பக்தி முரசு
(ஒரு பக்க வாராந்திர இதழ்)
கீதையின் சாரலில் விபூதியோகம் 10வது அத்யாயம்
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/
(ஒரு பக்க வாராந்திர இதழ்)
கீதையின் சாரலில் விபூதியோகம் 10வது அத்யாயம்
யச்சாபி ஸர்வப4தாநாம் பீ3ஜம் தத3ஹமர்ஜீந ந தத3ஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூ4தம் சராசரம் (அத்10. ஸ்லோ 39)
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன் விபூதியோகத்தை சுருக்கமாக இங்கே முடிக்கிறார். சகல பிராணிகளுக்கு வித்து பகவானே. படைப்பது, அழிப்பது மற்றும் காப்பது யாவும் பகவானே. அத்யாயம் 7.10 ல் “பீஜம்மாம் ஸர்வபூதானாம்” என்று சொல்லியிருக்கிறார். அதுபோலவே அத்9-18ல் “நிதானம் பீஜமவ்யயம்” என்று “அழியாத வித்து” பகவானே என்று குறிப்பிடுகிறார். இங்கு இச் ஸ்லோகத்தில் சொல்லும் போது எல்லா பிராணிகளின் உற்பத்திக்கு “விதை” பகவானே என்று குறிப்பிடுகிறார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இல்லாத இடம் ஏது! எங்கும் எப்பொருளிலும் நிறைந்திருப்பவர் பகவானே. பகவானின் இச்சையில்லாமல் எப்பொருளும் இயங்க முடியாது. இப்பிரபஞ்சத்தில் தோன்றும் எல்லாப் பொருள்களும் பகவானின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பகவானின் படைப்பில் ஒரு குழுமத்தில் எப்பொருள் மேன்மை பெற்றிருக்கிறதோ, சிறப்பு பெற்றதாக இருக்கிறதோ அப்பொருள் பகவானின் தேஜஸின் சக்திபெற்றதாக தெரிந்துகொள்ள வேண்டும். யாவற்றையும் சுருக்கமாகவும் யதார்த்தமாகவும் சொல்லும்போது பகவான் இப்பிரபஞ்சத்தில் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார் என்பது உண்மையாகிறது அல்லவா!
ஸ்லோகத்தின் உட்கருத்து “ மற்றும் அர்சுனா! எல்லா பிராணிகளுக்கு எது காரணமோ, அக்காரணத்தின் நியாமகனாய் அக்காரணத்திலிருப்பவன் நானே, யாவற்றிற்கும் காரணமும் காரண கர்த்தாவுமான என்னைவிட்டு எந்த வஸ்து உண்டோ அந்த வஸ்த்து இல்லை. நான் இப்பிரபஞ்சத்தில் எங்கும்நிறைந்திருகிறேன்” –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 11) (படைப்பு: ஆதிமைந்தன்) இவ்வாறான மஹிமைகளைச் செய்துகாட்டி, தனது தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தார். கேரளத்திற்கே அழகையும், பொலிவையும் கொடுக்கக் கூடிய புனித நதியான பயஸ்வினி ஆற்றில் நீராடி, தன் லீலைகளால் இங்கு ஸ்ரீசண்டிகை தேவி அவதரிக்கப் போகிறாள் என்று கூறி, மேலும் தெற்கு நோக்கிச் சென்று திருவந்திபுரம் என்ற அனந்தபுரம் என்னும் வானில் சாக்ஷாத் ஸ்ரீமந்நாராயண ஸ்வரூபியாக இருக்கும் அனந்தபத்மநாப ஸ்வாமியை தரிசித்தார். பின்பு, பண்டிதர்கள் நிரைந்த சபையில், ஜீவ பரமாத்ம பேதத்தின் தத்துவத்தை விளக்கி ஐக்கியம் பொருந்தாத நிலையை எடுத்துக்கூறினார். குதபஸ்தூர் என்ற கிராமத்தல் ஒரு அந்தணர் ஸ்ரீமதாச்சார்யர் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் (பொருள்) செய்யாததால் பொருள் கூற தகுதியற்றவர் என்றும், அவர் கூறும் வியாக்யானங்களை ஏற்கவேண்டாம் என்றும் கூறினார். அதற்கு ஆசார்யரோ “யாமும் பாஷ்யம் செய்யும் அபிப்ராயத்தில் தான் இருக்கிறோம்” என்று விடையளித்தார். அந்த அந்தணரோ “தண்டத்தை” முறித்துவிடுவேன் என்று கூறினார் ஆசார்யர் தன் தண்டத்தைகாட்டி, கண்ட்யேத த3ண்டோ யதி சண்டனத்வயா/ த்வம் ஷண்டகோ(அ)பண்டித வந்த்ய வாகி3தி//(5-43) அதாவது “நீ இந்த தண்டத்தை முறிக்காவிட்டால் நீ ஒரு ஷண்டன், சன்யாசி இல்லை, பண்டிதனுமில்லை, ஒரு பொய்யனும் அலியுமாவாய்” என்று கூறினார். இதைக் கேட்ட அந்த அந்தணர் ஆத்திரமடைந்து அங்கிருந்தோரைத் துணைக்கு அழைத்தார். அங்கிருந்தோர்கள் ஆசார்யரின் அறிவுத் திறமை, வசீகரமான முகலக்ஷணம் முதலியவற்றைக் கண்டு மஹா பண்டிதரான ஆச்சார்யரை எவ்வாறு துவேஷிப்பது என்றெண்ணி அந்த அந்தணரைச் சாடினர்.
இதைத் தொடர்ந்து, ஆச்சார்யர் பல தீர்த்தங்களில் நீராடி, கன்யாகுமாரி மற்றும் இராமேஸ்வரம் அங்குள்ள தீர்த்தங்களிலும் நீராடி, இராமேஸ்வரத்தில் விஷ்ணுவின் அந்தர்யாமியாக இருக்கும் இராமநாத ஸ்வாமியை நமஸ்கரித்து தன் குருவுடன் சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் வந்து ஸ்ரீரங்கநாத ஸ்வாமியை பக்தியுடன் ஸேவித்தார்.
ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண வேதவ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
ù¡…¡Â Å¢‰ÏåÀ¡Â ù¡…åÀ¡Â Å¢‰½§Å/
¿§Á¡ ¨Å ô3ËÁ¿¢¾4§Â Å¡…¢‰¼2¡Â ¿§Á¡ ¿Á://
«Å¢¸¡Ã¡Â …¥ò3¾¡4 ¿¢ò¡ ÀÃÁ¡òÁ§¿/
…¨¾3¸åÀ¡Â Å¢‰½§Å …÷Ń¢‰½§Å//
§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
…ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//
No comments:
Post a Comment