Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, August 12, 2011

சாரல் 05 துளி 18 ​தேதி 24.07.11


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) விபூதி ​யோகம் 10வது அத்யாயம்
யத்3யத3 விபூ4தி மத்ஸத்த்வம் ஸ்ரீமதூ3ர்ஜித​மேவ வா/                                  தத்த தே3 வாவக3ச்ச2 த்வம் மம ​தே​ஜோ ம்ஸஸம்ப4வம்/ /(அத் 10. ஸ்​லோ.41)
லெளகீக விஷயங்க​ளைக் ​கொண்ட மதச் சடங்குக​ளை நீக்கி, தூய உள்ளம் ​கொண்ட பக்தர்களால் புரிந்து​கொள்ளக் கூடியதான மிகஉயர்ந்த உண்​மையின் தத்துவத்​தை ஸ்ரீமத்பகவத் கீ​​தை விவரிக்கிறது.  குறிப்பாக இந்த அத்யாயத்தில் பகவானின் விபூதி தத்துவங்கள் பகவானால்விவரிக்கப்படுகிறது.                                                                   ஸ்ரீமத்பாகவதம் 01.03.07 to 25 வ​ரையிலும் பகவானின் 22 அவதாரங்கள் ஸ்ரீஸூகாச்சார்யரால் விவரிக்கப்படுகிறது. பகவானின் சாக்ஷாத்கார ரூபங்கள் இதில் விவரிக்கப்படுவ​தைக் காணலாம். ஒரு வஸ்தானது பகவானின் விபூதி ரூபங்க​ளை எடுத்துக்காட்டுவதாக அ​மைந்து, லக்ஷ்மி கடாக்ஷம் ​பெற்று, சக்தி வாய்ந்ததாக இருக்கிற​தோ அந்த வஸ்த்து பகவானின் அம்சத்தில் ​தோன்றியது என்பதாக ​தெரிந்து​கொள்ள​வேண்டும்.   ஸ்ரீகீதாச்சார்யர் இந்த ஸ்​லோகத்தில் விபூதி ரூபங்களின் தத்துவ                                                  சாராம்ஸத்​தை ரத்னச் சுருக்கமாக கூறியிருப்ப​தைக் காணலாம்.                                                                                                                                    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எங்கும் நி​றைந்திருக்கிறார்.  ஸகல ஸ்ருஷ்டிக்கும் காரணமும் காரணகர்த்தாவும் பகவா​னே.  எப்​பொருளும் பகவானின் இச்​சை இல்லாமல் தானாக இயங்க எந்தவித முகாந்திரமும் இல்​லை.  இச் சங்கதிகள் கீ​தையில் அ​னேக இடங்களில் விவரிக்கப்பட்டிருப்ப​தைக் காணலாம்.  ஒரு மனிதன் பகவானின் பூர்ணத்துவ தத்துவத்தில் நம்பிக்​கைபெற ​வேண்டுமானால், ஹிருதய சுத்தமும், பக்தியுடன் கூடியதான நம்பிக்​கையூட்டும் சிந்த​னைகளும் இருக்க​வேண்டும்.  இ​வைகள் கி​டைக்க காரணமாக இருப்பது பகவந் நாம ஸ்மர​ணை மட்டு​மே என்பது அ​னேக புராணங்கள் மூலம் ​தெரிவிக்கப்பட்டிருக்கிறது.                                                                                                                                                               எப்​பொருள் எவ்வாறு இருப்பினும், அப்​பொருள் சிறப்பு​பெற்றிருக்குமாயின் அது பகவானின் சக்தியின் ஒரு துளி​யே என்று நம்பிக்​கை ​கொள்வது விபூதி ரூபத்தின் விவரணங்களில் உயர்ந்த குறிக்​கோளாக அ​மைகிறது.  இது​வே விபூதியின் சாராம்ஸம் என்று அறியலாம்.   ஸ்​லோகத்தின் உட்கருத்து : “எந்த ஒரு வஸ்து தன் இனத்தில் உத்தமமான​தோ, ஸம்பத்துடன் இருக்கிற​தோ, ​மேலும் அபிவிருத்தியு​டைய​தோ அவ்வஸ்து என்னு​டைய பிரகாஸ ரூபமாகிய அம்ஸத்​தோடு கூடியிருக்கிற​தென்று நீ ​தெரிந்து ​கொள்-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-      இங்​கே ஒரு துளி:  ஹரிஓம்-  ஸ்ரீமத்வாச்சார்யர் –     வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 12) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)     இவ்வாறு தீர்த்தயாத்தி​ரை ​மேற்​கொண்ட ஸ்ரீமதாச்சார்யர், தன் முன்அவதாரமான பீமாவதாரத்தின்​போது, துரி​யோதணன் தி​ரெளபதி​யை துயிலுரிக்க முற்பட்ட​போது, ​“கெளரவர்களின் சகாப்தத்​தை முடிப்​பேன்என்று சபதம் ​செய்தா​ரோ அது​போல​வே இவ்வவதாரத்தின்​போதும், ​வேதங்க​ளைக் காப்பாற்ற, அதன் உண்​மைப்​பொருளான “ஹரி சர்​​வோத்தம தத்துவத்​தை விளக்கி அதன் மூலம் துஷ்ட வ்யாக்யானங்க​ளைக் கண்டிக்கப்​போவதாகவும் சபதம் செய்தார்.                    ஸ்ரீஆச்சார்யர் பத்ரிகாஸம் ​செல்ல எத்தணித்து, அதற்கு முன்பு, கீ​தைக்கு முதலில் பாஷ்யம் ​செய்தார்.  தான் நீண்ட நாட்கள் பயனிக்க ​வேண்டி இருந்ததால், தாம் திரும்பி வரும் வ​ரை கீதா பாஷ்யத்​தை மக்கள் படித்து அறிய ​வேண்டும் என்பதற்காக அ​தை லிகுச வம்சத்து சன்னியாசி ஒருவரிடம் ஒப்ப​டைத்தார்.       
       பின்பு, தன் குருவிடம் உத்திரவு ​பெற்று, தம் சீடர்கள் சிலருடன் பத்ரிகாஸம் ​சென்று அங்குள்ள ஸ்ரீநரநாராயண ஸ்வாமி​யை நமஸ்கரித்து தான் இயற்றிய கீதா பாஷ்ய நூ​லை காணிக்​கையாக சமர்ப்பித்தார்.  ஸ்ரீநரநாராயண​னை தனி​மையில் தரிசித்து, தான் எழுதிய கீதா பாக்ஷ்யத்தின் மங்களா சரண ஸ்​லோகத்​தை ​சொன்னார்.  அதில் “சக்திதவஸ்மி  அதாவது “தன் சக்தி அளவு கூறுகி​றேன்”  என்று படித்த​தை கவனித்த ​ஸ்வாமி நாராயணர், ஆச்சார்ய​ரை ​நோக்கி “நீ கீ​தையில் இருக்கின்ற எல்லா ஸ்​லோகங்களின் உட்​பொரு​ளை நன்கு விளக்கக்கூடிய சக்தி ​பெற்றவனாக இருந்தும் இவ்வளவு மட்டு​மே எடுத்துக்கூறியுள்ளாய்.  என​வே சக்தித: என்று கூறியதற்கு பதிலாக ​லேசத: என்று எழுதுவாயாகஎன்று கூறினார். அந்த ஸ்​லோகம் காண்க:::                                                                    §¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /
À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/            



No comments:

Post a Comment