                                    ஏஷ தூத்3​தே3ஸத ப்​ரோக்​தோ விபூ4​தேர்விஸ்த​ரோ மயா// (அத்-10, ஸ்​லோ.40)
“விஸ்த​ரேணாத்ம​நோ ​​யோக3ம் விபூ4திம் ச ஜனார்தநா X-18ல் அர்சுனன் பகவா​னை ப்ரார்த்த​னை ​செய்து​கொள்கிறான்.  ​ஹே! ஜனார்த்தனா ! உன்னு​டைய விபூதி ரூபங்க​ளை விஸ்தாரமாகக் கூறு என்று ​வேண்டுகிறான்.  பகவானின் நண்பனும், பரம பக்தனுமான அர்சுனன் ஸ்ரீகிருஷ்ணரின் விபூதி ரூபங்க​ளை அறிய மிகவும் ஆவல் ​கொண்டுள்ளான்.  ஸ்ரீகிருஷ்ணரு​டைய அன்​பைப் ​பெற்ற அதிஅற்புத பக்தர்கள் பகவானு​டைய லீ​லைக​ளைப் பற்றிய வர்ண​னைக​ளையும் பகவானின் விபூதிக​ளையும் எப்​போதும் ​கேட்டுக்​கொண்​டே இருப்பதில் ஆனந்தம​டைகின்றனர்.  இதி​லே அர்சுனன் மிகவும் பாக்கியசாலி, ஏ​னென்றால் பகவானு​டைய திருவாய்​மொழியால், பகவானின் விபூதி ரூபங்க​ளை ​கேட்கும் ​பேறு ​பெற்றவர் அர்சுனன்.                                                                                                                                                                                                      இந்த ஸ்​லோகத்தில் பகவான் கூறுகிறார்   “என்னு​டைய ​தெய்வீக ​தோற்றம் ​கொண்ட விபூதிகளுக்கு எல்​லை​யே இல்​லை.  என்னு​டைய எல்​லையற்ற விபூதி ​வைபவங்களின் வர்ண​னையிலும் குறிப்பிடும்படியான சிலவற்​றை மட்டு​மே உனக்குச் ​சொன்​னேன் இவ்வாறாக பகவான் அர்சுனனின் 18வது ஸ்​லோகத்தின் ​வேண்டு​கோளுக்கு பதிலளிக்கிறார்.                              ஸ்​லோகத்தின் உட்கருத்து : “ எதிரிக​ளை வீழ்த்துபவ​னே அர்சுனா!  என்னு​டைய அதிஅற்புத விபூதி ரூபங்களுக்கு முடிவு இல்​லை.  இதுவ​ரையில் ​சொல்லிய விபூதி ரூபங்கள் ஒரு சிறு குறிப்பு மட்டு​மே.  இந்த விபூதி ரூபங்களின் விஸ்தாரம் என்னால் ​சொல்லப்படப் ​போகிறது- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-                                                                                                                                   குறிப்பு : பகவானின் விபூதி ரூபத்தின் சாரம்ஸ தத்துவம் அடுத்த ஸ்​​லோகத்தில் கூறப்பட உள்ளது.                                                                                                                                                                                              இங்​கே ஒரு துளி:  ஹரிஓம்-  ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 12) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)  வழி​நெடுகிலும் ஆசார்ய​ரைக் கண்ட மக்கள் அவ​ரை மிகவும் வியப்புடன் பார்த்தனர்.  ஆசார்யரின் 32 லக்ஷணங்களுடன் கூடிய பலமான உடலும், திடமான மனதும், எல்​லோரும் வியக்கும் அளவிற்கு க்யானமும், பார்ப்பதற்கு              கு​றைவில்லாத சந்திர​ரைப்​போன்ற ​பொலிவும், அழகான புன்சிரிப்பும்,  தாம​ரைப்​போன்ற கண்களும், ​ ​பொன்நிற ​தேகமும், எல்​லோருக்கும் ஆசி கூறும் வார்த்​தைகளும்,மூவ்வுலகால் அறியப்பட்டவருமான ஸ்ரீமதாச்சார்யர் அவர்க​ளை  காணும் ஆவ​லோடு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டுவந்தனர்.   பத்ரிகாஸம் ​செல்லுதல்:  ஸ்ரீமதாச்சார்யர், பயஸ்வினி தீரத்தின் அருகில், ஐத​ரேய சூக்தம் ஒன்றினுக்கு விளக்கமளித்தார்.  அங்கிருந்த பண்டிதர்கள் அதற்கு ​வே​றொறு ​பொருள் இருப்பதாக ​தெரிவித்தனர்.  அப்​பொரு​ளைக் கூறக்​கேட்ட ஆச்சார்யர், அப்​பொருளும் சரியாக இருப்ப​தை அறிந்து, ​வேதங்கள் மூன்று அர்த்தங்கள் ​கொண்ட​தென்றும், மஹாபாரதம் ஒவ்​வொரு ஸ்​​லோகத்திற்கும் பத்து அர்த்தங்கள் ​கொண்ட​தென்றும், அ​தேசமயம் விஷ்ணு சஹஸ்ரநாமம் நூறு அர்த்தங்க​ளைக் ​கொண்ட​தென்றும் கூறினார்.  அப்பண்டிதர்கள் கூறியப் ​பொரு​ளையும் ஏற்றுக்​கொள்வதாகக் கூறியது மற்றவர்களின் கருத்து சரியாக இருப்பின் அதற்கு மதிப்பளித்து ஏற்கற்கூடியவர் என்ப​தை அறியலாம்.  அச்சமயம் அப்பண்டிதர்களின் ​வேண்டு​கோ​ளை ஏற்று விஷ்ணு சஹரஸ்ரநாமத்தில் விஸ்வ என்ற வார்த்​தைக்கு பரிப்​பொரு​ள்க​ளை, ​வேத ஸாஸ்திரத்​தை ஆதாரமாக்க ​கொண்டு, விளக்கியது அங்கிருந்​தோ​ரை வியக்கச் ​செய்தது.  அங்கிருந்த பண்டிதர்கள், ஆசார்யரின் கடலளவு ஸாஸ்திர திற்​மை​யை ஆ​​மோதித்து நமஸ்கரித்தனர்.   பின்னர் ​கேரள நாட்டிற்கு வந்து, ஒரு மஹா ச​பையில், “ஸூஸம்ஸன நிந்தா காரி ஸூக்தத்தின் ​பொருளுக்கு விளக்கம் ​சொல்லிக் ​கொண்டிருக்கும் ​போது அதில் வரும் “ப்ரீணியா என்ற ​சொல்லின் மீது சர்ச்​சை உண்டாயிற்று.  அது “ப்ரீண என்ற ​சொல்லிலிருந்து பிறந்தது என்று தகுந்த ஆதாரம் ​கொண்டு, விளக்கினார்.  அங்கிருந்​தோர்கள் அவ்வார்த்​தை “ப்ரீ என்பதன் அடிப்ப​டையில் வந்தது என எதிர்ம​றையாக தர்கம் ​செய்தனர்.  அதற்கு தகுந்த உவமானத்​தைக் ​கொடுத்து “ப்ரீண என்பது சரி என்று வாதித்து ​வென்றார்.  ஆச்சார்யரின் பிரமாணத்​தை ஏற்ற அங்கிருந்த கற்றறிந்த ​பெரி​யோர்கள், அவரின் வித்யா திற​மை​யையும், மகி​மை​யையும் எண்ணி நாணமுற்று ஆசார்யருக்கு மரியா​தையுடன்நமஸ்காரம்செய்தனர்.     ​தொடரும்......                                                                            §¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//                            …ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/