பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) விபூதியோகம் 10 வது அத்யாயம்
கீதையின் சாரலில்
அத2வா ப3ஹீநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜீந/
விஷ்டப்4யாஹமித3ம் க்ருத்ஸ்நமேகாம்ஸேந ஸ்தி2தோ ஜக3த்// (அத் 10. ஸ்லோ.42)
இக்கால விஞ்ஞான வளர்ச்சியால் நாம் கண்டுகொண்டிருக்கின்ற அற்புதங்கள அனேகம் அனேகம் இவைகள் யாவும் ஆச்சிரியமாகவும், வினோதமாகவும் வளர்ந்துகொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் நம்மை கூண்டோடு கடலுக்குள் அழைத்துச் செல்லும் சுனாமிகள். நாசக்காரர்களின் குண்டு வைப்பு சம்பவங்கள். இதற்கிடையில் அன்றாட வயிற்று பிழைப்பிற்காக அலைந்து திரியும் மக்கள் கூட்டம். பணமிருந்தும் வயிறார உண்ண முடியாமல் வியாதியால் பாதிக்கப்பட்டோரும் இங்குண்டு. ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் ஏமாற்று வேலைகள். ஆங்காங்கே இறைவனின் நாமத்தை ஒப்பிக்கும் ஆஸ்திகர்கள், இறைவனை சிந்திக்கவும் மனமில்லாமல் வசைபாடும் நாத்திகர்கள். யாவற்றையும் தாங்கிக்கொண்டு உலகம் ஒருபக்கமாகவே சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் மக்களின் சிந்தனையோ பல்வேறு கோணங்களில் சுழன்றுகொண்டிருக்கிறது. இது இப்படி இருக்க,
இவ்வாறான சூழ்நிலையில் நாம் பகவானின் விபூதி ரூபங்களை சிந்தனை செய்துகொண்டு இந்த 10வது அத்யாயத்தின் இறுதி ஸ்லோகத்தை பாராயணம் செய்துகொண்டிருக்கிறோம். இது பகவான் நமக்களித்த யோகம் அல்லது நாம் செய்த பாக்கியம் என்றே நினைக்கத்தோன்றுகிறது. இச்செயல்பாடுகள் பகவானின் இச்சையேயன்றி எமது என்பது எதுவுமில்லை. எனது சிந்தனையில் எட்டியதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதேயன்றி இச்செயலில் “உபதேஸம்” என்ற வார்த்தைக்கு இடமில்லை. உபதேஸம் செய்வதற்கு நான் மஹான்னல்ல. வேதவித்தகனுமல்ல. எனவே வாசக பக்தர்கள் பொருத்தருளவேண்டும். இந்த “கீதையின் சாரலில்” தொடரில் வருகின்ற நற்கருத்துக்களை நல்மனதுடன் ஏற்றுக்கொண்டு, இதில் ஏற்படும் குறைகளை தெரிவிப்பது பக்திமுரசுவின் வளர்ச்சிக்காக நீங்கள் செய்யும் பெரும்தொண்டாக நினைக்கிறேன்.
ஸ்ரீகிருஷ்ணருக்கும் அர்சுனனுக்கும் இடையேயான இந்த சம்பாஷணையில் ஸ்ரீகிருஷ்ணர் அர்சுனனை நோக்கி கேட்கிறார் “அர்சுனா ! இதுவரை கூறிய விபூதியோகத்தின் விஸ்தாரத்தால் உனக்கு என்ன பயன்?” என்று ஒரு வினாவை எழுப்புகிறார் பகவான். அவ்வாறானால் அர்சுனனுக்கு விபூதி ரூபங்களின் விஸ்தாரத்தைக் கூறியதால் கிடைத்த பலனைக்காட்டிலும் நேரடியாகவே பகவானின் விஸ்வரூப தரிசனத்தைக் காண்பிக்கப் போகிறார் என்பதனால் அர்சுனனுக்கு அதனால் அதிக பலனுண்டு என்பதை சூக்ஷணமாகத் தெரிவிக்கிறார் என்றே தோன்றுகிறது.
மேலும் பகவான் “இந்த உலகனைத்தையும் என் யோக சக்தியின் ஒரு பகுதியால் நான் தாங்கி நிற்கிறேன்” என்று கூறுகிறார். ஸ்லோகத்தின் உட்கருத்து “ஓ அர்சுனா! என்னால் சொல்லப்பட்டதும், நீ தெரிந்து கொண்டதுமான முன்னால் சொல்லப்பட்ட சூர்யன் முதலியவர்களுக்கு நியாமகனாய் இருக்கும் விபூதி ரூபத்தினால் உனக்கு என்ன பயன்? இப் ப்ரபஞ்சத்தை அனேக அம்ஸங்களில் ஒரு அம்ஸமாய் வ்யாபித்து நானே தாங்கிக்கொண்டு இருக்கிறேன்”. –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
ப்ரம்ஹ்ம வித்யையும், யோகஸாஸ்த்ரமுமான ஸ்ரீமத்பகவத்கீதா உபநிஷத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கும் அர்சுனனுக்கும் இடையேயான விபூதியோகம் என்னும் 10வது அத்யாயம் இனிதே முடிவுற்றது. /ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து/-
இதுநாள் வரை பகவானின் விபூதி யோகத்தைப்பற்றி பகவான் அர்சுனனுக்கு கூறிய விவரங்களைப் பாராயணம் செய்தோம். இனிவரும் இரண்டு இதழ்களில் பகவானின் அவதார ரூபங்களை ஸ்ரீஸூதாச்சார்யர் ஸ்ரீமத்பாகவதத்தில் விவரிப்பதைப் பார்த்தபின்பு ஸ்ரீமத் பகவத்கீதையின் 11வது அத்யாயமான விஸ்வரூபதர்ஸந யோகத்தை ஸ்ரீஹரிவாயு குருகளின் அனுக்கிரகத்துடன் பாராயணம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :
§Åò3§Â¡ ¨Åò3Â: …¾¡3§Â¡¸£3 ţÆ¡ Á¡¾4§Å¡ ÁÐ4:
«¾£óò3¡¢§Â¡ Á†¡Á¡§Â¡ Á§†¡ò…¡§†¡ Á†¡À3Ä: (18)
Á†¡Ò3ò3¾¢4÷Á†¡Å£÷§Â¡ Á†¡…ì¾¢÷Á†¡ò3Ô¾¢:
«¿¢÷§¾3ŠÂÅÒ: ‚Á¡¿§Á¡òÁ¡ Á†¡ò3¡¢ò4Õì (19)
§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /
À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
…ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /
¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//
No comments:
Post a Comment