பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
பகவானின் அவதார ரூபங்கள்
யத்கீர்த்தனம் யச்ச்ரவணம் யதீக்ஷணம் யத்வந்தனம் யத்ஸ்மரணம் யதர்ஹணம்/
லோகஸ்ய ஸத்யோ விதுனோதிகல்மஷம்தஸ்மைஸூபத்ரஸ்ரவஸேநமோநம://
பகவான் ஸ்ரீவேதவ்யாஸர் வேதங்களைப் பாகுபாடு செய்து நான்காகப் பிரித்தார். பிறகு பிரம்ம, பத்ம, வைஷ்ணவ, ஸைவ, லிங்க, கருட, நாரத, ஆஜ்னேய, ஸ்காந்த, பலிஷ்ய, பிரம்ம வைணவர்த்த, மார்கடேய, வாமன, வராஹ, மத்ஸ்ய, கூர்ம மற்றும் ப்ரம்மாண்டம் என்னும் 17 புராணங்களை படைத்தார். ஸ்ரீவேதவ்யாஸரின் மனம் திருப்த்தியடையவில்லை.ஒரு நாள் ஸ்ரீவேதவ்யாஸர் சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்துகொண்டு, தான் ஏதோ ஒன்றை ஸஜ்ஜனர்களுக்கு கொடுக்காமல் இருப்பதாக சிந்தித்தார். அவ்வமையம் ஸ்ரீநாரத முனி அவ்விடத்தில் தோன்றி, “ஸ்ரீமத் பாகவத புராணத்தை இயற்றவேண்டும்” என்று வேண்டுகிறார்.பக்தரின்ப்ரார்த்தனையைஏற்று,ஸ்ரீமந்நாராயணனின் அவதாரலீலைகளை வர்ணித்து“ஸ்ரீமத்பாகவதம் என்னும்நூலைஇயற்றினார். இந்த சது ஸ்லோகீ பாகவதத்தை மூலரூபி பகவான் ஸ்ரீமந் நாராயணனர் ஸ்ரீப்ரம்மனுக்கு உபதேஸித்தார். ஸ்ரீபிரம்மா இதை தனது மகனான நாரதருக்கு உபதேஸம் செய்தார். நாரதர் அதே பாகவதத்தை ஸ்ரீவேதவ்யாஸரிடம் சமர்ப்பித்தார். ஸ்ரீவேதவ்யாஸர் இந்த பாகவதத்தை 18,000 ஸ்லோகங்கள் ரசனைசெய்து தனது மகனான ஸ்ரீஸூகாச்சார்யருக்கு உபதேஸித்தார்.
ஸ்ரீஸூகாச்சார்யர் இந்த 18,000 க்ரந்தங்களை ஏழு நாட்களில் இரவும் பகலும் இடைவிடாமல் பரீக்ஷித் மஹாராஜனுக்கு உபதேஸம் செய்தார். அதை அனேக தேவதைகளும், ரிஷிகளும் உன்னிப்பாக கேட்க கூடினார்கள். ஸூகாச்சார்யர் ஸூகரின் அருகிலேயே அமர்ந்து மிகவும் ஸ்ரத்தையாக ஸப்தாக நாட்களில் செய்யப்பட்ட உபதேஸத்தை கேட்டார்.
ஸ்ரீஸூகாச்சார்யர் இந்த 18,000 க்ரந்தங்களை ஏழு நாட்களில் இரவும் பகலும் இடைவிடாமல் பரீக்ஷித் மஹாராஜனுக்கு உபதேஸம் செய்தார். அதை அனேக தேவதைகளும், ரிஷிகளும் உன்னிப்பாக கேட்க கூடினார்கள். ஸூகாச்சார்யர் ஸூகரின் அருகிலேயே அமர்ந்து மிகவும் ஸ்ரத்தையாக ஸப்தாக நாட்களில் செய்யப்பட்ட உபதேஸத்தை கேட்டார்.
பின்பு கோமதி நதிக்கரையில் நைமிஸாரண்ய க்ஷேத்ரத்தில் ஸ்ரீமத் பாகவதத்தை உபதேஸம் செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் இது ஸூதருக்கும் ஸெளனகருக்கும் இடையே நடந்த உரையாடலின் தொகுப்பாக அமைகிறது.
ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்யாயம் மூன்றில் 07 முதல் 25 ஸ்லோகங்கள் வரை பகவானின் அவதாரங்கள் விவரணம் செய்யப்படுகிறது. பகவானின் நேரடி சக்தி பெறும் வஸ்த்துக்கள் யாவும் “அவதாரங்கள் என்றும் மறைமுகமாக சக்திவாய்ந்த வஸ்த்துக்கள் விபூதிகள் என்றும் பொருள்கொள்ளலாம். பகவானுடைய அம்ஸார்த்தங்களும் இதில் அடங்கும்.
ஸ்ரீமத் பாகவதத்தில் உபதேஸிக்கப்பட்ட பகவானின் அவதார ரூபங்களை இங்கே காணலாம்.
1. முதல் முதலாக, ப்ரம்மச்சர்யத்தின் முக்கியத்துவத்தை பிரகடனம் செய்யவும், அவைகளை கையாலும் முறைகளை தெரிவிக்கவும் கெளமார எனப்படும் நான்கு பிரம்மச்சரியர்கள் பிரம்மாவின் புத்திரர்களாக தோன்றினார்கள் (01.03.06)
2. இரண்டாவதாக, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த பூமாதேவியை மீட்பதற்காக வராஹ அவதாரம் எடுத்தார். (01.03.07)
3. மூன்றாவதாக, பலன் கருதாத செயல்கள் மற்றும் பக்தியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் சத்யாவேஷ அவதாரமாக தேவரிஷி நாரத முனியாக தோன்றினார். (01.03.08)
4.நான்காவதாக, தவத்தின் வலிமையை வலியுருத்த தர்ம ராஜனின் மனைவிக்கு நரன், நாராயணன் என்னும் இரட்டையராக அவதரித்தார். (01.03.09)
5. ஐந்தாவதாக, சாங்கிய (அ) பெளதீக தத்துவ விளக்கங்களை கொடுப்பதற்காக கபிலராக அவதாரம் எடுத்தார். (01.03.10)
6. ஆறாவதாக, தத்தாதிரேயர் என்னும் அவதாரம் எடுத்தார். அத்ரி-அனுசுயாவின் புத்ரராக தத்தாதிரேயர் என்னும் அவதாரமாகத் தோன்றி ஜீவாத்மாவின் தத்துவங்களை அலர்கா, பிரகலாதர், யது, ஹைஹயர் முதிலியவர்களுக்கு உபதேஸித்தார். (01.03.12)
7. ஏழாவது அவதாரமாக யக்ஞர் பிரஜாபதி ரிஷிக்கும் ஆகூதிக்கும் புதல்வராக தோன்றி இப்பிரபஞ்சத்தை நிர்வகித்தார். (01.03.13)
8. எட்டாவதாக, நாபி மகாராஜனுக்கும் அவரது மனைவியான மேரு தேவிக்கும் புத்திரனாக ரிஷப மகாராஜா அவதரித்து, புலன்களைக் கட்டுப்படுத்தி ஆனந்தத்தை அடையும் நிலையை உலகினுக்கு எடுத்துரைத்தார். (01.03.13)
9. ஒன்பதாவது அவதாரமாக பிரிது மகாராஜனாக அவதரித்து, நிலங்களை உழுது பூமியை வளப்படுத்தி, நல்முறையில் விளைவிக்கச் செய்து மக்களை நல்வழிப்படுத்தினார் (01.03.14) இன்னும் தொடரும்................
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :
§Åò3§Â¡ ¨Åò3Â: …¾¡3§Â¡¸£3 ţÆ¡ Á¡¾4§Å¡ ÁÐ4:/ «¾£óò3¡¢§Â¡ Á†¡Á¡§Â¡ Á§†¡ò…¡§†¡ Á†¡À3Ä://
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/
No comments:
Post a Comment