Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, August 12, 2011

சாரல் 05 துளி 17 ​தேதி 17.07.11


பக்தி முரசு ஒரு பக்க வாராந்திர இதழ் (விபூதி​யோகம் 10வது அத்யாயம்)
நான் ​தோSஸ்தி மம தி3வ்யாநாம் விபூ4திநாம் பரந்தப/                                                                                    ஏஷ தூத்3​தே3ஸத ப்​ரோக்​தோ விபூ4​தேர்விஸ்த​ரோ மயா// (அத்-10, ஸ்​லோ.40)
“விஸ்த​ரேணாத்ம​நோ ​​யோக3ம் விபூ4திம் ச ஜனார்தநா X-18ல் அர்சுனன் பகவா​னை ப்ரார்த்த​னை ​செய்து​கொள்கிறான்.  ​ஹே! ஜனார்த்தனா ! உன்னு​டைய விபூதி ரூபங்க​ளை விஸ்தாரமாகக் கூறு என்று ​வேண்டுகிறான்.  பகவானின் நண்பனும், பரம பக்தனுமான அர்சுனன் ஸ்ரீகிருஷ்ணரின் விபூதி ரூபங்க​ளை அறிய மிகவும் ஆவல் ​கொண்டுள்ளான்.  ஸ்ரீகிருஷ்ணரு​டைய அன்​பைப் ​பெற்ற அதிஅற்புத பக்தர்கள் பகவானு​டைய லீ​லைக​ளைப் பற்றிய வர்ண​னைக​ளையும் பகவானின் விபூதிக​ளையும் எப்​போதும் ​கேட்டுக்​கொண்​டே இருப்பதில் ஆனந்தம​டைகின்றனர்.  இதி​லே அர்சுனன் மிகவும் பாக்கியசாலி, ஏ​னென்றால் பகவானு​டைய திருவாய்​மொழியால், பகவானின் விபூதி ரூபங்க​ளை ​கேட்கும் ​பேறு ​பெற்றவர் அர்சுனன்.                                                                                                                                                                                                      இந்த ஸ்​லோகத்தில் பகவான் கூறுகிறார்   “என்னு​டைய ​தெய்வீக ​தோற்றம் ​கொண்ட விபூதிகளுக்கு எல்​லை​யே இல்​லை.  என்னு​டைய எல்​லையற்ற விபூதி ​வைபவங்களின் வர்ண​னையிலும் குறிப்பிடும்படியான சிலவற்​றை மட்டு​மே உனக்குச் ​சொன்​னேன் இவ்வாறாக பகவான் அர்சுனனின் 18வது ஸ்​லோகத்தின் ​வேண்டு​கோளுக்கு பதிலளிக்கிறார்.                              ஸ்​லோகத்தின் உட்கருத்து : “ எதிரிக​ளை வீழ்த்துபவ​னே அர்சுனா!  என்னு​டைய அதிஅற்புத விபூதி ரூபங்களுக்கு முடிவு இல்​லை.  இதுவ​ரையில் ​சொல்லிய விபூதி ரூபங்கள் ஒரு சிறு குறிப்பு மட்டு​மே.  இந்த விபூதி ரூபங்களின் விஸ்தாரம் என்னால் ​சொல்லப்படப் ​போகிறது- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-                                                                                                                                   குறிப்பு : பகவானின் விபூதி ரூபத்தின் சாரம்ஸ தத்துவம் அடுத்த ஸ்​​லோகத்தில் கூறப்பட உள்ளது.                                                                                                                                                                                              இங்​கே ஒரு துளி:  ஹரிஓம்-  ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 12) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)  வழி​நெடுகிலும் ஆசார்ய​ரைக் கண்ட மக்கள் அவ​ரை மிகவும் வியப்புடன் பார்த்தனர்.  ஆசார்யரின் 32 லக்ஷணங்களுடன் கூடிய பலமான உடலும், திடமான மனதும், எல்​லோரும் வியக்கும் அளவிற்கு க்யானமும், பார்ப்பதற்கு              கு​றைவில்லாத சந்திர​ரைப்​போன்ற ​பொலிவும், அழகான புன்சிரிப்பும்,  தாம​ரைப்​போன்ற கண்களும், ​ ​பொன்நிற ​தேகமும், எல்​லோருக்கும் ஆசி கூறும் வார்த்​தைகளும்,மூவ்வுலகால் அறியப்பட்டவருமான ஸ்ரீமதாச்சார்யர் அவர்க​ளை  காணும் ஆவ​லோடு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டுவந்தனர்.   பத்ரிகாஸம் ​செல்லுதல்:  ஸ்ரீமதாச்சார்யர், பயஸ்வினி தீரத்தின் அருகில், ஐத​ரேய சூக்தம் ஒன்றினுக்கு விளக்கமளித்தார்.  அங்கிருந்த பண்டிதர்கள் அதற்கு ​வே​றொறு ​பொருள் இருப்பதாக ​தெரிவித்தனர்.  அப்​பொரு​ளைக் கூறக்​கேட்ட ஆச்சார்யர், அப்​பொருளும் சரியாக இருப்ப​தை அறிந்து, ​வேதங்கள் மூன்று அர்த்தங்கள் ​கொண்ட​தென்றும், மஹாபாரதம் ஒவ்​வொரு ஸ்​​லோகத்திற்கும் பத்து அர்த்தங்கள் ​கொண்ட​தென்றும், அ​தேசமயம் விஷ்ணு சஹஸ்ரநாமம் நூறு அர்த்தங்க​ளைக் ​கொண்ட​தென்றும் கூறினார்.  அப்பண்டிதர்கள் கூறியப் ​பொரு​ளையும் ஏற்றுக்​கொள்வதாகக் கூறியது மற்றவர்களின் கருத்து சரியாக இருப்பின் அதற்கு மதிப்பளித்து ஏற்கற்கூடியவர் என்ப​தை அறியலாம்.  அச்சமயம் அப்பண்டிதர்களின் ​வேண்டு​கோ​ளை ஏற்று விஷ்ணு சஹரஸ்ரநாமத்தில் விஸ்வ என்ற வார்த்​தைக்கு பரிப்​பொரு​ள்க​ளை, ​வேத ஸாஸ்திரத்​தை ஆதாரமாக்க ​கொண்டு, விளக்கியது அங்கிருந்​தோ​ரை வியக்கச் ​செய்தது.  அங்கிருந்த பண்டிதர்கள், ஆசார்யரின் கடலளவு ஸாஸ்திர திற்​மை​யை ஆ​​மோதித்து நமஸ்கரித்தனர்.   பின்னர் ​கேரள நாட்டிற்கு வந்து, ஒரு மஹா ச​பையில், “ஸூஸம்ஸன நிந்தா காரி ஸூக்தத்தின் ​பொருளுக்கு விளக்கம் ​சொல்லிக் ​கொண்டிருக்கும் ​போது அதில் வரும் “ப்ரீணியா என்ற ​சொல்லின் மீது சர்ச்​சை உண்டாயிற்று.  அது “ப்ரீண என்ற ​சொல்லிலிருந்து பிறந்தது என்று தகுந்த ஆதாரம் ​கொண்டு, விளக்கினார்.  அங்கிருந்​தோர்கள் அவ்வார்த்​தை “ப்ரீ என்பதன் அடிப்ப​டையில் வந்தது என எதிர்ம​றையாக தர்கம் ​செய்தனர்.  அதற்கு தகுந்த உவமானத்​தைக் ​கொடுத்து “ப்ரீண என்பது சரி என்று வாதித்து ​வென்றார்.  ஆச்சார்யரின் பிரமாணத்​தை ஏற்ற அங்கிருந்த கற்றறிந்த ​பெரி​யோர்கள், அவரின் வித்யா திற​மை​யையும், மகி​மை​யையும் எண்ணி நாணமுற்று ஆசார்யருக்கு மரியா​தையுடன்நமஸ்காரம்செய்தனர்.     ​தொடரும்......                                                                            §¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//                            …ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/



No comments:

Post a Comment