Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, August 12, 2011

சாரல் 05 துளி 16 ​தேதி ​ 10.07.11


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) கீ​தையின் சாரலில் விபூதி​யோகம், 10வது அத்யாயம் 


விபூதி யோகம் - ஓர் தொகுப்பாய்வு

            ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, பரம பக்தனான அர்சுனனின் வேண்டுகோளை ஏற்று தன் விபூதி ரூபங்களை விவரிக்கிறார். அர்சுனன் ப்ரார்த்திக்கிறான், ' கேஷூ கேஷூ பா4வேஷூ, சிந்த்யோSஸு ப4கவன் மயா' (X-17) எந்தெந்த பதார்த்தங்களில் என்னால் த்யானம் செய்யப்படுபவனாக இருக்கிறாய்? இங்கே அர்சுனனின் ப்ரச்சனை என்னவென்றால், எந்தெந்த பொருள்களில் பகவானை உபாசனை செய்யவேண்டும் என்பதே, எந்தெந்த பொருளாய் அல்லது எந்தெந்த பதார்த்தமாய் உபாசனை செய்யவேண்டும் என்பதல்ல என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இதற்கு உதாரணமாச் சொல்ல வேண்டுமென்றால், ப்ரஹ்மனில் பிரம்மனாய் இருப்பதல்ல, ப்ரஹ்மனில் பிரம்ம நாமகனாய் இருப்பது என்பதே. 'ப்ரம்மனாய்' இருப்பதென்றால் ஐக்கியத்தை தோற்றுவிக்கும் என்பதாக தெளிவுபெற வேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 10வது அத்யாயமான 'விபூதி யோகத்திற்கு' ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் சிறப்பானதொரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்கள். ஸ்ரீமதாச்சார்யர் தன் 'கீதா தாத்பர்யத்தில்' கூறும்போது,
 'ஏஷாம் விஷ்ணுஷ்வ ரூபானாம் ஸன்னிதேகே அன்ய வஸ்துஹூ விஷிஸ்டத்வம் ப்ராதேக த்யாத் விபூத்யாக்யாணி தானிது
ஒரு குழுமத்தில் எந்த ஒரு பொருள் சிறப்பாக மேன்மைபெற்று ஸ்ரேஷ்டமாக இருக்கிறதோ, அப்பொருள் பகவானுடைய தேஜஸைப் பெற்று சிறப்புடன் பிரகாசிப்பதாக அறியவேண்டும் என்பதே பகவானின் விபூதியோகத் தத்துவமாகும். பகவானின் விபூதியோகத்தை பல்வேறு பாஷ்யகாரர்கள் விவரித்திருந்தாலும், ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் அவர்கள் மிகவும் விஷேசமான பொருள்களை கொடுக்கிறார். ஸ்ரீமத்வாச்சார்யர் தன் கீதா த3ாத்பர்யத்தில்' கொடுத்துள்ள விளக்கங்ளைப்போல் வேறு பாஷ்யகாரர்கள் யாரும் தெளிவானதொரு பொருளைச் சொல்லவில்லை என்று கற்றுணர்ந்த வேதவித்தகர்கள் தெரிவிக்கிறார்கள். பகவானின் விபூதி ரூபங்களை ஸ்ரீமதாச்சார்யர் தன் கீதா தாத்பர்யத்தில் இவ்வாறு கூறுகிறார்: 
'விவிதம் வைபவம் ரூபம் ப்ரத்யக்ஷயஞ்ச்ச திரோகிதம் 
கபில வ்யாஸ க்ருஷ்ணாப்யம் ப்ரத்யக்ஷ்யம் வைபவம் ஸ்ப்ரதம்
பின்னம் ப்ரஹ்மாதி தீவேப்யோ ஜடேத்யஸ்யாதி ஸர்கதம் ஸூஜாத்யாதிக்யதம் தேஷாம் தத் திரோஹித வைபவம்
ஸ்ரீமதாச்சார்யர் பகவானின் விபூதி ரூபங்களை 1. ப்ரத்யக்ஷ விபூதி 2. திரோஹித விபூதி என்று இரண்டாகப் பிரித்து பொருள்கூறுகிறார். பிரத்யக்ஷ விபூதி ரூபம்: என்பது பகவானின் சாக்ஷாத் ரூபங்கள். அதாவது பன்னிரண்டு ஆதித்யர்களில் விஷ்ணு, ஆயுதம் தரித்தவரில் ராமர், முனிகளில் வேதவ்யாஸர், வ்ருஷ்ணி என்னும் யாதவ வம்சத்தவரில் வாசுதேவன் (ஸ்லோகங்கள் முறையே 21,26,31,37,37) இவைகள் ஐந்தும் பகவானின் சாக்ஷாத்கார ப்ரத்யக்ஷ விபூதி ரூபங்களாகும். இந்த ரூபங்கள் நேரடியாக பார்க்கக் கூடியனவாக இருக்கிறது. பகவான் அந்தர்யாமியாக இருந்து பார்க்க முடியாதபடி இருக்கும் ரூபங்கள் திரோஹித விபூதி ரூபங்களாகும். இந்த விபூதியில் ஒரே இனத்தைச் சேர்ந்த வஸ்த்து மேன்மை பெற்று சிறப்புடையதாக இருந்தால் இது ஸஜாதீய விபூதி என்றும்; வேறுஇனத்தைச் சேர்ந்த வஸ்து ஒன்று ஒரே இனத்தைச் சேர்ந்த வஸ்துவினிடையே மேன்மை பெற்றிருந்தால் இது விஜாதீய விபூதி என்றும்; ஒரே இனத்தைச் சேர்ந்த வஸ்து முன்பே மேன்மை பெற்ற வஸ்துவிற்கு அடுத்ததாக சிறப்பு பெற்றவைகளாக இருந்தால் அவைகள் ஸஜாதீய ஏகதேச விபூதி என்றும் பிரித்து பொருள் கூறப்படுகிறது. திரோஹித விபூதி ரூபம்: ஒரே குழுமத்தில் சிறப்பு பெற்ற விபூதி ரூபங்கள். பிரகாசிப்பவைகளில் சூரியன்; மருத்துக்களில் மரீசி; தேவதைகளில் இந்திரன்; இந்திரியங்களில் மனம்; ருத்ரர்களில் சங்கரன்; வசுக்களில் பாவகன்; இவர்கள் தன் இனங்களில் மற்றவர்களைவிட சிறப்புபெற்றவர்கள். இவர்கள் சாக்ஷாத் பகவானாக இல்லாதிருந்தாலும் பகவானின் ஸன்னிதானம் இவர்களிடையே இருப்பதினால் தன் இனத்தில் மேன்மை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஸஜாதீய விபூதி எனவும் கூறப்படுகிறது. நட்சத்திரங்களில் சந்திரன்; நீர் வாழ்வனவற்றில் வருணன்; யக்ஷ ராக்ஷஸர்களில் குபேரன்; இவர்களில் நக்ஷத்திர இனத்தைச் சேராதவன் சந்திரன் என்றாலும் மற்ற நக்ஷத்திரங்களைக் காட்டிலும் பிரகாசமாக ஒளி வீசுபவனாக இருக்கிறான். வருணன் என்பவன் நீர் பிராணியல்ல என்றாலும் நீர் வாழ்வனவற்றில் கிட்டாத சிறப்பு வருணனுக்குண்டு. குபேரன் யக்ஷனும் அல்ல ராக்ஷசனும் அல்ல. ஆனாலும் அவன் யக்ஷ ராக்ஷசர்களின் தலைவனாக இருப்பதால் அவன் மேன்மை பெறுகிறான். இவ்வாறு தன் இனத்தைச் சேராத வஸ்து வேறு இனங்களைச் சேர்ந்த வஸ்துக்களிடையே அவர்கள் அடையாத மேன்மையைப் பெற்றிருந்தால் அவைகள் விஜாதீய விபூதி என்றும் கூறப்படுகிறது. மேலும் வேதங்களில் ஸாம வேதம்; யக்ஞங்களில் ஜபயக்ஞம்; ஆயுதங்களில் வஜ்ராயுதம்; பாண்டவர்களில் தனஞ்செயன் என்று கூறுகிறார் பகவான். இந்த இனங்களில் உயர்ந்தவைகளாகக் கூறப்படும் போது வேதங்களில் ருக் வேதமும்; யக்ஞங்களில் ஞான யக்ஞமும்; ஆயுதங்களில் சுதர்ஸன சக்ரமும்; பாண்டவர்களில் பீமஸேனனும் ஸ்ரேஷ்டம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல. பகவான் கூறிய விபூதிகள் இவர்களுக்கு அடுத்ததாக ஸ்ரேஷ்டமாக இருப்பதால் இவைகள் ஸாஜாதீய ஏகதேச விபூதி என்பதாகக் கூறப்படுகிறது. இவற்றில் ஸாம வேதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி யாம் முன்னமே இத்தொடரில் விவரித்துள்ளதை பார்க்கவும். இவ்வாறு ஸ்ரீமதாச்சார்யர் அவர்கள் பகவானின் விபூதி ரூபங்களைப் பாகுபாடு செய்து தெளிவான காரணம் சொல்லி புரியவைத்திருப்பது மிகவும் வியப்பாகவும் அபூர்வமாகவும் இருக்கிறது என்பது மட்டுமல்ல இவைகள் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. அர்சுனன் " உன் விபூதிகளை விஸ்தாரமாகச் சொல்" என்று ப்ரார்த்தனை செய்ததைத் தொடர்ந்து பகவான் இவ்வாறு கூறுகிறார்: ஹந்த தே கத2யிஷ்யாமி, திவ்யா ஹ்யாத்ம விபூ4தய:/ ப்ராதா4ன்யத குருச்ரேஷ்ட, நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்யமே// பகவானின் விபூதி ரூபங்களுக்கு முடிவே இல்லை. எல்லையே இல்லை. இப்பிரபஞ்சத்தில் எதுவும் அவனில்லாமல் தானாக இயங்க முடியாது. இப்பிரபஞ்சத்தில் ஒரு கூட்டத்தில் மேன்மை பெற்று சிறப்பான வஸ்து ஒன்று இருக்கிறதென்றால் அவ்வஸ்துவில் பகவானுடைய தேஜஸ் அமையப்பெற்றுள்ளதாக அறிவதே சாலச் சிறந்தது. வாசக பக்தர்களின் ஆன்மீகச் சிந்தனை மேன்மை பெறவும், உடல் ஆரோக்யம் சிறக்கவும் பகவானை ப்ரார்த்தைன் செய்துகொண்டே உடுப்பி ஸ்ரீகிருஷ்ணருக்கு இப்படைப்பினை சமர்ப்பணம் செய்து கொள்கிறேன். /ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து/ குறிப்பு: இந்த இதழைத் தொடர்ந்து 10ம் அத்யாயத்தில் இன்னும் மூன்று ஸ்லோகங்கள் பாராயணம் செய்யவேண்டி உள்ளது. இந்த அத்யாயத்தைத் தொடர்ந்து 11ம் அத்யாயமான பகவானின் விஸ்வரூப தர்சனத்தை காண வாசக பக்தர்களை அழைத்து மகிழ்கிறோம். இந்த இதழுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் வாசக பக்தர்களுக்கு எனது நன்றியினைக் காணிக்கையாக்கிக்கொள்கிறேன். 
ஏகம் சாஸ்த்ரம் தேவகீபுத்ர-கீதம் 
ஏகோ தேவோ தேவகீபுத்ர ஏவ/ 
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி 
கர்மாப்யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/ /  
                 
வெளியீடு: கீ​தை ​​ஸேவா டிரஸ்ட் & ஜனனி  ​சென்டர், மணம்பூண்டி, Email : geethaisevatrust@gmail .com   
      
ÌÈ¢ôÒ: þó¾ þ¾¨Æò ¦¾¡¼÷óÐ 10õ «ò¡Âò¾¢ø þýÛõ ãýÚ Š§Ä¡¸í¸û À¡Ã¡Â½õ ¦ºö§ÅñÊ ¯ûÇÐ.  þó¾ «ò¡Âò¨¾ò ¦¾¡¼÷óÐ 11õ «ò¡ÂÁ¡É À¸Å¡É¢ý Å¢ŠÅåÀ ¾÷ºÉò¨¾ ¸¡½ Å¡º¸ Àì¾÷¸¨Ç «¨ÆòÐ Á¸¢ú¸¢§È¡õ.  þó¾ þ¾ØìÌ ¦¾¡¼÷óÐ ¬¾Ã× ¦¸¡ÎòÐÅÕõ Å¡º¸ Àì¾÷¸ÙìÌ ±ÉÐ ¿ýȢ¢¨Éì ¸¡½¢ì¨¸Â¡ì¸¢ì¦¸¡û¸¢§Èý.



No comments:

Post a Comment